Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Monday, July 4, 2011

ஹாலிவுட் சினிமாவில் தடம் பதிக்கும் அமெரிக்க வாழ் இந்தியன்

ஹாலிவுட் சினிமாவில் தற்போது இயக்குனராக முத்திரை பதித்துகொண்டிருக்கும் இந்தியர் மனோஜ் நைட் சியாமளன்,  பாண்டிச்சேரியில் பிறந்து அமெரிக்காவின் "பெனிசுலவானியா" மாநிலத்தில் "பிலடெல்பியா" நகரத்தில் வளர்ந்தவர். 

இவர் படங்களில், கிளைமாக்சில் வரும் திடீர் திருப்பம் படம் பார்ப்பவர்களை திகைக்க வைக்கும். அதற்காகவே இவர் படங்கள் ஹாலிவுட் சினிமாவில் பிரபலம். 

ஷ்யாமளனின் அப்பா அம்மா இருவரும் அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்கள். ஷ்யாமளன் சிறுவயதிலே அமெரிக்காவில் வளர்ந்தவர், இவர் தனது சினிமா ஆசைக்கு காரணம் "ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்" என்கிற ஹாலிவுட் இயக்குனர் என்கிறார். "பாவனா" என்ற இந்திய பெண்ணை 1992 ம் ஆண்டு திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தை இவர்.  அதுமட்டுமின்றி தனது பத்து வயதிலேயே குறும் படங்களை தன் கையடக்க காமெரா மூலமாக படம் பிடித்துள்ளார் ஷ்யாமளன். 

இவர் முதன் முதலில் இயக்கிய படம் 1992 -இல் வெளியிட்ட  "ப்ரயிங் வித் அங்கேர்" (Praying with  Anger), இந்த கதை இவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வது போல் சித்தரிக்கப்பட்ட கதை. 

இவரது "சிக்ஸ்த் சென்ஸ்" படம் உலகமெங்கும் இவரை பிரபலப்படுத்தியது. ஒரு சிறுவனின் உளவியல் மாற்றங்களை சரி செய்ய வந்த மருத்துவராக "ப்ருக்ஸ் வில்லிஸ்" நடித்திருந்தார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பார்த்த எல்லோரையும் இருக்கையின் நுனியில் உட்கார வைத்தது என்றால் அது மிகை இல்லை. 



 "சிக்ஸ்த் சென்ஸ்" படத்தின் முன்னோட்ட காணொளியை இங்கு இணைத்துள்ளேன் .


 சிக்ஸ்த் சென்ஸ் படத்தின் ஆர்பாட்டமில்லாத க்ளைமாக்ஸ் காட்சி 

இந்த படத்திற்கு பிறகு,  இவர் கதை எழுதி இயக்கிய படங்கள் 'அன்பிரேக்பல்" "தி வில் ஏஜ்" " தி லேடி இன் தி வாட்டர்" போன்ற படங்கள் .    இதில்   "தி வில் ஏஜ்" படம் மட்டும் சுமாராக ஓடிய படம். 

"ராபர்ட்  ம்சில்ஹின்னே"  என்ற எழுத்தாளரை இவர் காப்பி அடித்து திரைக்கதை அமைகிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவும் இவரை கவுரபடுத்தி பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது. இவர் தனக்கென ஒரு வலை தளத்தை  வைத்து  இருக்கிறார். இன்னும் பல சாதனைகள் புரிய இவரை வாழ்த்துவோமே !!!!

அன்புடன் 

அசோக் குமார்

Tuesday, June 14, 2011

நாய்களுக்கென ஒரு கிராமம்- படங்கள் இணைப்பு

இந்த செய்தி இங்கல்ல, பிரேசில் நாட்டில் "காசியஸ்" (caxias) நகரில் தான் இப்படி நாய்கள் மட்டுமே குடி இருக்க தனி கிராமமாக உருவாகியுள்ளனர். 


