Tuesday, June 7, 2011

படித்ததும் பிடித்தும்- 08 -06 -2011

 காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி அருகே, ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், தீயில் கருகி, 23 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
====================================================

எல்லா ஊடகங்களிலும் தயாநிதி மாறனின் தில்லு முல்லு பற்றியே பேச்சாக இருக்கிறது. இந்த முறை தயாநிதி மாறன் தப்பிப்பது சற்று கடினம் என்றே தோன்றுகிறது. டெல்லி வட்டாரங்களும், சோனியாவும் கூட தயாநிதி மாறனை கை விட்டதாகவே உணர்கிறேன். நாம் ஏதோ காலாநிதி மாறன் தன்  சுய அறிவையும் பொருளாதார உத்திகளையும் பயன்படுத்தி சன் குழுமத்தை வளர்த்ததாக தப்பு கணக்கு போட்டுவிட்டோம். இப்போதுதான் தெரிகிறது பலரையும் மிரட்டி பணிய வைத்து இவர்கள் வாழ்ந்த கதை. இன்னும் நம் பொம்மை பிரதமர் ஏதும் இது பற்றி கருத்து சொல்லவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். 

====================================================
பாபா ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதமும், அதை தடுக்க மத்திய அரசு நடத்தும் கூத்துகளும் சகிக்க முடியவில்லை. பாபா ராம்தேவ் நல்லவரோ கேட்டவரோ அது அவசியமில்லை, இவரை அடக்குவதற்கு பதிலாக அந்த சட்டத்தை கொண்டுவந்து நல்ல அரசு என்று நிருபிக்கலாமே. இதற்கு ஒரு படி மேலே போய் வருமான வரி துறையை அனுப்பி சோதனை செய்து மறைமுகமாக மிரட்டி பார்க்கிறது அரசு. இவ்வளவு நாள் தெரியவில்லையா அவர் மோசடி வழியில் சொத்து சேர்த்தார் என்று.  சர்வாதிகார நாடுகளில் தான்இது போன்ற கூத்துகள் நடக்கும் என்றால் இந்தியாவில் கூட இது மாதிரி நடப்பது வேதனை.
=========================================================
"தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா திருவாய் மலர்ந்துள்ளார். சட்ட சபை தேர்தலுக்கு முன்பு அழகிரி கூட இப்படித்தான் தேர்தலுக்கு பின்பு  அதிமுக என்ற கட்சியே காணமல் போய்விடும் என்று சொன்னார். இப்போ அவரே காணாம போய்ட்டார். அந்த நிலைமை உங்களுக்கும் வராம பார்த்துகிடுங்க.

=======================================================
சீமானோடு நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாத சிலர், அவரை சுடிதார் மற்றும் புடவையை கொண்டு சுருட்டலாம் என்று வலை பின்னுகிறார்கள் போலும். மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது ஊடக செய்திகள். "தம்பி" படத்தில் நடிக்க வாய்த்த பூஜாதான் இப்போது அந்த புடவை ஆயுதம் என்கிறார்கள். கலிகாலம் போலும்!!!!
==================================================
நான் தினமும் பயணிக்கும் சாலையில் (Telegraph street , Berkeley , California), ஒரு காபி ஷாப் , பெயர் மட்டும் கொஞ்சம் வித்தியசமாக இருந்தது. சரி என்று காமெராவை எடுத்து படம் பிடித்து வைத்தேன் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . அந்த கடையின் பெயர் "மொக்க "

===================================================
நான் ரசித்த புகைப்படம் 
===================================================
நான் ரசித்த காணொளி
மன்மத லீலை படத்திற்காக, MSV இசை அமைத்த பாடல் அருமை.


==============================================
அன்புடன் 
அசோக் குமார்

No comments:

Post a Comment