Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, July 13, 2016

நான் ரசித்த கீச்சுகள் 13/07/2016

ஒ.உ.சிந்தனைகள் ‏@bommaiya
நாயர் கடைங்கள்ல  டீ சாப்பிடுற அத்தன பேரும் மிடில் கிளாஸ் தான் # அவர் என்னைக்கு நமக்கு  ஃபுல் கிளாஸ் டீ  போட்டுக் கொடுத்திருக்கார்...!
---------------------------------------------------------------------------------------------
sʍιʟɛʏ вօʏ™ ‏@smileyB0Y
கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்.😊
சரியாகவில்லையென்றால்,
இது கடைசி இல்லை என்று நம்புங்கள்..😎
----------------------------------------------------------------------------------------------
ஜெய் VJ ‏@i_am_v_jey  
எல்லாருடைய தேடுதலும் அன்பாய் இருப்பதினால் தான்..எல்லாருடைய குற்றசாட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்பதாய் இருக்கிறது..

----------------------------------------------------------------------
 ✍கிரியேட்டிவ் ЯΛJ ™ ‏@CreativeTwitz  
இந்த உலகத்துல 
கடமைச் செய்யவே 
காசு எதிர்பார்க்குது சமூகம் 
கருணை காட்ட 
காசு எதிர்பார்க்கதா

--------------------------------------------------------------------
காம்ரேட் பாலா ‏@SelvarajanBala  
நாடு கேட்பது தீவிரவாதம் என்றால் 
நாடு கேட்பது பயங்கரவாதம் என்றால்
என்ன மயிருக்கு பிரிட்டிஷ்காரன்கிட்ட நாடு கேட்டீங்க?

------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் ‏@aruntwitz  
3G நெட் கார்டு போட்டு, வேலிடிட்டி டைம் முடியும் போதும், டேட்டா பேலன்ஸ் மிச்சம் வைத்திருப்பவர்களால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.

--------------------------------------------------------------------------------
காம்ரேட் பாலா ‏@SelvarajanBala  
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.

---------------------------------------------------------------------------
 ⭐PãlãñîKÎÑG ⭐VJ ‏@palanikannan04  
ஒருபுறம் மரம் வளர்ப்போம்னு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம்,

மறுபுறத்தில் கான்டிராக்ட் விட்டு காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது..

----------------------------------------------------------------------

ர.விவேக் ‏@vivekchandran07  
எப்படியும் விமர்சனம் செய்யத்தான் போகிறீர்கள், ஆதலால் நான் நினைத்ததை அனைத்தும் கூச்சமின்றி செய்யப்போகிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Friday, March 18, 2016

கோட்டை ராணியும் என் சகுன அனுபவமும்


ஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என உணர்த்திய அனுபவத்தை தான் எழுதலாம் என்று இருக்கிறேன். என் பால்ய காலங்களில் நண்பர்களாலேயே  அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவன் நான். நான் உறங்கும் நேரம் உணவருந்தும் நேரம் தவிர ஊரின் நடுவே இருக்கும் அரசமர்த்தடிதான் எங்கள் ஊரின் மொத்த இளசுகளுக்கும் வேடந்தாங்கல். கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்லன்.


அந்த வயது பால்யங்களுக்கு உண்டான குறும்பும் கேளிக்கைகளும் எனக்கும் உண்டு என்றாலும் அதில் நான் பங்கேற்பதில்லை. எட்ட இருந்து ரசிப்பதோடு சரி. என்னைப்பற்றி ஏதேனும் புகார் வந்தால் எங்கள் வீட்டின் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்து விடும் அந்த பயம் தான்.

இப்போது இருப்பது போல் கழிப்பிட வசதியால் பற்றி பெரிய அளவிற்கு விழிப்புணர்வு கொண்டதல்ல எங்கள் ஊர். காலையில் எழுந்தவுடன் எங்கள் ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவருடைய கொல்லையில் தான் எங்கள் ஊர் முழுவதும் சென்று எருவிடும். கதைக்கு செல்லும் முன் இந்த கதை நாயகியை பற்றி சொல்லியாகவேண்டும்.

