Monday, October 31, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

தமிழ் திரை இசையின் பொற்காலம் என்றால் அது விஸ்வாநாதன் & ராமமூர்த்தி மற்றும் KV . மகாதேவன் அவர்கள் இசை அமைத்த காலத்தைத்தான் சொல்லலாம். எத்தனை இனிமையான பாடல்கள். அவற்றை எல்லாம் தொகுக்கும் முயற்சியில்.....

படம்: பாவ மன்னிப்பு
பாடல்: அத்தான் என்னத்தான் ..
பாடியது: சுசீலா
இசை: விஸ்வாநாதன் & ராமமூர்த்தி

======================================
படம்: வானம் பாடி
பாடல்: தூக்கணா குருவி
பாடியது: சுசீலா
இசை: KV . மகாதேவன்

======================================
படம்: பொன்னூஞ்சல்
பாடல்: ஆகாய பந்தலிலே
பாடியது: TM . சௌந்தராஜன் & சுசீலா
இசை: MS. விஸ்வாநாதன்
=========================================
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
பாடல்: தென்றல் உறங்கிய போதும்...
பாடியது: AM .ராஜா & சுசீலா
இசை: விஸ்வாநாதன் & ராமமூர்த்தி 

=========================================
படம்: வீரத்திருமகன்
பாடல்: பாடாத பாட்டெல்லாம்
பாடியது: PB . ஸ்ரீநிவாஸ் & ஜானகி
இசை: விஸ்வாநாதன் & ராமமூர்த்தி==============================================
அன்புடன்
அசோக் குமார்Sunday, October 30, 2011

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி


வாழ்க்கையில் துயரமா?? தீராத பிரச்சினைகளால் துன்பப்படுகிறீர்களா?? விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா?? தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் துன்பத்தில்  உலன்றுக்கொண்டு  இருக்கிறீர்களா!! அப்போ வாங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்.

நான் ஏதும் சொல்லறதுக்கு இல்லைங்கோ !!


===============================================
ஆஸ்கார் கமிட்டி காரங்க கொஞ்சம் ஜாக்கிரதையா  இருக்கிறது நல்லது !!
=========================================
இப்படி ஒரு குழந்தை  யாருக்காவது பிறந்த என்ன பண்ணுவாங்க !!
========================================
முடியடலடா சாமி !!!

======================================

எம் ஜி ஆர் உயிரோட இருந்த இந்நேரம் விபரீதமா முடிவெடுத்திருப்பார் !!

இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு கம்பனி பொறுப்பாகாது!!

Saturday, October 29, 2011

நீ போட்டாய் என் வாழ்வில் கோலம்

புள்ளி வைத்து கோலம் 
போட்டாய் -சொல்லி வைத்து 
நாமம் போட்டாய்
என் காதலுக்கு  !!
-------------------------------------------------------

நீ போட்ட 
கோலங்களுக்குள் சிக்கி 
கொண்டது புள்ளிகள் 
மட்டுமல்ல - என் 
இதயமும்தான் !!
-----------------------------------------------------

அரிசி மாவில் கோலம் 
போட்டு எறும்புகளுக்கும் 
உன் இரக்க குணத்தை 
காட்டுகிறாய் -என் 
காதலுக்கு எப்போது 
----------------------------------------------------

உன் கோலத்திற்கு நடுவில் 
இருக்கும் பூசணிப்பூ பிள்ளையாராகவாவது
வாய்ப்பு கொடு -உன் காலடியில் மிதிபடும்
பாக்கியமாவது கிடைக்கட்டும் !!
------------------------------------------------------

 அதிகாலையில் இருந்து 
உன் வீட்டுக்கு காவல் இருக்கிறேன் 
நீ போட்ட கோலத்தை 
யாரும் மிதித்துவிடக்கூடாதே என !!
----------------------------------------------------------

மார்கழி மாதமே முடிவு 
பெறுவதில்லை -உன் 
கோலத்தை பார்க்காமல் !!!
------------------------------------------------------------

நீ போடும் கோலமும் 
என் காதலும் 
ஒன்றுதான் -இரண்டும் 
சற்றேறக்குறைய  சிக்கலானது !!
------------------------------------------------------------

