Thursday, July 7, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்


தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற தகுதி உள்ள சாதனையாளர். நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடிய பெருமை பெற்றவர்.  இன்றும் அதே இனிமையான குரலுடன் நம்முடன் உலா வரும் "பாடும் நிலா" பாலு தான் அந்த சாதனையாளர். நான் சொன்ன அனைத்துமே அவர் பெற்ற புகழில் ஒரு துளிதான்.


 அமரர் MGR -கும் , நடிப்பு மேதை சிவாஜி கணேசனுக்கும் தன் குரலில் மாற்றங்களை காட்டி பாடி பெரும் புகழோடு இருந்த T . M .சௌந்தரராஜன் அவர்கள் காலத்தில் திரை உலகில் நுழைந்தார். இவர் இனிமையான குரலை கண்டு அப்போதைய இசை மாமேதைகளான  MSV மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் தொடர்ந்து கொடுத்த வாய்ப்புகளால் MGR -கும் ,  சிவாஜிக்கும் இவர் குரலை பயன்படுத்தினார்கள்.இதுவரை நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடியமைக்காக ஆறு முறை தேசிய விருதும், இந்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" மற்றும் " பத்ம பூஷன்" விருதையும், தமிழ்நாடு, ஆந்த்ரா, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளின் மாநில விருதுகளை எண்ணிலடங்கா முறை வாங்கி இருக்கிறார். பிலிம் பேர் விருதுகளும் நெறயவே வாங்கி குவித்துள்ளார் பாலு.


இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகராக பல படங்களிலும், சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும், சில படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார் . இன்றும் தெலுங்கு படங்களில் கமலுக்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாலுவின் ஒரே மகன் SPB . சரண் இதே துறையில் பரிமளிக்க முடியாமல் இன்னமும் தத்தளிக்கிறார் என்றால் வியப்புதான்.


முதலில் தன் தந்தையின் தொழிலான பின்னணி பாடகராக முயற்சி செய்தார். அதில் சில பாடல்கள்   பிரபலமானாலும் , அவரின் குரல் பாலு அவர்களின் குரலை போலவே இருந்ததனால் வாய்ப்புகள்  அரிதாகவே போனது. இளையராஜா அவர்களால் "தேவதை" படத்தில்  அறிமுகப்படுத்தபட்டவர் ஆனாலும் இவரால் பெரிய அளவில் பின்னணி பாடகராக சோபிக்க முடியவில்லை.இதன் பின் பாடுவதை  விடுத்து நடிப்பில் இறங்கினார். "உன்னை சரணடைந்தேன்" படத்தின் மூலம் நடிகராக வந்தார். இதற்க்கு முன் ஒரு ஒரு கன்னட படத்தில் நடிகராக அறிமுகமானார் சரண். நடிப்பிலும் ஒன்றும் சொல்லி கொள்கிறமாதிரி இவரால் பரிமளிக்க முடியவில்லை. இவர் கடைசியாக நடித்த படம் "வ. குவாட்டர் கட்டிங் " .


நடிப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் சரண். உன்னை சரணடைந்தேன் மற்றும் மழை படங்கள் பெரிய அளவில் இவருக்கு பணத்தை கொடுக்காவிட்டாலும், அடுத்து வெங்கட் பிரபு இயக்கிய சென்னை -28  நல்ல வசூலையும் நல்ல பெயரையும் தந்தது. சமீபத்தில் இவரது படமான "ஆரண்ய காண்டம்"  இவருக்கு ஓரளவுக்கு பணத்தையும் பேரையும் தந்தது. ஆனாலும் இன்னும் இவரால் இந்த துறையில் நிலையாக ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என தோன்றுகிறது.

இதை தொடர் பதிவாக எழுதி வருகிறேன்.  இதற்க்கு முந்தைய பதிவுகளான படிக்க ..
 தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா 

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா


அன்புடன் 
அசோக் குமார் 

17 comments:

 1. அருமையான பதிவு... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாத்தியார் பிள்ளை மக்கு

  ReplyDelete
 3. இளையராசாவின் மகன் கார்திக் ராஜாவும் பெரிதாக வளரவில்லை

  ReplyDelete
 4. nalla pathivu sako..
  valththukkal...

  ReplyDelete
 5. நண்பரே SPB.சரண் மிளிரவில்லை என்று கூறிவிட முடியாது. அவருக்கு வாய்ப்புகள் (சரியாக)அமைந்தால் வெற்றி பெறலாம். ஏனெனில் அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. மேலும் நீங்கள் ஒருவேளை 1995-களில் வலைப்பூ ஆரம்பித்திருந்தால் தற்போதைய இளைய தளபதியும் உங்கள் சோபிக்காத வாரிசுகள் பட்டியலில் (முதலிடத்தை கூட) இடம் பிடித்திருப்பார். மேலும் SPB.சரணுக்கு சென்னை 28 மட்டுமல்ல. ”சரோஜா” திரைப்படமும் கூட அடையாளத்தை தந்தது. எனவே சற்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 6. Appatiye sathiyaraj makanaiyum sethukunka!

