Wednesday, November 23, 2011

படித்ததும் பிடித்ததும்- 24-11-2011


இந்த ஆண்டு கபடி உலகக்கோப்பையை இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வென்றெடுத்துள்ளது என்ற செய்தி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் முன், கோப்பையை வென்று எடுத்தபின் அவர்களின் நிலையை கேட்டபோது, ரொம்பவே பரிதாபமாக இருந்தது. கோப்பையை வென்று, தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியில் வந்தபோது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், ஏன் என விசாரித்தபோது, அதற்க்கான பணம் செலுத்தவில்லையாம் நிர்வாகிகள். சரி ஒரு வழியாக வெளியில் வந்தபோது, கோப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு போக ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவை பிடித்து போயுள்ளனர். 
ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே பேருந்து விபத்தில் சிக்கி உடைகள் அனைத்தும் பாழாகிப்போன நிலையில் ஒரே உடையை அணிந்து, ஆடி கோப்பையை வென்றுள்ளனர். மதிப்பு மிக்க இந்த ஆட்டக்காரர்களை, தலையில் வைத்து கொண்டாடி இருக்க வேண்டாம், குறைந்தபட்சம்  தரையில் போட்டு மிதிக்காமலாவது இருக்கலாம்!!!
 *************************************************

குஷ்பூவிற்கு வாயில் சனி என்று நினைக்கிறேன், எதையாவது பேசி வம்பை விலைக்கு வாங்குவது. இந்த முறை நமிதா குட்டை பாவாடை அணிவதை வரவேற்கிறேன், என்று பேசி வம்பை விலைகொடுத்து வங்கி இருக்கிறார். இந்த பேச்சை கேட்ட இந்து மக்கள் கட்சி, கோவணம் அணிந்து இவர் வீட்டிற்க்கு போனால் ஏற்றுக்கொள்வாரா என கேல்கி எழுப்பி இருக்கிறார்கள். அனால் இதில் சமந்தப்பட்ட நமீதாவே வாய் மூடி மௌனியாய் இருக்கும்போது குஷ்பு ஏன் இப்படி சம்மந்தம் இல்லாமல் ஆஜராகிறாரோ???
****************************************************
கனிமொழி, ராஜா சமந்தப்பட்ட 2G வழக்கில் அடி மேல் அடி விழுகிறது, இதுவரை வழக்கு விசாரிக்கு வரும் சாக்கிலாவது, வெளியில்் வந்து கொஞ்ச நேரம் இருக்க முடிந்தது, இப்போது அதற்க்கும் வெடி வைத்துவிட்டார்கள்,வழக்கு விசாரணை சிறையிலேயே நடக்கும் என்று அறிவித்துவிட்டார் நீதிபதி, என்னமோ நடக்குது. 
******************************************
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒரு வழியாக முடிந்துவிட்டது. கொஞ்சம் சீக்கிரமாக தீர்ப்பை அறிவித்தால் நீதிபதிகளுக்கு புண்ணியமாய் போகும். இதற்க்கு எத்தனை ஆண்டு காலம் எடுத்துகொள்ளப்போகிரார்கள் என்று தெரியவில்லை. !!!
****************************************************
நான் ரசித்த புகைப்படம் 
பேஸ் புக்கில்  பார்த்து போது இந்த புகைப்படத்தை ரொம்பவே பிடித்து போனது.

*************************************************
 ஆண்டுகளை கடந்தும் இளையராஜாவின் இசை நம்மை கட்டி போட்டு  வைத்திருப்பதின் மர்மம் மட்டும் ஏனோ எனக்கு விளங்கவே இல்லை. அதிலும் இளையராஜாவின் குரலிலேயே அவர் "தர்ம பத்தினி"  படத்திற்காக பாடிய " நான் தேடும்" பாடல் என்னுடைய விருப்பமான பாடல். பாடலின் முதலில் இளையராஜாவின் ஆலாபனை அற்புதம் !!

