டாக்டர்: இந்த எக்ஸ்ரே உங்களோடது, நல்ல பாருங்க என்ன தெரியுது.
நோயாளி: என் கிட்ட இருக்கிற காசை எல்லாம் புடுங்க போறிங்கனு நல்லா தெரியுது டாக்டர்.
டாக்டர்:??????????????
=====================================================
நர்ஸ்: டாக்டர்!! பத்தாம் நம்பர் பேஷன்ட் ரொம்ப சீரியஸா இருக்கார்
டாக்டர்: ரெண்டு கடி ஜோக் சொல்லுங்க சிரிக்கிறாரா பார்ப்போம்
நர்ஸ்:?????????????
======================================================
டாக்டர் : உங்க சொத்து பத்திரமெல்லாம் எதுக்கு என்கிட்டே காட்டுறிங்க???
நோயாளி: இந்த சொத்து மதிப்புக்குள்ள என் நோயை குணமாக்கிடுவிங்க தானே டாக்டர் !!!
டாக்டர் : ??????????????????????
=======================================================
நோயாளி: டாக்டர் ஒரு வாரமா வயத்து வலின்னு சொல்லி துடிச்சுக்கிட்டு இருக்கேன், நீங்க கடவுளுக்கு நன்றின்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்களே???
டாக்டர் : என் பொண்டாட்டி புதுசா ஒரு கலர் டிவி வேணும்னு கேட்டா, இப்போ நீங்க வந்து இருக்கீங்க அப்போ நான் கடவுளுக்குதானே நன்றி சொல்லணும்
நோயாளி: ????????????
===============================================================
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல, கொஞ்ச நேரம் சிரிக்கவே!!!
அன்புடன்
அசோக் குமார்
செம காமெடி !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே தயவு செய்து மருத்துவ சேவையினை கிண்டல் செய்யும் பதிவுகளை நீக்கவும். சில மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த சேவையினையே கிண்டலடிப்பது போன்றது தேவையற்றது... நகைச்சுவை வேண்டுமெனில் ஊரை ஏய்க்கின்ற அரசியல்வா(வியா)திகளை நகைக்கவும்... நன்றி....
ReplyDelete