இந்த நகரில் உள்ள நாய்கள் எந்த சிரமமும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கபடாமல் பாதுகாக்கவே இப்படி ஒரு கிராமத்தையே இந்த நாய்களுக்காக ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த "நாய் கிராமத்தில் சிறு சிறு வீடுகளாக ஒரு நாய் தங்கும் அளவுக்கு கட்டியுள்ளனர். "அமா" (Ama) என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு இந்த கிராமத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. 


இந்த நாய்களுக்கு நேரத்திற்கு உணவும், தண்ணீரும் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் சிறு வீடுகளில் 1600  நாய்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளன. நாய்கள் மட்டுமின்றி 200 பூனைகளும் இருகின்றன.

நம்ம ஊர்ல சொந்த வீடு வாங்க மனுஷன் அல்லாடுறான். இங்க நாய்களுக்கு வீடு பிரமாதம்!!!!

அன்புடன் 
அசோக் குமார்

Sunday, June 12, 2011

உலகத்தின் தொடர்பே இல்லாமல் வாழும் அமேசான் பழங்குடியினர்


பிரேசில் அரசு கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு தகவலை வெளியிட்டது, அது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இருக்காத பின்னே! வெளி உலகத்தின் தொடர்பே முற்றிலும் அற்று பொய் ஒரு கூட்டம் தனியே அமேசான் காடு பகுதியில், பேரு நாட்டின் எல்லை ஓரத்தில் வசித்து வருவதை கண்டறிந்து அதிகார பூர்வமாய் செய்தி வெளியிட்டு உள்ளனர். 


விமானம் மூலம் எடுத்த புகை படங்களின்ஆதாரமாக வைத்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது பிரேசில் அரசாங்கம்.


இவர்கள் தங்கள் குடிலை தாங்களே அமைத்துக்கொண்டு வாழும் அளவுக்கு நாகரீகம்  அடைந்துள்ளனர். விமானத்தை பார்த்து ஏதோ தங்களை தாக்க வருவதாக எண்ணிக்கொண்டு வில் கம்பைகொண்டு எரிவதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.


பல ஆச்சர்யமூட்டும் தகவலும் உண்டு. புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் ஆடைகளை உடுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு பருத்தி ஆடைகளை நெய்ந்து அணியும் அளவுக்கு நாகரிகம் கொண்டவர்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர். 



பி பி சி தன் குழுவோடு போய் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன். இதன் ஆராய்ச்சியாளர் "டேன் ஜேம்ஸ், பெரு நாட்டை சேர்ந்தவர், மேலும் அமேசான் காட்டில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.


ஆனா ஒன்னு மக்கா!! இவங்கள பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. பின்ன இருக்காத, கரன்ட் பில், டெலிபோன் பில், வாட்டர் பில், காஸ் பில், பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி ஏற்றம் அப்படின்னு எந்த பிரச்சினையும் இல்ல. பிரேசில் அரசுக்கு ஒரே வேண்டுகோள் அவங்களையாவது நிம்மதியா வாழ விடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்!!

மேலும்  விவரங்களை தெரிந்துகொள்ள www . amazon -indians .org என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Saturday, June 4, 2011

உலகில் வாழ சிறந்த பத்து நகரங்கள் (World's 10 Best Places to Live) படங்கள் இணைப்பு

சமீபத்தில் போர்பஸ் இணயதளத்தில், உலகில் எந்த நகரம் மனிதன் வாழ சிறந்தது என பத்து நகரங்களை தர வரிசை படுத்தியுள்ளனர். இதை தேர்ந்தெடுக்க பல அடிப்படை விஷயங்களை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுத்தமான குடிநீர், சுத்தமான புறசுழல், சிறப்பான போக்குவரத்து, நகரின் அழகு, நகரின் முக்கியத்துவம் மற்றும் வாழும் மக்களின் பாதுகாப்பு என பட்டியல் நீளம். இந்த நகரங்கள் உண்மையிலேயே சிறப்பானவை என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. சரி பட்டியலை தலைகீழாக பார்போம்:

10. சிட்னி -ஆஸ்திரேலியா (Sydney, Australia)


  பத்தாவது இடமாக சிட்னி நகரம், இது நியூ சௌத்வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரம். டாஸ்மன் கடற்கரை ஓரம் அமைந்த, உலகின் பல மனிதர்களும் வந்து போகும் ஒரு நகரம். அதுமட்டுமில்லாமல் இது பிரிட்டிஷ் காலனி அதிகத்துக்கு உட்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

9. பேர்ன், சுவிசெர்லாந்து (Bern,Switzerland)


சுவிசெர்லாந்து நாட்டிலேயே இது நாலாவது சிறந்த நகரம். இந்த நகரத்தின் அங்கிகரிக்கப்பட்ட மொழி ஜேர்மன். 2000-ம் ஆண்டு கணக்குப்படி இந்த நகரத்தில் 6 ,60000 பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.

7(1). பிருன்க்புர்ட், ஜெர்மனி (Frankfurt, Germany)
  இரண்டு நகரங்கள் ஏழாம் இடத்தை பிடித்துள்ளன அதில் ஒன்று பிருன்க்புர்ட். ஜெர்மனியின் முக்கியமான பணம் புழங்கும் நகரம். பிரபல ஜெர்மன் வங்கிகளான மத்திய ஐரோப்பிய வங்கி ( European Central Bank) மற்றும் ஜெர்மன் பெடரல் வங்கிகளின் (German Federal Bank) தலைமையகம் இங்குதான் உள்ளது. இந்த நகரில் அமைந்துள்ள லூக்போரோ பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் 21 வது இடத்தில் இருக்கிறது.

7(2). முனிச், ஜெர்மனி (Munich, Germany) 

பெர்லின் மற்றும் ஹம்புர்க்க்கு பிறகு ஜெர்மனியின் பெரிய நகரம் முனிச். இந்த நகரின் சிறப்பு, இசர்(Isar) என்ற நதியின் கரையில் அமையபெற்றது. உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று. ஆய்வுகளின்படி 1158-இல் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கலாம் என அறிகிறது.
Munich in 1968

Headquarters of BMW car company
முதலாம் உலக போர் நடந்த 1914-ம் வருடம் இந்த நகரம் ரொம்பவே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அந்த சமயம் உணவு பெட்ரோல் கூட கிடைக்காமல் அல்லாடி இருக்கிறார்கள். இதே உலகப்போரில் 1916 ம் வருடம் பிரான்ஸ் இந்த நகரின் மீது மூன்று குண்டுகளை வீசி சேதபடுத்தி  உள்ளது. 

முனிச் நகரம் பசுமை நிறைந்த பல பூங்காக்களை கொண்ட நகரம். மேலும் 'இசர்' (Isar) நதியின் ஓரம் அமைந்துள்ள ஜெர்மன் அருங்காட்சியகம் (German Museum ) உலகின் மிக பெரியதும் பழமையானதுமான அறிவியல்   அருங்காட்சியகம். அதுமட்டுமில்லாமல் இங்கு ஐரோப்பிய கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்கும் தளமாகவும் இருக்கிறது. பிரபல இசைக்கலைஞரான மொசார்ட் (Mozart) தன் இசை நிகழ்ச்சிகளை  நடத்தி உள்ளார். 


 6. டசெல்டோர்ப், ஜெர்மனி (Dusseldorf, Germany)
 