வயது அப்போதே எழுபதை தொட்டு இருக்கும். குழி விழுந்த கன்னங்கள். சற்றே கூன் விழுந்த தேகம். என்னை என்னும் வஸ்துவையே பார்த்திராத நரைத்த தலை. மண்வாசனை காந்திமதி போல் பேச்சில் எப்போதும் ஒருவித அதிகாரம். இத்தனை விசயங்களுக்கும் சொந்தக்காரிதான் "கோட்டை ராணி". அவளுக்கு உண்மையான பெயர் எங்களுக்கு தெரியாது. ஏன் அவளுக்கு "கோட்டை ராணி" என்ற பெயர்  வந்தது என்றும் எங்களுக்கு தெரியாது.
ஒல்லியான, சுருக்கங்கள் விழுந்த சுமாரான உயரம். யாரையும் எடுத்து எரிந்து பேசும் குணம். வம்பு சண்டைக்கும் போவாள் வந்த சண்டையையும் விடமாட்டாள்.ரோட்டில் போகும் நாய் கூட இவள் வீடு வந்தால் வேகமாய் கடந்து போய் விடும்.

இப்படியாக இருந்த கோட்டை ராணியிடம் சுடு சொல் வாங்க போகிறோம் என தெரியாமலே விடிந்தது. வழக்கம் போல் என் நண்பனும் வந்தான். என்ன டா  மணி ஆச்சு... போலாமா என்றான். நானும் அவனும் கெளம்பி போய்கொண்டு இருக்கையில்....................திடீர் என எங்கள் எதிரில் வந்து நின்றால் கோட்டை ராணி. காலையில் வாசல் சுத்தம் செய்ய மாட்டு சாணம் அள்ள செல்கில்றால் போல் பட்டது. அவளை பார்த்து விட்டு போனால் எந்த காரியமும் நடக்காது என ஊர் முழுக்க பேச்சு. என் நண்பனுக்கு அது ஞாபகம் வந்துவிட்டது போலும். என்ன நினைத்தானோ அவளை பார்த்த மாத்திரத்தில் என் கையை பிடித்து வந்த வழியே திரும்ப இழுத்தான்.

நாங்கள் அவளை பார்த்து உடனே திரும்புவதால் கோட்டை ராணியும் கண்டுவிட்டாள். நாங்கள் திரும்பிய திசையை பார்த்து " ஏண்டா என்னை பார்த்துவிட்டு போனால் உங்களுக்கு வருவதும் நின்னு போயிடுமோ? என்று கேட்டாளே ஒரு கேள்வி. எங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஒன்றுமே பேசவில்லை. என் நண்பன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.

அன்றில் இருந்து யாரும் சகுனம் என்று சொன்னாலே கோட்டை ராணியின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை. 

Saturday, March 31, 2012

நான் பேச்சிலராக இருப்பதில் என்னை விட வருத்தபடுபவர்கள்

தினமும் ஒரு மணி நேரமாவது பேசும் உற்ற நண்பன் காதலி கிடைத்ததில் இருந்து தலைமறைவு#ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்
**********************************************
தூண்டிலைப்போட்டு மீனுக்காக காத்திருப்பவனிடம் தான் கேட்கவேண்டும் பொறுமையின் மகத்துவம்#தத்துவம்
**********************************************
தமிழின் மகத்துவம் தமிழ் நாட்டில் வாழும் வரை புரியவே இல்லை # என்னவாக இருக்கும்
***********************************************

மழை பொத்துகிட்டு ஊத்துது. வானத்துள் ஓட்டை ஏதும் விழுந்திருக்குமோ #டவுட்டு
*************************************************

