Monday, April 25, 2011

ஆதலினால் காதல் செய்வீர்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 
         வரம்புகளை ஆராய்ந்துகொண்டு 
இருக்கிறேன் உன் மனதில்- நான் 
           இருக்கிறேனா என்ற தகவலை 
அறிந்து சொல்லுமா என??

 ---------------------------------------------------------------------------

 
எகிப்து பிரமீடுகளை 
உன் கன்னங்களில் 
தங்கி செல்கிறாய் 
நான் உன் முக 
பருக்களை சொன்னேன்!!
-------------------------------------------------------------------------------


என் வீட்டு ஜன்னல்களை 
கடக்கையில் நான் இருக்கிறேனா 
என தெரிந்து முத்தங்களை பறக்க 
விடு  இப்போதெல்லாம் என் 
வீட்டு ஜன்னல்களை 
என்னால் நம்பமுடிவதில்லை !!!

அன்புடன்
அசோக்  குமார்  

Sunday, April 24, 2011

சிறைபடுத்ததான் வேண்டுமோ



உன் ஒவ்வொரு பிறந்த நாளையும் 
மறந்துதான் போனேன் நான்
மறுநாள் கோபித்த 
பின் சமாதானமாவாய் !!!

எனக்கும் நினைவில் வைத்து 
கொள்ளவே ஆசை என்ன செய்ய 
மறதி உருவில் வந்து 
உன்னிடம் சிக்கவைக்கிறது!!!

இந்த முறை முன்னமே 
நானறிந்து கேட்டேன் 
என்னவேண்டும் உன் 
பிறந்த நாளுக்கென்று!!!!

விதவிதமான பட்டாம்பூச்சிகளை 
ஜாடியில் அடைத்து கேட்டாய் 
அவற்றின் சுதந்திரத்தை விடுத்து 
சிறைபடுத்த மனமில்லை என்றேன் !!!

என்னைமட்டும் உன் இரு 
கைகளுக்குள் சிறைப்படுத்தலாமா 
என்றாய் செய்வதறியாது 
விக்கித்து நின்றேன் நான்!!!

அன்புடன்
அசோக் குமார்

Thursday, April 21, 2011

சத்தமிடாமல் முத்தமிடு

சத்தமிடாமல் முத்தமிடு


முத்த வரலாறு

பெண்ணே! அங்காங்கே
உன் இதழ் தடங்களை
பதித்துவிட்டு போ!
பிற்காலத்தில் நான்
முத்த வரலாறு
எழுத பயன்படட்டும்!!!!!
================================================

மு. மு! மு. பி

என் வாழ்கையை இரண்டாக
பிரிக்க சொன்னால் இப்படித்தான்
பிரிப்பேன் உன்
முத்தத்திற்கு முன் (மு. மு)
மற்றும் உன் முத்தத்திற்கு
பின்பு (மு. பி) என்று!!!!!
==============================================

முத்த மூட்டை

எனக்கு வரும் கடிதங்கள்
மட்டும் கனமாக இருப்பதாக
முறையிடும் தபால்காரருக்கு
என்ன தெரியும் அதில்
இருப்பது நீ மூட்டையாக
கட்டி அனுப்பிய ஓராயிரம்
முத்தங்கள் இருக்கிறதென்று!!!!
======================================================
முத்த செடிகள்

நீ போகும் சாலை மருங்கிலும்
முத்த செடிகளை பதியன் போட்டு
நட்டு வைத்திருக்கிறேன்
சம்மதமாயிருந்தால் எச்சில் எனும்
தண்ணீர் விட்டு போயேன்!!!
=====================================================
கந்துவட்டிகாரி

நீ கொடுத்த ஒற்றை
முத்ததிற்காக என்னிடம்
நூறு முத்தம் கேட்கும்
கந்துவட்டிகாரி நீ!!!!!!
======================================================
முத்த வரம் 

காதலில்,  கோழைகளுக்கு
என்றும் கிடைப்பதில்லை
முத்தம் என்னும் வரம்!!!

