Thursday, December 1, 2011

குரல் தேவதைகள்-சின்மயி


இந்த குரல் தேவதைகள் பற்றிய பதிவில் சென்ற பதிவில் "ஸ்ரேயா கோஷல்" பற்றி எழுதி இருந்தேன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும். இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியான "சின்மயி" பற்றி கிறுக்கலாம் என்று இருக்கிறேன். 


ஸ்ரேயா கோஷலுக்கும், சின்மயிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தொலைக்காட்சியின் வாயிலாக திரைத்துறைக்கு வந்தவர்கள். சின்மயியும், "சப்தஸ்வரங்கள்" என்ற நிகழ்ச்சயில் பங்கேற்றபோது அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரபல பின்னணி பாடகர் "ஸ்ரீனிவாஸ்" இவர் குரலால் கவரப்பட்டு, இசையமைப்பாளர் "ரெஹ்மான்" அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். முதல் பாடலே "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே" பாடல் மூலம் பிரபலமானார். யோசித்து பாருங்கள் முதல் பாடல் இவர் புது பாடகி, ரஹ்மான் அவர்களின் மன உறுதியை பாராட்டும் அதே வேளையில், இவர் திறமை மீது ரஹ்மான் அவர்கள் வைத்த நம்பிக்கைதான் முழுமுதல் காரணம். 



எல்லோருக்கும் வாய்ப்பதில்லை இது போன்ற ஒன்று, முதல் பாடலே ஹிட்டாவது. அந்த பாடல்தான் சின்மயிக்கு "தமிழ்நாட்டின் சிறந்த பின்னணி பாடகி விருதை அந்த வருடம் வாங் கொடுத்தது. சின்மயி பாடும்போது அதில் ஒரு ஜீவன் இருப்பதாகவே தோன்றுகிறது. அவரின் "நளதமயந்தி" படத்தின் "என்ன இது" பாடல் எனக்கு எப்போதும் பிடித்தமானது. இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது, ரஹ்மான் அவர்களின் ஒரு இசைவிழாவில் ரஹ்மான் பியானோ வாசிக்க, சின்மயி அந்த பாடலை பாட அன்று முதல் தான் நான் சின்மயின் குரலுக்கு ரசிகனானேன்.



கர்நாடக இசை மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசையிலும் சின்மயி கை தேர்ந்தவர். இவரது அம்மாவே இவருக்கு கர்னாடக இசையின் குரு என்பது இன்னமும் சுவாரசியமான சங்கதி.

இன்றும் ரஹ்மானின் ஆஸ்தான பாடகர்களில் சின்மயிக்கும் ஒரு இடம் உண்டு, உதாரணம் அவர் இசையமைக்கும் எல்லா படங்களிலும் ஒரு பாடல் நிச்சயம் இவர் பாடியதாக இருக்கும். ரஹ்மான் என்றில்லை இன்று வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர்களுக்கும் இவர் பிடித்தமான பாடகி.சமீபத்தில் வெளிவந்த இந்த இரண்டு பாடல்களும் புதிய இசையமைப்பாளர்களின் இசையில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றவை.



சின்மயி ஒரு பாடகி மட்டுமில்லை, பெரும்பாலும் பல நடிகைகள் இன்று இவரின் குரலில்தான் பரிமளிக்கிறார்கள். "சில்லுனு ஒரு காதல்" படத்தில் பூமிகாவுக்கு குரல் கொடுத்ததுதான் இவரின் முதல்அனுபவம். அதன் பிறகு வரிசையாக "விண்ணைத்தாண்டி வருவாயா" வில் த்ரிஷா, "கோ" கார்த்திகா தொட்டு, இன்று ஹிந்தி பதிப்பு "விண்ணைத்தாண்டி வருவாயா"ஏமி ஜாக்சன் வரை முப்பது படங்களுக்கு மேல் நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சில்லுனு ஒரு காதல்" படத்தின் ஒரு காட்சியை மட்டும் பாருங்களேன்.


பாடகி, பின்னணி குரல் கொடுப்பது என்பதை தாண்டி , த்வீட்டர், பேஸ் புக், "WhatToNameIt" என்ற  ப்ளோக்கையும்எழுதி வருகிறார்.  "ப்ளூ எலிபன்ட் " என்ற மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவை எல்லாம் இவரின் பன்முகத்தன்மைக்கு எடுத்துகாட்டு. தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி ஜேர்மன், பிரெஞ்சு தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சரளமாக தெரிந்தவர் (நன்றி: http://www.nilacharal.com/enter/celeb/chinmayi.asp).

இன்னமும் நெறைய எழுதிக்கொண்டே போகலாம்தான். நேரம் கிடைத்தால், அதை தனி பதிவாக போடுகிறேன்.


டிஸ்கி: இது என் நூறாவது பதிவு. இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியான சின்மயி பற்றி எழுதியதில் பேரானந்தம் தான்.


அன்புடன் 
அசோக் குமார்


10 comments:

  1. சின்மயி பற்றிய அசத்தலான தகவல் பாஸ்

    ReplyDelete
  2. அழகான, திறமையான பாடகி சின்மயி பற்றிய பகிர்வை தாங்கள் நூறாவது பதிவில் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்,


    வாசிக்க:
    லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

    ReplyDelete
  3. 100 வது பதிவிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமையான குரல்வளம் அவருக்கு

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //தமிழ்வாசி பிரகாஷ் said...

    அழகான, திறமையான பாடகி சின்மயி பற்றிய பகிர்வை தாங்கள் நூறாவது பதிவில் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்,//

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரகாஷ்!!

    ReplyDelete
  7. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    100 வது பதிவிற்கு வாழ்த்துகள்//

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!

    ReplyDelete
  8. வடக்குபட்டி ராம்சாமி said...

    இதெலலாம் ஒரு குரலா?சின்ன குயில் சித்ராவுக்கு இவர் தூசு கூட வரமாட்டார்!எல்லா படத்திலும் கட்டை ஆண் குரலில் "ஹவ் ஆர் உ" என கேட்கும்போது காது வலிக்குதுடா சாமி!இவர் வெள்ளையாக இருப்பதாலேயே பலர் இவருக்கு ரசிகர் என்று சொல்லி திரின்கின்றனர்!குரு படத்தில் வரும் முத்தம் தின்பவள் பாடலை கேளுங்கள்!செவிடாவது நிச்சம்!//

    அண்ணே! நீங்க சொல்றது ரசனையின் மாறுபாடு, சில பேருக்கு அஜித் புடிக்கும் சில பேருக்கு விஜய் புடிக்கும் அந்த மாதிரிதான் இதும். நீங்க அம்மணமா போறீங்கசொல்லி பான்ட் போடறவங்கள குறை சொன்னா எப்படி. வெள்ளைய இருக்கிறதால ஒருத்தர் புடிக்கும் அப்படின்னு வச்சிகிட்டாலும் நீங்க சொல்ற சித்ராவும் வெள்ளைதான். நான் எந்த இடத்திலையும் சித்ரா நல்ல பாடகில் இல்லன்னு சொல்லவே இல்லையே !!

    ReplyDelete
  9. மிக்க நன்றி ....Padmhasini and Chinmayi

    ReplyDelete
  10. மிக்க நன்றி ....Padmhasini and Chinmayi

    ReplyDelete