Monday, June 27, 2011

காலத்தால் அழியாத பாடல் - பகுதி 5

இந்த பதிவில் கொஞ்சம் இனிமையான பாடல்களை தொகுத்து  இருக்கிறேன்

படம்: அவளுக்கென்று ஒரு மனம் 
பாடல்: உன்னிடத்தில் என்னை ..
ஜானகியின் தென் தடவிய குரலில் இந்த பாடல் இனிமை.


படம்: சுமதி என் சுந்தரி 
பாடல்: பொட்டு வைத்த  முகமோ 
SPB அவர்கள் சிவாஜிக்காக பாடிய முதல் பாடல் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலுக்கு நடன அமைப்பாளர் யாரும் இல்லாமல் சிவாஜியே இயக்கிய பாடல். 



படம்: காத்திருந்த கண்கள் 
பாடல்:வளர்ந்த கலை மறந்துவிட்டால்....
நிஜ வாழ்வின் ஜோடியான ஜெமினியும் சாவித்திரியும் இணைத்து 1962 ம் வருடம் வெளி வந்த படம் .


படம்: உயர்ந்த மனிதன்
பாடல்: என் கேள்விக்கென்ன பதில் .......


 படம்: சூர்யகாந்தி 
பாடல்: நான் என்றால் அது .......
SPB பாட, கவிஞர் வாலி எழுதிய பாடல். இந்த பாடலில் இன்னொரு  விஷேசம் ஜெயலலிதா பாடியுள்ளார்.


 அன்புடன் 
அசோக் குமார்

Thursday, June 23, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா

எண்பதுகளில் திரை இசையின் சக்கரவர்த்தியாக இருந்தவரும், இன்றளவும் ஒவ்வொரு இளம் இயக்குனரும் ஒரு படமாவது அவர் இசை அமைத்து இயக்க வேண்டும் என்ற ஆவலை கொண்ட இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா. கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் இவர் இசை புகாத இடமே இல்லை. எல்லா வயதினருக்குமான இசையை கொடுப்பதில் வல்லவர்.

தேனிக்கு பக்கத்தில் பண்ணைபுரத்தில் பிறந்து உலகெங்கும் இவர் பெயர் விளங்கும்படி தன்னை செதுக்கி கொண்டவர் இசை ஞானி. முதல் படமான "அன்னக்கிளி" படத்திலேயே தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் இசை ஞானி. தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களுக்கும் இசை அமைத்து வெற்றி பெற்றவர்.


தமிழ் இசையில் சிம்போனி இசையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இசை ஞானி அவர்களையே சாரும். "ஹே ராம்" படத்திற்கு இவர் "ஹங்கேரி" வரை சென்று படத்திற்கான இசை கோர்வைகளை இசை அமைத்து வந்தார். இது வரை நான்கு முறை தேசிய விருது வாங்கியுள்ளார்.

தளபதி படத்தில் இடம்பெற்ற இவரின் பாடல் "ராக்கமா கைய" பாட்டு உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக இன்றும் BBC  வைத்துள்ளது. இவர் இசை அமைத்த "நாயகன்" படத்தை சிறந்த 100  படங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. பல ராகங்களை மாற்றி சிறப்பான திரை பாடலாக மாற்றி வெற்றி பெற்றுள்ளார்  இசை ஞானி .


இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவரின் இரண்டு வாரிசுகளில் ஒருவர் இதே துறையில் கோலோச்ச முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே. இவரின் இரண்டு மகன்களில் ஒருவரான "கார்த்திக் ராஜா" தன் அப்பாவின் தொழிலான  இசை துறையையே தனது  துறையாக தேர்ந்தெடுத்தார். இவரின் தம்பி "யுவன் ஷங்கர் ராஜா"  மின்னும் அளவுக்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் தான்.

ராகங்களை திரை பாடல் வடிவில் கொடுத்து வெற்றியடைவதில் அப்பாவைப்போலே சிறந்தவர். இதற்க்கு முக்கிய காரணம் கர்னாடக சங்கீதத்தை முழுமையாக கற்று தேர்ந்தவர் கார்த்திக் ராஜா. தன் பதிமூன்றாம் வயதில் கிபோர்ட் வாசிப்பதில் ஆரம்பித்து இளையராஜா அவர்களின் இசை குழுவில் கிபோர்ட் வாசிப்பவரானார். தெரியாத செய்தி ஒன்று என்னவென்றால் "பாண்டியன்" படத்தில் "பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா " பாடலை கம்போஸ் செய்ததே கார்த்திக் ராஜா தான்.


உல்லாசம் படத்திற்காக இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும்  பெரும் வரவேற்பை பெற்றது இவரது சிறப்பு. 