***********************************************
அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, November 22, 2011

நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் என்றாலே புதுமை என்றும் பொருள் கொள்ளலாம். பரீட்சார்த்தமான திரைப்படங்களை படித்ததில் அவருக்கு நிகர் அவரே. குடும்ப படமும் எடுப்பார், காமெடி படமும் எடுப்பார், முன்ஜென்ம கதையையும் எடுப்பார். "நெஞ்சில் ஒரு ஆலயம்" படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் "போலீஸ்காரன் மகள்" இந்த படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் தான் "நெஞ்சம் மறப்பதில்லை" புனர்ஜென்ம கதையை மயமாக்கி எடுத்த படம். 


ஸ்ரீதர் அவர்கள் எடுத்த படங்கள் சமகாலத்தில் ஒரு டிரென்ட் செட்டேராக இருந்ததார் என்றால் அது மிகை இல்லை. முக்கோண காதல் கதையை சுவைபட படமாக்கி வந்த ஸ்ரீதர், ஒரு புது முயற்சியை எடுத்தது இந்த படத்தில்தான். புனர் ஜென்மத்தில் காதலிக்கும் ஒரு ஜமீன்தாரின் மகனான கல்யாண் குமாருக்கும், ஏழையான தேவிகாவுக்கும்காதல், இது பிடிக்காத நம்பியார் தேவிகாவை கொன்று விட அந்த காதல் முற்று பெறாமல் போகிறது. இந்த பிறவியில் தன் நண்பனை பார்க்க அவன் ஊருக்கு வரும் கல்யாண்குமாருக்கு, பழைய புனர்ஜென்ம நினைவுகள் வர, அதே தேவிகா தன் நண்பனின் சகோதரியாக, இவர்களின் காதலை பிரித்த கல்யன்குமாரின் தந்தையான நம்பியார் இன்னும் உயிரோடு இருந்து இந்த விஷயம் அவருக்கும் தெரியவர முடிவு என்ன என்பதை திகில் படத்துக்கே உரிய திரைக்கதையுடன் படமாக்கி இருப்பார் ஸ்ரீதர். 


கல்யாண்குமாரின் தந்தையாக "நம்பியார்" நடித்திருப்பார், இவர் கண்ணிலேயே ஒரு கொடூரத்தனத்தை பார்க்கலாம். இரண்டாம் ஜென்மத்திலும் இவர்களின் நிலையை தெரிந்துகொண்ட நம்பியார், தேவிகாவை  கொல்ல முயற்சிக்கும் அந்த காட்சி அவரின் நடிப்பிற்கு ஒரு சாட்சி. வயதான வேடத்திற்கு இவரின் ஒப்பனையும் பிரமாதமாக இருந்தது. 


வழக்கமாகவே ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்கள் அமர்க்களப்படுத்தும், இந்த படத்தில் இரண்டே பாடல்கள்தாம், "நெஞ்சம் மறப்பதில்லை" மற்றும் அழகுக்கும் மலருக்கும் " என அருமையாக இசையமைத்திருந்தார் MS . விஸ்வநாதன் அவர்கள். இந்த நெஞ்சம் மறப்பதில்லை பாடல் மட்டும் இரண்டு மூன்று முறை மாறி மாறி வரும். இந்த படத்தில் பின்னணி இசையிலும் பரிமளித்திருப்பார் விஸ்வநாதன்.

ஸ்ரீதர் அவர்களின் திரை வரிசையில் முக்கியமானதோர் படமாக "நெஞ்சம் மறப்பதில்லை" அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய இன்னும் சுவையான செய்திகளோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன். ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய தொடர்பதிவினை படிக்க கிழே சொடுக்கவும். 