குழந்தையாய் இருக்கும்போது தீபாவளிக்கு பணம் போதாதென்று உண்ணாவிரதம் இருப்பதில் ஆரம்பிக்கிறது நம் போராட்டம் #வாழ்க்கை
***************************************************
என்னை விட என்னை சுற்றி இருப்பவர்களுக்குதான் ரொம்பவே வருத்தம் நான் பேச்சிலராக இருப்பதில்#முடியல
**************************************************

 இந்தியாவில் இருந்தேன்-வேலை இல்லை என்றார்கள். அமெரிக்காவில் வேலை செய்கிறேன் இந்தியாவில் நீ இல்லைஎன்றாங்க#பொண்ணை பெத்த புண்ணியவான்கள்
****************************************************

Wednesday, November 9, 2011

காதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத முடியுமா



பாஸை பற்றி நினைக்கையில் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை# சொந்த அனுபவம்
========================================

தாவணி உடுத்தும் பெண்கள் வெட்கத்தையும் சேர்த்தே உடுத்துகிறார்கள் -நானே சிந்திச்சேன்
=========================================

குழந்தைகளை பார்க்கும்போதுதான் பலூன் விற்கிற அண்ணாச்சி சத்தமா கூவுவது வாடிக்கை # தொழில் ரகசியம்
==========================================

காதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத முடியும்-நண்பன் #காதலுக்கே வக்கு இல்லை அப்புறம் எங்கே தோல்வி  வேற!!
============================================ 

விடை தேடும் என் கேள்விகளுக்கு, பெரும்பாலும் பதிலாக இருப்பவை உன் வெற்று புன்னகையே Psychology
======================================

கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தில் குழந்தைகளே சமாதான தூதுவர்கள்#குடும்ப சீக்ரெட்
======================================
டிஸ்கி : படங்கள் அனைத்தும் நானே எடுத்தவை என் வீட்டை சுற்றி இருக்கும் பூக்கூட்டங்கள்  இவை.
அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, November 1, 2011

பேச வைத்தது யார் ??

இந்த கவிதை 10  வருடத்திற்கு முன் " ஆனந்த  விகடன்" என்று நினைக்கிறேன் புத்தகத்தில் வந்தது. என் பழைய டைரியை புரட்டியபோது கிடைத்தது. ரொம்பவும் சுவாரசியமான கவிதை, எளிமையாகவும் ரொமபவே எதார்த்தமாகவும் எழுதப்பட்டது. காதலில் ரொம்ப காயப்பட்ட ஒரு ஆத்மாதான் இதை எழுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எழுதியவர் பெயரை எழுதி வைக்க வில்லை (மன்னிக்கவும் மறந்துட்டேன்). என்னவோ, எழுதிய அந்த மனிதர் இப்போது  எந்த நிலையில் இருப்பார் என தெரிந்து கொள்வதில் கொஞ்சம் ஆவலாகவும் இருக்கிறேன். இதோ அந்த கவிதை. 

 பேச  வைத்தது யார் ??
பல அனுபவங்கள் 
எதை சொல்லி 
எதை விடுவது 
புத்தாண்டு வந்தால் 
புகைப்பது 
குடிப்பது 
கிடையாது என்று 
செய்த சத்தியத்தையா ??
உன் கோப தினங்களில் 
மறந்த சத்தியத்தையா ??
உன் ஆளுமையில் 
துவண்டு 
துங்கிய தினங்களையா??
போதுமடி 
உன் உறவு என்று 
திமிறி, திருப்பி 
ஏங்கிய நாட்களையா ??
மறக்கின்ற சக்தி 
அதிகமடி எனக்கு 
உன் கணவனுடன் 
நீ கைகோர்த்து 
காரில் ஏறி திரும்பி 
அற்ப புழுவாய் 
பார்த்த அந்த நாட்கள் ...
காரில் இறங்கி 
கர்சிப்புடன் 'ச்சே 
ஒரே தூசி என்கிறபோது 
நினைத்தேனடி 
நீ பேசவில்லை 
உன் கணவனிடம் 
உள்ள பணம் உன்னை 
பேச வைத்தது  என்று !!!

