Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Thursday, February 15, 2018
Tuesday, December 13, 2011
உண்மையான காதல் என்பது கடவுளைப்போல
உண்மையான காதல்
என்பது கடவுளைப்போல
எல்லோரும் அதைப்
பற்றியே பேசினாலும்
உணர்ந்தவர்கள்
மிகச்சிலரே !!!
**************************************************************************
நெடு நாட்களாக சிந்தித்தும்
புலப்படவில்லை , இரண்டு
கண்கள் , இரண்டு காதுகள்
என இரண்டு இரண்டாக
கொடுத்த கடவுள் இதயம்
மட்டும் ஒன்றே கொடுத்தான்
ஒருவேளை இன்னொன்றை
நாம் தேடிக்கொள்ளவோ
என்னமோ !!!!
******************************************************
நம் சண்டையிட்டுகொண்ட
நேரங்களில் எத்தனை
முறை உனக்காக நான்
காயப்பட்டு இருந்தாலும்
பரவாயில்லை, உன்னை
விட்டு பிரிவதற்கு
எனக்கு ஆயிரம் காரணங்கள்
இருந்தாலும் நான்
உனக்காக வாழ
ஒரு காரணம் போதும்!!!
***************************************************************************
Thursday, November 10, 2011
உன் உதட்டு சாயத்தை கொஞ்சம் தாயேன்
உன் உதட்டு
சாயத்தை கொஞ்சம்
தாயேன் என்
ரத்தத்தில் ஹீமோக்ளோபின்
குறைபாடாம்!!
***********************************************கல்யாண கூட்டத்தில் மணப்பெண்ணின் தோழிகளை ரசிப்பதற்காகவே ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும்# ஜென்ட்ஸ் சைக்காலஜி
***********************************************
கடுப்பாகிப்போன
என் பேருந்து
பயணங்களை
சுகமாக்கியது உன்
வரவு மட்டுமே!!
**********************************************
கோயில் இல்லா
ஊரில் மட்டுமல்ல,
நீ இல்லா ஊரிலும்
குடியிருக்க மாட்டேன்!!!
**********************************************
பாலுக்காக
அடம் பிடிக்கும்
குழந்தையை
போல அடம்
பிடிக்கிறேன்
உன் முத்ததிற்காக !!
************************************************
பள்ளி தோழியை
பார்க்கையில் பால்ய
கால காதல் மீண்டும்
மனதின் ஓரத்தில்
துளிர்ப்பதை
தவிர்க்க
முடிவதில்லை !!
********************************************
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Wednesday, July 20, 2011
விடியல் ஒன்றுதான்
சேவலின் விடியல்
கூவலோடு தொடங்குகிறது
பூக்களின் விடியல்
மலர்தலோடு தொடங்குகிறது
சாலைகளின் விடியல் வாகன
இரைச்சலோடு தொடங்குகிறது
புது கணவன் மனைவியின் விடியல்
முத்தத்தோடு தொடங்குகிறது
குடிகாரனின் விடியல் சாராயத்தின்
நெடியோடு தொடங்குகிறது
குழந்தையின் விடியல்
அழுகையோடு தொடங்குகிறது
பார்வை அற்றவனின் விடியல்
இருளோடு தொடங்குகிறது!!
ஏழையின் விடியல் என்றும்
ஏக்கத்தோடு தொடங்குகிறது
யுத்தத்தோடு தொடங்குகிறது!!
விடியல் மட்டும்
எல்லோருக்கும் ஒன்றுதான் !!!
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Thursday, June 2, 2011
நான் நேசிப்பன யாவும்.
உன்னில் தொடங்கி
உன்னிலேயே முடிகின்றன
நான் நேசிப்பன யாவும்.
===========================================
உன் இதயத்தை
கட்டுக்குள் வைத்திருக்கும் நீ
உன் கண்களை விட்டுவிட்டதேன்!!
என் மீதுள்ள காதலை
காட்டி கொடுக்கின்றன பார்!!!