 C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்

அன்புடன் 
அசோக் குமார்

Saturday, November 19, 2011

குரல் தேவதைகள் - ஸ்ரேயா கோஷால்

தமிழ் சினிமாவில் இந்த தலைமுறை பெண் பாடகிகளைப்பற்றிய தொகுப்புதான் இந்த பதிவு. தன் குரலால் மட்டுமல்ல தன் அழகாலும் நம்மை எல்லாம் ஈர்த்த அந்த "குரல் தேவதைகளைப்பற்றிய சிறு செய்திகள். ஜானகி, சித்ரா, சொர்ணலதா போன்றோர் காலம் போக இப்போது இவர்கள்தான் தமிழ் சினிமாவில் முக்கிய பாடகிகள்.
ஸ்ரேயா கோஷால் :
மெலடி பாடல்கள் பாட, இன்றைய இசை அமைப்பாளர்களின் முதல் முன்னுரிமை ஸ்ரேயாவுக்கே. பிறந்தது பெங்காலில் என்றாலும் வளர்ந்தது ராஜஸ்தானில். தன் ஆறாவது வயதிலேயே பாடி அரங்கேற்றம் நடத்தினார். முதன் முதலில் "ஜீ டிவி" நடத்திய, நம்ம ஊரு " ராக மாலிகா" போல இன்றும் "ச ரீ க ம ப" என்ற நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று கொஞ்சம் பிரபலமடைந்தார்.

பாலிவூடின் சிறந்த இயக்குனர் "சஞ்சய் லீலா பன்சாலி" அவர்களின் பார்வை இவர் மேல் பட்டது, அடுத்து அவர் எடுத்த "தேவதாஸ்" படத்தில் இவருக்கு ஐந்து பாடல்கள் பாடும் வாய்ப்பை வழங்கினார், அதோடு மட்டுமில்லாமல் பார்வதியாக நடித்த "ஐஸ்வர்யாவுக்கும் இவர்தான் குரல் கொடுத்தார். இந்த படத்தின் "டோலாறே"  பாடலுக்காக "இந்திய அரசின் தேசிய விருதை பெற்றார்.


இவரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இசையமைப்பாளர் "கார்த்திக் ராஜா" அவர்களயே சேரும். "ஆல்பம் " என்ற தமிழ் படத்தின் "செல்லமே செல்லமே" என்ற பாடலை பாடி அறிமுகமானார்.



 ஹிந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, பெங்காலி, கன்னடா, மராத்தி, நேபாளி, குஜராத்தி, ஒரியா என பல மொழிகளில் இன்றும் பின்னணி பாடகியாக வளம் வந்துக்கொண்டு இருக்கிறார். இந்த மொழிகளின் முன்னணி இசை அமைப்பாளர்கள் அனைவர் இசையிலும் பாடிய பெருமையும் இவருக்கு இருக்கிறது. தமிழில் இவரை பிரபலப்படுத்தியது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் இவர் பாடிய "நினைத்து நினைத்து" என்ற பாட்டுதான்.



A.R.ரெஹ்மான் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட். "முன்பே வா", "மன்னிப்பாயா" "கள்வரே கள்வரே" என்று ஒரு பட்டியலும், இளையராஜா இசையில் "இளம்காத்து வீசுதே" "பூவைக்கேளு காத்தை கேளு" உன்னவிட ",  யுவன் ஷங்கர் ராஜா இசையில் "நினைத்தி நினைத்து", "சண்டாளி உன் " என பெரும் பட்டியலே உண்டு.

இதுவரை 4 தேசிய விருதுகளும், 9 பிலிம் பேர் விருதுகளும், 4 IIFA  விருதுகளும் இதுவரையில் பாடியதற்காக வாங்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்க சாதனை. ட்வீடரில் மட்டுமில்லாது இவருக்கென்று ஒரு  வலைதளமும்  பிரத்யேகமாக வைத்துள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைக்க இவரை பல இயக்குனர்கள் அணுகி வருகிறார்கள். ஆனாலும் இவர் ஏதும் ஈடுபாடு காட்டிக்கொள்ளவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் இவர் இசை உலகில் பெரும் சாதனைகள் செய்ய நம் வாழ்த்துக்கள் !!

