10. சிட்னி -ஆஸ்திரேலியா (Sydney, Australia)
பத்தாவது இடமாக சிட்னி நகரம், இது நியூ சௌத்வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரம். டாஸ்மன் கடற்கரை ஓரம் அமைந்த, உலகின் பல மனிதர்களும் வந்து போகும் ஒரு நகரம். அதுமட்டுமில்லாமல் இது பிரிட்டிஷ் காலனி அதிகத்துக்கு உட்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
9. பேர்ன், சுவிசெர்லாந்து (Bern,Switzerland)
சுவிசெர்லாந்து நாட்டிலேயே இது நாலாவது சிறந்த நகரம். இந்த நகரத்தின் அங்கிகரிக்கப்பட்ட மொழி ஜேர்மன். 2000-ம் ஆண்டு கணக்குப்படி இந்த நகரத்தில் 6 ,60000 பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.
7(1). பிருன்க்புர்ட், ஜெர்மனி (Frankfurt, Germany)
இரண்டு நகரங்கள் ஏழாம் இடத்தை பிடித்துள்ளன அதில் ஒன்று பிருன்க்புர்ட். ஜெர்மனியின் முக்கியமான பணம் புழங்கும் நகரம். பிரபல ஜெர்மன் வங்கிகளான மத்திய ஐரோப்பிய வங்கி ( European Central Bank) மற்றும் ஜெர்மன் பெடரல் வங்கிகளின் (German Federal Bank) தலைமையகம் இங்குதான் உள்ளது. இந்த நகரில் அமைந்துள்ள லூக்போரோ பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் 21 வது இடத்தில் இருக்கிறது.
7(2). முனிச், ஜெர்மனி (Munich, Germany)
பெர்லின் மற்றும் ஹம்புர்க்க்கு பிறகு ஜெர்மனியின் பெரிய நகரம் முனிச். இந்த நகரின் சிறப்பு, இசர்(Isar) என்ற நதியின் கரையில் அமையபெற்றது. உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று. ஆய்வுகளின்படி 1158-இல் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கலாம் என அறிகிறது.
![]() |
Munich in 1968 |
![]() |
Headquarters of BMW car company |
முதலாம் உலக போர் நடந்த 1914-ம் வருடம் இந்த நகரம் ரொம்பவே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அந்த சமயம் உணவு பெட்ரோல் கூட கிடைக்காமல் அல்லாடி இருக்கிறார்கள். இதே உலகப்போரில் 1916 ம் வருடம் பிரான்ஸ் இந்த நகரின் மீது மூன்று குண்டுகளை வீசி சேதபடுத்தி உள்ளது.
முனிச் நகரம் பசுமை நிறைந்த பல பூங்காக்களை கொண்ட நகரம். மேலும் 'இசர்' (Isar) நதியின் ஓரம் அமைந்துள்ள ஜெர்மன் அருங்காட்சியகம் (German Museum ) உலகின் மிக பெரியதும் பழமையானதுமான அறிவியல் அருங்காட்சியகம். அதுமட்டுமில்லாமல் இங்கு ஐரோப்பிய கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்கும் தளமாகவும் இருக்கிறது. பிரபல இசைக்கலைஞரான மொசார்ட் (Mozart) தன் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
6. டசெல்டோர்ப், ஜெர்மனி (Dusseldorf, Germany)

இந்த நகரம் உருவான வரலாறு ரொம்பவே சுவாரசியமானது. 7 -8 ம் நூற்றாண்டுகளில் இந்த நகரை ஒட்டி உள்ள "டுச்செல்" (Dussel) நதியை மூலமாக கொண்டு விவசாயம் செய்யவும் மீன் பிடித்து தொழில் செய்யவும் இது பெரிய நகரமாக உருவானதாக வரலாறு.