============================================
![]() |
| Thanks to Google for the Images |
ஓடும் பேருந்தின் சன்னல்களை சல்லடை போட்டு
தேடுகிறேன் -வேலை பார்க்கும் கணினி முகத்திரையை
சலிக்கிறேன்- உடைந்த கண்ணாடி சில்லுகளில்
பார்க்கிறேன்- குளிக்க போகும் வெந்நீரில் கூட
தேடுகிறேன் -இட்லி போட வைத்த தட்டில் உற்று
பார்க்கிறேன்- உன் முகம் தெரிகிறதா என்று
இதுதான் காதலா !!!
=====================================================
அன்புடன்
அசோக் குமார்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Wednesday, May 25, 2011
ஜேப்படி வித்தைக்காரன்
ஒரு கண பொழுதில் மற்றவர்
பர்சை தன் பாக்கெட்டுக்கு மாற்றும்
கண் கட்டு வித்தைக்காரன் !!!
ஓடும் பேருந்திலே ஏறி
ஓடும் பேருந்திலே இறங்கும்
சாகசக்காரன் !!
பிளேடை மட்டுமே மூலதனமாக
கொண்டு தொழில் செய்யும்
வியாபார காந்தம் இவன் !!
குன்று இருக்குமிடமெல்லாம்
குமரன் இருப்பான் கூட்டம்
இருக்குமிடமெல்லாம் இவன் இருப்பான் !!
இவனுக்கும் மாதம்
முதல் தேதி கொண்டாட்டம்
கடைசி தேதி திண்டாட்டம் !!
விழுப்புண் வாங்கியதில்
பழுவேட்டரைருக்கு சளைத்தவனல்ல
எல்லாம் பிடிபட்டபோது வாங்கியவை !!
திறந்த பர்சில் கிழிந்த பத்து ரூபாய்
நோட்டையும் நகை அடகு வைத்த ரசீதையும்
பார்த்து கலங்கினான் என்றால்
அவனும் மனிதனே !!
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Monday, April 25, 2011
ஆதலினால் காதல் செய்வீர்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
வரம்புகளை ஆராய்ந்துகொண்டு
இருக்கிறேன் உன் மனதில்- நான்
இருக்கிறேனா என்ற தகவலை
அறிந்து சொல்லுமா என??
---------------------------------------------------------------------------
எகிப்து பிரமீடுகளை
உன் கன்னங்களில்
தங்கி செல்கிறாய்
நான் உன் முக
Labels:
கவிதைகள்
Sunday, April 24, 2011
சிறைபடுத்ததான் வேண்டுமோ
உன் ஒவ்வொரு பிறந்த நாளையும்
மறந்துதான் போனேன் நான்
மறுநாள் கோபித்த
பின் சமாதானமாவாய் !!!
எனக்கும் நினைவில் வைத்து
கொள்ளவே ஆசை என்ன செய்ய
மறதி உருவில் வந்து
உன்னிடம் சிக்கவைக்கிறது!!!
இந்த முறை முன்னமே
நானறிந்து கேட்டேன்
என்னவேண்டும் உன்
பிறந்த நாளுக்கென்று!!!!
விதவிதமான பட்டாம்பூச்சிகளை
ஜாடியில் அடைத்து கேட்டாய்
அவற்றின் சுதந்திரத்தை விடுத்து
சிறைபடுத்த மனமில்லை என்றேன் !!!
என்னைமட்டும் உன் இரு
கைகளுக்குள் சிறைப்படுத்தலாமா
என்றாய் செய்வதறியாது
விக்கித்து நின்றேன் நான்!!!
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Thursday, April 21, 2011
சத்தமிடாமல் முத்தமிடு
பெண்ணே! அங்காங்கே
உன் இதழ் தடங்களை
பதித்துவிட்டு போ!
பிற்காலத்தில் நான்
முத்த வரலாறு
எழுத பயன்படட்டும்!!!!!