Monday, April 18, 2011

படித்ததும் பிடித்ததும் -19.04.2011

தொடரும் மீனவர்கள் படுகொலை 
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவி சோனியா இனி மீனவர்கள் காக்கபடுவார்கள் என உறுதி அளித்து போனார். போன ஒரு மாதத்துக்குள் நான்கு மீனவர்கள்   படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இந்திய மீனவன் இறந்தான் என்று செய்தி வெளிடுவதில்லை, மாறாக தமிழ் மீனவன் இறந்தான் என்றே செய்தி வெளியிடுகிறன. தமிழ் நாடு எப்போது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று தெரியவில்லை.
=========================================================
தே‌‌ர்த‌ல் நேரத்தில்  நட‌ந்த சோதனை‌யி‌‌ல் கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்ட 49 கோடி பண‌த்தை யாரு‌ம் ‌திரு‌ப்‌பி வா‌ங்க வர‌வி‌ல்லை எ‌ன்று த‌மிழக தலைமை அ‌திகா‌ரி ‌‌‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். அதன் பிறகு இதுவரை யாரும் மீதம் உள்ள 49 கோடி ரூபா‌ய் பணத்தை திருப்பி வாங்க வரவில்லை எ‌ன்றா‌ர் ‌பிர‌‌‌வீ‌ண்குமா‌ர். இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம் எ‌ன்று‌ம் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம், ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்ப பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌ம் ‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது. சொந்த பணமாக இருந்தால் தானே திறப்பி கேட்க!!!
============================================================
  தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து, 19 பேர் நீக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை நீக்கக்கோரி, பல்வேறு இடங்களில், கட்சியினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அதன்படி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டார இளைஞர் காங்கிரசார், தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தனர்."கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 19 பேரையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். என வலியுறுத்தி கட்சியினர் கோசமிட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் தன கட்சி தலைவரின்  உருவ பொம்மையை எரித்தது வரலாற்றில் முதல் முறை என நினைக்கிறேன். வாழ்க காங்கிரஸ் கட்சி வளர்க அதன் கொள்கை!!
=========================================================
நான் ரசித்த காணோளி
வார்த்தைகளின் முக்கியத்துவம் என்னவென்று அறியாமல் பேசும்போது நாம் இழப்பவைகள் நமக்கே தெரிவதில்லை. சிறு வார்த்தை மாற்றமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தகூடியவை. இந்த காணோளியை பார்த்தாலே புரியுமே!!!!!

===========================================================
தேன் கிண்ணம்  
 இந்த பாட்டு வெள்ளி விழா படத்துக்காக  V.குமார் இசை அமைத்தது. இந்த படத்தில் ஒரு வித்தியாசம் என்னன்னா அதுவரை இனிமையான பாட்டுகளை P.சுசீலா பாடி வந்தார். இவருக்கு நேரெதிர் L.R. ஈஸ்வரி, கொஞ்சம் சத்தமான ராப் மாதிரி பாட்டுகளையே  பாடி வந்தார். V.குமார் இந்த படத்தில் இவர்களை அப்படியே மாற்றி பாட வைத்தார். L.R. ஈஸ்வரி, "காதோடுதான் நான்" என்ற இனிமையான பாட்டையும் , P.சுசீலா "நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்" என்ற சத்தமான பாட்டையும் பாடி ஒரு புதுமை படைத்தார்கள்.


அன்புடன் 
அசோக் குமார்





முரண்பாடுகளின் மூட்டையா நீ...!!!!

முரண்பாடுகளின் மூட்டையா நீ...!!!!

கோவிலுக்கு என்றேன்!! 
பீச்சுக்கு என்றாய்!!
பைக்கில் போகலாம் என்றால் 
பஸ்ஸில் போகலாம் என்றாய்
பிஸ்சா என்றேன் !!
இட்லி என்றாய்!!
ரஜினி படம் என்றேன்!! 
பாக்யராஜ் படம் என்றாய்!!
மொத்தத்தில் முரண்பாடுகளின் 
மூட்டையா நீ!!!!

