Saturday, March 31, 2012

நான் பேச்சிலராக இருப்பதில் என்னை விட வருத்தபடுபவர்கள்

தினமும் ஒரு மணி நேரமாவது பேசும் உற்ற நண்பன் காதலி கிடைத்ததில் இருந்து தலைமறைவு#ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்
**********************************************
தூண்டிலைப்போட்டு மீனுக்காக காத்திருப்பவனிடம் தான் கேட்கவேண்டும் பொறுமையின் மகத்துவம்#தத்துவம்
**********************************************
தமிழின் மகத்துவம் தமிழ் நாட்டில் வாழும் வரை புரியவே இல்லை # என்னவாக இருக்கும்
***********************************************

மழை பொத்துகிட்டு ஊத்துது. வானத்துள் ஓட்டை ஏதும் விழுந்திருக்குமோ #டவுட்டு
*************************************************

குழந்தையாய் இருக்கும்போது தீபாவளிக்கு பணம் போதாதென்று உண்ணாவிரதம் இருப்பதில் ஆரம்பிக்கிறது நம் போராட்டம் #வாழ்க்கை
***************************************************
என்னை விட என்னை சுற்றி இருப்பவர்களுக்குதான் ரொம்பவே வருத்தம் நான் பேச்சிலராக இருப்பதில்#முடியல
**************************************************

 இந்தியாவில் இருந்தேன்-வேலை இல்லை என்றார்கள். அமெரிக்காவில் வேலை செய்கிறேன் இந்தியாவில் நீ இல்லைஎன்றாங்க#பொண்ணை பெத்த புண்ணியவான்கள்
****************************************************

Saturday, March 3, 2012

படித்ததும் பிடித்ததும்-03/03/2012

ஈரானின் மீது போர் தொடுப்பதில் நீயா நானா என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அமேரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மூக்குடைப்பட்டு, பொருளாதாரமே சரிவுற்று கிடக்கிறது. இந்த நிலையில் இன்னொரு போரை அமெரிக்கா அரசு திணித்தால் அமெரிக்க மக்களே தெருவில் இறங்கி கல் வீச தயாராகி விடுவார்கள். இந்த விஷயம் ஈரானுக்கும் நன்றாகவே தெரியும். இஸ்ரேல ஒரு போரை நடத்தும் அளவுக்கு வல்லமை கொண்ண்ட நாடா என்பது சந்தேகமே. ஈரானின் அணு விஞ்ஞானியை கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில்  இருக்கிறது ஈரான். நேற்று கூட போர் வேண்டாம் என ஒபாமா இஸ்ரேல அதிபர் நெதன்யாவுடன் பேசியதாக செய்திகள் வெளி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

  *************************************************

இணையத்தில் சமீப காலமாக விஜயை கலாய்ப்பதை  நிறுத்திவிட்டார்கள் போலும். அதற்கு பதிலாக விஜய் டிவியில் "ஒரு கோடி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூர்யாவை மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விகளை எல்லாம் இரண்டு வயது குழந்தை கூட சொல்லிவிடும். இதில் சூர்யாவின் குற்றம் ஏதும் இல்லை என்றாலும் பணம் தருகிறார்கள் என்பதற்காக இப்படி நிகழ்ச்சிகளில் மாட்டிக்கோடு அசிங்கப்படுவானேன்!!!



************************************************************
 இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் போல. கிரிக்கெட் என்பது ஒரு மதம் போல பாவிக்கப்டுவது நம்ம ஊரில் மட்டுமே. ஒரு பிளேயர் சரியாக விளையாடவிட்டாலும் அவரை தூக்கி அடிக்க மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தயங்குவதில்லை, சமீபத்திய உதாரணம் ரிக்கி பாண்டிங் . மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு உலககோப்பை வங்கி தந்த ஆளுக்கு இந்த நிலைமை. நாம் இன்னும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்யாமலே இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு கால அளவு இருக்கிறது, இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரெப்ரெஷ் பொத்தானை அழுத்தவேண்டிய நேரமிது, விழித்துகொள்ளுமா  இந்திய கிரிக்கெட்  வாரியம்???
******************************************************
அரவான் படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் பதிவுகளில் படித்து ரொம்பவே குழம்பி போயுள்ளேன், நல்ல இருக்கு என ஒரு சாரரும் மொக்கை என ஒரு சாரும் சொல்லி என்னை ரொம்பவே குழப்பி விட்டுள்ளனர். ஆனாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன், எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் வைத்து கொள்ளாமல்!!!
****************************************************
நம்ம டி ஆரோட ரீமிக்ஸ் பாட்டு!!!