================================================
என் வாழ்கையை இரண்டாக
பிரிக்க சொன்னால் இப்படித்தான்
பிரிப்பேன் உன்
முத்தத்திற்கு முன் (மு. மு)
மற்றும் உன் முத்தத்திற்கு
பின்பு (மு. பி) என்று!!!!!
==============================================
முத்த மூட்டை
எனக்கு வரும் கடிதங்கள்
மட்டும் கனமாக இருப்பதாக
முறையிடும் தபால்காரருக்கு
என்ன தெரியும் அதில்
இருப்பது நீ மூட்டையாக
கட்டி அனுப்பிய ஓராயிரம்
முத்தங்கள் இருக்கிறதென்று!!!!
======================================================
முத்த செடிகள்
நீ போகும் சாலை மருங்கிலும்
முத்த செடிகளை பதியன் போட்டு
நட்டு வைத்திருக்கிறேன்
சம்மதமாயிருந்தால் எச்சில் எனும்
தண்ணீர் விட்டு போயேன்!!!
=====================================================
கந்துவட்டிகாரி
நீ கொடுத்த ஒற்றை
முத்ததிற்காக என்னிடம்
நூறு முத்தம் கேட்கும்
கந்துவட்டிகாரி நீ!!!!!!
======================================================
காதலில், கோழைகளுக்கு
என்றும் கிடைப்பதில்லை
முத்தம் என்னும் வரம்!!!
======================================================
முத்த செடிகள்
நீ போகும் சாலை மருங்கிலும்
முத்த செடிகளை பதியன் போட்டு
நட்டு வைத்திருக்கிறேன்
சம்மதமாயிருந்தால் எச்சில் எனும்
தண்ணீர் விட்டு போயேன்!!!
=====================================================
கந்துவட்டிகாரி
நீ கொடுத்த ஒற்றை
முத்ததிற்காக என்னிடம்
நூறு முத்தம் கேட்கும்
கந்துவட்டிகாரி நீ!!!!!!
======================================================
முத்த வரம்
என்றும் கிடைப்பதில்லை
முத்தம் என்னும் வரம்!!!
Labels:
கவிதைகள்
Monday, April 18, 2011
முரண்பாடுகளின் மூட்டையா நீ...!!!!
Labels:
கவிதைகள்
Wednesday, April 13, 2011
முத்தம் போதாதே
என் கண்ணே! வித்தையை
கற்று கொடுப்பவர் எல்லாம்
குரு என்றால் நீயும் என்
குருதான் முத்தமிடும் கலையை
கற்று கொடுத்ததால்!!!
=====================================================
பூங்கா மரத்தடியில்
இரண்டு மணி நேரமாய்
அமர்ந்திருக்கும் என்னை
முறைக்கும் வாட்ச்மேனுக்கு
என்ன தெரியும் நீ தரும்
ஒற்றை முத்ததிற்காக
நான் தவமிருப்பது!!!!
எப்படி சொல்வது!!
என் காய்ச்சலுக்கு காரணம்
கேட்கும் மருத்துவரிடம்
எப்படி சொல்வேன் நேற்று
இரவு நீ கொடுத்த
முத்தம் தான் என்று.
======================================================
காதலில் தோற்றவன்
எஞ்சி இருப்பவை உன்
நினைவுகளும் நீ கொடுத்த
முத்தங்களும் மட்டுமே
======================================================
ஏன் இப்படி
நீ வாய் துடைத்து
கசக்கி எரியும் நாப்கின்கள்
கூட என்னை எள்ளி
நகையாடுகின்றனவே!!!
=======================================================
தோற்க தயார்
வேறந்த சண்டையிலும்
தோற்க தயாரில்லை நான்
உன்னுடன் நடக்கும்
முத்த சண்டையை தவிர
========================================================
நான் ரசித்த காணொளி
இந்த காணோளியை சுவாரசியமாக ரசித்து பார்த்தேன். ஆண்களில் அறியாமையிலும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.