அன்புடன் 
அசோக் குமார்

Saturday, April 16, 2011

நான் ரசித்த பத்து கிளைமாக்ஸ் காட்சிகள்

கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரு படத்தை நன்றாக ஓடவும் வைத்திருக்கின்றன அதே சமயம் கவிழவும் வைத்திருக்கின்றன. பெரும்பாலான தமிழ் படங்களில் கதாநாயகன் வில்லனை அடித்து போட்டுவிட்டு கதாநாயகியை கை பிடிப்பார், அப்படி இல்லாமல் சற்றே வித்தியாசமான,  நான் ரசித்த பத்து கிளைமாக்ஸ் காட்சிகளை தொகுத்து இருக்கிறேன்.

அன்பே சிவம்
மற்றவர் கஷ்டபடுவதை பார்த்து கலங்குபவர்  கூட கடவுளே என்று சொல்ல வந்த படம்!!! பறவைகள் எப்போதும் ஒரே இடத்தில தங்காது போன்ற வசனங்கள் சிறப்பு.



காதல் கோட்டை
கடைசி வரை இவர்கள் சேர்வார்களா மாட்டார்களா என சீட்டின் கடைசி நுனி வரை உட்கார செய்தது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அகத்தியனுக்கு மிக பெரிய வெற்றிப்படம். பார்க்காமலே காதல் என்ற புதிய பாதையை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்திய படம். இந்த படத்திற்கு பிறகுதான் பார்க்காத  காதல், பார்த்த காதல், இன்டர்நெட் காதல், செல்போன் காதல் எல்லாமே வந்தது.


ரமணா

இப்படித்தான் கிளைமாக்ஸ் இருக்கும் என்று இருக்கும் தமிழ் சினிமாவில் சற்றே வித்தியாசமான கிளைமாக்ஸ். கடைசி காட்சியில் விஜயகாந்த் பேசும் வசனங்கள் நறுக்!!


காதலுக்கு மரியாதை

காதலுக்கு  பெற்றோர் சம்மதம் ரொம்ப முக்கியம் என்று சொன்ன படம். இந்த கிளைமாக்ஸ் பார்த்தவர்கள் அழாமல் இருப்பது ரொம்ப கஷ்டம்.

சந்தோஷ் சுப்ரமணியம்

பசங்க வளர்ந்துவிட்டாலும் இன்னும் ஒன்றும் தெரியாத குழந்தைகளை போல் நடத்தும் பெற்றோர்கள் பார்க்கவேண்டிய காட்சி இது.


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தன் காதலன் கூட தன்னை இராசி இல்லாதவள் இரு நினைத்து விட்டானே என்று அழும் தபு மனதில் ஒட்டிகொண்டார்.
சித்திரம் பேசுதடி
இந்த படத்துக்கு இப்படி ஒரு கிளைமாக்ஸ் இருக்கும் என்று யாரும் யூகித்து இருக்கமுடியாது. கிளைமாக்ஸ் ஒன்றுக்காகவே மிஸ்கினுக்கு சபாஷ் போடலாம் (காணொளி கிடைக்கவில்லை)

அந்த ஏழு நாட்கள் 

என் காதலி உங்கள் மனைவி ஆகலாம் ஆனால் உங்கள் மனைவி என்  காதலி ஆகமுடியாது என்று ஒரு டயலாக் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். பாக்யராஜ் படங்களில் இப்படி ஒரு டச் இருக்கும் அது இந்த படத்தில் உச்சம்.

கன்னத்தில் முத்தமிட்டால்

சில கிளைமாக்ஸ் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கும், அப்படிப்பட்ட ஒரு கிளைமாக்ஸ் தான் இது. நந்திதா தாஸ் நடிப்பில் அப்படியே மெய் மறந்து போகலாம். தன் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் உணர்சிகளை கொட்டி இருப்பார். மணிரத்தினம் படங்களில் இந்த படத்தில்  பாத்திர தேர்வு சிறப்பு. 


