Friday, December 30, 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வந்தாலே, நம்ம ஆளுக பண்ணும் ரவுசு சொல்லி மாளாது. புகைப்பதை நிறுத்தும் யோசனைகளும் குடி இன்னபிற கேட்ட பழக்கத்திற்கு விடை சொல்ல போகிறேன் என்ற சூளுரைகளும் வரும். நான் கூட பள்ளி படிக்கும் காலங்களில், சரியாக 12.01 மணிக்கு அதாவது புத்தாண்டு ஆரம்பிக்கும்போது ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு பத்திவரை படித்து
 பின்பு உறங்கி இருக்கிறேன். என்ன காரணம் என்றால்  புத்தாண்டு அன்று படித்தால் அந்த வருடம் முழுக்க படித்துக்கொண்டே இருக்கலாம் என்ற மடத்தனம்தான்.

புத்தாண்டு சமயத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படித்துகொண்டு இருக்கும்போது, 12 ஆனவுடன்  பெரும்  கூச்சல்  போட்டுக்கொண்டு விடுதியை விட்டு வெளியில் வந்து அந்த நேரம் வாகனத்தில் போவோர் வருவோரை எல்லாம் நிறுத்தி "Happy New Year" என்று கத்திக்கொண்டு இருந்த நாட்களும், இப்போது நினைக்கையில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.

மற்ற நாட்களில் குளிக்கிறோமோ இல்லையோ "புத்தாண்டு அன்று குளித்துவிட்டு பெரிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் போல கோயிலை சுற்றி வந்திருக்கிறேன். கைபேசி cகைக்கு வந்த நாட்களில் மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி தொல்லை செய்தது ஒரு காலம். ஏதோ சொல்ல வந்து சமந்தமே இல்லாமல் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

"அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

அன்புடன்
அசோக் குமார்

Tuesday, December 27, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்-9

 விஸ்வநாதன் ராமமூர்த்தி காலம் தமிழ் சினிமாவில் ஒரு பொற்காலம்
என்பது எல்லோரும் மறுக்காமல்ஏற்றுக்கொள்ளும் கருத்து. அப்படி அவரின் இசையில் வந்த பாடல்களின் தொகுப்புதான் இந்த பதிவு. 


படம்: ஊட்டி வரை உறவு
பாடல்: தேடினேன் வந்தது
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர்கள்: P. சுசீலா
 *****************************************************************
படம்: தெய்வத்தாய்
பாடல்: மூன்று எழுத்தில் 
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன்


படம்: கற்பகம்
பாடல்: பக்கத்து வீட்டு பருவ
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P. சுசீலா


படம்: பணத்தோட்டம் 
பாடல்: பேசுவது கிளியா 
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா

======================================================
படம்: ஆலய மணி
பாடல்: மானாட்டம் தங்க.....
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P. சுசீலா


==========================================
அன்புடன்
அசோக் குமார் 

Saturday, December 24, 2011

வெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்

ஸ்ரீதர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு புகுத்திய புதுமைகள் எண்ணிலடங்காது. அந்த வகையில் சுமைதாங்கி படத்திற்கு பிறகு ஸ்ரீதர் முற்றிலும் புதுமுகங்களை வைத்தே எடுத்த படம்தான் "வெண்ணிற ஆடை". இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத நான்கு நட்சத்திரங்களை தந்தார் ஸ்ரீதர்.

  ஜெயலிலதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி என நான்கு பெரும் பின்னாளில் புகழடைந்தது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கும் ஒரு படை மேலே போய் நிர்மலா  அவர்களும் மூர்த்தியும் பின்னாளில் வெண்ணிற ஆடையை அவர்களின் பெயருக்கு முன்னால்  சேர்த்துக்கொண்டு "வெண்ணிற ஆடை" மூர்த்தி , மற்றும்  "வெண்ணிற ஆடை" நிர்மலா என அறியப்பட்டனர். அதுவுமில்லாமல், அந்த வருடத்தில் ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக ஓடி பாராட்டையும் பெற்று தந்தது.


கதை என்னன்னு பார்த்தால், ஸ்ரீதரின் வழக்கமான முக்கோண காதல் கதை தான். மனநல மருத்துவரான ஸ்ரீகாந்த், மன நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை  குணப்படுத்த வருகிறார். ஸ்ரீகாந்திற்கும்
 வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கும் காதல். இந்த நிலையில் குணமடைந்த ஜெயலலிதாவிற்கு ஸ்ரீகாந்த் மேல் காதல். ஜெயலலிதாவின் தந்தை ஸ்ரீகாந்தை வற்புறுத்த முடிவு என்ன என்பது தான் "வெண்ணிற ஆடை" படத்தின் கதை.
முதல் படத்திலே ஜெயலலிதாவிற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகாந்தின் காதபாதிரம் ரொம்பவே எதார்த்தமாகவும், இரண்டு பெண்களின் காதலுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் எதார்த்த மனிதராக முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கி இருந்தார் ஸ்ரீகாந்த். வெண்ணிற ஆடை நிர்மலா இந்த படத்தில் நடிக்கும்போது ரொம்பவே இளைய வயது. ஆகா ஒரு இளமை பட்டாளத்தையே இந்த படத்தில் இறக்கி இருந்தார் ஸ்ரீதர்.


படத்தின் இசையை M.S. விஸ்வநாதன் கவனிக்க வழக்கம் போல் பிரமாத படுத்தி இருந்தார். "அம்மாமா காற்று வந்து", "ஒருவன் காதலன்', என்ன என்ன பார்வைகளோ " , "சித்திரமே  சொல்லடி", மற்றும் "கண்ணன் என்னும் பேரை" என்று னைத்து பாடல்களை பிரமாதப்படுத்தி இருந்தார் விஸ்வநாதன்.