அன்புடன் 
அசோக் குமார்

Saturday, November 12, 2011

விஜய் மல்லையாவும் நம் பிரதமரின் துடிப்பும்

விஜய் மல்லையாவின் "கிங் பிஷேர்" விமான நிறுவனத்தின் நட்டக்கணக்கை சரி கட்ட நமது மத்திய அரசு முன்வரவேண்டும் என இந்தியாவின் பிரபலமான "வியாபார காந்தம்" மல்லையா ட்விட்டரில் சில நாட்களாக கூவி வருகிறார். நாட்டில் எங்கும் ஊழல், விலைவாசி உயர்வு, தெலுங்கானா பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை என நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்  வாயே திறக்காத நமது "மாண்புமிகு" (மரியாதை ரொம்ப முக்கியம் அமைச்சரே) கிங் பிஷேர் நட்டத்திற்கு மட்டும் உடனடியாக எதாவது நாம் செய்ய வேண்டும் என்று விமானத்தில் பறந்துகொண்டே கூவுகிறார். ஒன்று நன்றாக புரிகிறது, இது மக்களுக்கான அரசு alla, கார்பரேட்   முதலாளிகளுக்கானது. நமக்கே தெரியாமல் நம் பையில் இருந்து பணத்தை உருவப்போகிறார்கள்! வாழ்க ஜனநாயகம் !!!
************************************************
சச்சின் நூறாவது சதத்தை அடிப்பாரா மாட்டாரா என்று தினமும் கூவுவதே இந்த ஊடகங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தேவை இல்லாமல் அந்த மனிதருக்கும் கண்ணுக்கே தெரியாத அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்த ஊடகங்களுக்கு என்ன ஆசையோ. எல்லோரும் தான் அதை விரும்புகிறோம், ஆனாலும் கொஞ்சம் பொறுமை  தேவை. 
************************************************
ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விமர்சகரான "பீட்டர் ரோபுக்" தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டு ரொம்பவும் வருத்தப்பட்டு போனேன். ஒரு வாலிபரை செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தியதால், காவல்துறை விசாரணைக்கு பயந்தே அவர் தற்கொலை செய்துகொண்டார் அணவும், அவர் நல்ல மனிதர் என்று ஒரு சாரரும் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நடுநிலையாக விமர்சனம் செய்வதில் அவருக்கு  நிகர் அவரே!! அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் !!
********************************************** 
சில நாட்களுக்கு முன் பேஸ் புக்கில் பார்த்து ரசித்தது இந்த படத்தைதான். எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க !!!
************************************************** 
சில கீச்சுக்கள்
இளங்குமரன்
 பல கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த போதிதர்மரால் கூட வழுக்கைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை
 
சிவகங்கை சிங்கம்
நீங்களே குளிக்கனும்ன்னு நெனச்சா அது உங்களுக்கு நன்மை, நாலு பேரு சேந்து உங்கள குளிக்கச்சொன்னா அது இந்த சமுதாயத்துக்கே நன்மை..!
 
இராஜராஜன்
மக்கார் பண்ற வண்டியையும் ரொம்ப தூரம் ஓட்டுபவன் தான் நல்ல டிரைவர் ..
 
 
நையாண்டி
பைக்கில் செல்லும் போது துப்பட்டாவை இழுத்து கட்டுங்கள்! இல்லையெனில் வாழ்க்கை சக்கரம் நின்றுவிடும்!
 
JanuShath
பிரிவு கனக்கிறது என்றால் பிரியாமல் இருந்திருக்கலாமே என்று மிகப்புத்திசாலித்தனமாய்க் கேள்விகேட்போர் பலர்...
 
  நையாண்டி
என்னடா கொடுமை இது! 108 போனக்கூட வழி விடமாட்டேன்கிறாங்க!
**************************************************
 "அவள் அப்படித்தான்" படத்தில் இந்த பாடல் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. இந்த "பன்னீர் புஷ்பங்களே" பாட்டைவிட  எல்லோருக்கும் "உறவுகள் தொடர்கதை " பாட்டுதான் எல்லோருக்கும் பிடிக்கும். கமல் தன் சொந்த குரலில் பாடிய பாடல், ஒரு வித மென் சோகம், இந்த பாடல் முழுவதும் இழையோடும் அது தான் இந்த பாடலின் சிறப்பம்சம்.

*******************************************************
அன்புடன் 
அசோக் குமார்

Thursday, November 10, 2011

ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர் எப்போதும் எனக்கு பிடித்த மிமிக்ரி  கலைஞர். எப்போதும் இவர் நிகளிசிகளை பார்க்கும்போது மனசு லேசாகிவிடும் . குறிப்பாக இவர் ஆடும் கேப்டன் நடனத்திற்கு நான் அடிமை. நீங்களே பாருங்களேன்.

