Wednesday, March 30, 2011

படித்ததும் பிடித்ததும்

படித்ததும் பிடித்ததும் 

கிரிக்கெட்அரை இறுதி :  இந்தியா வெற்றி


அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வெற்றி பெற்றதன் மூலம்  இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து மும்பையில் விளையாட உள்ளது. மறுபடியும் சச்சின் 85 ரன்கள் அடித்து வயதுக்கும் ஆட்டத்திற்கும் சம்மந்தம் இல்லை என நிரூபித்துள்ளார். பாகிஸ்தான் வீர்கள் நன்றாக போராடினார்கள். அப்ரிடி மிக நன்றாக பேசினார் இறுதியில். இன்சமாம் போல இல்லாமல் மிக நன்றாக பேசினார். ஆட்டத்தில் வெல்லாவிட்டாலும் நம் மனங்களை வென்றுவிட்டார்.
=========================================================
ஆஸ்திரேலிய அணி காப்டன் மாற்றம்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி காப்டன் ரிக்கி பாண்டிங் மாற்றப்பட்டு கிளார்க் காப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லாம் இந்தியாவிடம் தோற்ற நேரம் போலும். இரண்டு முறை  அணிக்காக கோப்பை ஜெயித்தவர்.

"தீதும் நன்றும் பிறர் தர வரா"  


=====================================================================
சாட்டையடி கொடுத்த பொது ஜனம்

தினமலர் இன்றைய காணொளி காணும்போது மதுரையை சேர்ந்த ஒரு நபர் 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' போர்டு வைத்துள்ளார்.

"நாமும் பின்பற்றலாமே, நல்ல மனிதர்- வாழ்க"

============================================================
தேன் கிண்ணம்
இந்த பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கும், அடுத்த வீடு பெண் படத்தில் இருந்து "கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே". பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் தேமதுர குரலில். தங்கவேலு நடிப்பில் பிரமாதபடுத்தி இருப்பார். அஞ்சலி தேவியின் சொந்த தயாரிப்பில் வெளி வந்த படம்.

 

==========================================================

அன்புடன் அசோக் குமார்

Monday, March 28, 2011

மழை கவிதைகள்-I

மழை கவிதைகள்-I

சூரிய காதலன்


ஏ மழையே! நான் வருவேன்
என தெரிந்து பூக்களுக்குள்  
ஒளிந்து இருந்தாய் பூக்களை
பற்றி தான் எனக்கு தெரியுமே.
எனை பார்த்து பூக்கள்
மலர்ந்து உன்னை
காட்டி கொடுத்துவிட்டனவே
=========================================================

ஆலங்கட்டி மழை



உதிர்ந்த
வெண்முத்துகளை 
எடுக்கத்தான்
முடிந்தது
கோர்த்து
வைக்க நான்
என் செய்வேன்

===================================================
மழை வேண்டி
 
யாகம் வளர்கிறார்கள்
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் என்கின்றனர்
பெண்கள் எல்லாம் சேர்ந்து
ஊர் எல்லையில் கூடி
அழுகிறார்கள்  மரம் வளர்ப்பதை
மட்டும் தவிர்த்து

==========================================================
நனைவது பிடிக்கும்


சிலருக்கு மழையில்
நனைவது
பிடித்தமான ஒன்றுதான்
குடையை மறந்த
நாட்களில் மட்டும்

=======================================================
நல்லவர் ஒருவர் உளரேல்



இப்போதெல்லம்
நல்லவர்களை
அடையாளம் காட்ட
மட்டும்தான்
வருகிறாய்
போலும்

=========================================================
அன்புடன்
அசோக் குமார்

Saturday, March 26, 2011

பொம்பளைன்னா சும்மாவா

 பொதுவாகவே "ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு பெண்கள் கிரிக்கெட்டிற்கு இருப்பதில்லை". நமக்கு சுவாரசியம் எல்லாமே டெண்டுல்கரும் சேவாக்கும் செஞ்சுரி அடிச்சா போதும், மத்த எதை பத்தியும் கவலை இல்லை. அதிலும் குறிப்பா டெண்டுல்கர் அவுட் ஆனா உடனே மொத்த கூட்டமும் காணாம போய்டும்.

ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு இல்லைனாலும், நாங்களும் சளைத்தவர்கள் இல்லன்னு விளையாடுற ஒரு பெண் புலிதான் "மிதாலி ராஜ்".



மிதாலி பிறந்தது 1982 டிசம்பர் மாதம்,  ஜெய்பூர்  மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில். அப்பா- துரைராஜ், வானூர்தி துறையில் பதவி வகிக்கிறார்,   அம்மா-லீலாராஜ்.

இயற்கையாகவே வலது கை துடுப்பாட்டக்காரர் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர்.     முதல் டெஸ்ட் ஆட்டம் 2002-ம் வருடம் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார்.