இன்னமும் ஸ்ரீதர் அவர்களின் பெருமைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

 அன்புடன் 
அசோக் குமார்

Sunday, December 18, 2011

படித்ததும் பிடித்ததும்


தமிழக அரசியலில் பெரும் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது, இதுவரை நகமும் சதையுமாக இருந்துவந்த முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் பிரிந்திருக்கின்றனர், பிரிந்தனர் என்பதை விட சசிகலா துரத்தப்பட்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இதற்க்கு முன்பு கூட இதுபோல் ஒருமுறை நடந்து மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இதுவும்  ரொம்ப நாள் நீடிக்காது என்று சொல்பவர்கள் உண்டு. ஒன்றுமட்டும் தெரிகிறது, இது நீடித்தால் தமிழ்நாட்டுக்கே நல்லது என்று. காலம் தாழ்த்திய நடவடிக்கை என்றாலும் பாராட்டுக்குரியது. இனியாவது ஆட்சி நிரவாகத்தில் எந்த அதிகார மையத்தின் தலையீடும் இல்லாமல் நல்லாட்சி நடந்தால் மகிழ்ச்சியே.
===========================================
மத்திய அரசு நினைத்தது ஓரளவு நடந்துவிடும்  போல் தோன்றுகிறது. தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை திசை திருப்ப முல்லை பெரியாறு ஆணை பிரச்சினையை அவர்கள் வளர்த்துவிட மக்கள் முல்லைபெரியாரை குறிவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் பிரச்சினை எங்கே இரட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
========================================
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் புகைப்படங்களை பார்த்தேன், புகைப்படங்களே, படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டுகின்றன. நடிகர் முரளி மகன் அதர்வா-அமலபால் நடிக்கும் இப்படத்தின் மூலம் அதர்வா நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பிடிப்பார் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


 =============================================
நான் ரசித்த புகைப்படம்
முக புத்தகத்தில் கண்டெடுத்தது.

========================================
MS. விஸ்வநாதனும் இளையராஜாவும்  இனைந்து இசையமைத்த இந்த "மெல்ல திறந்தது கதவு" படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வகையில் இந்த பாட்டு என் விருப்பத்திற்குரிய பாடல்.
======================================
அன்புடன் 
அசோக் குமார்

Saturday, December 17, 2011

2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்

 ஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை தொகுத்து இருக்கிறேன். நிறைய பாடல்கள்  மனதிற்கு  பிடித்திருந்தாலும் பத்து பாடல்களே என்பதால் அவைகளை இந்த லிஸ்டில் வர இயவில்லை. என்ன சொல்லபோற-வேங்கை, கண்ணாடி நீ -மங்காத்தா , ராசாத்தி போல- அவன் இவன், என்னமோ என்னமோ பண்ணுது-தேநீர்  விடுதி, நான் சொன்னதும் மழை -மயக்கம் என்ன என நிறைய பாடல்களை இணைக்க முடியவில்லை. எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் !!!

படம் : அழகர்சாமியின் குதிரை.
பாட்டு : பூவைக்கேளு  காத்தை கேளு

இளையராஜாவின் மெலடி பிடிக்காதவர்கள் இருப்பது அரிது அந்த வகையில் இந்த பாடல் அவரின் மெலடி லிஸ்டில் சேரும்.


படம் : ஆடுகளம்
பாடல்:  யாத்தே யாத்தே

2011-ம் வருடம் GV. பிரகாஷ் காட்டில் அடை மழை.... இல்லை இல்லை பேய்  மழை. ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன என எல்லா படங்களிலும் இவர் இசை பெரிதும் பேசப்பட்டது.


படம்: எங்கேயும் எப்போதும் 
பாடல்கள்: சொட்ட சொட்ட /உன் பேரை தெரியாது

புது இசையமைப்பாளர் சத்யா, முதல் படமே நல்ல தொடக்கம், எனக்கு இந்த இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.  புதிய இசையமைப்பாளர் என்ற சுவடே தெரியாமல் அற்புதமாக கலக்கி இருந்தார்.படம்:வாகை சூட வா 
பாடல்: சாரக்காத்து  வீசும் / போறானே போறானே

இவரும்  புதிய இசையமைப்பாளர்தான் பின்னணி இசையிலும் இந்த படத்தில் முத்திரை பதித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கென்று நல்ல எதிர்க்காலம் இருப்பதுபோல் தோன்றுகிறது.படம் : சதுரங்கம் 
பாடல்: விழியும் விழியும்

வித்யாசாகரின் மெலடிகள் என்றும் சோடை போனதே இல்லை. இயக்குனர் கரு. பழனியப்பன் -வித்யாசாகரின் கூட்டணி நல்ல பாடல்களை கொடுத்து வந்திருக்கிறார்கள், அந்த வகையில்  படம் தாமதமாக வந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடித்து போய்விட்டது.


படம் : தெய்வத்திருமகள்
பாடல் : ஆரிரோ ஆராரிரோ

GV. பிரகாஷிற்கு  மேலும் ஒரு பிரமாதமான கதையம்சத்தோடு கூடிய பின்னணி இசைக்கு நிறைய வேலை கொடுத்த படம்.
 

படம்: 180 
பாடல்: சந்திக்காத கண்களில் 
இந்த படத்தின் இசையமைப்பாளர் "ஷரெத்" மலையாளத்தில் இசையமைத்து  வருகிறார். தமிழ் படங்களில் இதுதான் இவரின் முதல் படம்.