===============================================
=================================================
அவருடைய நிகழ்ச்சிகளில் இது பெரும் வரவேற்ப்பை பெற்ற ஒன்று. கண்களில் கண்ணீரை வரவழிக்க கூடிய ஒரு சிறப்பும் உண்டு.
 
======================================
==========================================

அன்புடன்
அசோக் குமார்

உன் உதட்டு சாயத்தை கொஞ்சம் தாயேன்

உன் உதட்டு 
சாயத்தை கொஞ்சம்
தாயேன் என் 
ரத்தத்தில் ஹீமோக்ளோபின்
குறைபாடாம்!!
***********************************************
கல்யாண கூட்டத்தில் மணப்பெண்ணின் தோழிகளை ரசிப்பதற்காகவே ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும்# ஜென்ட்ஸ் சைக்காலஜி
***********************************************
கடுப்பாகிப்போன
என் பேருந்து 
பயணங்களை 
சுகமாக்கியது உன் 
வரவு மட்டுமே!!
**********************************************
கோயில் இல்லா 
ஊரில் மட்டுமல்ல, 
நீ இல்லா ஊரிலும் 
குடியிருக்க மாட்டேன்!!!
**********************************************
பாலுக்காக 
அடம்  பிடிக்கும் 
குழந்தையை 
போல அடம் 
பிடிக்கிறேன் 
உன் முத்ததிற்காக !!
************************************************

பள்ளி தோழியை 
பார்க்கையில் பால்ய 
கால காதல் மீண்டும்
மனதின் ஓரத்தில் 
துளிர்ப்பதை 
தவிர்க்க 
முடிவதில்லை !!
********************************************
அன்புடன் 
அசோக் குமார்

Wednesday, November 9, 2011

நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்

ஒரு மருத்துவமனை மற்றும் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வளவுதான் இதை மட்டும் வைத்துகொண்டு ஒரு திரைக்காவியத்தை உருவாக்க முடியுமா ??முடியும் என காட்டியவர்தான் ஸ்ரீதர் அவர்கள். "தேன் நிலவு" படத்தின்  வெற்றிக்கு  பின் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து கலக்கிய படம்தான் "நெஞ்சில் ஒரு ஆலயம். இந்த படத்தில் ஒரு சின்ன முக்கோண காதலை மயமாக கொண்டு இவரகளுக்குள் நடக்கும் சுவையான உரையாடலை சின்ன சின்ன காட்சிகள் மூலம் காட்சி படுத்தி அமர்க்களபடுத்தி இருப்பார் ஸ்ரீதர். 



மொத்தம் பதினெட்டு நாட்களில் மொத்த  படத்தின் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்  ஸ்ரீதர். இந்த படத்தில் "முத்துராமன்" (நடிகர் கார்த்திக்கின் தந்தை) மற்றும் "தேவிகா" (நடிகை கனகாவின் அம்மா ) என்று இந்த படத்திற்கு பின்னால் தமிழ் திரை உலகில் பிரபலமாக வலம் வந்த இந்த இருவரையும் இந்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்.


இந்த படத்தின் கதை ஸ்ரீதர் அவர்களின் பட பார்மூலவான முக்கோண காதல் கதைதான் இந்த படத்திலும் படமாக்கி இருந்தார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துராமனை அவரது மனைவியான தேவிகா, புற்று நோயில் சிறந்து மருத்துவம் பார்க்கும் கல்யாண் குமாரின் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார். பிறகுதான் தெரியவருகிறது, கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலித்து பிரிந்தவர்கள் என்று. முன்னாள் காதலியின் கணவரை காபற்றினாரா  அல்லது முடிவுதான் என்ன என்பதை மிக சுவாரசியமான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்த படம் இது. 

