Friday, May 6, 2011

கனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்

            
    மஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை  "தகத்தகாய கதிரவனான" தலித் போர்வாள் ராஜா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் . 

                    
ஏழை மக்களுக்கு மலிவு விலையில் செல் போன் விற்ற அமைச்சர் ராஜா இன்று கலைஞர் குடும்பத்துக்காக திகார் ஜெயில் கம்பிகளை நிரந்தரமாக எண்ண தயாராகிறார்.  "ராசா தலித் என்பதாலேயே அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள்" என்று ராசாவின் கைதுக்கு முன்பாக துடித்தெழுந்தார் மஞ்சள் துண்டு. இன்று அவரால் நியமிக்கப்பட்ட "ஆரிய" வக்கீல் ராம் ஜெத்மாலனி இதற்கெல்லாம் முழு காரணம் ராஜா மட்டுமே கனிமொழி இதில் நிரபராதி என வாதாடியுள்ளார். 


          ராம் ஜெத்மாலனி பற்றி கொஞ்சம் பார்ப்போம். இது வரை இந்த மனிதர் ஒரு நல்ல கேசில் ஆஜராகி நல்லவர்களுக்காக வாதாடியதில்லை. இவர் ஆஜரான கேஸ் சில சாம்பிள். 

1. ஹர்சத் மேத்தா என்பவன் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 
2. கேதான் ப்ரேக் என்பவன் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 
3.நம் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு என்பவனுக்கு  ஆதரவாக 
4. இந்தியாவையே உலுக்கிய ஜெசிக்கா என்ற பெண்ணை கொலை செய்த மனுஷர்மா என்பவனுக்கு  ஆதரவாக
5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்திரா காந்தியை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக 

ஆகா ராம் ஜெத்மாலனி கனிமொழிக்காக வாதாட போகிறார் என்றவுடன் புரிந்துகொள்ளலாம் குற்றவாளி யார் என்பதை.


இதில் கொடுமை என்னன்னா பாவம் மஞ்சள் துண்டு குடும்பத்துக்காக ஆண்டிமுத்து ராஜாவும், கலைஞர் டிவி இயக்குனர் சரத் ரெட்டியும் பலிகடா ஆக்கபட்டதுதான் .    இதை எல்லாம் பார்க்கும்போது வடிவேல் காமெடிதான் ஞாபகம் வருது "சபாஷ் புலிகேசி ராஜா தந்திரங்களை கரைத்து குடித்து இருகிறாயடா"

அன்புடன் 
அசோக் குமார்


14 comments:

  1. சூப்பர் சூப்பர் கலக்கல் போஸ்ட் ....!!!

    ReplyDelete
  2. ஜெயலிதாவின் ஒரு ஊழல் வழக்கில் கூட அவருக்கு ஆதரவாக ராம் ஜெட் மலானி வாதாடியுள்ளார் அல்லவா?

    ReplyDelete
  3. அய்யா சாமீ உங்களுக்கு புண்ணியமாய் போகும் இதற்கு விளக்கம் சொல்லுங்க.

    டூபாகர் , அப்பாடகர் இவைகள் என்ன?

    ReplyDelete
  4. thozhare premanantha valakkaiyum sertthukollunkal

    ReplyDelete
  5. Oh Hot News !!! good comments

    ReplyDelete
  6. First You have to understand the legal procedure. Ramjedmilani argued that Kani is not a part of the decision maker. Raja is the decision maker. What ever he did, he is the responsible person not Kani. He didn't say raja did a big scandal.

    ReplyDelete
  7. Santhosh: Dear Friend I understood, the legal details. But literally Sarath Reddy and Raja were both going to be sufferers in this 2G scam. Please wait and see. And Thanks for the comments.

    ReplyDelete
  8. முதலில் ஒரு பொய்யைச் சொல்லி கனியை வெளியில கொண்டாருவோம், அப்புறம் அதற்க்கு நேர் மாறா இன்னொரு புருடாவை விட்டு ராசாவையும் வெளியில கொண்டாருவோம். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், காங்கிரசுக்கு தமிழக ஆட்சியில் பங்கு கொடுத்து விட்டால் தீர்ந்தது எல்லா பிரச்சினையும், ஸ்பெக்ட்ரமாவது மண்ணாவது, எல்லாமே டுபாக்கூராகி விடும்.

    ReplyDelete
  9. கக்கு - மாணிக்கம் said...

    அய்யா சாமீ உங்களுக்கு புண்ணியமாய் போகும் இதற்கு விளக்கம் சொல்லுங்க.

    டூபாகர் , அப்பாடகர் இவைகள் என்ன?//

    நன்றி கைக்கு மாணிக்கம் நான் கவிஞர்னு அந்தம்மா சொல்லிகலையா அதன் டுபாக்கூர்

    ReplyDelete
  10. //சௌந்தர் said...

    சூப்பர் சூப்பர் கலக்கல் போஸ்ட் ....!!!//


    நன்றி சௌந்தர் அவர்களே

    ReplyDelete
  11. //ஆகா ராம் ஜெத்மாலனி கனிமொழிக்காக வாதாட போகிறார் என்றவுடன் புரிந்துகொள்ளலாம் குற்றவாளி யார் என்பதை.//

    good point

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. Manjal thundu magesanukku thittuvudharkku aariyargal dhaan elakku Aanaalavarukku kaariyam aagavendumendraal aariyargalidam dhaan saranaagathi adaivaar

    ReplyDelete