 

 
இதன் பிறகு இவர் இசை அமைத்த  படங்கள் "நாம் இருவர் நமக்கு இருவர்" "காதலா காதலா"  "டும் டும் டும்" . இதில் "டும் டும் டும்" படம் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட படம். 


ஹிந்தியில் இவர் இசை அமைத்த முதல் படமான "க்ரிருகன்" என்ற படத்திற்காக RD . பர்மன் விருதை பெற்றார் கார்த்திக் ராஜா. 

 

இசை குறிப்புகளை முறையாக பிழை இல்லாமல் எழுத தெரிந்த தமிழ் இசை அமைப்பாளர் . ஆனால் முறையான வாய்ப்புகள் இல்லையா??இல்லை அதிர்ஷ்டம் இல்லையா என தெரியவில்லை. 


நல்ல வாய்ப்புகள் வந்து இவரும் நல்ல இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என நானும் விரும்புகிறேன். 

அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, June 21, 2011

மேக் அப் இல்லாம பார்த்த இவங்க இப்படித்தான் இருப்பாங்க- படங்கள் இணைப்பு

இது ஒரு தொடர் பதிவு . போன பதிவுல பாலிவுட் நடிகைங்க படங்களை மட்டும் போட்டேன் இந்த பதிவுல ஹாலிவுட் மற்றும் கோலிவுட் ரெண்டையும் சேர்த்து போட்டிருக்கேன். முதல்ல ஹாலிவுட் அப்புறம் கோலிவுட்.

"டோம் ரைடர்" படத்தின் நாயகி, ப்ராத்  பிட்டின் தற்போதைய காதலி "அன்ஜெலினா ஜோலி"











ரஷியாவின் பிரபல  டென்னிஸ் நட்சித்திரம் "அன்னா கோர்னிகோவா"
                                                                                                                                               
பிரேசில் நாட்டின் பிரபல மாடல், "விக்டோரியா செக்ரெட் " என்ற ஷோவில் பங்கேற்கிறார் "அட்ரினா லிமா" 
அமெரிக்காவின் பிரபல பாப் குயில் "பிரிட்னி ஸ்பியர்ஸ்"


ஆஸ்கார் விருது வாங்கியவரும் "ஜேம்ஸ்  பான்ட்" படத்தின் நாயகி "ஹல்லே பெர்ரி "
கமரூன் டைஸ்

பாப் பாடகி "ஜெனிபர் லோபெஸ்"

ஜூலியா ராபர்ட்ஸ்

டைட்டானிக் படத்தின் கதாநாயகி "கதே வின்ஸ்லெட்"
ஆஸ்கார் வின்னரும் பைரேட்ஸ் ஆப் கரிப்பியன் படத்தின் நாயகி "பெநோப்லே க்ருஸ்"

பிரபல மாடலும்  நடிகையுமான பமீலா ஆண்டெர்சன்
 பிரபல மாடல் பாரிஸ் ஹில்டன்

சார்லி அன்ஜெல்ஸ் படத்தின் நாயகிகளில் ஒருவர் பர்ரிமொரே

 பிராட்பிட்டின் முன்னாள் மனைவி ஜெனிபர் அனிஸ்டன்

ஜெஸ்ஸிகா  அல்பா
பிரபல பாப் பாடகி லேடி காகா

பிரபல பாப் பாடகி மடோன்னா


ஸ்பைடர் மேன்  படத்தின் கதாநாயகி கிர்ஸ்டன் டன்ஸ்ட்


 இத்துடன் இந்த பதிவை முடித்துகொள்கிறேன் நன்றி!!!!
அன்புடன் 
அசோக் குமார் 

Monday, June 20, 2011

படித்ததும் பிடித்ததும் 21 /06 /11

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கலைஞர், "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத் ரெட்டியையும்  இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இவர்கள், கடந்த ஒரு மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும், பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது அனிவரும் அறிந்ததே. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களது கடைசி நம்பிக்கையே இந்த ஜாமின் மனு தான். இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., சார்பில் 17ம் தேதி தாக்கலான பதில் மனுவில், "2ஜி' ஊழல் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை கலைத்து விடுவர் என, தெரிவித்துள்ளது.இதை கேள்விப்பட்டு கருணாநிதி டெல்லி கிளம்பி போயுள்ளார். என்ன நடக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
==================================================

"பிரதமர் பதவியை எப்போது ஏற்பது என்பது குறித்து ராகுல் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் திக் விஜய் சிங்கும் இதே பாட்டை பாடினார். "பிறக்கும்போதே பிரதமராக பிறக்கறாங்க "...
===================================================

நான் ரசித்த பாடல்
இளையராஜாவின் இசையில் பாடும் நிலா பாலு அவர்களின் தேன் குரலில் "கொக்கரக்கோ" படத்திற்காக கீதம் சங்கீதம் பாடல். என் மனதிற்கினிய பாடல் எப்போதுமே !!!