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலம், இசை அமைத்தவர் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்கள். இதில் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், இசைக்கு மிகவும் முக்கியத்துவம்  கொடுப்பாராம் ஸ்ரீதர். அவரை இசை விசயத்தில் திருப்தி படுத்துவது சிரமம் என்று விஸ்வநாதன் அவர்கள் ஒரு சந்திப்பில் சொன்னது.  

படத்தின் எல்லா பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் அவர்களே எழுதினர்.  "எங்கிருந்தாலும் வாழ்க" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்", " சொன்னது நீதானா", "முத்தான முத்தல்லவோ" , " என்ன நினைத்து என்னை" என மொத்தம் ஐந்து பாடல்கள். 

அந்த காலத்தில் ஒரு இயக்குனரை கல்லூரி பெண்கள் காதலித்தார்கள் என்றால் அது காதல் பட மன்னன் ஸ்ரீதர் அவர்களை மட்டுமே. இன்னும் சுவாரசியமான சில தகவல்களுடன் அடுத்த பதிவில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் சந்திக்கிறேன் .

காதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத முடியுமா



பாஸை பற்றி நினைக்கையில் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை# சொந்த அனுபவம்
========================================

தாவணி உடுத்தும் பெண்கள் வெட்கத்தையும் சேர்த்தே உடுத்துகிறார்கள் -நானே சிந்திச்சேன்
=========================================

குழந்தைகளை பார்க்கும்போதுதான் பலூன் விற்கிற அண்ணாச்சி சத்தமா கூவுவது வாடிக்கை # தொழில் ரகசியம்
==========================================

காதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத முடியும்-நண்பன் #காதலுக்கே வக்கு இல்லை அப்புறம் எங்கே தோல்வி  வேற!!
============================================ 

விடை தேடும் என் கேள்விகளுக்கு, பெரும்பாலும் பதிலாக இருப்பவை உன் வெற்று புன்னகையே Psychology
======================================

கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தில் குழந்தைகளே சமாதான தூதுவர்கள்#குடும்ப சீக்ரெட்
======================================
டிஸ்கி : படங்கள் அனைத்தும் நானே எடுத்தவை என் வீட்டை சுற்றி இருக்கும் பூக்கூட்டங்கள்  இவை.
அன்புடன் 
அசோக் குமார்

Friday, November 4, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் .. பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்.. கணஈ ஓவியம் உயிர் கொண்டு வந்தால்  .... அப்பப்பா என்ன வரிகள் .. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை உலவ விட்டு இருப்பார்கள் இசை அமைப்பாளர்கள். \

படம்: தில்லானா மோகனாம்பாள்
பாடல்: மறைந்திருந்தே பார்க்கும்
பாடியது: P . சுசீலா
இசை: KV. மகாதேவன்


படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்: அனுபவம் புதுமை...
பாடியது: PB .ஸ்ரீனிவாஸ் & P . சுசீலா
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி

படம்: பணம் படைத்தவன்
பாடல்: பவளக்கொடியிலே 
பாடியது:  TM . சௌந்தராஜன் & LR . ஈஸ்வரி 
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி 

படம்: குங்குமம்
பாடல்: தூங்காத கண் என்று 
பாடியது: TM . சௌந்தராஜன் & பி. சுசீலா
இசை: KV. மகாதேவன் 


படம்: வானம்பாடி
பாடல்: ஏட்டில் எழுதி வைத்தேன் 
பாடியது: TM . சௌந்தராஜன் & LR . ஈஸ்வரி
இசை: KV. மகாதேவன் 