ஜெர்மனியின் மாநிலமான வடக்கு றினே -வெஸ்ட் பாலியா (North Rhine-Westphalia)-வின் தலைநகரம்தான் இந்த  "டசெல்டோர்ப்". உலகின் முக்கியமான வியாபார தளம் இந்த நகரம். பண பரிவர்த்தனைகளுக்கும், புதிய பேஷன்களை அறிமுகம் செய்வதிலும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம்.
                          இந்த நகரம் உருவான வரலாறு ரொம்பவே சுவாரசியமானது. 7 -8 ம் நூற்றாண்டுகளில் இந்த நகரை ஒட்டி உள்ள "டுச்செல்" (Dussel) நதியை மூலமாக கொண்டு விவசாயம் செய்யவும் மீன் பிடித்து தொழில் செய்யவும் இது பெரிய நகரமாக உருவானதாக வரலாறு.
டசெல்டோர்ப் நகரம் பீர் தயாரிப்பில்  கூட பிரசித்தி பெற்றது. ஈஸ்ட் கொண்டு பீர் தயாரிக்கும் முறை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. 
 4 (1). வந்குவேர், கனடா (Vancouver, Canada)
கனடாவின், மூன்றாவது  பெரிய நகரம் தான் "வந்குவேர்". இந்த நகரம் உருவான வரலாறு கொஞ்சம் பார்ப்போம். "பிரேசர் கோல்ட் ருஷ்" ( Fraser Gold  Rush) என்ற தனி மனிதர் 1859 - ம் வருடம்,  அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் பிரஜைகள் 25 ,ooo பேரை மட்டும் அழைத்துக்கொண்டு போய் "பிரேசர்" என்கிற நதியை ஒட்டி நிர்மாணித்த நகரம் இது.

 
சில முக்கியமான அமெரிக்க நகரங்களுக்கு அடுத்தபடி மக்கள் மிகவும் நெருக்கமாக குடியிருக்கும் ஒரு நகரம் இது.

இன்னுமொரு முக்கியமான விஷயம் இங்குள்ள 52  சதவிகிதம் பேர் ஆங்கில மொழி பேசாதோர். 30 சதவிகிதம் பேர் சீன மொழி பேசுவோர்.

4 (2). ஆக்லாந்து , நியூசிலாந்து (Auckland, New Zealand )


 ஆக்லாந்து, இந்த நகரம் நியூசிலாந்து நாட்டின் 31  சதவித மக்கள் தொகையை உள்ளடக்கிய நகரம். இது ஹுகிரி வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் நடுவில் அமையபெற்றது.

ஆக்லாந்து நகரத்தை சுற்றி 50 எரிமலைகள் இருக்கிறது. இதனால் இந்த நகரின் இயற்கை தகவமைப்பே மாறி போய் உள்ளது.




இந்த நகரின் காலச்சாரம் ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் நாட்டினரை சார்ந்து  உள்ளது. ஆனாலும் சமீபத்தில்  ஆசிய மற்றும் ஐரோப்பியர் அல்லாதோர் இங்கு நிறைய தங்குகிறார்கள்.



ஜெனீவா , சுவிட்சர்லாந்து (Geneva, Switzerland )
சுவிட்சர்லாந்து, நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை அதிகம் உள்ள மற்றும் பிரெஞ்சு மொழி அதிகம் பேசும் மக்கள் இருக்கும் நகரம். 
 ஜெனிவா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதபடுகிறது. என்ன விஷயம் என்றால், இது உலக நாடுகளின் பண பரிவர்த்தனைகளை கையாளும் மையமாகவும், உலக நாடுகளின் முக்கிய நிறுவனங்களின் தலைமை இடங்கள் இங்குதான் உள்ளது. 

ஐக்கிய நாடுகளின் (United  Nations) பல துறைகளின் தலைமை இடம் ஜெனீவாவில் தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் "ரெட் கிராஸ்" இந்த நகரைதான் தலைமை  இடமாக கொண்டு இயங்குகிறது. 
   போர் கைதிகளை நடத்தும் முறைகளை பற்றியும், போரில் பங்கேற்க்காதவர்களை எவ்வாறு பாதுகாப்பது பற்றியும் உலக நாடுகள் ஒரு ஒப்பந்தம் செய்தது இந்த நகரில்தான்


ஜெனீவா கொஞ்சம் தனி சிறப்பு வாய்ந்த நகரம் என்று சொன்னால் அது மிகை இல்லை. ஜெனீவா ரொம்பவும் அழகாக வடிவமைக்கபட்ட, "அமைதியின் நகரம்" (peace city) என பெயர் பெற்றது.



