Friday, September 30, 2011

உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்ல..


உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று #அப்பாவிடம் சிம்பதி தேடுவோர் சங்கம்
----------------------------------------------------------------
பால்க்காரரும், பேப்பர்க்காரரும் எழுப்பாவிட்டால், பல பேர் தன் பாஸிடம் கடி வாங்க வேண்டி இருக்கும்#குடும்ப நிர்வாகத்துறை
-----------------------------------------------------------------
சோனியாவை சந்தித்தார் ப.சிதம்பரம்-பதவி விலக விருப்பம் தெரிவித்தார் # தம்பி டீ இன்னும் வரல
------------------------------------------------------------------

சீக்கிரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்! - அஜித் #ஏலே என்னதுப்பா இதெல்லாம்
---------------------------------------------------------------
திமுகவில் இருந்து நடிகர் தியாகு விலகல்! # வடிவேலுவை ஒரு வாட்டி நெனச்சு பார்த்திங்க போல
--------------------------------------------------------------

காஜலைத் தேடி வரும் "குஜால்" பட வாய்ப்புகள்# டாப்லெஸ் போஸ் கொடுத்து ஹோப்லஸ்ஆயிடிங்களே அம்மணி
-------------------------------------------------------------
அதிமுகவுக்காக அஷ்டமி, நவமியில் உள்ளாட்சித் தேர்தல்- ராமதாஸ் #க க போ
-------------------------------------------------------------
உக்ரைன்- கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் வென்ற 77 வயது முதியவர் மரணம்-# கொழுக்கட்டை இந்த ஆளுக்கு பாட கட்ட வச்சுட்டுதே!!!!
-------------------------------------------------------------

தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி # எப்படிங்க உங்களால மட்டும் முடியுது!!
--------------------------------------------------------------
அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, September 27, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-ஆனந்த் பாபு

அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அன்றைய அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர்கள் பலர், அதில் தங்கவேலு, பாலையா, நாகேஷ் போன்றோர் இதில் பிரபலமானவர்கள். அதிலும் நாகேஷ் இவர்களில் இருந்து தன் வித்யாசமான உடலியல் மொழியால் நடிப்பதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். நகைச்சுவை மட்டுமின்றி நடனம் ஆடுவதில் நாகேஷ் பெரும் திறமைசாலி என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை .

நாடகங்களில் சேர்ந்து பணியாற்றிய நட்புக்காக நாகேஷ் அவர்களை வைத்து 1964 -இல்   "சர்வர் சுந்தரம்" என்ற மாபெரும் காவியத்தை படைத்தார் கே. பாலச்சந்தர். பின்பு அவரை கதாநாயகனாக்கி எதிர் நீச்சல், நீர் குமிழி , பாமா விஜயம் போன்ற காலத்தால் அழியாத பாடங்களை தந்து நாகேஷின் திறமையை வெளி கொணர்ந்த பெருமை பாலச்சந்தர் அவர்களையே சாரும்.


நாகேஷின் இயற் பெயர் "கிருஷ்ணா ராவ் குண்டு ராவ்", பிறந்தது 1933 -ம் வருடம் செப்டம்பர் மாதம் 27  ம் தேதி, ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். முதலில் ரயில்வே துறையில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். பிறகு நாடகத்தின்பால் பெரும் காதல் கொண்டு கலைத்துறைக்கு வந்தார்.  பிறகு நாடகத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த வேலையை உதறினார்.


எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நேர்த்தியாக செய்யும் பாங்கு நாகேஷ் அவர்களுக்கு உண்டு. திருவிளையாடல் "தருமி" கதாபாத்திரமும் தில்லானா மோகனம்பாள் படத்தில் "வைத்தி" கதாப்பாத்திரமும் இவரை தவிர வேறு ஒரு மற்று நடிகரை நினைத்து பார்க்க முடியவில்லை.