படம்: வெப்பம் 
பாடல்: மழை வரும் அறிகுறி

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் வெளிவந்த காதல் படத்தின்பாடல்களை நாம் இன்னும் மறந்திருக்க  முடியாது. கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு அவருக்கு பேர் சொல்லும்படியான படம் இது. குறிப்பாக இந்த பாடல் பிரமாதம்!!!


படம்: கோ 
பாடல்: என்னமோ ஏதோ
ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பாடல் இந்த வருடம் பல பேரின் விருப்பபாடலாக இருந்தது. 

படம்: எங்கேயும் காதல்
பாடல்: திமு திமு தீம் தீம்

நா. முத்துகுமாரின் வரிகளில்  ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்த பாடல் கேட்கும்போது ரொம்பவே இனிமை. காதல் வராதவனுக்கு திடிரென காதல் வந்தால் எப்படி அவனுடைய மன ஓட்டங்கள் இருக்கும் என்பதை சொன்ன பாடல். சில கவிதை வரிகள் நச்சென்று இருக்கும்.

"ஜாமத்தில் விழிக்கிறேன்
என் ஜன்னல் துங்கும் நிலா 
காச்சலில் கொதிக்கிறேன்
என் கண்ணுக்குளே விழா "

நிறைய பாடல்களை இந்த வரிசையில் சேர்க்கத்தான்  அசை என்ன செய்வது பத்து  பாடல்தான் என்று முதலிலே முடிவு செய்துவிட்டேன்.
அன்புடன்
அசோக் குமார் 

Tuesday, December 13, 2011

காதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்

படத்தின் தலைப்புக்கு கிழே "கதையை எதிர்ப்பார்க்காதிர்கள்" என்று எழுதி படத்தை விளம்பரப்படுத்தி ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட படம்தான் "காதலிக்க நேரமில்லை".பெரும் புகழை அவருக்கு இந்த படம் பெற்று தந்தது என்றால் அது மிகை இல்லை. கதை முழுவதும் சின்னமலையில் நடப்பது போல் எடுத்திருந்தார் ஸ்ரீதர். இது முழுக்க முழுக்க நகைச்சுவை ஒன்றையே மயப்படுத்தி எடுத்திருந்ததால், கதை என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அது போலவே முதன் முதலில் சப்டைட்டில் போட தமிழ் சினிமாவிற்கு கற்றுகொடுத்தவரும் ஸ்ரீதர் அவர்களாகத்தான் இருக்கும். 

கதையை சுருங்க சொன்னால், சின்ன 
 மலையில் பெரிய எஸ்டேட் வைத்திருக்கும் விஸ்வநாதனுக்கு இரண்டு மகள்கள். சென்னையில் படிப்பை முடித்து வீட்டுக்கு திரும்பிய அவர்களை ஒருநாள் வழியில் கேலி செய்கிறார் அசோக் (ரவிச்சந்திரன்). அவர்  தான் அந்த எஸ்டேட் காரியதரிசி என்று மகள்களுக்கு தெரியவர, அதை முதலாளி தந்தையிடம் போட்டுகொடுக்க வேலை நீக்கம் செய்யப்படுகிறார் ரவிச்சந்திரன். ஆனால் வேறு வேலைக்கு போகாமல் இவர் வீட்டின் முன்பே கூடாரம் அமைத்து ஆட்களை கூட்டி பாடி போராட்டம் செய்கிறார். 


இதன் நடுவே விஸ்வநாதனின் இளைய மகளுக்கும் ரவிச்சந்த்ரனுக்கும்   காதல் வர, பணமும் கௌரவமும் தடுக்க தன் உற்ற நண்பன் முத்துராமனை  (வாசு) இவரின் பணக்கார தந்தையாக நடிக்குமாறு அழைக்க வந்த இடத்தில்தான் இவரும் விஸ்வநாதனின் மகளையே காதலிப்பதாக சொல்ல குழப்பம் ,பின் முத்துராமன் காதலிப்பது இமுத்த மகள் காஞ்சனாவையும், ரவிச்சந்திரன் காதலிப்பது இளையமகள் ராஜஸ்ரீயையும் (நிர்மலா)  என்று தெளிவாக எப்படி இருவரும் காதலியை கரம் பிடித்தார்கள் என்பதை நகைச்சுவையோடு, இனிக்க இனிக்க எடுத்த படம்தான் இது. 


ரவிச்சந்திரன் இந்த படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி அல்ல மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஒரு ஓட்டை காரை வைத்துகொண்டு கஞ்சனாவிடமும், ராஜஸ்ரீயிடமும் இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைப்பவை. வயதான வேடத்தில் ரவிச்சந்த்ரனின் அப்பாவாக நடிக்கும் முத்துராமன் பிரமாதபடுத்தி இருப்பார். "காதலிக்க நேரமில்லை பாடலில் இவரின் நடனம் அசத்தல் ரகம் சிரித்து மகிழலாம்.


 படத்தின் நகைச்சுவை பகுதியை நாகேசும் சச்சுவும் எடுத்துகொள்கிறார்கள். படம் எடுக்க போகிறேன் என்று நாகேஷ் செய்யும் காமெடி அட்டகாசம். திகில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று இருட்டில் பாலையாவை உட்காரவைத்து படுத்தி எடுக்கும் காட்சி, சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீரை வரவைத்துவிடும். படகம்பனியின் பெயரை ஓஹோ ப்ரொடக்சன்ஸ் என வைத்திருப்பதற்குஇவர் சொல்லும் காரணம் அடடா..!!

 பாலையாவின் நடிப்புக்கு  எப்போதும்  நான் ரசிகன், மகள்களிடம் குலைவதும், நாகேஷிடம் படம் எடுக்க பணம் தரமாட்டேன் என முரண்டு பிடிப்பதும், ரவிச்சந்த்ரனை வேலை இல்லை என விரட்டுவதும், அவர் தந்தை பெரும் பணக்காரர் என தெரிந்தவுடன் பம்முவதும், அமர்க்களம்.