பல  முக்கிய உலக நிறுவனங்களின் தலைமையகங்கள் இந்த நகரில் இருப்பதால் இந்த நகரம் சுவிட்சர்லாந்த் நாட்டில் பெருமைக்குரிய நகரமாக விளங்குகிறது. 












2. ஜுரிச் , சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து, நாட்டின் முதல்  இரண்டாவது மக்கள் தொகை அதிகம் உள்ள மற்றும் பிரெஞ்சு மொழி அதிகம் பேசும் மக்கள் இருக்கும் நகரம்.

சுமார் 7000  ம் வருடத்திற்கு முன்  ரோமானியர்கள் நிர்மாணித்த நகரம் இது.  இந்த நகரத்தின் போக்குவரத்து ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து உடையது. அதுமட்டுமின்றி  இந்த நகரின் விமான போக்குவரத்து எப்போதும் பிஸி ஆனது.  சுவிட்சர்லாந்தின் மற்ற நகரங்கல போல் இந்த நகரமும் உலக நாடுகளின் முக்கிய பண பரிமாற்ற தளம்.

 இந்த நகரை சுற்றி இவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு பல ஆர்ட் காலரிகளும், தொல்பொருள் கூடங்களும் இருக்கிறது.



2006  மற்றும் 2008  ம் வருடத்தில் நடந்த தேர்ந்தெடுப்பின் போது கூட இந்த நகரம் மனிதர்கள் வாழ சிறந்த நகரமாக தேர்ந்தேடுக்கபட்டது இதன் சிறப்பு.
1. வியன்னா , ஆஸ்திரியா

ஆஸ்திரியா  நாட்டின் தலை நகரம், அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரியாவின் ஒன்பது நகரங்களில் முக்கியமான நகரம். இந்த நகரில் 1 .7 பில்லியன் மக்கள் தொகையும், அதுமட்டுமில்லாமல் இந்நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மயமே இந்த நகரம் தான்.

 

 இந்நகரம் செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் ஸ்லோவோக்கியா நாடுகளின் அமைந்த எல்லையோரம் நகரம்.
பல பத்திரிக்கைகளின் கருத்துக்கணிப்புகளின்  படி வியன்னா, மனிதர்கள் சிறப்பாக வாழும் தகுதியுள்ள நகரங்களின்  முதல் பத்து இடத்திற்குள் வந்துள்ளது

 

 கி. பி. 15  ம் நூற்றாண்டில் ரோமானியர்கள் நிர்மாணிக்கப்பட்ட நகரம். எல்லா நகரங்களும் ஒரு நதியின் கரை ஓரத்தில் தான் தொடங்கபட்டுளது. அதுபோலவே இந்த நகரமும் "தனுபு" என்ற நதியின் கரை ஓரத்தில் உருவான நகரம்.

வியன்னா 1493  வருடம் எடுக்கப்பட்டது

கி.பி. 13 ம் வருடம் மங்கோலிய படையெடுப்புக்கு ஆளான நகரம் இது. அதற்கு முன்பு வரை இந்நகரம் ரஷ்யா மற்றும் சீனம் வரை விரிந்து இருந்ததாக அறியப்படுகிறது.


நெப்போலியன் இந்த நகரின் மீது படை எடுத்தபோது ஆஸ்திரேயாவின் தலைநகராக இருந்தது, அதுமட்டுமின்றி இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருந்திருக்கிறது.

கூடுமானவரை இந்த நகரங்களை பற்றி அலசி இருக்கிறேன். இந்த நகரங்கள் பற்றி தகவல்களை "விகிபெடியாவில்" எடுத்தேன்.படங்களை கூகிள் இனியதலத்தில் இருந்து எடுத்தேன்.

அன்புடன்
அசோக் குமார்