இந்த செய்தி இங்கல்ல, பிரேசில் நாட்டில் "காசியஸ்" (caxias) நகரில் தான் இப்படி நாய்கள் மட்டுமே குடி இருக்க தனி கிராமமாக உருவாகியுள்ளனர்.
இந்த நகரில் உள்ள நாய்கள் எந்த சிரமமும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கபடாமல் பாதுகாக்கவே இப்படி ஒரு கிராமத்தையே இந்த நாய்களுக்காக ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த "நாய் கிராமத்தில் சிறு சிறு வீடுகளாக ஒரு நாய் தங்கும் அளவுக்கு கட்டியுள்ளனர். "அமா" (Ama) என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு இந்த கிராமத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
இந்த நாய்களுக்கு நேரத்திற்கு உணவும், தண்ணீரும் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் சிறு வீடுகளில் 1600 நாய்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளன. நாய்கள் மட்டுமின்றி 200 பூனைகளும் இருகின்றன.
நம்ம ஊர்ல சொந்த வீடு வாங்க மனுஷன் அல்லாடுறான். இங்க நாய்களுக்கு வீடு பிரமாதம்!!!!
அன்புடன்
அசோக் குமார்