  ReplyDelete
 7. // மதுரன் said...

  அருமையான பதிவு... வாழ்த்துக்கள் //

  நன்றி மதுரன் உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 8. // koodal bala said...

  வாத்தியார் பிள்ளை மக்கு //
  நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனாலும் இவருக்கு திறமை இருக்கிறது

  ReplyDelete
 9. // கோவி.கண்ணன் said...

  இளையராசாவின் மகன் கார்திக் ராஜாவும் பெரிதாக வளரவில்லை //

  நன்றி அண்ணே !!உங்கள் வரவுக்கும் கருத்துக்கும். கார்திக் ராஜா பற்றி ஏற்கனவே நான் எழுதிய பதிவின் இணைப்பை கொடுத்துள்ளேன்

  ReplyDelete
 10. // vidivelli said...

  nalla pathivu sako..
  valththukkal... //
  என்னை தொடர்ந்து பின்னுடமிட்டு ஊக்கபடுதி வரும் உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 11. // கடும் விமர்சகர் வெங்குடு said...

  நண்பரே SPB.சரண் மிளிரவில்லை என்று கூறிவிட முடியாது. அவருக்கு வாய்ப்புகள் (சரியாக)அமைந்தால் வெற்றி பெறலாம். ஏனெனில் அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. மேலும் நீங்கள் ஒருவேளை 1995-களில் வலைப்பூ ஆரம்பித்திருந்தால் தற்போதைய இளைய தளபதியும் உங்கள் சோபிக்காத வாரிசுகள் பட்டியலில் (முதலிடத்தை கூட) இடம் பிடித்திருப்பார். மேலும் SPB.சரணுக்கு சென்னை 28 மட்டுமல்ல. ”சரோஜா” திரைப்படமும் கூட அடையாளத்தை தந்தது. எனவே சற்று பொறுத்துதான் பார்க்க வேண்டும். //

  நீங்கள் சொல்வது உண்மைதான் வேங்குடு அவர்களே

  ReplyDelete
 12. // dharma said...
  Appatiye sathiyaraj makanaiyum sethukunka! //

  அவரைப்பற்றியும் எழுதும் யோசனை இருக்கிறது சகோ

  ReplyDelete
 13. பாலு காலத்தில் சினிமாவில் நுழைவது கடினம். நுழைந்து விட்டால் போட்டி குறைவு தாக்கு பிடித்துவிடலாம். இப்பொழுது தமிழ் சினிமாவில் நுழைவது முன்னர்ரை விட இலகுவாகிவிட்டது ஆனால் தாக்கு பிடிப்பது கடினம். காரணம் இன்று ஒரு பாடல் பாடிய பாடகரையும் சேர்த்தால் எத்தனை பாடகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர்? அதிகம்.மிக அதிகம்.சரண்க்கு அவர் தந்தை போலவே குரல் அமைந்தது ஒரு தடை. சரண் நல்ல தயாரிப்பாளர். காசு சம்பாதிக்காவிடிலும் இயன்றவரை புதியவர்களுக்கு வாய்ப்பளித்து நல்ல படைப்புக்களை தந்துள்ளார். அப்பா பாடினால் பிள்ளையும் பாடவேண்டும் என்பது என்ன,எழுதப்படாத விதியோ?!

  ReplyDelete
 14. ”அப்பா பாடினால் பிள்ளையும் பாடவேண்டும் என்பது என்ன,எழுதப்படாத விதியோ?! ”

  பளீச் கருத்து.....

  ReplyDelete
 15. சோபிக்காத வாரிசில் சிபிராஜை சேர்க்க வாய்ப்பு அதிகம் தான். ஏனெனில் அவருக்கு நடிப்பு அவ்வளவாக வருவதாக தெரியவில்லை. தயாரிப்பாளர் ஆக முயற்சிக்கலாம்.......

  ReplyDelete
 16. // குறுக்காலபோவான் said...
  அப்பா பாடினால் பிள்ளையும் பாடவேண்டும் என்பது என்ன,எழுதப்படாத விதியோ?! //

  எனக்கும் சரணுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு இருப்பது போன்று இருக்கிறது நீங்கள் சொல்லும் கருத்து. என் கடைசி வரிகளை நீங்கள் படிக்க தவறிவிட்டீர்கள் போல் இருக்கிறது. திறமை இருந்தும் அதை திரை உலகம் சரியாக பயன்டுதிகொள்ளவில்லை என்றுதான் அழுதி இருக்கிறேன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 17. // கடும் விமர்சகர் வெங்குடு said...

  சோபிக்காத வாரிசில் சிபிராஜை சேர்க்க வாய்ப்பு அதிகம் தான். ஏனெனில் அவருக்கு நடிப்பு அவ்வளவாக வருவதாக தெரியவில்லை. தயாரிப்பாளர் ஆக முயற்சிக்கலாம்....... //

  அவரைப்பற்றி எழுத தகல்வல்களை சேகரித்து வருகிறேன் விரல்வில் அவரைப்பற்றி எழுதுகிறேன்

  ReplyDelete