Sunday, June 5, 2011

அழுகாச்சி காவியம்-கொலைஞர்

சமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் செய்யாத ஒருவர்  சிறையில் அடைக்கப்பட்டால் உங்கள் மனம் எவ்வளவு வேதனை படுமோ அவ்வளவு என் மனம் வேதனை படுகிறது என, ஊர் ஊராக சென்று கூப்பாடு போட்டு கொண்டிருக்கிறார். "ஆளே இல்லாத கடைல யாருக்கு அய்யா டீ ஆத்துரிங்க". 

அறிஞர் அண்ணா தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் இழந்து, பல்லாயிர கணக்கான தொண்டர்களின் தியாகத்தாலும் காட்டி காத்த இந்த திமுக இயக்கம் இன்று, தன் மகளுக்காக கேட்பாரற்று கிடக்கிறது. ஊழல்களின் மொத்த உருவமாய் யாவர் குடும்பம் ஊடகங்களால் தூற்றபடுகிறது. என்னதான் இவர் கூப்பாடு போட்டாலும், யாரும் செவி மடுத்து கேட்கபோவதில்லை. 

ஈழ தமிழர்கள் கொத்து கொத்தாய் மடிந்து கொண்டிருக்க, உலக தமிழின தலைவன் என தன் அடிபொடிகளால் பீற்றிகொண்டிரிக்கும் இவரோ எந்த அமைச்சர் பதவியை வாங்கினால் கொள்ளை அடிக்கலாம் என்று பேரம் பேசி கொண்டு இருந்தார். 
தமிழ் மக்களா கனிமொழியை நீரா ராடியாவோடு பேசசொல்லி அடித்தார்கள். தமிழ் மக்களா கனிமொழியை 214  கோடி பணம் வாங்க சொல்லி வற்புறுத்தினார்கள். தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவா நீங்கள் தொலைதொடர்பு துறையை சண்டையிட்டு வாங்கினீர். எங்க கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க "நெருப்பை தின்னவன் கரி கரியாதான்.......... போவானாம் (கோடிட்ட இடத்தை நிரப்பிகோங்க).

பாரசக்தி படத்தில் தன் தங்கை கல்யாணிக்காக வசனம் எழுதிய கொலைஞர் இன்று தன் மகள் கனிமொழிக்காக  அதே வசனத்தை உல்டா பண்ணி அழுகாச்சி காவியமாக எழுதினால் எப்படி இருக்கும் என கற்பனை பண்ணி பார்த்தேன் எனக்கே சிப்பு...வந்துடிச்சி .. சிப்பு ...

நீதி மன்றம்  விசித்திரமான பல ஊழல் வழக்குகளை சந்தித்து இருக்கிறது!!!!
புதுமையான ஊழல் செய்த பல மனிதர்களை கண்டிருக்கிறது.!!!

அனால் இந்த ஊழல் வழக்கு ஒன்றும் விசித்திரமானதும் அல்ல ஊழலளுக்கு நான் ஒன்றும் புதுமையனவனும் அல்ல...

ஈழதமிழர்கள் செத்துமடிவதை கண்டுகொள்ளவில்லை நான்..
ராஜாவை மந்திரியாக்கி அலைகற்றை விற்பதில்  ஊழல் செய்தேன் 
மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்கின்னேன் 
குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறேன் இப்படி எல்லாம்...

நீங்கள் நினைப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன்  என்று  இல்லை நிச்சயமாக இல்லை.

ஈழதமிழர்கள் செத்துமடிவதை கண்டுகொள்ளவில்லை நான் ஈழத்தமிழர்களே கூடாது என்பதற்காகவா இல்லை அன்னை சோனியா மனம் புண் படுமே என்று. 

மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்கின்னேன், மக்கள் வேலை செய்ய கூடாது என்பதற்காகவா இல்லை அடுத்த தேர்தலிலும் இதை சொல்லி ஓட்டு கேட்கவேண்டும் என்பதற்காக .

உனக்கேன் இவ்வளவு அக்கறை ..பாதிக்கப்பட்டேன் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் ஜெயலலிதா அம்மையாரால் ...

சுயநலம் என்பீர்கள் ஆம் இன்னொருமுறை என்னால் ஐயோ என்னை கொல்றாங்கோ என கத்தி கூப்பாடு போடமுடியாது...

என்னை குற்றவாளி என்கிறார்களே இந்த குற்றவாளியின் வாழ்க்கை   பாதையை  கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நான் திமுக தலைவராக செய்த தில்லுமுல்லுகள் தெரியும். ரயில் வராது என்று தெரிந்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியல் செய்தேன்.  நெடுஞ்செழியனை பின்னுக்கு திமுக தலைவரானேன்...