கிழக்கில் உதிக்கும் ஆதவனே 
கொஞ்ச  நேரம் காத்திருக்க 
வேண்டி இருக்கிறது -நீ 
போடும் கோலம் முடிவதற்காக !!
-------------------------------------------------------------

அன்புடன்
அசோக் குமார்


Friday, October 28, 2011

இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்


கல்யாண பரிசின் வெற்றிக்கு பின் இவர் எடுத்த படம் தமிழில் இல்லை , தெலுங்கில் "பெல்லி கானுக" என்ற படத்தை இயக்கினார். பின் தமிழில் ஜெமினி அவர்களையே மீண்டும் கதாநாயகனாக வைத்து மீண்ட சொர்க்கம் என்ற படத்தையும் "விடிவெள்ளி என்ற படத்தையும் இயக்கி வெளியிட்டார். ௧௯௬௧-இல் ராஜ் கபூரை வைத்து "நாசறன" என்ற இந்தி படத்தை இயக்கி இந்தி பட உலகிலும் தடம் பதித்தார் ஸ்ரீதர்.


1961 -இல் மீண்டும் தமிழில் வெற்றி படமான "தேன் நிலவு" படத்தை இயக்கினார். இந்த படத்தை தானே சொந்தமாக "சித்ராலயா" என்ற நிறுவனத்தை தொடங்கி இந்த படத்தை   தயாரித்து வெளியிட்டார்.  ஜெமினி, வைஜயந்தி மாலா  மற்றும் நம்பியார் அவர்களைக்கொண்டு இந்த படத்தை இயக்கினார். இந்த படம் ஒரு "ரொமாண்டிக் காமெடி" வகையை சார்ந்தது. காதலர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு மீண்டும் முடிவில் சேருவதுதான் இந்த வகைப்படங்கள். பணக்காரரின் மகளான வைஜயந்தி மாலா மீது ஜெமினி அவர்களுக்கு  கண்டதும் காதல். ஆனால் இவர்கள் காதலில் ஒரு சிக்கல். ஒரு சின்ன முடிச்சை மையமாக  வைத்து எடுக்கபட்ட படம் இது.


இந்த படத்திற்கும் AM .ராஜா அவர்களே இசை அமைத்தார், பாடல்கள் முழுவதையும் "கவியரசர் கண்ணதாசன்" எழுதினார். மொத்தம் எட்டு பாடல்கள், "ஒ !ஒ ! எந்தன் பேபி" , "காலையும் நீயே", "பாட்டு பாடவா"  என  அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்ப்பை பெற்றன.


சில சுவாரசியமான சாதனைகளையும் இப்படம் பெற்றது. காஸ்மீரில் படம் பிடிக்கப்பட்ட  முதல் தென்னிந்திய படம் என்ற பெருமை பெற்றது. அது மட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய சிதம்பரம் மைதானத்தில் இதன் முதல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. S. ஜானகி  அவர்கள் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடி புகழ் பெற்ற பாடகியானார்.

ஸ்ரீதரின் அடுத்த படமான "நெஞ்சில் ஒரு ஆலயம்" என்ற படத்தின் சிறப்புகளை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் .
அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, October 25, 2011

தீபாவளியும் பின்னே நானும்


பண்டிகைகள் நாட்கள் நமக்கு அதிகம் என்றாலும் ஒரு பண்டிகையையும் தவற விடக்கூடாது என்று நினைப்பவன் நான். முனைவர் ஆராச்சி செய்யும்போதே ஒரு பண்டிகை என்றால், பண்டிகைக்கு மூன்று நாட்கள் முன்னும் மூன்று நாட்கள் பின்னும் விடுப்பு எடுக்கும் ஆசாமி யாம். ஆனால் இரண்டு தீபாவளியே இல்லை என்று ஆகிவிட்டது. சென்ற வருட தீபாவளியையும் லேபில் சில மருந்துகளோடு கொண்டாடினேன் இந்த வருடமும் அதே நிலைதான் போலும். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் சாபக்கேடு போலும். 


"உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் பெருக்கட்டும்". 

"இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" 

அன்புடன் 
அசோக் குமார்  

Sunday, October 23, 2011

படித்ததும் பிடித்ததும்-23-10-2011


இரண்டு  நாட்களாக நிம்மதியாக தூங்ககூட முடியாமல் இந்த பூமி அதிர்வு என்னை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. போன புதன் கிழமை இரண்டு முறையும் வெள்ளிகிழமை ஒருமுறையும் 4.2, 3.8 ரிக்டர் அளவீடுகளில் முறையே அதிர்ந்தது. பெர்கேலேயில் (Berkeley, Sanfransisco Bay area) மட்டும் இது தாக்கியது. இரவு தூங்க போகும் முன் அதிர்ந்து தொலைக்கிறது. பழைய சங்கதியை கேட்டால் கொஞ்சம் மனக்கலக்கம்தான்  வருகிறது. 1989 -இல் நடந்த பெரிய பூமி அதிர்வில் ரிக்டர் குறியில் 6.9 அளவில் தாக்கி இருக்கிறது. 3000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் சுமார் 50  பேர் இறந்தும் பொய் இருக்கிறார்கள். என்ன வாழ்க்கைடா இது !!!

===========================================

ஜப்பானில் சுனாமிக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துவிட்டதை அடுத்து ஜப்பான் அரசும், ஜப்பான் சுற்றுலா வளர்சிக்கழகமும் இணைந்து புது திட்டம் ஒன்றை புனைந்துள்ளது. உலகமெங்கும் இருக்கும் 10000 நபர்களுக்கு இலவச விமான பயணசீட்டு ஜப்பானுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மினஞ்சல் மூலம் பெறப்பட்டு பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்படவிருக்கின்றன. நீங்க செய்யவேண்டியது ஒன்றுதான். இந்த பயணத்தைப்பற்றி கட்டுரையோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அல்லது உங்கள் பதிவுகள் மூலமோ புகைபடன்கையும் இந்த சுற்றுப்பயண அனுபவத்தை பகிர்ந்துகொண்டு  பிரபலப்படுத்தவேண்டும், அதற்கான  சுட்டி இங்கே !!!
=============================================
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்து எல்லோரும் பதவி ஏற்க தயாராகிவிட்டார்கள்.  எல்லா நிலைகளிலும் இப்போதும் அம்மாவின் ஆட்சிதான் இன்னும் 5 வருடத்திற்கு அம்மா வைத்ததுதான் சட்டம். வாழ்க ஜன நாயகம். 
===============================================
இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு நல்ல விஷயத்தை வெளிக்கொணர்ந்துள்ளது, அது காங்கிரஸ் கட்சிக்கு அடிப்படையிலே எந்த செல்வாக்கும் இல்லை என்பதுதான் அது. சத்யமூர்த்தி பவனில் அடிக்கடி ஸ்டண்ட் ஷோ  நடத்தும் இவர்கள் என்று மக்களை சந்தித்தார்கள். யாராவது ஒருவர் முதுகின் மீது சவாரி செய்துகொண்டே பழக்கப்பட்டு போனவர்கள், இன்று தெரிந்திருக்கும் இவர்களின் உண்மை நிலை. அதிலும் உள்ளாட்சி தேர்தல் என்பது அந்த சுற்று வட்டாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கு வைத்திருந்தால் கூட வெற்றி பெற்று இருக்க முடியும், அதிலும் இவர்களுக்கு வைக்கவில்லை. இனியாவது உண்மை நிலைமயை புரிந்து கொண்டால் நல்லதுதான். 
================================================
இங்கே பிரீமொன்ட் (Fremont, California) என்னுமிடத்திற்கு  போய் இருந்தேன். அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு பெரிய கோயிலையே நிர்வகித்து வருகிறார்கள். ஒரு குட்டி இந்தியாவையே அங்கே பார்க்க முடிந்தது. என்னதான் அமெரிக்காவில் குடியேறினாலும் இன்னும்  சிலர் தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருப்பது எனக்கு கொஞ்சம் மனநிறைவை தந்தது. 
==========================================
நாடோ (NATO) படைகள் லிபியாவில் இறங்கி அந்த நாட்டின் அதிபரை கொன்றுவிட்டு தன் போர் தாகத்தை தனித்துகொண்டன. இதன் பின்புலத்தை இப்போது அனைத்து ஊடகங்களும்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.  அரபு நாடுகள் அல்லாத ஆப்ரிக்கா நாடுகளை ஒன்றிணைத்து டாலரை சாராத  புதிய கரன்சியை தங்கத்திலேயே வெளியிட முயைசித்து வந்தாராம் கடாபி. எண்ணெய் வேண்டும் நாடுகள் டாலரை கொண்டு வாங்காமல் இந்த புதிய தங்க கரன்சிகளை பயன்படுத்த திட்டம் தீட்டினாராம் கடாபி. கொடுங்கோலன் ஆட்சியை ஒழிக்கிறோம் பேர்வழி என அமெரிக்காவும் NATO நாடுகளும் சேர்ந்து மொத்த தங்கத்தையும் அள்ளி போயுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்தி டாலரை நிலை நிறுத்தி உள்ளது. 