டெஸ்ட் மேட்சில் முதன் முதலில் இரட்டை சதம் (214) அடித்த ஒரே பெண் மட்டைவீச்சாளர் மிதாலி மட்டுமே. இதுவரை இந்த சாதனையை யாரும் செய்யவில்லை. மொத்தம் எட்டு டெஸ்ட் ஆட்டங்களில் 572 ஓட்டங்கள் எடுத்துள்ளார், இதில் ஒரு சதமும் மூன்று அரை  சதமும் அடங்கும். இவருடைய சராசரி 52 ரன். பெண் டெண்டுலகர்னு சொன்னால் அது மிகை   இல்லை.


ஒருநாள் போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடி 3500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 3000 ரன்களை அடித்த முதல் பெண் ஆட்டகாரரும் இவர்தான். ஒருநாள் போட்டிகளில் இவர் சராசரி 49 ரன்கள். ஒருநாள் போட்டிகளில் இவருடைய அதிகபட்ச ரன் 114* .  ஒற்றை ஆளாக நின்று பல போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளார் மிதாலி.

"அழகிலும் இந்த தேவதை யாருக்கும் குறைவில்லை".



சுவாரசியமான இன்னொரு விஷயம் சின்னஞ்சிறு வயதிலே முறையாக பரதநாட்டியம் பயின்றவர்.


இவர் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பும் ஏற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். "இவர் திறமையை மெச்சி இந்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜுனா  விருதை வழங்கி கௌரவித்துள்ளது.  உலக கிரிக்கெட் கவுன்சில் தர வரிசையில் (ICC ranking) 2010-ம் வருடம் பிப்ரவரி மாதம் வரை முதலிடம் பிடித்தார் மிதாலி.

இவர் உலக கோப்பைக்கு செல்லும் முன் கொடுத்த உரையாடலின் காணொளி.

 

"இன்றைய நாளில் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் இவரை போற்றுவோம். பெண்கள் கிரிக்கெட்டையும் ரசிப்போம்".

அன்புடன்
அசோக் குமார்

Friday, March 25, 2011

தலைவன்- காமராஜர்

" மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்.
யாருக்காக அழுதபோதும் தலைவன் ஆகலாம்"
கண்ணதாசனின் அனுபவ வரிகள். 

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர, அவனே விமர்சனத்துக்கு அப்பற்பட்டவனாகவும் இருத்தல் நல்லது. " கிங் மேகர்" என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழ்நாட்டின் பெரும் சொத்து. எதிர்  கட்சி தலைவர்களும் மதித்த ஒரே தலைவர்  காமராஜர் என்றால் அது மிகை இல்லை.  நம் நல்ல நேரம் இவரை போல உதாரணமாக காட்டவாவது நமக்கு நல்ல தலைவன் கிடைத்தான் என பெருமை கொள்ளலாம்.



 சமீபத்தில் நெல்லை கண்ணன் அவர்கள் காமராஜரை பற்றி பேசிய காணோளியை you-Tube-இல் பார்த்தேன். நல்ல தலைவர்களை நாம் மதிப்பதில்லை என்பது நூறு சதம் உறுதி.








 காமராஜர் பற்றி காங்கிரஸ் கட்சி காரர்களுக்கே இவ்வளவு விஷயம் தெரியுமான்னு தெரியல.  ஆனால் காமராஜர் ஆட்சி அமைப்போம்னு நல்ல கூவறாங்க.....!!
"நல்ல தலைவர்கள் பலர் இருகிறார்கள், அவர்களை இனம் காணுவதில்தான் நமக்கு பிரச்சினை."

இவரும் தலைவர்???????????????????


என்ன கொடுமை சார் இது??

வேறு  என்ன சொல்ல!!!!!

அன்புடன்
அசோக் குமார்


Saturday, March 19, 2011

நீ! நான்! மழை!

Thanks to google for the image

ஏன் பெண்ணே! எனக்கு மட்டும்
      இந்த ஒரவஞ்சனை- நான்
தொடாத இடத்தையும் மழை
      தொட அனுமதிக்கிறாயே- என்றேன்
அவள் சொன்னாள் மழைக்கு
        உன்னைப்போல்  சில்மிஷம்
செய்ய தெரியாதே என்றாள்!!!


அன்புடன்
அசோக் குமார்

Tuesday, March 15, 2011

வசந்தமாக வந்தாள்

காதலிப்பது பெண்கள் வேலை - அதை
       கண்டுபிடிப்பது ஆண்கள் வேலையாம்!!!
அதை கூட சரியாக செய்யவில்லை- நான்
       பொறுத்து பார்த்தபின் நீயே சொன்னாய் ஒருநாள்!!!
பட்டம்பூச்சியின் சிறகுகளை கடன் வாங்கி பறந்ததை- போல்
       அந்த நினைவுகள் நிற்கும் நூற்றாண்டுகள் தாண்டியும்!!!!
பல உன் வினாக்களுக்கு விடை தெரியாமல் விழித்தேன்- நான்
         குறுநகை புரிந்து ஏற்றுகொண்டாய் நீ!!!
ஒன்று சேர்வோமா என்ற ஐயம் - உனக்கு
          தேற்றுவதை தவிர வழி ஏதும் இல்லை எனக்கு!!!!
காலசக்கரம் சுழன்றது வேகமாய்  - ஒருநாள்
       என்னிடமிருந்து உன்னை பிரிக்கும் என்று தெரியாமலே மகிழ்ந்தேன்!
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
       அழி பேரலையில் அடித்து செல்லப்படும் ஓடம் போல்-ஆனேன்
அழக்கூட முயற்சிக்கவில்லை, ஆண் மகன்  அழக்கூடதாம்!!
         போகட்டும் என் குழந்தைக்காவது உன் பெயரிட்டு- உன்னை 
நினைக்கவேண்டும் வசந்தமாக நீ, என் வாழ்வில் வந்ததற்காக!!!!