நான் ரசித்த காணொளி
இந்த காணோளியை சுவாரசியமாக ரசித்து பார்த்தேன். ஆண்களில் அறியாமையிலும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Monday, April 11, 2011
முத்தமிடலாமா
முத்தமிடலாமா
மின்சார தேவைக்காக
அயல் நாடுகளை கையேந்தும்
இந்திய அரசாங்கத்திற்கு
தெரியவில்லை உன் ஒற்றை
முத்தத்தில் 1000 மெகா வாட்
தெரியவில்லை உன் ஒற்றை
முத்தத்தில் 1000 மெகா வாட்
மின்சாரம் எடுக்கலாம் என்று.
====================================================
சண்டை போடலாமா?
நாம் சண்டையிட்டு
நாம் சண்டையிட்டு
பிரிந்த பின்பு சேரும் நாட்களில்
முத்தம் தந்து என்னை
சமதானபடுத்துகிறாய் உன்
முத்ததிர்க்காகவாவது நாம்
அடிக்கடி சண்டையிட வேண்டும்.
=====================================================
கூடிய பின்பு..
எனக்கு மட்டும் நீ
வித்தியாசமானவளாக தெரிகிறாய்
எல்லோரும் முத்தம் கொடுத்தபின்
கூடுவார்கள் ஆனால்- நீ
முத்தமிட்டு நம் கூடுதலை முடிகிறாய்.
=====================================================
விலைமகளின் முத்தத்தை
சுவைப்பவர்களுக்கு
தெரிவதில்லை அவளின்
ரணமாகிபோன மனது.
=====================================================
பேஸ் புக்கில் சில நாட்களுக்கு முன் இந்த காணோளியை காணும் வாய்ப்பு கிடைத்தது நீங்களும் பார்த்து சிரிக்கலாமே!!!
அன்புடன்
அசோக் குமார்
=====================================================
பெண்ணே! அங்காங்கே
உன் இதழ் தடங்களை
பதித்துவிட்டு போ!
பிற்காலத்தில் நான்
முத்த வரலாறு
எழுத பயன்படும்
=====================================================
நான் ரசித்த காணொளி பேஸ் புக்கில் சில நாட்களுக்கு முன் இந்த காணோளியை காணும் வாய்ப்பு கிடைத்தது நீங்களும் பார்த்து சிரிக்கலாமே!!!
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Monday, March 28, 2011
மழை கவிதைகள்-I
மழை கவிதைகள்-I
சூரிய காதலன்
ஏ மழையே! நான் வருவேன்
என தெரிந்து பூக்களுக்குள்
ஒளிந்து இருந்தாய் பூக்களை
பற்றி தான் எனக்கு தெரியுமே.
எனை பார்த்து பூக்கள்
மலர்ந்து உன்னை
காட்டி கொடுத்துவிட்டனவே
=========================================================
ஆலங்கட்டி மழை
உதிர்ந்த
வெண்முத்துகளை
எடுக்கத்தான்
முடிந்தது
கோர்த்து
வைக்க நான்
என் செய்வேன்
===================================================
மழை வேண்டி
யாகம் வளர்கிறார்கள்
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் என்கின்றனர்
பெண்கள் எல்லாம் சேர்ந்து
ஊர் எல்லையில் கூடி
அழுகிறார்கள் மரம் வளர்ப்பதை
மட்டும் தவிர்த்து
==========================================================
நனைவது பிடிக்கும்
சிலருக்கு மழையில்
நனைவது
பிடித்தமான ஒன்றுதான்
குடையை மறந்த
நாட்களில் மட்டும்
=======================================================
நல்லவர் ஒருவர் உளரேல்
இப்போதெல்லம்
நல்லவர்களை
அடையாளம் காட்ட
மட்டும்தான்
வருகிறாய்
போலும்
=========================================================
அன்புடன்
அசோக் குமார்
Labels:
கவிதைகள்
Saturday, March 19, 2011
Tuesday, March 15, 2011
வசந்தமாக வந்தாள்
காதலிப்பது பெண்கள் வேலை - அதை
கண்டுபிடிப்பது ஆண்கள் வேலையாம்!!!