உண்மையில் நான் ரொம்பவே ரசித்த கவிதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு இதை பதிவிடுகிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Friday, September 30, 2011

உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்ல..


உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று #அப்பாவிடம் சிம்பதி தேடுவோர் சங்கம்
----------------------------------------------------------------
பால்க்காரரும், பேப்பர்க்காரரும் எழுப்பாவிட்டால், பல பேர் தன் பாஸிடம் கடி வாங்க வேண்டி இருக்கும்#குடும்ப நிர்வாகத்துறை
-----------------------------------------------------------------
சோனியாவை சந்தித்தார் ப.சிதம்பரம்-பதவி விலக விருப்பம் தெரிவித்தார் # தம்பி டீ இன்னும் வரல
------------------------------------------------------------------

சீக்கிரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்! - அஜித் #ஏலே என்னதுப்பா இதெல்லாம்
---------------------------------------------------------------
திமுகவில் இருந்து நடிகர் தியாகு விலகல்! # வடிவேலுவை ஒரு வாட்டி நெனச்சு பார்த்திங்க போல
--------------------------------------------------------------

காஜலைத் தேடி வரும் "குஜால்" பட வாய்ப்புகள்# டாப்லெஸ் போஸ் கொடுத்து ஹோப்லஸ்ஆயிடிங்களே அம்மணி
-------------------------------------------------------------
அதிமுகவுக்காக அஷ்டமி, நவமியில் உள்ளாட்சித் தேர்தல்- ராமதாஸ் #க க போ
-------------------------------------------------------------
உக்ரைன்- கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் வென்ற 77 வயது முதியவர் மரணம்-# கொழுக்கட்டை இந்த ஆளுக்கு பாட கட்ட வச்சுட்டுதே!!!!
-------------------------------------------------------------

தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி # எப்படிங்க உங்களால மட்டும் முடியுது!!
--------------------------------------------------------------
அன்புடன் 
அசோக் குமார்

Saturday, July 9, 2011

நல்லா கேட்டான்யா டிடைல்லு -சொந்த அனுபவம்


நம்ம மாநிலத்தை விட்டு பக்கத்துக்கு மாநிலத்துக்கு போனாகூட அங்க நம்ம ஆளுகளை பார்த்துட்டா நமக்கு வர சந்தோசத்துக்கு அளவே இருக்காது.   அது மாதரி  குசலம் விசாரிக்க போய் நான் மாட்டிகிட்ட ஒரு சம்பவத்தை இங்கே உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். பிற்காலத்தில் யாராவது அமேரிக்கா வந்தால் அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.

  நான் அமெரிக்க வந்து ஒரு வாரமே ஆன காலம் அது. உள்ளுரில் நாம புலியா இருந்தாலும் வெளியூரோ,  வெளி நாடோ போனால் எது எது எங்கே இருக்கிறது எங்க போனால் என்ன கிடைக்கும் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள நாள் ஆகும். அப்படி என் கூட வேலை பார்த்த மக்களை கேட்டு பக்கதுல இருக்கிற ஒரு பலசரக்கு கடை (Grocery store) ஒன்னை கண்டுபிடிச்சி ஒரு சாயந்திர நேரமா போய் சேர்ந்தேன். கூட்டம்னு பெருசா ஒன்னும் இல்ல. அந்த வாரத்துக்கு தேவையான பால் கொஞ்சம் ரொட்டியும் வாங்கிகிட்டு இருக்கும் போது "ஹலோ " அப்படின்னு ஒரு அபலக்குரல்.