==========================================
நான் ரசித்த புகைப்படம் 

============================================ 
1984 -இல் வெளிவந்த "உயிரே உனக்காக" படத்தில் இடம் பெற்ற "பன்னீரில் நனைந்த பூக்கள் "  பாடல் நெடு நாட்களுக்கு முன் கேட்ட ஞாபகம். இளையராஜா இசையில் S.ஜானகி குரலில் கேட்கவே அற்புதம்.


=====================================
அன்புடன் 
அசோக் குமார்

Saturday, October 22, 2011

C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம்


தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள் வந்து போனாலும், தனக்கென்று நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு நிலைத்து நிற்பது ஒரு சவாலான காரியமே. அதிலும் 1950 - 1960  காலகட்டங்களில் பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர படங்களும், ராஜ ராணி கதைகளிலேயே, தமிழ் சினிமா முடங்கி கிடந்தது. அதை தகர்த்தெறிந்து குடும்ப கதைகளையும், காதல் பிரிவு மற்றும் முக்கோண காதல் அனா பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவை மிளிர வைத்த இயக்குனர்தான் "ஸ்ரீதர்".தன்னுடைய முதல் படமான "கல்யாண  பரிசு" படத்திலேயே தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை காட்டினார்.

செங்கல்பட்டுக்கு  அருகில் "சித்தமூர்" என்ற கிராமத்தில் 1933 -இல் பிறந்தார். தனது பதிமூன்று வயதில் மேடை நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதை பள்ளி மேடைகளில் அரங்கேற்றினார். முதன் முதலில் அவருடைய கதையான "ரத்த பாசம்" படமாக எடுக்கப்பட்டபோது அந்த படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றார். இதுதான் அவரின் முதல் திரை உலக அவதாரம்.

இயக்குனராக இவர் எடுத்த முதல் படம் 1959 -ம் ஆண்டு வெளிவந்த "கல்யாண பரிசு ". ஜெமினி கணேசன், சரோஜா தேவி நடிப்பில் முக்கோண காதல் கதையை படமாக்கி இருந்தார் ஸ்ரீதர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காதலித்த பெண்ணின் சகோதரியை மணந்துகொள்ளும்  நிலைக்கு ஆளாகும் ஒருவன், மற்றும் அவன் காதலி இவர்களின் மனோ நிலையை அற்புதமாக படமாக்கி இருந்தார் ஸ்ரீதர்.


சரோஜா தேவியின் சகோதரியாக விஜயகுமாரி நடித்திருப்பார். இன்றும் காதல் தோல்விக்கு சிறந்த பாடலாக "காதலிலே தோல்வியுற்றான் காளை" என்ற பாடல் விளங்கிக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. "வாடிக்கை மறந்தது ஏனோ", "உன்னை கண்டு நான் ஆட" "துள்ளாத மனமும் துள்ளும்" என அனைத்து பாடல்களும்  AM. ராஜா இசையில்  பிரசித்தி பெற்ற பாடல்தாம்.   இந்த படத்தில் தங்கவேலுவின் நகைச்சுவை பெரும் வரவேற்பை பெற்றது.