ஸ்ரீதர் அவர்களின்  படங்களில் இசைக்கென்று தனி முத்திரை இருக்கும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆஹா  ரகம். "விஸ்வநாதன் வேலை வேணும்", "நாளாம் நாளாம் திருநாளாம்", "காதலிக்க நேரமில்லை", "அனுபவம் புதுமை அவளிடம் ", "உங்க பொன்னான கைகள்", "என்ன பார்வை உந்தன்" மற்றும் "மலரென்ற முகம் இன்று" என அனைத்து பாடல்களும் இன்றும் நம்மை மயங்க வைப்பவை.
 இப்படி நிறைய இன்னும் இரண்டு பதிவுகள் கூட எழுதலாம் அவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கிறது இந்த படத்தில். தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படம் இது. !!!

ஸ்ரீதர் அவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க அதன் இணைப்புகள் கிழே!!
C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும் 
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும் 
நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

இன்னும் ஸ்ரீதர் அவர்களின் படங்கள் பற்றிய பல சுவாரசியமான விசயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் !!    

அன்புடன் 
அசோக் குமார்

உண்மையான காதல் என்பது கடவுளைப்போல


உண்மையான காதல்
என்பது கடவுளைப்போல
எல்லோரும் அதைப்
பற்றியே பேசினாலும்
உணர்ந்தவர்கள்
மிகச்சிலரே !!!
**************************************************************************

நெடு நாட்களாக சிந்தித்தும்
புலப்படவில்லை , இரண்டு
கண்கள் , இரண்டு காதுகள்
என இரண்டு இரண்டாக
கொடுத்த கடவுள் இதயம்
மட்டும் ஒன்றே கொடுத்தான்
ஒருவேளை இன்னொன்றை
நாம் தேடிக்கொள்ளவோ
என்னமோ !!!!
******************************************************

நம் சண்டையிட்டுகொண்ட
நேரங்களில் எத்தனை
முறை உனக்காக நான்
காயப்பட்டு இருந்தாலும்
பரவாயில்லை, உன்னை
விட்டு பிரிவதற்கு
எனக்கு ஆயிரம் காரணங்கள்
இருந்தாலும் நான்
உனக்காக  வாழ
ஒரு காரணம் போதும்!!!
***************************************************************************

Friday, December 9, 2011

படித்ததும் பிடித்ததும்-12-10-2011

காவிரி, கிருஷ்ணா அணைகள் போல முல்லை பெரியாறு அணை விசயத்திலும் நாம் சோடை போகப்போவதற்க்கான அறிகுறிகளே தெரிகின்றன. வைகோ மட்டும் அங்கங்கே மேடை போட்டு குரல் கொடுப்பதவும், நம் தமிழக அரசு இந்த பிரச்சினைக்கும் அரசுக்கும் சம்மந்தமே  இல்லை என்பது போலவும் நடந்துகொள்கிறது. ஆளும் கட்சி ஒரு முழுநாள் "அடைப்பு போராட்டத்தை அறிவித்து மத்திய அரசை நிர்பந்திக்காமல், ஏனோ தானோ என்று இருப்பது கவலை அளிக்கிறது. 
=======================================
எல்லா ஊடகங்களிலும் சேவாக்கே  ஆக்ராமித்திருந்தார் நேற்று முழுவதும். ஒருநாள் போட்டிகளில் அவரின் இரட்டை சதம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், இந்த சாதனையை சச்சின் முதலில் நிகழ்த்தினார். நீண்ட நாட்களாக சோபிக்காமல் இருந்த சேவாக்  மறுபடியும் பார்முக்கு திரும்பி இருப்பது இந்திய  அணிக்கு நல்ல விஷயம்தான்.

======================================
பெரும் பிரச்சினைகளுக்கு பின்னால் சிம்புவின் "ஒஸ்தி" வெளிவந்திருக்கிறது. ஹிந்தி டபாங் படத்தைதான் எடுத்திருக்கிறார்கள் என்பது அறிந்ததே. டபாங் படத்தை ஏற்கனவே  பார்த்துவிட்டேன், படம் அருமையான மசாலா கலவை. ஒஸ்தியை இன்னும் பார்க்கவில்லை. "கலசலா" பாட்டு எனக்கும் பிடித்திருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு L.R. ஈஸ்வரி குரலை கேட்க்க நல்லாத்தான் இருக்கு. 


========================================
மெக்டோனல்ட் மற்றும் KFC பிரியர்கள் இதை கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும் 

 =============================================
நான்  ரசித்த புகைப்படம்
============================================
AR. ரெஹ்மானின் இசையில் 90-களில் வந்த மெலடி பாடல்கள்  ரொம்பவே இனிமையானது. புதிய முகம் படத்திற்காக " நேற்று இல்லாத மாற்றம்" !!திரை பாடலில்கூட கவிதையை இருக்கிறது .
"கடவுள் இல்லை என்றேன், தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன், ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை, அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை, கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்று தானே காற்று வீசும் வரை!!!!
=========================================
அன்புடன் 
அசோக் குமார்

Friday, December 2, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்-8

யேசுதாஸின் முதல் தமிழ் பாடல் இதுதான், மிகவும் மெதுவாக நகரும் பாடலும் ஆழமான வார்த்தைகளும் கொண்டது.
படம்: பொம்மை 
இசை : S . பாலச்சந்தர்
பாடியவர் : கே. ஜே. ஏசு தாஸ் 

********************************************************
படம்: வீர அபிமன்யு 
இசை : கே. வீ. மகாதேவன்
பாடியவர்கள் : பீ. பீ. ஸ்ரீனிவாஸ் 
கண்ணதாசனின் அற்புத  வரிகள் . பாடல் வரிகள் அனைத்தும் தேன் என முடியும் படி எழுதி இருப்பார் கவிஞர் .