 ********************************************
 டி ஆருக்கு அப்படி ஒரு முகம் இருந்தாலும் இந்த பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். உயிருள்ளவரை உஷா படத்திற்காக "வைகை கரை கற்றே நில்லு" அவரே இசையமைத்து எழுதிய பாடல். இதில் ஸ்பெஷல் என்னனா யேசுதாசின் குரல். காதல் சோகத்தை இதை விட எப்படி பாடி விட முடியும். 

****************************************************
 அன்புடன் 
அசோக் குமார் 

Friday, February 17, 2012

இயக்குனர் ஸ்ரீதரும் மக்கள் திலகம் எம் ஜி ஆரும்

சிவாஜியை வைத்து சிவந்த மண் மற்றும் ஊட்டி வரை உறவு என்று இரண்டு படங்களை தந்த ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகம் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படம்தான் "உரிமைக்குரல்". இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீதர் அவர்களின் "சித்ராலயா" நிறுவனம் கடன் சுமையில் சிக்கி இருந்ததாம் . இதை அடைக்க எம் ஜி ஆரை வைத்து ஒரு படம் எடுத்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்று முடிவெடுத்து எம் ஜி ஆரை அணுகினார். மக்கள் திலகம் எம் ஜி ஆரும் உடனே ஒப்புகொண்டு "உரிமைக்குரல்" படத்தில் நடித்து கொடுத்தார்.

அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம் ஜி ஆர், நடித்த படங்களில் எல்லா அம்சமும் இருக்க வேண்டும். இன்றைய மசாலா படங்கள் போல , அம்மா செண்டிமெண்ட், மரத்தை சுற்றி ரெண்டு காதல் பாடல் , ஒரு கதாநாயக துதி பாடல்,  நல்லதாக ரெண்டு சண்டைகாட்சி என எல்லாமும் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை ஸ்ரீதர்  நிறைய கதைக்கு  முக்கியத்துவம்  உள்ள படங்களாக எடுத்து வந்தார். இதையே ஒரு சவாலாக எடுத்துகொண்டு அவர் எழுதி இயக்கிய படம்தான் "உரிமைக்குரல்" . 

படத்தின் கதை என்று பாரத்தால், அண்ணன் தம்பிக்குள் நடக்கும் பாசப்போராட்டம் அதை தொடர்ந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நம்பியாரை பழிவாங்குவது, இடையில் கொஞ்சம் லதாவோடு மோதல் பிறகு காதல் பின் சுபம். தன வழக்கமான முக்கோண காதல் கதையில் இருந்து வெளியே வந்து ஏறக்குறைய ஒரு மசாலா படத்தை கொடுத்தார் ஸ்ரீதர். 

மக்கள் திலகம்  எம் ஜி ஆருக்கு இது போன்ற பத்திரங்களில் நடிப்பது கை வந்த கலைதானே. அதிலும் இந்த படத்தில் அவர் உடைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான வேட்டிக்கு பதிலாக சுருள் வைத்த வெட்டி மற்றும் ஒற்றை குதிரை பூட்டிய  ரேக்ளா வண்டி என அமர்க்களம்.

படத்திற்கு இசை MS. விஸ்வநாதன் அவர்கள் அமைத்திருந்தார். "ஆம்பளைங்களா" மற்றும் "விழியே கதை" பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், "மாட்டிகிட்டாரடி" , "பொண்ணா பொறந்த", "ஒரு தாய் வயிற்றில் பிறந்த" பாடல்களை கவிஞர் வாலியும்எழுதி இருந்தனர்.
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Tuesday, February 7, 2012