தீர்ப்பு எழுதுமுன் கேளுங்கள் என் கதையை தமிழ்நாட்டிலே திருவாருரிலே பிறந்தவன் நான்!!!
பிறந்தது ஓரிடம் திருட்டு ரயில் ஏறி  வந்தது ஒரு ஓரிடம் !!
சென்னை என் உயிரை வளர்த்தது என்னை திமுக தலைவராக்கியது ...

மோசடி வழக்கில் சிக்கி நிற்கிறாளே இந்த ஜாலக்காரி "நீரா ராடியா" இவள் மோசடி வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன் ...
என் மகள் கனிமொழியை கண்டேன் திகார் சிறையிலே...

மகளின் பெயரோ கனிமொழி, மங்களமான பெயர்,   ஆனால் பேசவில்லை என்னிடம் அவள் ஒருமொழி... ஊழல் செய்த குடும்பம் சிக்கவைக்கப்பட்டது.
கண்ணிலே நீர் கனிமொழி அழுதாள்!!!

அவங்க அம்மா ராஜாத்தி அம்மளுக்காக நான் அழுதேன் .... செழித்து ஊழல் செய்த குடும்பம்  சீரழிந்துவிட்டது இன்று ...

கோர்ட்டிலே பெயில், திகாரிலே ஜெயில் கனிமொழி அலைந்தால் அவளுக்காக ராம் ஜெத்மளானியிடம் நான் அலைந்தேன் ..
இந்தியாவில் ஊழல் செய்த ஒரு தமிழனுக்கு  வாழ வழியில்லை......
ஊழல் வழக்கில் சிக்கிய என மகளுக்கு பிணை வழங்கவில்லை...
என மகள் நினைத்திருந்தால் அடித்த பணத்தில் மலேசியாவிலோ அல்லது சுவிட்சர்லாந்தின் ஒரு மூலையிலோ ஓடி மறைந்து இருக்கலாம்.. அப்படி செய்தாளா என மகள் கனிமொழி ......!!!!
அதைத்தான் இந்த நாடும் நாடு மக்களும் விரும்புகிறார்களா!!!
சுப்ரீம் கோர்ட் என மகளை விரட்டியது.. ஊழல் வழக்குகள் என மகளை விரட்டியது ....நீதிமன்றம் என மகளுக்கு பிணை வழங்காமல் விரட்டியது ...

ஓடினாள்  ...ஓடினாள் ... டெல்லி நகரில்  சோனியா காந்தி வீடு, மன்மோகன்  வீடு வரை ஓடினாள் அவர்கள் வெளிநாடு சுற்றுபயணம் போய்விட்டதால் திரும்பி திகார் சிறைக்கே வந்துவிட்டாள்...

அந்த ஓட்டத்தை தடுத்து இருக்கவேண்டும் என மகள் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. இன்று இந்த சட்டத்தை நீட்டுவோர் ...செய்தார்களா ஊழல் செய்ய விட்டார்களா கனிமொழியை ....
கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வாங்கியது ஒரு குற்றம், ராஜாவோடு சேர்த்து கூட்டு கொள்ளை அடித்தது ஒரு குற்றம் ... 
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார் யார் .....

திருவாருரிலிருந்து திருட்டு ரயில் ஏறி வரும்போது என்னை பிடிக்காத செக்கரின் குற்றமா???
இல்லை..... என்னை ஒட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைத்த மக்களின் குற்றமா??? 
ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது யார் குற்றம் ... ஸ்பெக்ட்ரம் துறையை எங்களுக்கு ஒதுக்கிய மன்மோகன் குற்றமா இல்லை இந்த துறைதான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய என் குற்றமா!!!
இந்த குற்றங்கள் களையபோவது  வரை கருணாநிதிகளும் கனிமொழிகளும் குறையபோவதில்லை....

மக்கள் என்றும் உறங்கிக்கொண்டே இருப்பதில்லை கலைஞர் அவர்களே உங்கள் குடும்பத்திற்காக இவ்வளவு சிந்திக்கும், வருத்தப்படும் நீங்கள் ஓட்டு போட்ட மக்களுக்காக கொஞ்சம் சிந்தித்து இருந்தால்.. நீங்கள் ஒய்வு எடுக்கவேண்டிய அவசியம் இருந்து இருக்காது..!!!


உங்களுக்காக வருத்ததுடன்

அசோக் குமார்
2 comments:

  1. சமீப காலத்தில் மிக அதிக அளவு கூகுள் பஸ்ஸில் ரீஷேர் செய்த பதிவு இது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. // JOTHIG ஜோதிஜி said...

    சமீப காலத்தில் மிக அதிக அளவு கூகுள் பஸ்ஸில் ரீஷேர் செய்த பதிவு இது. வாழ்த்துகள். //

    ரொம்ப மகிழ்ச்சியான செய்தி. உங்கள் பகிர்வுக்கு நன்றி ..!!

    ReplyDelete