மகளிர் மட்டும் படத்தில் இவர் பிணமாக நடித்து, பிணமாக கூட நடிக்க முடியும் என மகளிர் மட்டும் படத்தில் நடித்து அசத்தி இருப்பார் நாகேஷ். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு நகைச்சுவை இவர் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் என்று உணர்த்தும். ஒருவர் சொல்லுவார் நாகேஷிடம், என்னோட நாய் லூசி செத்துபோச்சி என்பார், உடனே நாகேஷ் "நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா என்பார்" இப்படி ஒவ்வொன்றும் கேட்டு ரசிக்க கூடியவை.

இவரைப்பற்றி எழுதிக்கொண்டு போனால் இன்னும் இருபது பதிவு எழுதினாலும் போதாது. இவ்வளவு பெயரும் புகழும் இருந்தாலும் இவருடைய வாரிசாக களம் கண்ட இவர் மகன் ஆனந்தபாபு , சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவரால் சோபிக்க முடியவில்லை.

"பாடும் வானம்பாடி" படம் மூலம் திரைக்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதற்க்கு பிறகு "புரியாத புதிர்" மற்றும் "புது வசந்தம்" படத்தில் நடித்திருந்தாலும் ஒரு நல்ல நடிகராக இவரை திரை உலகிற்கு காட்டியது "சிகரம்" படம் மூலமே. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த "சேரன் பாண்டியன்" படம் இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது.

அடிப்படையில்  நன்றாக நடனம் ஆடக்கூடியவர் ஆனந்த் பாபு. இதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் ஒரு வாய்ப்புகள் அமையவில்லை. பாலச்சந்தரின் "வானமே எல்லை படம் கூட இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பின் மது மீது கொண்ட காதலால் கலைத்துறையை மறந்தார்.

இயக்குனர் KS ரவிகுமார் இவர் மேல் கொண்ட நட்பால் இவருக்கு மீண்டும் "ஆதவன்"படம் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதன் பின் மறுபடியும் "மதுரை சம்பவம்" படத்திலும் தலை காட்டினார். தமிழ் சினிமாவின் மாபெரும் மறக்கமுடியாத திரை நட்சத்திரமாக மின்ன வேண்டியவர். இன்று மங்கி, பழுது பட்ட மனிதராக வாழ்கிறார்.

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்  பகுதியை தொடர் பதிவாக எழுதி வருகிறேன் இதன் முந்தைய பதிவுகளை படிக்க !!!

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- சிபி ராஜ்
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா

அன்புடன் 
அசோக் குமார்

Saturday, September 24, 2011

தேன் குரலுக்கு சொந்தக்காரி-பார்வதி

ஊருக்கு போய் இருக்கும்போது எதேச்சையாக விஜய் டிவியை தட்டிக்கொண்டு இருந்தபோது ஒரு சின்ன பொண்ணு பாடிய பாட்டு என்னை ஏதோ தொந்தரவு செய்தது போல் இருந்தது. அப்போது ஊரில் சொந்தங்களோடு இருந்ததால் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

போன வாரம் திடீரென அந்த பாட்டு மட்டும் எனக்கு ஞாபகம் வந்தது, சரி நமக்குன்னு இருக்கிற ஒரு அட்சயபாத்திரம் யூ டியுபில் சில காணொளிகளை தேடியபோது அந்த பாட்டு கிடைத்தது. நிஜமாகவே கொஞ்ச நேரம் என் மனதை விட்டு அதை ரசித்துக்கொண்டு இருந்தேன். ஆத்மார்த்தமாக பாடுவது எல்லோருக்கும் அமைவதில்லை என்று பாடகர் ஸ்ரீனி சொன்னார் இந்த பாடல் முடிந்தவுடன். அது எவ்வளவு உண்மை என்று இந்த பாடலை கேட்டால் புரியும். ராவணன் படத்தில் எல்லோரும் "உசிரே போகுது " பாட்டை கொண்டாடிக்கோடு இந்த நல்ல பாடலை மறந்துதான் போனோம். 