மூன்றாம் பிறை

காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்படி கூட இருக்கும் என்று உதாரணம் இந்த கிளைமாக்ஸ். பாலுமகேந்திரா போன்ற  படைப்பாளி கிடைத்தது தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

இவற்றைவிட சிறந்த கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கலாம், எதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை தொகுத்து இருக்கிறேன், ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்!!!

அன்புடன்
அசோக் குமார்

Wednesday, April 13, 2011

முத்தம் போதாதே

முத்தம் போதாதே


நீயும் குருதான்  
என் கண்ணே! வித்தையை
கற்று கொடுப்பவர் எல்லாம்
குரு என்றால் நீயும் என்
குருதான் முத்தமிடும் கலையை
கற்று கொடுத்ததால்!!!
=====================================================

Thanks to goole images for the picture

காத்திருப்பு

பூங்கா மரத்தடியில்
இரண்டு மணி நேரமாய்
அமர்ந்திருக்கும் என்னை
முறைக்கும் வாட்ச்மேனுக்கு 
என்ன தெரியும் நீ தரும்  
ஒற்றை முத்ததிற்காக   
நான் தவமிருப்பது!!!!
========================================================

எப்படி சொல்வது!!

என் காய்ச்சலுக்கு காரணம்
கேட்கும் மருத்துவரிடம்
எப்படி சொல்வேன் நேற்று
இரவு நீ கொடுத்த
முத்தம் தான் என்று.
======================================================


காதலில் தோற்றவன்

காதலில் தோற்ற என்னிடம்
எஞ்சி இருப்பவை உன்
நினைவுகளும் நீ கொடுத்த 
முத்தங்களும்  மட்டுமே
======================================================

ஏன் இப்படி

நீ வாய் துடைத்து
கசக்கி எரியும் நாப்கின்கள்
கூட என்னை எள்ளி
நகையாடுகின்றனவே!!!
=======================================================

தோற்க தயார்

வேறந்த சண்டையிலும்
தோற்க தயாரில்லை நான்
 உன்னுடன் நடக்கும்
முத்த சண்டையை தவிர
========================================================
நான் ரசித்த காணொளி

இந்த காணோளியை சுவாரசியமாக ரசித்து பார்த்தேன். ஆண்களில் அறியாமையிலும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.


அன்புடன்
அசோக் குமார்

Monday, April 11, 2011

முத்தமிடலாமா

முத்தமிடலாமா

 
மின்சார தேவை

மின்சார தேவைக்காக
அயல் நாடுகளை கையேந்தும்
இந்திய அரசாங்கத்திற்கு
தெரியவில்லை உன் ஒற்றை
முத்தத்தில் 1000 மெகா வாட்
மின்சாரம் எடுக்கலாம் என்று.

====================================================

 
சண்டை போடலாமா?

நாம் சண்டையிட்டு
பிரிந்த பின்பு  சேரும் நாட்களில்
முத்தம் தந்து என்னை 
சமதானபடுத்துகிறாய் உன்
முத்ததிர்க்காகவாவது நாம்
அடிக்கடி சண்டையிட  வேண்டும்.
=====================================================


கூடிய பின்பு..
எனக்கு மட்டும் நீ
வித்தியாசமானவளாக தெரிகிறாய்
எல்லோரும் முத்தம் கொடுத்தபின்
கூடுவார்கள் ஆனால்- நீ
முத்தமிட்டு நம் கூடுதலை முடிகிறாய்.

=====================================================

 
விலைமகளின் முத்தம்

விலைமகளின் முத்தத்தை
சுவைப்பவர்களுக்கு
தெரிவதில்லை அவளின்
ரணமாகிபோன மனது.

=====================================================
முத்த வரலாறு

பெண்ணே! அங்காங்கே
உன் இதழ் தடங்களை
பதித்துவிட்டு போ!
பிற்காலத்தில் நான்
முத்த வரலாறு
எழுத பயன்படும்
=====================================================
நான் ரசித்த காணொளி
பேஸ் புக்கில் சில நாட்களுக்கு முன் இந்த காணோளியை காணும் வாய்ப்பு கிடைத்தது நீங்களும் பார்த்து சிரிக்கலாமே!!!



அன்புடன்
அசோக் குமார்