 அன்புடன் 
அசோக் குமார் 

Wednesday, November 2, 2011

படித்ததும் பிடித்ததும் 03/11/2011


இளையராஜா  அவர்களின் மனைவி ஜீவா இளையராஜா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
---------------------------------------------------------------------------------------------------
  என்னடா ஒருத்தர் தன் குடும்பத்தையே வச்சு எல்லோரையும் சுரண்டறார்னு இந்த அம்மாவை உட்கார வச்சா, அதை மாத்தறேன் இதை மாத்தறேன் அப்படின்னு  சொல்லி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் ஒன்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எதிரானவன் அல்ல. ஆனாலும் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு நூலகத்தை தேவை இல்லாமல் கை வைத்து தன் பெயரை கெடுத்துக்கொள்ள (கெடுத்துகிட்டு ஆச்சு ) போகிறார் என்றே தோன்றுகிறது.அதற்காக நல்ல இடமாக பார்த்து ஒரு கட்டிடம் கட்டிவிட்டு போங்களேன். கருணாநிதி கட்டிய அனைத்தையும் மாற்றலாம் என்று கிளம்பினால் அப்புறம் மக்கள் எங்கே நலப்பணி எங்கே. இது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு போலும். பேசாமல் கவர்னர் ஆட்சியை தமிழ் நாட்டில் அமல்படுத்திவிடலாம்.
---------------------------------------------------------------------------------------------------
 வெகு நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு வேலையை செய்திருக்கிறார்கள். ரங்கநாதன் தெருவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்து மூடி இருக்கிறார்கள்.  ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டு சில உயிர்களை காவு கொடுத்தும் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. திரும்பவும் இது போன்ற தவறுகள் ஏதும் நடக்காமல் பார்த்துகொள்வது அவசியம் .
-----------------------------------------------------------------------------------------------------
போதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள்  முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே !! ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.
----------------------------------------------------------------------------------------------
 நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க (பேஸ் புக்கில் கண்டுஎடுத்தது ).
---------------------------------------------------------------------------------------------------
 இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த "இன்று நீ நாளை நான்" படத்தின் இந்த பாடல் எப்போதும் கேட்க தூண்டும். S. ஜானகி அவர்கள் எவ்வளவோ பாடல்கள் பாடி இருந்தாலும் இந்த பாடல் அவர்கள் இசை பயணத்தில் இந்த பாடல் ஒரு வைரக்கல். 

---------------------------------------------------------------------------------------------
அன்புடன் 
அசோக் குமார் 

Tuesday, November 1, 2011

பேச வைத்தது யார் ??

இந்த கவிதை 10  வருடத்திற்கு முன் " ஆனந்த  விகடன்" என்று நினைக்கிறேன் புத்தகத்தில் வந்தது. என் பழைய டைரியை புரட்டியபோது கிடைத்தது. ரொம்பவும் சுவாரசியமான கவிதை, எளிமையாகவும் ரொமபவே எதார்த்தமாகவும் எழுதப்பட்டது. காதலில் ரொம்ப காயப்பட்ட ஒரு ஆத்மாதான் இதை எழுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எழுதியவர் பெயரை எழுதி வைக்க வில்லை (மன்னிக்கவும் மறந்துட்டேன்). என்னவோ, எழுதிய அந்த மனிதர் இப்போது  எந்த நிலையில் இருப்பார் என தெரிந்து கொள்வதில் கொஞ்சம் ஆவலாகவும் இருக்கிறேன். இதோ அந்த கவிதை. 

 பேச  வைத்தது யார் ??
பல அனுபவங்கள் 
எதை சொல்லி 
எதை விடுவது 
புத்தாண்டு வந்தால் 
புகைப்பது 
குடிப்பது 
கிடையாது என்று 
செய்த சத்தியத்தையா ??
உன் கோப தினங்களில் 
மறந்த சத்தியத்தையா ??
உன் ஆளுமையில் 
துவண்டு 
துங்கிய தினங்களையா??
போதுமடி 
உன் உறவு என்று 
திமிறி, திருப்பி 
ஏங்கிய நாட்களையா ??
மறக்கின்ற சக்தி 
அதிகமடி எனக்கு 
உன் கணவனுடன் 
நீ கைகோர்த்து 
காரில் ஏறி திரும்பி 
அற்ப புழுவாய் 
பார்த்த அந்த நாட்கள் ...
காரில் இறங்கி 
கர்சிப்புடன் 'ச்சே 
ஒரே தூசி என்கிறபோது 
நினைத்தேனடி 
நீ பேசவில்லை 
உன் கணவனிடம் 
உள்ள பணம் உன்னை 
பேச வைத்தது  என்று !!!

உண்மையில் நான் ரொம்பவே ரசித்த கவிதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு இதை பதிவிடுகிறேன்.

அன்புடன்
அசோக் குமார்