"கள்வரே கள்வரே" பாடலின் உண்மையான காணொளி இது . உண்மையில் இந்த பெண் பாடிய பிறகு நிறைய பேரின் விருப்ப பாடலாக இது இருக்கும் என நம்புகிறேன்.

இதனுடைய ஹிந்தி பதிப்பு பாடல்இந்த தேன் குரலுக்கு சொந்தக்காரி பார்வதி, நிஜமாகவே அவர்களின் அம்மாவிடம் கேட்கவேண்டும் "பார்வதி குழந்தையா இருக்கும்போது பால் கொடுத்து வளர்த்திங்களா இல்லை சுத்த தேன் கொடுத்து வளர்த்திங்களா அப்படின்னு. பாடும்போது தங்களை கஷ்டபடுத்திக்கிட்டு பாடுறவங்க ஒரு ரகம் தான் பாடி மத்தவங்களை கஷ்டபடுத்தவரங்க  ரகம். ஆனா இந்த பொண்ணு தானும் கஷ்டபடாம பாடி நம்மளையும், சந்தோசபடுத்துது . இவ்வளவுக்கும் முறையாக சங்கீதம் கூட படித்ததில்லை, எல்லாம் கேள்வி ஞானம்தான். எல்லோருக்கும் ஒரு திறமை பிறக்கும்போதே இருக்கும் அதை கண்டறிவது கடினம்னு கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் இவர்கள் எல்லாம் பெரும் பாக்ய சாலிகள் போலும் இவர்களின் திறமை  என்னவென்று கண்டறிந்துகொண்டதுதான்.அந்த "கள்வரே கள்வரே" பாடலை எனக்கு "ஸ்ரேயா கோஷால்" பாடியதை விட இந்த பர்வத்தின் குரலில் கேட்கவே ரொம்பவும் பிடிக்கிறது. இந்த மலையாளிகளின் குரலை எல்லாம் கேட்கும்போது கொஞ்சம் பொறாமை கூட வருகிறது. என்ன செய்வது அவர்கள் திறமைக்கு நான் ரொம்பவே மதிப்பளிக்கின்றேன்.   நல்ல எதிர்க்காலம் இருக்கிறது இந்த தேன் குரல் தேவதைக்கு.

அன்புடன் 

அசோக் குமார்

Friday, September 23, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா !! பால முரளி கிருஷ்ணா அவர்களின் தேன் குரலில் இந்த பாடலை  கேட்பதற்கு காதுகள் ஏதோ தவம் செய்திருக்க வேண்டும் போல.

படம்: அவளுக்கென்று ஒரு மனம் 
பாடல்: உன்னிடத்தில் என்னை
பாடியது: LR . ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன்

**************************************************************
படம்:இரு வல்லவர்கள் 
பாடல்: நான் மலரோடு தனியாக
பாடியது: TM . சௌந்தரராஜன் & P . சுசீலா
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி

 ********************************************************
படம்: வல்லவனுக்கு வல்லவன் 
பாடல்: ஓர் ஆயிரம் பார்வையிலே
பாடியது: TM . சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி


*****************************************************************
படம் : நெஞ்சில் ஒரு ஆலயம் 
பாடல் : சொன்னது நீதானா சொல்
பாடியது: P .சுசீலா 
 இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி
 **********************************************************
படம் : பாக்யலக்ஷ்மி
பாடல் :மாலை பொழுதின்
பாடியது: P . சுசீலா
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி

*************************************************************
 படம்: திருவிளையாடல்
பாடல் : ஒரு நாள் போதுமா
பாடியது: பால முரளி கிருஷ்ணா
இசை: KV .மகாதேவன் 


