Saturday, March 31, 2012

நான் பேச்சிலராக இருப்பதில் என்னை விட வருத்தபடுபவர்கள்

தினமும் ஒரு மணி நேரமாவது பேசும் உற்ற நண்பன் காதலி கிடைத்ததில் இருந்து தலைமறைவு#ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்
**********************************************
தூண்டிலைப்போட்டு மீனுக்காக காத்திருப்பவனிடம் தான் கேட்கவேண்டும் பொறுமையின் மகத்துவம்#தத்துவம்
**********************************************
தமிழின் மகத்துவம் தமிழ் நாட்டில் வாழும் வரை புரியவே இல்லை # என்னவாக இருக்கும்
***********************************************

மழை பொத்துகிட்டு ஊத்துது. வானத்துள் ஓட்டை ஏதும் விழுந்திருக்குமோ #டவுட்டு
*************************************************

குழந்தையாய் இருக்கும்போது தீபாவளிக்கு பணம் போதாதென்று உண்ணாவிரதம் இருப்பதில் ஆரம்பிக்கிறது நம் போராட்டம் #வாழ்க்கை
***************************************************
என்னை விட என்னை சுற்றி இருப்பவர்களுக்குதான் ரொம்பவே வருத்தம் நான் பேச்சிலராக இருப்பதில்#முடியல
**************************************************

 இந்தியாவில் இருந்தேன்-வேலை இல்லை என்றார்கள். அமெரிக்காவில் வேலை செய்கிறேன் இந்தியாவில் நீ இல்லைஎன்றாங்க#பொண்ணை பெத்த புண்ணியவான்கள்
****************************************************

Saturday, March 3, 2012

படித்ததும் பிடித்ததும்-03/03/2012

ஈரானின் மீது போர் தொடுப்பதில் நீயா நானா என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அமேரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மூக்குடைப்பட்டு, பொருளாதாரமே சரிவுற்று கிடக்கிறது. இந்த நிலையில் இன்னொரு போரை அமெரிக்கா அரசு திணித்தால் அமெரிக்க மக்களே தெருவில் இறங்கி கல் வீச தயாராகி விடுவார்கள். இந்த விஷயம் ஈரானுக்கும் நன்றாகவே தெரியும். இஸ்ரேல ஒரு போரை நடத்தும் அளவுக்கு வல்லமை கொண்ண்ட நாடா என்பது சந்தேகமே. ஈரானின் அணு விஞ்ஞானியை கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில்  இருக்கிறது ஈரான். நேற்று கூட போர் வேண்டாம் என ஒபாமா இஸ்ரேல அதிபர் நெதன்யாவுடன் பேசியதாக செய்திகள் வெளி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

  *************************************************

இணையத்தில் சமீப காலமாக விஜயை கலாய்ப்பதை  நிறுத்திவிட்டார்கள் போலும். அதற்கு பதிலாக விஜய் டிவியில் "ஒரு கோடி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூர்யாவை மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விகளை எல்லாம் இரண்டு வயது குழந்தை கூட சொல்லிவிடும். இதில் சூர்யாவின் குற்றம் ஏதும் இல்லை என்றாலும் பணம் தருகிறார்கள் என்பதற்காக இப்படி நிகழ்ச்சிகளில் மாட்டிக்கோடு அசிங்கப்படுவானேன்!!!************************************************************
 இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் போல. கிரிக்கெட் என்பது ஒரு மதம் போல பாவிக்கப்டுவது நம்ம ஊரில் மட்டுமே. ஒரு பிளேயர் சரியாக விளையாடவிட்டாலும் அவரை தூக்கி அடிக்க மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தயங்குவதில்லை, சமீபத்திய உதாரணம் ரிக்கி பாண்டிங் . மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு உலககோப்பை வங்கி தந்த ஆளுக்கு இந்த நிலைமை. நாம் இன்னும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்யாமலே இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு கால அளவு இருக்கிறது, இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரெப்ரெஷ் பொத்தானை அழுத்தவேண்டிய நேரமிது, விழித்துகொள்ளுமா  இந்திய கிரிக்கெட்  வாரியம்???
******************************************************
அரவான் படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் பதிவுகளில் படித்து ரொம்பவே குழம்பி போயுள்ளேன், நல்ல இருக்கு என ஒரு சாரரும் மொக்கை என ஒரு சாரும் சொல்லி என்னை ரொம்பவே குழப்பி விட்டுள்ளனர். ஆனாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன், எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் வைத்து கொள்ளாமல்!!!
****************************************************
நம்ம டி ஆரோட ரீமிக்ஸ் பாட்டு!!!

 ********************************************
 டி ஆருக்கு அப்படி ஒரு முகம் இருந்தாலும் இந்த பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். உயிருள்ளவரை உஷா படத்திற்காக "வைகை கரை கற்றே நில்லு" அவரே இசையமைத்து எழுதிய பாடல். இதில் ஸ்பெஷல் என்னனா யேசுதாசின் குரல். காதல் சோகத்தை இதை விட எப்படி பாடி விட முடியும். 

****************************************************
 அன்புடன் 
அசோக் குமார்