"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சா ம்" இந்த பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம தமிழ் நாடு மக்களுக்கு பொருந்தும். கருணாநிதியும் அவங்க குடும்பமும் தமிழ் நாட்டையே கொள்ளை அடிக்கறாங்கன்னு ஆட்சிய புடுங்கி கொட நாட்டுல தூங்கிகிட்டு இருந்தவங்கள எழுப்பி, இவங்ககிட்ட கொடுத்தா, சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி நல்லா செயல்பட்டுகிட்டு இருந்த திட்டங்களை எல்லாம் ஒரே அறிக்கையில காலி பண்றாங்க அம்மா.
கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் என்பதற்காகவே சில திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. திட்டங்களில் குறைப்பாடு இருப்பின் குறைகளை நீக்கி செயல்படுத்தலாம் , அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது முறையல்ல.
எதிர் கட்சிகளும் சில ஊடகங்களும் இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ருபாய் நாட்டுக்கு நட்டம் என சொல்ல தொடங்கி உள்ளன.
அந்த சில கோடி ருபாய்களை எப்படி சேமிப்பது !!
சில நிறுத்தப்பட்ட திட்டங்களும் அதில் போடப்பட்ட பணத்தை மீட்கும் வழிகளும்..!! நானே யோசிச்சது !!
1 . ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடம் தற்போதைக்கு பயன்படுத்த மாட்டாது.இழப்பு : 1000 கோடி
என்ன செய்யலாம்: அந்த கட்டிடத்தை ஏதாவது சாப்டுவேர் கம்பனிக்கு வாடகைக்கு விடலாம் அல்லது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகவோ மாற்றி பணம் பெறலாம்.
2 . சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தம்: அச்சிடப்பட புத்தகங்கள் வீண்
என்ன செய்யலாம்:அந்த புத்தகங்களை எடைக்கு போட்டு பேரீச்சம் பழங்களை வாங்கி மக்களுக்கு இலவசமாகவோ அல்லது ரேஷன் கடையில் காசுக்கோ விற்று சரி செய்யலாம்.
3 . கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தம். ஏழை எளிய மக்கள் பயன்பெற்ற திட்டம் அடியோடு நிறுத்தப்படுகிறது.
என்ன செய்யலாம்: அதற்காக கொடுத்த அடையாள அட்டைகளை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தும் அடையாள அட்டைகளாக பயன்படுத்த சொல்லலாம்.
4 . மெட்ரோ ரயில் திட்டம் மறக்கப்பட்டு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
என்ன செய்யலாம்: உங்களுக்கு ஒட்டு போட்ட மொத்த மக்களையும் மெட்ரோ ரயில் பாதைக்காக தோண்டிய குழியில் போட்டு புதைத்து விட்டால் சுத்தம், ஒரு பய ஏன்னு கேட்க முடியாது.
இது எதோ ஏன் சிறு அறிவுக்கு எட்டியது, இதை விட நல்ல யோசனைகள் இருப்பின் பின்னுடத்தில் தெரியப்படுமாறு கேட்டுகொள்கிறேன்!!!

- அன்புடன்
- அசோக் குமார்
கொஞ்சம் அனுபவிச்சுத்தான் பார்ப்போமே ....பிடிச்சிருந்தா தொடர்ந்து ஒட்டு போடலாம் இல்லைன்னா அடுத்த கட்ச்சிக்கு மாத்திடுவோம் .வேற வழி ..???
ReplyDeleteஅண்ணே! உங்க கருத்து வரவேற்கக்கூடியது.
ReplyDeleteதமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
koodal bala said...
ReplyDeleteகொஞ்சம் அனுபவிச்சுத்தான் பார்ப்போமே ....பிடிச்சிருந்தா தொடர்ந்து ஒட்டு போடலாம் இல்லைன்னா அடுத்த கட்ச்சிக்கு மாத்திடுவோம் .வேற வழி ..???
ஒத்துக்கறேன் வேற வழி இல்ல
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅண்ணே! உங்க கருத்து வரவேற்கக்கூடியது.
நன்றி பிரகாஷ்