************************************************************

அன்புடன்
அசோக் குமார்

Monday, September 19, 2011

படித்ததும் பிடித்ததும் -20/09/2011

உண்ணாவிரத சீசன் -3

முதல் இரண்டு உண்ணாவிரத சீசன் முடிந்த நிலையில் தனது மூன்றாவது சீசனை ஆரம்பித்து நேற்றோடு முடித்தும் விட்டார் குஜராத் முதல்வர் மோடி. இப்போது எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம் என்ற பேச்சுதான் அடிபடுகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட உண்ணாவிரதம்தான் இருக்கவேண்டும் போல. ஊழல் ஒழிகிறதோ இல்லையோ நல்ல பப்ளிசிட்டி கிடைக்கிறது. அந்த பாக்கியம் கூட கிடைக்கபெறவில்லை இங்கே கூடங்குளத்தில் 9  நாட்களாக அணு உலை அமைவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் நம் மக்களுக்கு.
==========================================
எங்கேயும் எப்போதும் 

எங்கேயும் எப்போதும் படம், நிறைய பேருக்கு பார்க்கும் ஆவலை துண்டிவிட்டு இருக்கிறது. நானும் இன்னும் படத்தை பார்க்கவில்லை. இங்கே பக்கத்தில் எங்கேயாவது இந்த படம் திரை இடப்பட்டு இருக்கிறதா என தேடிக்கொண்டு இருக்கிறேன். நம்ம ஊரில் இருந்து இருந்தால், இந்நேரம் பார்த்து இருக்காலாம். எல்லா பதிவுகளிலும் இந்த படத்தை பற்றி நல்ல மாதிரியாகவே விமர்சனம் எழுதி இருப்பதை வைத்துதான் எனக்கும் பார்க்கும் ஆவல்.


ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ இந்திய கிரிக்கெட் அணி 


இந்த இங்கிலாந்து தொடரில் நடந்த எல்லா வகையான போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து அவமானத்தால் தலை குனிந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு அணியினரின் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் நிறைய போட்டிகளை பங்கேர்ப்பதால் வரும் வினை இது. இனியாவது இது போன்று நெருக்கமான அட்டவனையை போட்டு வீரர்களை படுத்தி எடுக்காமல் இருப்பது நம் கிரிகெட் சங்கத்திற்கு நல்லது. நம் அணியின் ஏறக்குறைய எல்லோருமே காயம் அடைந்து இருக்கிறார்கள் போல, ஜாகிர் கான், கம்பீர், சேவாக், முனப் படேல், இஷாந்த் சர்மா மற்றும் சச்சின். என்னதான் நடக்கிறதோ.
==========================================
பிச்சைக்காரர்களா ஹாக்கி வீரர்கள்

சீனாவில் நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இருதிப்போட்ட்யில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு தலா 25000  கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களை போல் நடத்தி உள்ளது இந்திய விளையாட்டு வாரியம். அந்த பணத்தை ஏற்க மறுத்து மானம் காத்துக்கொண்டனர் வீரர்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இந்த விளையாட்டை விளையாடவே ஆட்கள் இருக்கமாட்டார்கள் போலும்.
=========================================
நான் ரசித்த புகைப்படங்கள்

இந்த படங்கள் நான் பணி செய்ய போகும் வழியில் வீட்டிற்க்கு முன் அழகுக்காக  பராமரிக்கப்பட்ட பூச்செடிகள் =======================================
 நான் ரசித்த காணொளி 
 இந்த காணொளியை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது, பார்த்தவுடன் மலைத்துத்தான் போனேன். இந்த பெண் பார்வதி , என்ன குரல் என்ன நேர்த்தியான பாட்டு. உன்னிமேனன் ஒரு வார்த்தை சொன்னார், "இந்த கள்வரே கள்வரே பாடு மிக பிரபலமாகாத ஒரு பாட்டு ஆனால் நீ பாடி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலபேர் இந்த பாட்டை ரசித்து கேட்பார்கள் என்று சொன்னார், அது அப்பட்டமான உண்மை !! கேளுங்களேன்.!!!!!