திரும்பி பார்த்தால் அஞ்சரை அடி உயரத்துல பார்த்தாலே பளிச்சுனு தெரிஞ்சது அண்ணன் மென்பொருள் எழுதுற ஆளுன்னு. நானும் ஹெல்லொன்னு சொல்லிவச்சேன். அவர் பெயர "பிரகாஷ் " அப்படின்னும்  'சநோசெல'(sanjose) வேலை பாக்கறேன்னும்   சொன்னாரு. அமெரிக்கா வாரத்துக்கு முன்னாடி சென்னைலதான் வேலை பார்த்ததாகவும் சொன்னாரு.  நானும் என்னை பத்தி சுருக்கமா சொன்னேன். பேசி முடிஞ்சதும், உங்க கூட நான் நட்பு வச்சுக்க ஆசைபடறேன் உங்க செல் போன் நம்பரை கொடுங்களேன் அப்படின்னு   கேட்டாரு அண்ணாச்சி. இந்த ஊர்ல இப்படி ஒரு நல்லவர்னு நெனச்சு நம்பரை கொடுத்து  வங்கிகிட்டோம். (இங்கதான் சனி அன்னிக்கு  ஆரம்பிக்கும்னு எனக்கு தெரியல).

ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணாரு அண்ணாச்சி, இங்க பக்கதுல ஒரு கால் பந்து போட்டி நடக்குது வரிங்களா நானே என் கார்ல வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு. ஆனாலும் எனக்கு இருந்த வேலை பளுவில் என்னால போக முடியல. அதே மாதிரி ரெண்டு மூணு தடவை போன் பண்ணி கூப்பிட்டாரு. என்னால போக முடியல. இப்படியே ஒரு மூணு மாசம் ஓடிப்போச்சி.  திடீர்ன்னு ஒரு நாள் போன் பண்ணி நான் இருக்கிற இடத்துக்கு  பக்கதுல இருக்கிற காபி கடைக்கு வாங்க சந்திப்போம்,  இந்த பக்கமா வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு கூப்டேன்னு பில்ட் அப் வேற கொடுத்தாரு அண்ணாச்சி.

நானும் , அமெரிக்க ஏழைகளின் ஒரே வாகனமான நம்ம சைக்கிளை எடுத்துகிட்டு அவர் சொன்ன எடத்துக்கு போய் சேர்ந்தேன். சொன்ன மாதிரி நமக்கு முன்னாடியே அண்ணாச்சி வந்து காத்துகிட்டு இருந்தாரு. வழக்கமான குசல விசாரிப்புகள் முடிஞ்சா உடனே தன் பொட்டிய தெறந்து ஒரு லேப்- டாப் எடுத்து ஏதோ ஒன்னை தட்டினாரு. ஒரு வெப் பக்கத்தை திறந்து, அவரு ஒரு ஆன்லைன் வர்த்தகம் பண்றதாகவும் நானும் 200  டாலர் கட்டி சேர்ந்துக்க சொல்லியும் சொன்னாரு. "ஏதோ  முருகன் படம் இல்ல வினயாகர் படம் டாலர்னா  பரவால்ல எத்தனை வேணும்னாலும்  வாங்கி  கொடுத்துடலாம்.ஆனா அவரு கேட்டது அமெரிக்க டாலர்".

அப்புறம் இதுமட்டுமில்லாம நான் அஞ்சு பேரை இந்த கருமத்துல சேர்த்து வேற விடணுமாம். சரி அத்தோட விடுவான்னு பார்த்தா அஞ்சு பேருக்கு போனை  போட்டு எனக்கு மூளை சலவை செய்ய வச்சான். அதுல ஒருத்தன் சொன்னான் பாருங்க. அஞ்சு வருஷம் இதுல இருந்த கிட்டத்தட்ட "பில் கேட்ஸ்"  அளவுக்கு நீங்க பணக்காரனா ஆயுடுவீங்கனு (பில் கேட்ஸ் மன்னிக்க). நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  சரி நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு (வேற எப்படி தப்பிகறது) நான் குடிச்ச காபிக்கு பணத்தை கொடுத்து விட்டு அந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வந்தவன்தான்.

மறுபடியும் இரண்டு மூன்று முறை போன் செய்தான் எடுப்பேனா ??? எலி ஏன் நிர்வாணமாய் ஓடுகிறது  என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.. !!!

அன்புடன் 
அசோக் குமார்