Wednesday, June 15, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடி மட்டத்தில் இருந்து, மெல்ல மெல்ல தங்கள் திறமையை பயன்படுத்தி உயர்ந்தவர்கள் பலர். ஆனாலும், தங்கள் வாரிசுகளை இதே தொழிலில் களம் இறக்கி வெற்றி கண்டவர்கள் மிக சிலரே. தனகென்று திறமை இல்லாமல் எந்த துறையிலும் சாதிப்பது ரொம்பவே கஷ்டம். தமிழ் சினிமாவில் தோற்று போன வாரிசுகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்!! இதை ஒரு தொடர் பதிவாகவே எழுதலாம் என்று இருக்கிறேன்!!!

மனோஜ் - பாரதி ராஜா


 சென்னை  நகரத்தின் செட்டுகளில் மட்டும் இயங்கிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவை குக்கிராமத்தின் சந்துக்குள்ளும் போய் நிஜமான கிராமத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களயே சேரும். தமிழ் சினிமாவின் வரலாறு என்று பேச ஆரம்பித்தால் பாரதி ராஜா அவர்களை விலக்கி விட்டு பேச முடியாது.


தமிழ் சினிமாவில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அநேகம் பேர். இவர் மோதிர கையால் குட்டு பட்டு முன்னுக்கு வந்தவர்கள் இன்னமும் தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய ஜாம்பவானின் மகன் அதே துறையில் சோபிக்க முடியவில்லை என்பது பெரிய ஆச்சர்யம், ஆனாலும் உண்மை. சினிமாவில் கதாநாயகனாக ஆசைப்பட்ட மகனுக்காக பாரதிராஜாவே கட்டி எழுப்பிய கோட்டைதான் "தாஜ்மஹால்". மனோஜ் சவுத் ப்ளோரிடா பல்கலைகழகத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் கோர்ஸ் வேறு படித்துவிட்டு வந்தார்.

 கதைக்கு தேவை என்பதற்காக கமலுக்கே 16 வயதினிலே படத்தில் கோவணம் கட்டி அழகு பார்த்த பாரதிராஜா, தன் மகனுக்காக கொஞ்சம் இறங்கி வந்து, கிராமத்து இளைஞனுக்கு ரேபோக் ஷுவும், டெனிம் பாண்டும் போட்டு அழகு பார்த்தார்.
தன் மகனுக்காக இன்னொரு தியாகத்தையும் செய்தார் இயக்குனர் இமயம். தன் முதல் படம் முதல் தாஜ்மஹாலுக்கு முந்தைய படம் வரை தன்னுடைய உயிர் நண்பனான இளையராஜாவை, விட்டு A .R . ரஹ்மானை பிடித்தார். பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.   இருந்தாலும் படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. 
 பிறகு மனோஜை வைத்து இவரே இயக்கிய படம் "கடல் பூக்கள்". முரளியோடு சேர்ந்து இரண்டாவது கதாநாயகனாக நடித்த படம். பெரிய அளவில் இதுவும் பேசப்படவில்லை. 

இதன் பிறகு இயக்குனர்  சரண் இயக்கத்தில் மனோஜ் நடித்த படம் "அல்லி அர்ஜுனா", எதிர்பார்த்த அளவுக்கு இந்த படமும் பெரிய வெற்றி அடையவில்லை. "வருசமெல்லாம் வசந்தம்" படத்தில் குணாலுடன் சேர்ந்து நடித்த படம், சுமாராக வெற்றி அடைந்த படம் இது.

மீண்டும் பாரதிராஜா ஈர நிலம் படம் மூலம் மகனை நிலைநிறுத்த முயன்று தோற்றுபோனார். மனோஜ் நடித்த பல்லவன், சமுத்திரம், மகாநடிகன் படங்களின் மூலம் மறுபிரவேசம் செய்ய முயன்றும் தோற்றுபோனார்.
நந்தனா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இப்போது இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார்.  மீண்டும் நடிப்பு தொழிலை விட்டு அடுத்து கூடிய விரைவில் ஒரு படம் இயக்க போவதாக அறிவித்துள்ளார். இயக்குராகவாவது மிளிர்கிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்
அசோக் குமார்  


6 comments:

 1. பாரதி ராஜா இயக்கியபடமல்ல அது. ம்னோஜின் தந்தை இயக்கியது. அதுவே படத்தின் தோல்விக்குக் காரணம். செவ்விந்திய கௌபார் கலாச்சார பிண்ணனியில் எடுக்கப் பட்டிருந்தால் படம் ஓடியிருக்கும்

  ReplyDelete
 2. நடிப்பு பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் பாரதிராஜாவின் மகனுக்கு நடிப்பு வரவில்லை...

  இது தான் உலக முரண்பாடு..

  ReplyDelete
 3. மீண்டும் திரையுலகம் வரும் மனோஜ் சிறக்க என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. // வீராங்கன் said...

  பாரதி ராஜா இயக்கியபடமல்ல அது. ம்னோஜின் தந்தை இயக்கியது. அதுவே படத்தின் தோல்விக்குக் காரணம். செவ்விந்திய கௌபார் கலாச்சார பிண்ணனியில் எடுக்கப் பட்டிருந்தால் படம் ஓடியிருக்கும்//

  நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ.

  ReplyDelete
 5. // # கவிதை வீதி # சௌந்தர் said...

  மீண்டும் திரையுலகம் வரும் மனோஜ் சிறக்க என் வாழ்த்துக்கள்..//

  உங்கள் வரவுக்கு நன்றி பாஸ். நானும் அப்படியே ஆசைபடுகிறேன்

  ReplyDelete
 6. திறமை இல்லையென்றால் அது பாரதிராஜா மகனாக இருந்தாலும், பாலசந்தர் மகானாக இருந்தாலும் ஜொலிக்க முடியாது. பெரிய நடிகனாக வளர இயக்குனரின் மகனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை... அது அவருக்கு வாய்ப்பு கிடைக்க கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பே !!! சூப்பர் ஸ்டார் முதல் அல்டிமேட் ஸ்டார் வரை சினிமாவில் பின் புலம் இல்லாத நடிகர்கள் வந்து கொண்டே தான் உள்ளனர். ஆக திறமைக்கு மட்டுமே வாய்ப்புகள் தொடரும், வெற்றியும் அப்படிதான் !!! மனோஜ் இயக்குனர் அவதாரத்தில் வெற்றி அடைய வாழ்த்துகள் ...

  இந்த மாதிரி புதுமையான் பதிவுகளை காண்பது அரிதான ஒன்றே ! இதற்கு முதலில் நண்பர் அசோக் குமாருக்கு என் வாழ்த்துகள் ... உம் விசைப் பலகையின் பயணம் தொடரட்டும்.

  ReplyDelete