படித்ததும் பிடித்ததும்- 07/02/12

சட்ட சபையில் உட்கார்ந்து கொண்டு எதை பார்க்க கூடாதோ எங்கே பார்க்க கூடாதோ அதை பார்த்து கொண்டு இருந்ததால் இன்று நாடே அந்த மனிதர்கள் (மனிதர்கள் தானா???) மீது காரி உமிழாத குறையாக திட்ட வேண்டும் போல் இருக்கிறது.
********************************************
இந்திய கிரிக்கெட் அணியின் சொதப்பலான ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன சஹாரா நிறுவனம் தான் வழங்கி  வந்த  ஸ்பான்சரை பிடுங்கி ஹாக்கி அணியிடம் கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டிய விஷயம். காலம் கடந்தாவது நல்லது நடந்தால் சரிதான். இனியாவது இந்தியாவின் தேசிய விளையாட்டு புத்துயிர் பெறட்டும்.
*********************************************
டைம் (TIME) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நூறு சிறந்த உலக படங்களின் வரிசையில் சத்யஜித் ரே  இயக்கிய "The Apu Trilogy" என்ற படமும், தமிழில் மணிரத்னம் இயக்கி வெளிவந்த "நாயகன் படமும் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பு இங்கே .
*******************************************
யு டியூபில் இந்த காணொளியை எதேச்சையாக காணும்படி நேர்ந்தது. "தேவர் மகன்" படத்தில் இடம் பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடல் உருவான கதை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

******************************************************
நேற்றுதான் நண்பன் படம் பார்த்தேன், ஏற்கனவே "3 idiots" படத்தை மூன்று நான்கு முறை பார்த்துவிட்டேன், இதில் புதிதாக ஷங்கர் என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கவே இந்த படத்தை பார்த்தேன். படத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது சத்யன் மட்டுமே. படத்தில் சத்யராஜ் கேரக்டரும் சத்யன் கேரக்டரும்முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் இருவருமே தங்கள் பத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அமீர் கான் போலவே முகபாவங்களை கொடுத்திருக்கிறார் விஜய் அட்டை காபி தான் என்றாலும் நல்லாவே இருந்தது.
*************************************************
spider man  படத்தின் புதிய படம் ஒன்றின் ட்ரைலர் வெளி வந்திருக்கிறது. படம் இந்த சம்மரில் வெளியிடப்படும் போல தெரிகிறது.


**********************************************
நான்  ரசித்த  புகைப்படம்

 ****************************************************
நான் ரசித்த பாடல் 
"இசைஞானி இளையராஜாவின்" இசை அறிவைப்பற்றி நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை.குறிப்பாக"ஹே ராம்" படத்தில் "இசையில் தொடங்குதம்மா" பாடல் என்னை எப்பவும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போது கேட்டாலும் ஏதோ புதிதாக கேட்பது போல் இருப்பதே இதன் சிறப்பு என்று நினைக்கிறேன். இந்த பாடலின் குரல் தேர்வும் அப்படியே, "அஜய் சக்ரபோர்த்தி" என்ற பெங்காலி பாடகர் தமிழை இவ்வளவு சிறப்பாக உச்சரித்திருக்கிறார்.

***********************************************
அன்புடன் 
அசோக் குமார்

Monday, January 23, 2012

காலத்தால் அழியாத பாடல்கள்- நாகேஷ் 1

இந்த பதிவில் நாகேஷ் நடித்து இடம் பெற்ற பாடல்களை தொகுத்திருக்கிறேன்.

படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்: மலரென்ற முகம்
பாடியது: LR . ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி

=================================================
படம்: மேஜர் சந்திரகாந்த் 
பாடல்: ஒரு நாள் யாரோ...
பாடியது: P. சுசீலா
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி
=================================================
படம்: எதிர் நீச்சல் 
பாடல்: சேதி கேட்டோ ...
பாடியது: LR . ஈஸ்வரி
இசை: V. குமார்

###################################################
படம்: எதிர் நீச்சல் 
பாடல்: என்னம்மா பொன்னம்மா  ...
பாடியது: T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா
இசை: V. குமார் 

 
#######################################################
படம்:பூவா தலையா 
பாடல்: பூவா தலையா    ...
பாடியது: சீர்காழி கோவிந்தராஜன் & T.M. சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன்

 ######################################################
அன்புடன் 
அசோக்  குமார்