அன்புடன் 
அசோக் குமார்

Friday, September 16, 2011

தமிழ் சினிமா மறந்துவிட்ட இசைஅமைப்பாளர்கள்- V .குமார்

தமிழ் சினிமாவில் இசைக்கென்று எப்போதும் முக்கியம் உண்டு. ஒரே படத்தில் 30  பாடல்களும் உண்டு, பாடல்களே இல்லாத படமும் உண்டு. இதில் "திருச்சி லோகநாதன்" தொட்டு இன்றைய "யுவன் ஷங்கர் ராஜா" வரை எல்லோரும் நட்சத்திரங்களாக மின்னி வருகின்றனர். இதில் திறமை இருந்தோ இல்லாமலோ இந்த இசை துறைக்கு வந்து மின்னமலேயே மறந்த, மறைந்த இசை அமைப்பாளர்களை பற்றி கொஞ்சம் விரிவாக அலசலாம் என்று இருக்கிறேன்.

குட்டுபட்டாலும் மோதிர கையால் குட்டுபடவேண்டும் என்று ஒரு வாக்கு உண்டு. அது போல "இயக்குனர் சிகரம்" பாலச்சந்தர் அவர்களால் "நீர் குமிழி படத்தில் அறிமுகபடுத்தப்பட்டு மெலடி கிங் என  பட்டம் பெற்ற V .குமார் அவர்களை பற்றிதான் இந்த பதிவில் எழுத இருக்கிறேன்.

முதலில் மியூசிக் கண்டக்டராக தன் பணியை ஆரம்பித்த குமார் அவர்களுக்கு பாலச்சந்தர் அவர்கள்  முதல் வாய்ப்பை கொடுத்தார். ஹார்மோனியம், பியானோ வாசிப்பதில் வாசிப்பதில் கை தேர்ந்தவர் குமார் அவர்கள்.  முதல் படத்தில் இவருக்கு இசை உதவிகளை செய்தது சேகர் என்ற மனிதர். இவர் வேறு யாருமல்ல இசை புயல் A .R . ரஹ்மானின் தந்தை. முதல் படத்திலேயே "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்ற பாடலை கொடுத்து தானும் ஒரு திறமைசாலி என்பதை திரை உலகிற்கு காட்டினார்.  சீர்காழி அவர்களின் கந்தர்வ குரலில் இந்த தத்துவ பாடலை கேட்போர் மெய்சிலிர்ப்பர்.

 

 1960 களில்  வெளிவந்த எல்லா பாலச்சந்தர் படங்களான நீர் குமிழி, எதிர் நீச்சல், இரு கோடுகள், அரங்கேற்றம், மேஜர் சந்திரகாந்த், வெள்ளி விழா என எல்லா படங்களுக்கும் இசை அமைத்தவர் நம்   V .குமார். 


முதல் படத்தில் இசை அமைக்க வாய்ப்பு பெற்றபோது இதை தன்னால் சிறப்பாக செய்ய இயலுமா என அச்சப்பட்டு இந்த வாய்ப்பை இழக்க இருந்தவர்தான் நம் V .குமார், ஆனாலும் பாலச்சந்தர் அவர்களின் ஊக்கத்தினாலும் சேகர் அவர்களின் பக்கபலத்தாலும் அவர் இசை உலகில் அடி எடுத்து வைத்தார்.


"வெள்ளி விழா" படத்தில் இவர் செய்த ஒரு மாறுதல் தமிழ் சினிமாவிற்கு  மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது என்றால் மிகை இல்லை. சுசீலா அவர்கள் மென்மையான பாடல்களையும் LR . ஈஸ்வரி அவர்கள் கொஞ்சம் மேலான குரலுடனும் அதுவரை பாடி மக்களுக்கு பரிச்சயப்பட்டு இருந்தனர். V .குமார் இவர்களுக்கு பாடல்களை மாற்றி கொடுத்து LR . ஈஸ்வரி அவர்களால் மென்மையாகவும் பாட முடியும் என நிருபித்த பாடல்தான் "காதோடுதான் நான் பேசுவேன்" என்ற பாடல்.