****************************************************
படம்:என் அண்ணன்
பாடல்: கடவுள் ஏன்
இசை : கே. வீ. மகாதேவன்
பாடியவர்கள் : TMS

**************************************************
படம்:  பலே பாண்டியா
பாடல்; யாரை எங்கே ...
இசை : MS. விஸ்வநாதன்
பாடியவர்கள் : தமஸ்
கண்ணதாசன் அரசியலில் இருந்து வெறுத்து போய் இருந்த காலத்தில் எழுதியதாக இந்த பாடலை சொல்வார்கள்.


*************************************************
படம்: பூவா தலையா
பாடல்: மதுரையில் பறந்த
இசை : MSV
பாடியவர்கள் : TMS

**************************************************
அன்புடன்
அசோக் குமார் 

Thursday, December 1, 2011

குரல் தேவதைகள்-சின்மயி


இந்த குரல் தேவதைகள் பற்றிய பதிவில் சென்ற பதிவில் "ஸ்ரேயா கோஷல்" பற்றி எழுதி இருந்தேன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும். இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியான "சின்மயி" பற்றி கிறுக்கலாம் என்று இருக்கிறேன். 


ஸ்ரேயா கோஷலுக்கும், சின்மயிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தொலைக்காட்சியின் வாயிலாக திரைத்துறைக்கு வந்தவர்கள். சின்மயியும், "சப்தஸ்வரங்கள்" என்ற நிகழ்ச்சயில் பங்கேற்றபோது அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரபல பின்னணி பாடகர் "ஸ்ரீனிவாஸ்" இவர் குரலால் கவரப்பட்டு, இசையமைப்பாளர் "ரெஹ்மான்" அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். முதல் பாடலே "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே" பாடல் மூலம் பிரபலமானார். யோசித்து பாருங்கள் முதல் பாடல் இவர் புது பாடகி, ரஹ்மான் அவர்களின் மன உறுதியை பாராட்டும் அதே வேளையில், இவர் திறமை மீது ரஹ்மான் அவர்கள் வைத்த நம்பிக்கைதான் முழுமுதல் காரணம். எல்லோருக்கும் வாய்ப்பதில்லை இது போன்ற ஒன்று, முதல் பாடலே ஹிட்டாவது. அந்த பாடல்தான் சின்மயிக்கு "தமிழ்நாட்டின் சிறந்த பின்னணி பாடகி விருதை அந்த வருடம் வாங் கொடுத்தது. சின்மயி பாடும்போது அதில் ஒரு ஜீவன் இருப்பதாகவே தோன்றுகிறது. அவரின் "நளதமயந்தி" படத்தின் "என்ன இது" பாடல் எனக்கு எப்போதும் பிடித்தமானது. இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது, ரஹ்மான் அவர்களின் ஒரு இசைவிழாவில் ரஹ்மான் பியானோ வாசிக்க, சின்மயி அந்த பாடலை பாட அன்று முதல் தான் நான் சின்மயின் குரலுக்கு ரசிகனானேன்.கர்நாடக இசை மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசையிலும் சின்மயி கை தேர்ந்தவர். இவரது அம்மாவே இவருக்கு கர்னாடக இசையின் குரு என்பது இன்னமும் சுவாரசியமான சங்கதி.

இன்றும் ரஹ்மானின் ஆஸ்தான பாடகர்களில் சின்மயிக்கும் ஒரு இடம் உண்டு, உதாரணம் அவர் இசையமைக்கும் எல்லா படங்களிலும் ஒரு பாடல் நிச்சயம் இவர் பாடியதாக இருக்கும். ரஹ்மான் என்றில்லை இன்று வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர்களுக்கும் இவர் பிடித்தமான பாடகி.சமீபத்தில் வெளிவந்த இந்த இரண்டு பாடல்களும் புதிய இசையமைப்பாளர்களின் இசையில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றவை.சின்மயி ஒரு பாடகி மட்டுமில்லை, பெரும்பாலும் பல நடிகைகள் இன்று இவரின் குரலில்தான் பரிமளிக்கிறார்கள். "சில்லுனு ஒரு காதல்" படத்தில் பூமிகாவுக்கு குரல் கொடுத்ததுதான் இவரின் முதல்அனுபவம். அதன் பிறகு வரிசையாக "விண்ணைத்தாண்டி வருவாயா" வில் த்ரிஷா, "கோ" கார்த்திகா தொட்டு, இன்று ஹிந்தி பதிப்பு "விண்ணைத்தாண்டி வருவாயா"ஏமி ஜாக்சன் வரை முப்பது படங்களுக்கு மேல் நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சில்லுனு ஒரு காதல்" படத்தின் ஒரு காட்சியை மட்டும் பாருங்களேன்.


பாடகி, பின்னணி குரல் கொடுப்பது என்பதை தாண்டி , த்வீட்டர், பேஸ் புக், "WhatToNameIt" என்ற  ப்ளோக்கையும்எழுதி வருகிறார்.  "ப்ளூ எலிபன்ட் " என்ற மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவை எல்லாம் இவரின் பன்முகத்தன்மைக்கு எடுத்துகாட்டு. தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி ஜேர்மன், பிரெஞ்சு தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சரளமாக தெரிந்தவர் (நன்றி: http://www.nilacharal.com/enter/celeb/chinmayi.asp).

இன்னமும் நெறைய எழுதிக்கொண்டே போகலாம்தான். நேரம் கிடைத்தால், அதை தனி பதிவாக போடுகிறேன்.