 இந்த படத்தை பற்றி நினைக்கையில் சுவாரசியமான ஒரு நிகழ்வு எனக்கு எனக்கு ஞாபகம் வருகிறது இதை எங்கேயோ படித்தேன் என்பது மறந்து விட்டது. அந்த நாட்களில் கவிஞர்  " பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்" அவர்கள் புரட்சிகர கருத்துக்களை திரை பாடல்கள் வழியே புகுத்துவதில்  பெயர் பெற்றவர். இந்த படத்திற்கு யாரை பாடல்கள் எழுத வைக்கலாம் என்ற வந்தபோது கல்யாண சுந்தரம் அவர்களை எழுத வைப்பது என பேச்சு அடிபட்டபோது ஸ்ரீதர் மறுத்துவிட்டாராம். ஏன் என கேட்டபோது இது முழுக்க முழுக்க காதல் படம் இதில் எங்கே புரட்சி கருத்துக்கு இடம் என்றாராம். பின் ஒருவாறு ஏற்றுக்கொண்டு கல்யாணசுந்தரம் அவர்களிடத்திலேயே கேட்டுகொண்டாராம் ஸ்ரீதர். தயைகூர்ந்து உங்கள் பாணி வரிகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என. பட்டுகோட்டையாரும் ஒத்துக்கொண்டு இந்த படத்திற்கு மொத்த பாடல்களை எழுதி முடித்தாராம்.பாடல்களை கேட்ட ஸ்ரீதர் அவர்களுக்கு மிகவும் திருப்தி. கவிஞரை பார்த்து, புரட்சி கருத்துகள் வராமல் எழுதியமைக்கு நன்றி என்றாராம் ஸ்ரீதர். உடன் பட்டுகோட்டையார், நான் என் கம்யுனிச கருத்துகளையும் இதில் எழுதி இருக்கிறேன் "உன்னை கண்டு நான் வாட (சோக பாடல்) பாடலை பொய் இன்னொரு முறை கேளுங்கள் அந்த பாடல்  அன்றாடம் கூலி வேலை செய்யும் ஏழைக்கும்  பொருந்தி வரும் என்றாராம் அதுதான் பட்டுகோட்டை. நீங்களும்தான் கேளுங்களேன் !!

இன்னும் பல சுவாரசியமான பல தகவல்கள், ஸ்ரீதர் அவர்கலப்பற்ற்யும், அவர் படங்கள் பற்றியும் அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன் 
அசோக் குமார்


Friday, October 21, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

எழுவதுகளிலும் எண்பதுகளிலும் வந்த திரைப்பாடல்களை எப்போதும் சிறப்பானவை. அதனுள் சிலவற்றை  தொகுத்து இருக்கிறேன்.

படம்: போலீஸ்காரன் மகள்
பாடல்: இந்த மன்றத்தில் ஓடி ...
பாடியவர்கள்: PB . ஸ்ரீநிவாஸ் & S . ஜானகி 


படம்: நிச்சய தாம்பூலம்
பாடல்: பாவாடை தாவணியில்...
பாடியவர்கள்: TM .சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி 


படம்: பணத்தோட்டம் 
பாடல்: பேசுவது கிளியா  ...
பாடியவர்கள்: TM .சௌந்தரராஜன் & சுசீலா 
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி  படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்: காதலிக்க நேரமில்லை ...
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் 
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி 


படம்:கை  கொடுத்த தெய்வம்
பாடல்: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா ...
பாடியவர்கள்:TM .சௌந்தரராஜன்
 இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி


அன்புடன் 
அசோக் குமார்
Wednesday, October 12, 2011

படித்ததும் பிடித்ததும்-13-10-2011

 கட்சி ஆரம்பித்ததில்  இருந்து மாறி மாறி திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பதவி சுகத்தை அனுபவித்து வந்த "மருத்துவர் அய்யா" இப்போ திராவிட கட்சிகளை ஒழித்து விட்டுதான் தன் ஸ்டெதஸ்கோப்பை கையில் எடுப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம். தன் மகன் அன்புமணிக்கு யாரும் "ராஜ்ய சபாவில் இடம் வாங்கி தர மறுத்துவிட்டதால் தான் இப்படி ஒரு அறிக்கையை விட்டு கோபத்தை வெளிப்படுத்துகிறார் என அவங்க  கட்சிக்காரங்களுக்கே தெரியும். சிவசம்போ!!!!!