அதை கூட சரியாக செய்யவில்லை- நான்
பொறுத்து பார்த்தபின் நீயே சொன்னாய் ஒருநாள்!!!
பட்டம்பூச்சியின் சிறகுகளை கடன் வாங்கி பறந்ததை- போல்
அந்த நினைவுகள் நிற்கும் நூற்றாண்டுகள் தாண்டியும்!!!!
பல உன் வினாக்களுக்கு விடை தெரியாமல் விழித்தேன்- நான்
குறுநகை புரிந்து ஏற்றுகொண்டாய் நீ!!!
ஒன்று சேர்வோமா என்ற ஐயம் - உனக்கு
தேற்றுவதை தவிர வழி ஏதும் இல்லை எனக்கு!!!!
காலசக்கரம் சுழன்றது வேகமாய் - ஒருநாள்
என்னிடமிருந்து உன்னை பிரிக்கும் என்று தெரியாமலே மகிழ்ந்தேன்!
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
அழி பேரலையில் அடித்து செல்லப்படும் ஓடம் போல்-ஆனேன்
அழக்கூட முயற்சிக்கவில்லை, ஆண் மகன் அழக்கூடதாம்!!
போகட்டும் என் குழந்தைக்காவது உன் பெயரிட்டு- உன்னை
நினைக்கவேண்டும் வசந்தமாக நீ, என் வாழ்வில் வந்ததற்காக!!!!
அன்புடன்
அசோக் குமார்
(Thanks to google for the image)
Labels:
கவிதைகள்
Thursday, February 17, 2011
Saturday, December 25, 2010
விரும்புகிறேன்
விரும்புகிறேன்
"நீ என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
"நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!♥♥♥
"நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!♥♥♥
Labels:
கவிதைகள்
Thursday, December 16, 2010
அகதி
அகதி
ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி - இன்னொரு
இடத்தில் நடும் செடிக்கு கூட தாய்மண்!!
கொஞ்சம் வேரோடு ஒட்டி இருக்கும்- எங்களுக்கு
அந்த கொடுப்பினையும் இல்லை!!
ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி - இன்னொரு
இடத்தில் நடும் செடிக்கு கூட தாய்மண்!!
கொஞ்சம் வேரோடு ஒட்டி இருக்கும்- எங்களுக்கு
அந்த கொடுப்பினையும் இல்லை!!
Labels:
கவிதைகள்
Monday, December 13, 2010
சொல்லி வை
Thanks to google images for the picture
சொல்லி வை உன் காலணிகளுக்கு!!!!
நான் உன்னை பார்க்கும்போதெல்லாம்- அவை
என்னையே முறைத்து பார்க்கின்றன!!!!!!
சொல்லி வை உன் காலணிகளுக்கு!!!!
நான் உன்னை பார்க்கும்போதெல்லாம்- அவை
என்னையே முறைத்து பார்க்கின்றன!!!!!!
Labels:
கவிதைகள்
Saturday, December 11, 2010
ரகசியங்கள்
Thanks to Google images
பேருந்தில் அறியாமல் நான் உரசிய பெண் முறைத்த முறைப்பும்!!!
பேருந்தில் அறியாமல் நான் உரசிய பெண் முறைத்த முறைப்பும்!!!
வயிறு முட்ட குடித்து வாந்தி எடுத்ததையும்!!!!!
அப்பாவின் சட்டை பையில் பணம் எடுத்து அகப்பட்டதையும் !!!!!!
நான் நேசித்த பெண்ணிடம் இதுவரை என் காதலை சொல்லாததும் !!!!!
இதுவரை நான் பாதுகாக்கும் ரகசியங்கள் !!!!!!
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)














