==================================================
அன்புடன் 
அசோக் குமார்

Sunday, June 19, 2011

அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

"ஜேம்ஸ்  கமரூன்"  எடுத்து உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற "அவதார்" படம் போல ஒரு சம்பவம் இங்கே நம் இந்தியாவில்தான் நடக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. 


காட்டில் கிடைக்கும் ஒரு உலோகத்ததுக்காக ஒரு பழங்குடி மக்களை துன்புறுத்தி, அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு அடித்து விரட்டி, அந்த உலோகத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதை. 

இதே போல் "ஒரிஸ்ஸா" மாநிலத்தில் "நியம்கிரி" என்ற மலையில் அலுமினிய தாதுவான "பாக்ஸ்சைட்"   நிரந்த மலை ஒன்று இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஒரு தனி  மலையில் உள்ள பாறைகள் அனைத்திலும் இந்த தாதுக்கள் நிரந்து உள்ளதென இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இதை எடுக்க அலையை அலைந்துகொண்டுள்ளது. 

ஆனால் இந்த மலையில் பூர்வீகமாக வசிக்கும் "டான்க்ரியா  க்ஹோந்த்" இனத்தை செந்த பழங்குடி மக்கள் அந்த மலையை தங்கள் குல தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். காலம் காலமாக தங்கள் தெய்வமாக வழிபடும் இந்த மலை தாதுக்காக வெட்டி வீழ்த்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆனால்  அந்த இங்கிலாந்து கம்பனியோ அந்த மலையை கைப்பற்றுவதற்க்காக  இந்த மக்கள் வசிக்கும் குடிசைகள் மீது இயந்திரங்கள் கொண்டு இடித்து அவர்களை அந்த இடத்தை விட்டு போகுமாறு துன்புறுத்தப்படுகிறார்கள். இதை பற்றி ஒரு சமூக நல அமைப்பு ஒன்று ஒரு குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. அதை இந்த  பதிவுடன் இணைத்துள்ளேன். 


நமது அரசாங்கமோ இதை பற்றி வாய் திறப்பதாக தெரியவில்லை ,  ஊடங்கங்களும் இதை பெரிதுபடுத்த முன் வரவில்லை. இதை பற்றி "டைம்ஸ்" இணையதளம் ஒரு விரிவான  கட்டுரை எழுதி உள்ளது அந்த கட்டுரையை படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்.

அன்புடன் 
அசோக் குமார் 

உலக தந்தையர் தினம்- புலிவால் பிடித்தவன்

உலகமெங்கும் இன்று "தந்தையார் தினமாக" போற்றப்படுகிறது.
நமக்கு உயிர் கொடுத்து, இந்த பூவுலகில் மனிதனாக நடமாட விட்டிருக்கும் நம்ம அப்பாக்களுக்கு ஒரு தினம்.


இன்று ஒரு நாளாவது நல்ல பையனாக நடந்து எங்க அப்பாவை சந்தோச படுத்த முடியுதா பார்ப்போம். "தந்தையர் தினம் கொண்டடாப்படும் வரலாறு பற்றி ஒரு இணையத்தில் படித்தேன் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கு. நீங்களும் படித்து பாருங்கோ.

http://news.nationalgeographic.com/news/2011/06/110616-fathers-day-entertainment-gifts-quotes-history/

அன்புடன் 
அசோக் குமார்

Friday, June 17, 2011

பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் ?????

நம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவு போடலாமேன்னு இங்க போட்டு இருக்கேன்.

சூர்யா  & கார்த்தி 

சினேகா 



 பிரபுதேவா 


இசைப்புயல் AR ரெஹ்மான் 


விஷால்
 

சுருதி & அக்ஷரா 


திரிஷா 

வ. ஊ. சிதம்பரனார்

கிரிக்கெட் கேப்டன் டோனி 


ஐஸ்வர்யாராய் 


 விஜய் 


 இளையராஜா 


 தல அஜித் குமார் 



மலிங்கா 


அசின் 


பத்மஸ்ரீ கமல் ஹாசன்


மேடி மாதவன்


கருணைதேவதை அன்னை தெரசா 


 பிரேம்ஜி அமரன் & யுவன் ஷங்கர் ராஜா 

  
பிரேம்ஜி அமரன் & வெங்கட் பிரபு 


பாடகி ஸ்ரேயா கோஷல் 



சீயான் விக்ரம் 

இன்னும் நெறைய இருக்கு அதெல்லாம் போட்டா பதிவு ரொம்ப பெருசா இருக்கும் அதான் போட முடியல. முடிஞ்சா இன்னொரு பதிவா போடறேன்.

அன்புடன் 
அசோக் குமார்