Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, December 13, 2011

உண்மையான காதல் என்பது கடவுளைப்போல


உண்மையான காதல்
என்பது கடவுளைப்போல
எல்லோரும் அதைப்
பற்றியே பேசினாலும்
உணர்ந்தவர்கள்
மிகச்சிலரே !!!
**************************************************************************

நெடு நாட்களாக சிந்தித்தும்
புலப்படவில்லை , இரண்டு
கண்கள் , இரண்டு காதுகள்
என இரண்டு இரண்டாக
கொடுத்த கடவுள் இதயம்
மட்டும் ஒன்றே கொடுத்தான்
ஒருவேளை இன்னொன்றை
நாம் தேடிக்கொள்ளவோ
என்னமோ !!!!
******************************************************

நம் சண்டையிட்டுகொண்ட
நேரங்களில் எத்தனை
முறை உனக்காக நான்
காயப்பட்டு இருந்தாலும்
பரவாயில்லை, உன்னை
விட்டு பிரிவதற்கு
எனக்கு ஆயிரம் காரணங்கள்
இருந்தாலும் நான்
உனக்காக  வாழ
ஒரு காரணம் போதும்!!!
***************************************************************************

Tuesday, November 1, 2011

பேச வைத்தது யார் ??

இந்த கவிதை 10  வருடத்திற்கு முன் " ஆனந்த  விகடன்" என்று நினைக்கிறேன் புத்தகத்தில் வந்தது. என் பழைய டைரியை புரட்டியபோது கிடைத்தது. ரொம்பவும் சுவாரசியமான கவிதை, எளிமையாகவும் ரொமபவே எதார்த்தமாகவும் எழுதப்பட்டது. காதலில் ரொம்ப காயப்பட்ட ஒரு ஆத்மாதான் இதை எழுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எழுதியவர் பெயரை எழுதி வைக்க வில்லை (மன்னிக்கவும் மறந்துட்டேன்). என்னவோ, எழுதிய அந்த மனிதர் இப்போது  எந்த நிலையில் இருப்பார் என தெரிந்து கொள்வதில் கொஞ்சம் ஆவலாகவும் இருக்கிறேன். இதோ அந்த கவிதை. 

 பேச  வைத்தது யார் ??
பல அனுபவங்கள் 
எதை சொல்லி 
எதை விடுவது 
புத்தாண்டு வந்தால் 
புகைப்பது 
குடிப்பது 
கிடையாது என்று 
செய்த சத்தியத்தையா ??
உன் கோப தினங்களில் 
மறந்த சத்தியத்தையா ??
உன் ஆளுமையில் 
துவண்டு 
துங்கிய தினங்களையா??
போதுமடி 
உன் உறவு என்று 
திமிறி, திருப்பி 
ஏங்கிய நாட்களையா ??
மறக்கின்ற சக்தி 
அதிகமடி எனக்கு 
உன் கணவனுடன் 
நீ கைகோர்த்து 
காரில் ஏறி திரும்பி 
அற்ப புழுவாய் 
பார்த்த அந்த நாட்கள் ...
காரில் இறங்கி 
கர்சிப்புடன் 'ச்சே 
ஒரே தூசி என்கிறபோது 
நினைத்தேனடி 
நீ பேசவில்லை 
உன் கணவனிடம் 
உள்ள பணம் உன்னை 
பேச வைத்தது  என்று !!!

உண்மையில் நான் ரொம்பவே ரசித்த கவிதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு இதை பதிவிடுகிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Saturday, October 29, 2011

நீ போட்டாய் என் வாழ்வில் கோலம்

புள்ளி வைத்து கோலம் 
போட்டாய் -சொல்லி வைத்து 
நாமம் போட்டாய்
என் காதலுக்கு  !!
-------------------------------------------------------

நீ போட்ட 
கோலங்களுக்குள் சிக்கி 
கொண்டது புள்ளிகள் 
மட்டுமல்ல - என் 
இதயமும்தான் !!
-----------------------------------------------------

அரிசி மாவில் கோலம் 
போட்டு எறும்புகளுக்கும் 
உன் இரக்க குணத்தை 
காட்டுகிறாய் -என் 
காதலுக்கு எப்போது 
----------------------------------------------------

உன் கோலத்திற்கு நடுவில் 
இருக்கும் பூசணிப்பூ பிள்ளையாராகவாவது
வாய்ப்பு கொடு -உன் காலடியில் மிதிபடும்
பாக்கியமாவது கிடைக்கட்டும் !!
------------------------------------------------------

 அதிகாலையில் இருந்து 
உன் வீட்டுக்கு காவல் இருக்கிறேன் 
நீ போட்ட கோலத்தை 
யாரும் மிதித்துவிடக்கூடாதே என !!
----------------------------------------------------------

மார்கழி மாதமே முடிவு 
பெறுவதில்லை -உன் 
கோலத்தை பார்க்காமல் !!!
------------------------------------------------------------

நீ போடும் கோலமும் 
என் காதலும் 
ஒன்றுதான் -இரண்டும் 
சற்றேறக்குறைய  சிக்கலானது !!
------------------------------------------------------------

கிழக்கில் உதிக்கும் ஆதவனே 
கொஞ்ச  நேரம் காத்திருக்க 
வேண்டி இருக்கிறது -நீ 
போடும் கோலம் முடிவதற்காக !!
-------------------------------------------------------------

அன்புடன்
அசோக் குமார்