---------------------------------------------------------------

 "வாகை சூட வா" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு எனக்கு ரொம்ப தாமதமாகத்தான் கிடைத்தது. பெரும்பாலும் அனைவருக்கும் " சாரா சாரக்காத்து பாட்டே பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு "போறானே போறானே" என்னை ரொம்பவே கவர்ந்திட்டது. கிராமத்து காதலை அப்பட்டமாக படம் பிடித்திருகிறது. பாடல்  வரிகளும்  அசல் கிராமத்து வழக்கில் இருக்கும் வார்த்தைகள். பாடலை எழுதியது "வைரமுத்து" என்றே நினைத்தேன் பிறகுதான் பார்த்தேன் அது ஒரு வளர்ந்து வரும் ஒரு இளம் கவிஞர் "கார்த்திக் நேதா" என்று.தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பெரும் வைப்பு நிச்சயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. பாடலை நேகா பேசின், ரஞ்சித் இருவரும் இணைந்து பாடி இருந்தார்கள். ரொம்ப நாட்களுக்கு பிறகு நல்ல பாடலை கேட்ட உணர்வு.

 ---------------------------------------------------------------
நேற்று பேஸ் புக்கில், இந்த படத்தை பார்த்து கொஞ்சம் வியந்துதான் போனேன். டாஸ்மாக்கில் ஒரு பெண் வந்து சரக்கு வாங்கும் காட்சிதான் அது. 33  சதவீத இட ஒதுக்கீடு நாம தரமோ இல்லையோ அவங்களே எடுத்துக்குவாங்க போல.!!!
 -----------------------------------------------------------
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம்.ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அத்தீவுக்கு கரும்பு வெட்டுவதற்காக அங்கு சென்று குடியமர்த்தப்பட்டவர்கள் நம் தமிழர்கள். இன்னும் 30000  தமிழர்கள், இன்னும் தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மங்காத  தமிழ் என்று சங்கே முழங்கு!!!!

  ------------------------------------------------------------------
இந்த பாடல் கேட்டதும்  எல்லோரையும் மயக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இளையராஜாவின் இசைக்கு அடிமையான எல்லோரும் இந்த பாடலை விரும்புவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.  ஒரு முறை இசை அமைப்பாளர் "ரமேஷ் விநாயகம் " ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது எண்பதுகளில் இளையராஜா பரிட்சார்த்த முயற்சிகளில் இசையமைத்த பாடல்கள் இதுவரை சோடை போனதில்லை. ஆனால் பிற்ப்பாடு அதை நிறுத்தி விட்டார் அதானால் தான் அவர் தன பொலிவை கொஞ்ச காலத்திற்கு இழக்க வேண்டியதிற்று என்று, எதனை உண்மை அது. "கரும்பு வில்" படத்திற்காக இளையராஜா இசையமைத்த "மீன் கொடி தேரில்" என்ற பாடல் இன்றும் காலத்தால் அழியாமல் நிற்கிறது ஆண் குரலில் யேசுதாஸ் அவர்களும் பெண் குரலில் ஜென்சி அவர்களும் பாடி இருந்தார்கள்.

-----------------------------------------------------------
அன்புடன்
அசோக் குமார்

Friday, October 7, 2011

காலத்தால் அழியாத பாடல் - பகுதி 6

இந்த பாடல்களை எல்லாம் தொகுப்பதில் நிச்சயம் எனக்கு நிறையவே ஆனந்தம். கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் இவை.

படம்: முத்தான முத்தல்லவோ
பாடல்: எனக்கொரு காதலி
இந்த பாடல் கண்ணதாசன் எழுத MSV அவர்களும் SPB யும் இணைத்து பாடிய பாடல்.

படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பாடல்: கண்மணியே காதல் என்பது
ரஜினி நடிப்பில் இந்த படம்ஒரு மைல்கல், எந்த ஸ்டைல் மற்றும் பில்ட்அப் இல்லாமல் நடித்த படம் இது.படம்: ஆசை முகம்
பாடல்: எத்தனை பெரிய
MGR அவர்களின் தத்துவ பாடல் வரிசையில் என்றும் நீங்க இடம் பிடித்த பாடல் இது படம்: அவர்கள்
பாடல்: ஜூனியர் ....
தன் காதலை இந்த பொம்மை வாயிலாக அழகாக வெளிப்படுத்தி நடித்திருப்பார் கமல்.

படம்:பெரிய இடத்து பெண் 
பாடல்:அன்று வந்ததும் அதே ...

இந்த காலத்தால் அழியாத பாடல்கள் தொகுப்புகள் இன்னும் தொடரும் !!

அன்புடன்

அசோக் குமார்