அன்புடன்
அசோக் குமார்

(Thanks to google for the image)

Monday, March 14, 2011

எனது பயணங்கள்-டகோ ஏரி (Lake Tahoe, Nevada state, USA)

            பயணங்கள் எப்போதும் மனதுக்கு சுகம் அளிப்பவை. அதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க போவதும் இல்லை. புராண காலம் தொட்டு ராஜாக்கள் காலத்தில் கூட கடல் பயணம் செய்து பிற நாடுகள் மீது போர் தொடுத்து வென்றதாக சரித்திரங்கள் கூறுகின்றன. சோழ மன்னன் ராஜராஜ சோழன், சுமார் 1279-இல் படை எடுத்து வங்க தேசம்,  ஈழம்,  சுமத்ரா, கடாரம், மபல்லாம் முதலானவற்றை கடல் பயணம் செய்து கைப்பற்றியவை.  

  
நீல நிற கோடு அவர்களின் வியாபார கடல் வழி பாதை

      கொலம்பஸ் பயணத்தினால் தான் இந்த அமெரிக்கா தேசமே கண்டுபிடிக்க பட்டது வரலாறு.  அன்று முதல் இன்று வரை பயணங்கள் மாறவில்லை என்றாலும் பயண அனுபவங்கள் மாறிவிட்டன.  

             பிரயாணத்தின் போது சந்திக்கும் புது மனிதர்கள், புதிய காட்சிகள் அனைத்துமே மனதுக்கு இதம் தருபவை.  அதிலும் மனதிற்கினிய நண்பர்களுடன் பயணம் செய்வது வாழ்கையில் ஒரு வரம். நான் அமெரிக்கா வந்த புதிது இங்கே சூழ்நிலைகள் புதிது, மனிதர்கள், கலாச்சாரம், பழக்கவழக்கம் என எல்லாமே எனக்கு புதிது.  எனக்கு யாரையும் இங்கே தெரியாது அந்த நேரத்தில் எனக்கு கடவுளாக கொடுத்த வாய்ப்புதான் இந்த பயணம்!!!!!

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியர் என்னை இந்த டகோ ஏரிக்கு  (Lake Taheo, Nevada st. USA) அழைத்து சென்றார். வழி எங்கும் பனி படர்ந்த மலைகள், சில்லென்ற காற்று பச்சை பசேலென உயர்ந்த மரங்கள் என இயற்கை வஞ்சனை இல்லாமல் கொட்டி கிடந்தது.

        
 இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1650 அடி உயரமும், சுமார் 1600 அடி ஆழமும், 122,160,280 ஏக்கர் பரப்பளவும் கொண்ட நன்னீர் ஏரி. இதன் நிறம் எப்போதும் நீல நிறம் கொண்டது. 
இந்த ஏரிக்கு மூன்று சிறப்புக்கள் உண்டு. இதன் நீல நிறத்துக்கு காரணம், இது வானத்து நிறத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதால் தான் என்கிறார்கள்.

இந்த ஏரி எப்போதும் எந்த குளிர் நிலையிலும் உறைவதில்லை எனவும் சொல்லபடுகிறது. 
மேலும் 75அடி ஆழம் வரை கண்ணால் பார்க்க முடியும், ஏன் என்றால் அவ்வளவு சுத்தமான நீர். நம்ம ஊராக இருந்தால் சாக்கடையாக்கி இருப்பார்கள். 
இயற்கை வளங்களை எப்படி பேணி பாது காக்க  வேண்டும் என இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேணும். 
   

 
விடுமுறை நாட்களை பெரும்பாலான அமெரிக்கர்கள் இங்கே கழிக்க விரும்புவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. குளிக்க, படகு சவாரி செய்ய மற்றும் நீர் விளையாட்டுகள் மிகவும் பிரபலம். இங்கே மீன் உணவு நன்றாக இருக்கும்.

உண்மையில் இது ஒரு சுகமான பயணம்!!!!!!

 அன்புடன்
அசோக் குமார்


Sunday, March 13, 2011

நான் ரசித்த புகைப்படங்கள்


ஒரு வாரத்திற்கு முன்பு பெர்க்கிலியில் (Berkeley, Califirnia, USA) நல்ல மழை. மாலை நேரம் சிறிது மழை ஒய்ந்தது போல் இருந்தது. நான் தங்கி இருக்கும் வீட்டை சுற்றி பார்த்தபோது கண்ட சில அழகியவற்றை படம்பிடித்தேன். சில உங்களுக்காக...!!!!!!!







அன்புடன்
அசோக் குமார்