டிஸ்கி: இது என் நூறாவது பதிவு. இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியான சின்மயி பற்றி எழுதியதில் பேரானந்தம் தான்.


அன்புடன் 
அசோக் குமார்


Wednesday, November 23, 2011

படித்ததும் பிடித்ததும்- 24-11-2011


இந்த ஆண்டு கபடி உலகக்கோப்பையை இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வென்றெடுத்துள்ளது என்ற செய்தி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் முன், கோப்பையை வென்று எடுத்தபின் அவர்களின் நிலையை கேட்டபோது, ரொம்பவே பரிதாபமாக இருந்தது. கோப்பையை வென்று, தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியில் வந்தபோது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், ஏன் என விசாரித்தபோது, அதற்க்கான பணம் செலுத்தவில்லையாம் நிர்வாகிகள். சரி ஒரு வழியாக வெளியில் வந்தபோது, கோப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு போக ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவை பிடித்து போயுள்ளனர். 
ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே பேருந்து விபத்தில் சிக்கி உடைகள் அனைத்தும் பாழாகிப்போன நிலையில் ஒரே உடையை அணிந்து, ஆடி கோப்பையை வென்றுள்ளனர். மதிப்பு மிக்க இந்த ஆட்டக்காரர்களை, தலையில் வைத்து கொண்டாடி இருக்க வேண்டாம், குறைந்தபட்சம்  தரையில் போட்டு மிதிக்காமலாவது இருக்கலாம்!!!
 *************************************************

குஷ்பூவிற்கு வாயில் சனி என்று நினைக்கிறேன், எதையாவது பேசி வம்பை விலைக்கு வாங்குவது. இந்த முறை நமிதா குட்டை பாவாடை அணிவதை வரவேற்கிறேன், என்று பேசி வம்பை விலைகொடுத்து வங்கி இருக்கிறார். இந்த பேச்சை கேட்ட இந்து மக்கள் கட்சி, கோவணம் அணிந்து இவர் வீட்டிற்க்கு போனால் ஏற்றுக்கொள்வாரா என கேல்கி எழுப்பி இருக்கிறார்கள். அனால் இதில் சமந்தப்பட்ட நமீதாவே வாய் மூடி மௌனியாய் இருக்கும்போது குஷ்பு ஏன் இப்படி சம்மந்தம் இல்லாமல் ஆஜராகிறாரோ???
****************************************************
கனிமொழி, ராஜா சமந்தப்பட்ட 2G வழக்கில் அடி மேல் அடி விழுகிறது, இதுவரை வழக்கு விசாரிக்கு வரும் சாக்கிலாவது, வெளியில்் வந்து கொஞ்ச நேரம் இருக்க முடிந்தது, இப்போது அதற்க்கும் வெடி வைத்துவிட்டார்கள்,வழக்கு விசாரணை சிறையிலேயே நடக்கும் என்று அறிவித்துவிட்டார் நீதிபதி, என்னமோ நடக்குது. 
******************************************
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒரு வழியாக முடிந்துவிட்டது. கொஞ்சம் சீக்கிரமாக தீர்ப்பை அறிவித்தால் நீதிபதிகளுக்கு புண்ணியமாய் போகும். இதற்க்கு எத்தனை ஆண்டு காலம் எடுத்துகொள்ளப்போகிரார்கள் என்று தெரியவில்லை. !!!
****************************************************
நான் ரசித்த புகைப்படம் 
பேஸ் புக்கில்  பார்த்து போது இந்த புகைப்படத்தை ரொம்பவே பிடித்து போனது.

*************************************************
 ஆண்டுகளை கடந்தும் இளையராஜாவின் இசை நம்மை கட்டி போட்டு  வைத்திருப்பதின் மர்மம் மட்டும் ஏனோ எனக்கு விளங்கவே இல்லை. அதிலும் இளையராஜாவின் குரலிலேயே அவர் "தர்ம பத்தினி"  படத்திற்காக பாடிய " நான் தேடும்" பாடல் என்னுடைய விருப்பமான பாடல். பாடலின் முதலில் இளையராஜாவின் ஆலாபனை அற்புதம் !!

***********************************************
அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, November 22, 2011

நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் என்றாலே புதுமை என்றும் பொருள் கொள்ளலாம். பரீட்சார்த்தமான திரைப்படங்களை படித்ததில் அவருக்கு நிகர் அவரே. குடும்ப படமும் எடுப்பார், காமெடி படமும் எடுப்பார், முன்ஜென்ம கதையையும் எடுப்பார். "நெஞ்சில் ஒரு ஆலயம்" படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் "போலீஸ்காரன் மகள்" இந்த படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் தான் "நெஞ்சம் மறப்பதில்லை" புனர்ஜென்ம கதையை மயமாக்கி எடுத்த படம். 


ஸ்ரீதர் அவர்கள் எடுத்த படங்கள் சமகாலத்தில் ஒரு டிரென்ட் செட்டேராக இருந்ததார் என்றால் அது மிகை இல்லை. முக்கோண காதல் கதையை சுவைபட படமாக்கி வந்த ஸ்ரீதர், ஒரு புது முயற்சியை எடுத்தது இந்த படத்தில்தான். புனர் ஜென்மத்தில் காதலிக்கும் ஒரு ஜமீன்தாரின் மகனான கல்யாண் குமாருக்கும், ஏழையான தேவிகாவுக்கும்காதல், இது பிடிக்காத நம்பியார் தேவிகாவை கொன்று விட அந்த காதல் முற்று பெறாமல் போகிறது. இந்த பிறவியில் தன் நண்பனை பார்க்க அவன் ஊருக்கு வரும் கல்யாண்குமாருக்கு, பழைய புனர்ஜென்ம நினைவுகள் வர, அதே தேவிகா தன் நண்பனின் சகோதரியாக, இவர்களின் காதலை பிரித்த கல்யன்குமாரின் தந்தையான நம்பியார் இன்னும் உயிரோடு இருந்து இந்த விஷயம் அவருக்கும் தெரியவர முடிவு என்ன என்பதை திகில் படத்துக்கே உரிய திரைக்கதையுடன் படமாக்கி இருப்பார் ஸ்ரீதர். 


