Saturday, December 17, 2011

2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்

 ஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை தொகுத்து இருக்கிறேன். நிறைய பாடல்கள்  மனதிற்கு  பிடித்திருந்தாலும் பத்து பாடல்களே என்பதால் அவைகளை இந்த லிஸ்டில் வர இயவில்லை. என்ன சொல்லபோற-வேங்கை, கண்ணாடி நீ -மங்காத்தா , ராசாத்தி போல- அவன் இவன், என்னமோ என்னமோ பண்ணுது-தேநீர்  விடுதி, நான் சொன்னதும் மழை -மயக்கம் என்ன என நிறைய பாடல்களை இணைக்க முடியவில்லை. எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் !!!

படம் : அழகர்சாமியின் குதிரை.
பாட்டு : பூவைக்கேளு  காத்தை கேளு

இளையராஜாவின் மெலடி பிடிக்காதவர்கள் இருப்பது அரிது அந்த வகையில் இந்த பாடல் அவரின் மெலடி லிஸ்டில் சேரும்.


படம் : ஆடுகளம்
பாடல்:  யாத்தே யாத்தே

2011-ம் வருடம் GV. பிரகாஷ் காட்டில் அடை மழை.... இல்லை இல்லை பேய்  மழை. ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன என எல்லா படங்களிலும் இவர் இசை பெரிதும் பேசப்பட்டது.


படம்: எங்கேயும் எப்போதும் 
பாடல்கள்: சொட்ட சொட்ட /உன் பேரை தெரியாது

புது இசையமைப்பாளர் சத்யா, முதல் படமே நல்ல தொடக்கம், எனக்கு இந்த இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.  புதிய இசையமைப்பாளர் என்ற சுவடே தெரியாமல் அற்புதமாக கலக்கி இருந்தார்.படம்:வாகை சூட வா 
பாடல்: சாரக்காத்து  வீசும் / போறானே போறானே

இவரும்  புதிய இசையமைப்பாளர்தான் பின்னணி இசையிலும் இந்த படத்தில் முத்திரை பதித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கென்று நல்ல எதிர்க்காலம் இருப்பதுபோல் தோன்றுகிறது.படம் : சதுரங்கம் 
பாடல்: விழியும் விழியும்

வித்யாசாகரின் மெலடிகள் என்றும் சோடை போனதே இல்லை. இயக்குனர் கரு. பழனியப்பன் -வித்யாசாகரின் கூட்டணி நல்ல பாடல்களை கொடுத்து வந்திருக்கிறார்கள், அந்த வகையில்  படம் தாமதமாக வந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடித்து போய்விட்டது.


படம் : தெய்வத்திருமகள்
பாடல் : ஆரிரோ ஆராரிரோ

GV. பிரகாஷிற்கு  மேலும் ஒரு பிரமாதமான கதையம்சத்தோடு கூடிய பின்னணி இசைக்கு நிறைய வேலை கொடுத்த படம்.
 

படம்: 180 
பாடல்: சந்திக்காத கண்களில் 
இந்த படத்தின் இசையமைப்பாளர் "ஷரெத்" மலையாளத்தில் இசையமைத்து  வருகிறார். தமிழ் படங்களில் இதுதான் இவரின் முதல் படம்.


படம்: வெப்பம் 
பாடல்: மழை வரும் அறிகுறி

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் வெளிவந்த காதல் படத்தின்பாடல்களை நாம் இன்னும் மறந்திருக்க  முடியாது. கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு அவருக்கு பேர் சொல்லும்படியான படம் இது. குறிப்பாக இந்த பாடல் பிரமாதம்!!!


படம்: கோ 
பாடல்: என்னமோ ஏதோ
ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பாடல் இந்த வருடம் பல பேரின் விருப்பபாடலாக இருந்தது. 

படம்: எங்கேயும் காதல்
பாடல்: திமு திமு தீம் தீம்

நா. முத்துகுமாரின் வரிகளில்  ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்த பாடல் கேட்கும்போது ரொம்பவே இனிமை. காதல் வராதவனுக்கு திடிரென காதல் வந்தால் எப்படி அவனுடைய மன ஓட்டங்கள் இருக்கும் என்பதை சொன்ன பாடல். சில கவிதை வரிகள் நச்சென்று இருக்கும்.

"ஜாமத்தில் விழிக்கிறேன்
என் ஜன்னல் துங்கும் நிலா 
காச்சலில் கொதிக்கிறேன்
என் கண்ணுக்குளே விழா "

நிறைய பாடல்களை இந்த வரிசையில் சேர்க்கத்தான்  அசை என்ன செய்வது பத்து  பாடல்தான் என்று முதலிலே முடிவு செய்துவிட்டேன்.
அன்புடன்
அசோக் குமார் 

4 comments:

 1. தயவு செய்து பிழை இல்லாமல் பதிவுகளை போடவும் ...

  ReplyDelete
 2. தயவு செய்து பிழை இல்லாமல் பதிவுகளை போடவும் ...

  ReplyDelete
 3. // ala said...

  தயவு செய்து பிழை இல்லாமல் பதிவுகளை போடவும் ... //

  பிழைகளுக்கு மன்னிக்கவும்!! திருத்தி விட்டேன்

  ReplyDelete