Thursday, June 23, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா

எண்பதுகளில் திரை இசையின் சக்கரவர்த்தியாக இருந்தவரும், இன்றளவும் ஒவ்வொரு இளம் இயக்குனரும் ஒரு படமாவது அவர் இசை அமைத்து இயக்க வேண்டும் என்ற ஆவலை கொண்ட இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா. கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் இவர் இசை புகாத இடமே இல்லை. எல்லா வயதினருக்குமான இசையை கொடுப்பதில் வல்லவர்.

தேனிக்கு பக்கத்தில் பண்ணைபுரத்தில் பிறந்து உலகெங்கும் இவர் பெயர் விளங்கும்படி தன்னை செதுக்கி கொண்டவர் இசை ஞானி. முதல் படமான "அன்னக்கிளி" படத்திலேயே தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் இசை ஞானி. தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களுக்கும் இசை அமைத்து வெற்றி பெற்றவர்.


தமிழ் இசையில் சிம்போனி இசையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இசை ஞானி அவர்களையே சாரும். "ஹே ராம்" படத்திற்கு இவர் "ஹங்கேரி" வரை சென்று படத்திற்கான இசை கோர்வைகளை இசை அமைத்து வந்தார். இது வரை நான்கு முறை தேசிய விருது வாங்கியுள்ளார்.

தளபதி படத்தில் இடம்பெற்ற இவரின் பாடல் "ராக்கமா கைய" பாட்டு உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக இன்றும் BBC  வைத்துள்ளது. இவர் இசை அமைத்த "நாயகன்" படத்தை சிறந்த 100  படங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. பல ராகங்களை மாற்றி சிறப்பான திரை பாடலாக மாற்றி வெற்றி பெற்றுள்ளார்  இசை ஞானி .


இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவரின் இரண்டு வாரிசுகளில் ஒருவர் இதே துறையில் கோலோச்ச முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே. இவரின் இரண்டு மகன்களில் ஒருவரான "கார்த்திக் ராஜா" தன் அப்பாவின் தொழிலான  இசை துறையையே தனது  துறையாக தேர்ந்தெடுத்தார். இவரின் தம்பி "யுவன் ஷங்கர் ராஜா"  மின்னும் அளவுக்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் தான்.

ராகங்களை திரை பாடல் வடிவில் கொடுத்து வெற்றியடைவதில் அப்பாவைப்போலே சிறந்தவர். இதற்க்கு முக்கிய காரணம் கர்னாடக சங்கீதத்தை முழுமையாக கற்று தேர்ந்தவர் கார்த்திக் ராஜா. தன் பதிமூன்றாம் வயதில் கிபோர்ட் வாசிப்பதில் ஆரம்பித்து இளையராஜா அவர்களின் இசை குழுவில் கிபோர்ட் வாசிப்பவரானார். தெரியாத செய்தி ஒன்று என்னவென்றால் "பாண்டியன்" படத்தில் "பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா " பாடலை கம்போஸ் செய்ததே கார்த்திக் ராஜா தான்.


உல்லாசம் படத்திற்காக இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும்  பெரும் வரவேற்பை பெற்றது இவரது சிறப்பு. 


 

 
இதன் பிறகு இவர் இசை அமைத்த  படங்கள் "நாம் இருவர் நமக்கு இருவர்" "காதலா காதலா"  "டும் டும் டும்" . இதில் "டும் டும் டும்" படம் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட படம். 


ஹிந்தியில் இவர் இசை அமைத்த முதல் படமான "க்ரிருகன்" என்ற படத்திற்காக RD . பர்மன் விருதை பெற்றார் கார்த்திக் ராஜா. 

 

இசை குறிப்புகளை முறையாக பிழை இல்லாமல் எழுத தெரிந்த தமிழ் இசை அமைப்பாளர் . ஆனால் முறையான வாய்ப்புகள் இல்லையா??இல்லை அதிர்ஷ்டம் இல்லையா என தெரியவில்லை. 


நல்ல வாய்ப்புகள் வந்து இவரும் நல்ல இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என நானும் விரும்புகிறேன். 

அன்புடன் 
அசோக் குமார்

2 comments:

 1. நண்பா எனக்கு விருப்பிய இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்...
  நண்பா நல்ல பதிவு..
  வாழ்த்துக்கள்...

  !!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..!!

  ReplyDelete
 2. Very good topic to write. It can be written as a series.

  ReplyDelete