கல்யாண்குமாரின் தந்தையாக "நம்பியார்" நடித்திருப்பார், இவர் கண்ணிலேயே ஒரு கொடூரத்தனத்தை பார்க்கலாம். இரண்டாம் ஜென்மத்திலும் இவர்களின் நிலையை தெரிந்துகொண்ட நம்பியார், தேவிகாவை  கொல்ல முயற்சிக்கும் அந்த காட்சி அவரின் நடிப்பிற்கு ஒரு சாட்சி. வயதான வேடத்திற்கு இவரின் ஒப்பனையும் பிரமாதமாக இருந்தது. 


வழக்கமாகவே ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்கள் அமர்க்களப்படுத்தும், இந்த படத்தில் இரண்டே பாடல்கள்தாம், "நெஞ்சம் மறப்பதில்லை" மற்றும் அழகுக்கும் மலருக்கும் " என அருமையாக இசையமைத்திருந்தார் MS . விஸ்வநாதன் அவர்கள். இந்த நெஞ்சம் மறப்பதில்லை பாடல் மட்டும் இரண்டு மூன்று முறை மாறி மாறி வரும். இந்த படத்தில் பின்னணி இசையிலும் பரிமளித்திருப்பார் விஸ்வநாதன்.

ஸ்ரீதர் அவர்களின் திரை வரிசையில் முக்கியமானதோர் படமாக "நெஞ்சம் மறப்பதில்லை" அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய இன்னும் சுவையான செய்திகளோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன். ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய தொடர்பதிவினை படிக்க கிழே சொடுக்கவும். 

 C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்

அன்புடன் 
அசோக் குமார்

Saturday, November 19, 2011

குரல் தேவதைகள் - ஸ்ரேயா கோஷால்

தமிழ் சினிமாவில் இந்த தலைமுறை பெண் பாடகிகளைப்பற்றிய தொகுப்புதான் இந்த பதிவு. தன் குரலால் மட்டுமல்ல தன் அழகாலும் நம்மை எல்லாம் ஈர்த்த அந்த "குரல் தேவதைகளைப்பற்றிய சிறு செய்திகள். ஜானகி, சித்ரா, சொர்ணலதா போன்றோர் காலம் போக இப்போது இவர்கள்தான் தமிழ் சினிமாவில் முக்கிய பாடகிகள்.
ஸ்ரேயா கோஷால் :
மெலடி பாடல்கள் பாட, இன்றைய இசை அமைப்பாளர்களின் முதல் முன்னுரிமை ஸ்ரேயாவுக்கே. பிறந்தது பெங்காலில் என்றாலும் வளர்ந்தது ராஜஸ்தானில். தன் ஆறாவது வயதிலேயே பாடி அரங்கேற்றம் நடத்தினார். முதன் முதலில் "ஜீ டிவி" நடத்திய, நம்ம ஊரு " ராக மாலிகா" போல இன்றும் "ச ரீ க ம ப" என்ற நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று கொஞ்சம் பிரபலமடைந்தார்.

பாலிவூடின் சிறந்த இயக்குனர் "சஞ்சய் லீலா பன்சாலி" அவர்களின் பார்வை இவர் மேல் பட்டது, அடுத்து அவர் எடுத்த "தேவதாஸ்" படத்தில் இவருக்கு ஐந்து பாடல்கள் பாடும் வாய்ப்பை வழங்கினார், அதோடு மட்டுமில்லாமல் பார்வதியாக நடித்த "ஐஸ்வர்யாவுக்கும் இவர்தான் குரல் கொடுத்தார். இந்த படத்தின் "டோலாறே"  பாடலுக்காக "இந்திய அரசின் தேசிய விருதை பெற்றார்.


இவரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இசையமைப்பாளர் "கார்த்திக் ராஜா" அவர்களயே சேரும். "ஆல்பம் " என்ற தமிழ் படத்தின் "செல்லமே செல்லமே" என்ற பாடலை பாடி அறிமுகமானார். ஹிந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, பெங்காலி, கன்னடா, மராத்தி, நேபாளி, குஜராத்தி, ஒரியா என பல மொழிகளில் இன்றும் பின்னணி பாடகியாக வளம் வந்துக்கொண்டு இருக்கிறார். இந்த மொழிகளின் முன்னணி இசை அமைப்பாளர்கள் அனைவர் இசையிலும் பாடிய பெருமையும் இவருக்கு இருக்கிறது. தமிழில் இவரை பிரபலப்படுத்தியது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் இவர் பாடிய "நினைத்து நினைத்து" என்ற பாட்டுதான்.A.R.ரெஹ்மான் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட். "முன்பே வா", "மன்னிப்பாயா" "கள்வரே கள்வரே" என்று ஒரு பட்டியலும், இளையராஜா இசையில் "இளம்காத்து வீசுதே" "பூவைக்கேளு காத்தை கேளு" உன்னவிட ",  யுவன் ஷங்கர் ராஜா இசையில் "நினைத்தி நினைத்து", "சண்டாளி உன் " என பெரும் பட்டியலே உண்டு.