இசை ஜாம்பவான்கள் MS . விஸ்வநாதன் மற்றும் KV .மகாதேவன் அவர்களின் அலையில் இவர் பெயரும் காணமலேயே போனது இவரின் துரதிர்ஷ்டம்தான். ஆனாலும் காலம் உள்ளவரை இவரது பாடல்களான "தாமரை கன்னங்கள், அடுத்தாத்து அம்புஜத்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், உன்னிடம் மயங்குகிறேன் உள்ளதால் நெருங்குகிறேன் போன்ற பாடல்கள் மூலம் குமார் அவர்கள் நினைவில் நம்  நிற்பார் என்பது திண்ணம்.

தகவல் தொகுப்பு :


அன்புடன் 
அசோக் குமார் 

Saturday, September 10, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்- வாணி ஜெயராம் -2

முந்தைய பதிவில் வாணி ஜெயராமின் பாடல்களை தொகுத்து இருந்தேன். இந்த பதிவில் இன்னும் இனிமையான வாணி ஜெயராம் பாடிய பாடல்களை இணைத்திருக்கிறேன்.

    படம் : ரோசா பூ ரவிக்கைக்காரி
பாடல்: என்னுளில் எங்கோ 
இசை : இளையராஜா


படம் : மூன்று முடிச்சு
பாடல்: வசந்த கால 
இசை : MSV


படம் : மூன்று முகம்
பாடல்: டிஸ்கோ ராமா
இசை : இளையராஜா 


படம் : கன்னி தெரியும் கதைகள்
பாடல்: நான் உன்ன நெனச்சேன் 
இசை : சங்கர் கணேஷ் 

படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
பாடல்: தேன் பூவே
இசை : இளையராஜா  அன்புடன் 
அசோக் குமார் 

Friday, September 9, 2011

காந்திமதி - மின்னாமலே மறைந்த நட்சத்திரம்

பதினாறு வயதினிலே படத்தை பார்த்தவர்கள் சப்பாணி, மயிலு , பரட்டையை மட்டும் ரசிக்கவில்லை, "குருவம்மா" என்ற அடாவடியான கதாபாத்திரத்தில் நடித்த காந்திமதியையும்தான். கோழி காணமல் போனதும் இவர் அடிக்கும் சண்டையும், காணமல் போன கோழி கிடைத்தவுடன் இவர் பதறும் காட்சியும் குணசித்திர நடிப்பில் தனக்கென ஒரு பாணியை வகுத்து கொண்டு இவர் செய்த பாத்திரங்களில்தான் எத்தனை வித்தியாசம்.
 
 கிராமத்து வேடம் என்றால் அதற்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திவிடும் அளவுக்கு அந்தந்த பாத்திரங்களை தன் நடிப்பால் சிறக்க வைத்தவர். கரகாட்டக்காரன் படத்தில் இவர் ராமராஜனின் அம்மா வேடத்தில் கலக்கி இருப்பார். அதுமட்டுமின்றி சின்னதம்பி பெரியதம்பி, மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், முத்து மற்றும் ராசையா போன்ற படங்களிலும் தன் முத்திரை நடிப்பால் நம்மை எல்லாம் கவர்ந்தார். 


இதுவரை 300  படங்களில் நடித்துள்ள காந்திமதி நேற்று இதய நோயால் பதிக்கப்பட்டு மறைந்தது தமிழ் திரை உலகத்திற்கு பேரிழப்பு. இவர் திறமைக்கு தமிழ் திரை உலகம் சரியான அங்கிகாரம் கொடுக்கவில்லையோ என்று கூட தோன்றுகிறது. எப்படியோ அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 

அன்புடன்

அசோக் குமார்