4 (1). வந்குவேர், கனடா (Vancouver, Canada)
கனடாவின், மூன்றாவது பெரிய நகரம் தான் "வந்குவேர்". இந்த நகரம் உருவான வரலாறு கொஞ்சம் பார்ப்போம். "பிரேசர் கோல்ட் ருஷ்" ( Fraser Gold Rush) என்ற தனி மனிதர் 1859 - ம் வருடம், அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் பிரஜைகள் 25 ,ooo பேரை மட்டும் அழைத்துக்கொண்டு போய் "பிரேசர்" என்கிற நதியை ஒட்டி நிர்மாணித்த நகரம் இது.
சில முக்கியமான அமெரிக்க நகரங்களுக்கு அடுத்தபடி மக்கள் மிகவும் நெருக்கமாக குடியிருக்கும் ஒரு நகரம் இது.
இன்னுமொரு முக்கியமான விஷயம் இங்குள்ள 52 சதவிகிதம் பேர் ஆங்கில மொழி பேசாதோர். 30 சதவிகிதம் பேர் சீன மொழி பேசுவோர்.
4 (2). ஆக்லாந்து , நியூசிலாந்து (Auckland, New Zealand )
ஆக்லாந்து நகரத்தை சுற்றி 50 எரிமலைகள் இருக்கிறது. இதனால் இந்த நகரின் இயற்கை தகவமைப்பே மாறி போய் உள்ளது.
இந்த நகரின் காலச்சாரம் ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் நாட்டினரை சார்ந்து உள்ளது. ஆனாலும் சமீபத்தில் ஆசிய மற்றும் ஐரோப்பியர் அல்லாதோர் இங்கு நிறைய தங்குகிறார்கள்.
ஜெனீவா , சுவிட்சர்லாந்து (Geneva, Switzerland )
சுவிட்சர்லாந்து, நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை அதிகம் உள்ள மற்றும் பிரெஞ்சு மொழி அதிகம் பேசும் மக்கள் இருக்கும் நகரம்.
ஜெனிவா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதபடுகிறது. என்ன விஷயம் என்றால், இது உலக நாடுகளின் பண பரிவர்த்தனைகளை கையாளும் மையமாகவும், உலக நாடுகளின் முக்கிய நிறுவனங்களின் தலைமை இடங்கள் இங்குதான் உள்ளது.


ஜெனீவா கொஞ்சம் தனி சிறப்பு வாய்ந்த நகரம் என்று சொன்னால் அது மிகை இல்லை. ஜெனீவா ரொம்பவும் அழகாக வடிவமைக்கபட்ட, "அமைதியின் நகரம்" (peace city) என பெயர் பெற்றது.
பல முக்கிய உலக நிறுவனங்களின் தலைமையகங்கள் இந்த நகரில் இருப்பதால் இந்த நகரம் சுவிட்சர்லாந்த் நாட்டில் பெருமைக்குரிய நகரமாக விளங்குகிறது.
2. ஜுரிச் , சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து, நாட்டின் முதல் இரண்டாவது மக்கள் தொகை அதிகம் உள்ள மற்றும் பிரெஞ்சு மொழி அதிகம் பேசும் மக்கள் இருக்கும் நகரம்.


1. வியன்னா , ஆஸ்திரியா
ஆஸ்திரியா நாட்டின் தலை நகரம், அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரியாவின் ஒன்பது நகரங்களில் முக்கியமான நகரம். இந்த நகரில் 1 .7 பில்லியன் மக்கள் தொகையும், அதுமட்டுமில்லாமல் இந்நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மயமே இந்த நகரம் தான்.

கி. பி. 15 ம் நூற்றாண்டில் ரோமானியர்கள் நிர்மாணிக்கப்பட்ட நகரம். எல்லா நகரங்களும் ஒரு நதியின் கரை ஓரத்தில் தான் தொடங்கபட்டுளது. அதுபோலவே இந்த நகரமும் "தனுபு" என்ற நதியின் கரை ஓரத்தில் உருவான நகரம்.
![]() |
வியன்னா 1493 வருடம் எடுக்கப்பட்டது |
கி.பி. 13 ம் வருடம் மங்கோலிய படையெடுப்புக்கு ஆளான நகரம் இது. அதற்கு முன்பு வரை இந்நகரம் ரஷ்யா மற்றும் சீனம் வரை விரிந்து இருந்ததாக அறியப்படுகிறது.
நெப்போலியன் இந்த நகரின் மீது படை எடுத்தபோது ஆஸ்திரேயாவின் தலைநகராக இருந்தது, அதுமட்டுமின்றி இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருந்திருக்கிறது.
கூடுமானவரை இந்த நகரங்களை பற்றி அலசி இருக்கிறேன். இந்த நகரங்கள் பற்றி தகவல்களை "விகிபெடியாவில்" எடுத்தேன்.படங்களை கூகிள் இனியதலத்தில் இருந்து எடுத்தேன்.
அன்புடன்
அசோக் குமார்
yerevan ,armenia kooda best city in the world.it is a heaven in the earth.you please search and write about it.
ReplyDelete//PALDURAI said...
ReplyDeleteyerevan ,armenia kooda best city in the world.it is a heaven in the earth.you please search and write about it.//
கட்டாயம் எழுத முயற்சிக்கிறேன் நன்றி