இதுவரை 4 தேசிய விருதுகளும், 9 பிலிம் பேர் விருதுகளும், 4 IIFA  விருதுகளும் இதுவரையில் பாடியதற்காக வாங்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்க சாதனை. ட்வீடரில் மட்டுமில்லாது இவருக்கென்று ஒரு  வலைதளமும்  பிரத்யேகமாக வைத்துள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைக்க இவரை பல இயக்குனர்கள் அணுகி வருகிறார்கள். ஆனாலும் இவர் ஏதும் ஈடுபாடு காட்டிக்கொள்ளவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் இவர் இசை உலகில் பெரும் சாதனைகள் செய்ய நம் வாழ்த்துக்கள் !!

அன்புடன் 
அசோக் குமார்

Saturday, November 12, 2011

விஜய் மல்லையாவும் நம் பிரதமரின் துடிப்பும்

விஜய் மல்லையாவின் "கிங் பிஷேர்" விமான நிறுவனத்தின் நட்டக்கணக்கை சரி கட்ட நமது மத்திய அரசு முன்வரவேண்டும் என இந்தியாவின் பிரபலமான "வியாபார காந்தம்" மல்லையா ட்விட்டரில் சில நாட்களாக கூவி வருகிறார். நாட்டில் எங்கும் ஊழல், விலைவாசி உயர்வு, தெலுங்கானா பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை என நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்  வாயே திறக்காத நமது "மாண்புமிகு" (மரியாதை ரொம்ப முக்கியம் அமைச்சரே) கிங் பிஷேர் நட்டத்திற்கு மட்டும் உடனடியாக எதாவது நாம் செய்ய வேண்டும் என்று விமானத்தில் பறந்துகொண்டே கூவுகிறார். ஒன்று நன்றாக புரிகிறது, இது மக்களுக்கான அரசு alla, கார்பரேட்   முதலாளிகளுக்கானது. நமக்கே தெரியாமல் நம் பையில் இருந்து பணத்தை உருவப்போகிறார்கள்! வாழ்க ஜனநாயகம் !!!
************************************************
சச்சின் நூறாவது சதத்தை அடிப்பாரா மாட்டாரா என்று தினமும் கூவுவதே இந்த ஊடகங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தேவை இல்லாமல் அந்த மனிதருக்கும் கண்ணுக்கே தெரியாத அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்த ஊடகங்களுக்கு என்ன ஆசையோ. எல்லோரும் தான் அதை விரும்புகிறோம், ஆனாலும் கொஞ்சம் பொறுமை  தேவை. 
************************************************
ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விமர்சகரான "பீட்டர் ரோபுக்" தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டு ரொம்பவும் வருத்தப்பட்டு போனேன். ஒரு வாலிபரை செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தியதால், காவல்துறை விசாரணைக்கு பயந்தே அவர் தற்கொலை செய்துகொண்டார் அணவும், அவர் நல்ல மனிதர் என்று ஒரு சாரரும் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நடுநிலையாக விமர்சனம் செய்வதில் அவருக்கு  நிகர் அவரே!! அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் !!
********************************************** 
சில நாட்களுக்கு முன் பேஸ் புக்கில் பார்த்து ரசித்தது இந்த படத்தைதான். எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க !!!
************************************************** 
சில கீச்சுக்கள்
இளங்குமரன்
 பல கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த போதிதர்மரால் கூட வழுக்கைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை
 
சிவகங்கை சிங்கம்
நீங்களே குளிக்கனும்ன்னு நெனச்சா அது உங்களுக்கு நன்மை, நாலு பேரு சேந்து உங்கள குளிக்கச்சொன்னா அது இந்த சமுதாயத்துக்கே நன்மை..!
 
இராஜராஜன்
மக்கார் பண்ற வண்டியையும் ரொம்ப தூரம் ஓட்டுபவன் தான் நல்ல டிரைவர் ..
 
 
நையாண்டி
பைக்கில் செல்லும் போது துப்பட்டாவை இழுத்து கட்டுங்கள்! இல்லையெனில் வாழ்க்கை சக்கரம் நின்றுவிடும்!
 
JanuShath
பிரிவு கனக்கிறது என்றால் பிரியாமல் இருந்திருக்கலாமே என்று மிகப்புத்திசாலித்தனமாய்க் கேள்விகேட்போர் பலர்...
 
  நையாண்டி
என்னடா கொடுமை இது! 108 போனக்கூட வழி விடமாட்டேன்கிறாங்க!
**************************************************
 "அவள் அப்படித்தான்" படத்தில் இந்த பாடல் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. இந்த "பன்னீர் புஷ்பங்களே" பாட்டைவிட  எல்லோருக்கும் "உறவுகள் தொடர்கதை " பாட்டுதான் எல்லோருக்கும் பிடிக்கும். கமல் தன் சொந்த குரலில் பாடிய பாடல், ஒரு வித மென் சோகம், இந்த பாடல் முழுவதும் இழையோடும் அது தான் இந்த பாடலின் சிறப்பம்சம்.

*******************************************************
அன்புடன் 
அசோக் குமார்

Thursday, November 10, 2011

ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர் எப்போதும் எனக்கு பிடித்த மிமிக்ரி  கலைஞர். எப்போதும் இவர் நிகளிசிகளை பார்க்கும்போது மனசு லேசாகிவிடும் . குறிப்பாக இவர் ஆடும் கேப்டன் நடனத்திற்கு நான் அடிமை. நீங்களே பாருங்களேன்.

===============================================
=================================================
அவருடைய நிகழ்ச்சிகளில் இது பெரும் வரவேற்ப்பை பெற்ற ஒன்று. கண்களில் கண்ணீரை வரவழிக்க கூடிய ஒரு சிறப்பும் உண்டு.
 
======================================
==========================================

அன்புடன்
அசோக் குமார்