Saturday, October 22, 2011

C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம்


தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள் வந்து போனாலும், தனக்கென்று நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு நிலைத்து நிற்பது ஒரு சவாலான காரியமே. அதிலும் 1950 - 1960  காலகட்டங்களில் பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர படங்களும், ராஜ ராணி கதைகளிலேயே, தமிழ் சினிமா முடங்கி கிடந்தது. அதை தகர்த்தெறிந்து குடும்ப கதைகளையும், காதல் பிரிவு மற்றும் முக்கோண காதல் அனா பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவை மிளிர வைத்த இயக்குனர்தான் "ஸ்ரீதர்".தன்னுடைய முதல் படமான "கல்யாண  பரிசு" படத்திலேயே தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை காட்டினார்.

செங்கல்பட்டுக்கு  அருகில் "சித்தமூர்" என்ற கிராமத்தில் 1933 -இல் பிறந்தார். தனது பதிமூன்று வயதில் மேடை நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதை பள்ளி மேடைகளில் அரங்கேற்றினார். முதன் முதலில் அவருடைய கதையான "ரத்த பாசம்" படமாக எடுக்கப்பட்டபோது அந்த படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றார். இதுதான் அவரின் முதல் திரை உலக அவதாரம்.

இயக்குனராக இவர் எடுத்த முதல் படம் 1959 -ம் ஆண்டு வெளிவந்த "கல்யாண பரிசு ". ஜெமினி கணேசன், சரோஜா தேவி நடிப்பில் முக்கோண காதல் கதையை படமாக்கி இருந்தார் ஸ்ரீதர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காதலித்த பெண்ணின் சகோதரியை மணந்துகொள்ளும்  நிலைக்கு ஆளாகும் ஒருவன், மற்றும் அவன் காதலி இவர்களின் மனோ நிலையை அற்புதமாக படமாக்கி இருந்தார் ஸ்ரீதர்.


சரோஜா தேவியின் சகோதரியாக விஜயகுமாரி நடித்திருப்பார். இன்றும் காதல் தோல்விக்கு சிறந்த பாடலாக "காதலிலே தோல்வியுற்றான் காளை" என்ற பாடல் விளங்கிக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. "வாடிக்கை மறந்தது ஏனோ", "உன்னை கண்டு நான் ஆட" "துள்ளாத மனமும் துள்ளும்" என அனைத்து பாடல்களும்  AM. ராஜா இசையில்  பிரசித்தி பெற்ற பாடல்தாம்.   இந்த படத்தில் தங்கவேலுவின் நகைச்சுவை பெரும் வரவேற்பை பெற்றது.


 இந்த படத்தை பற்றி நினைக்கையில் சுவாரசியமான ஒரு நிகழ்வு எனக்கு எனக்கு ஞாபகம் வருகிறது இதை எங்கேயோ படித்தேன் என்பது மறந்து விட்டது. அந்த நாட்களில் கவிஞர்  " பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்" அவர்கள் புரட்சிகர கருத்துக்களை திரை பாடல்கள் வழியே புகுத்துவதில்  பெயர் பெற்றவர். இந்த படத்திற்கு யாரை பாடல்கள் எழுத வைக்கலாம் என்ற வந்தபோது கல்யாண சுந்தரம் அவர்களை எழுத வைப்பது என பேச்சு அடிபட்டபோது ஸ்ரீதர் மறுத்துவிட்டாராம். ஏன் என கேட்டபோது இது முழுக்க முழுக்க காதல் படம் இதில் எங்கே புரட்சி கருத்துக்கு இடம் என்றாராம். பின் ஒருவாறு ஏற்றுக்கொண்டு கல்யாணசுந்தரம் அவர்களிடத்திலேயே கேட்டுகொண்டாராம் ஸ்ரீதர். தயைகூர்ந்து உங்கள் பாணி வரிகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என. பட்டுகோட்டையாரும் ஒத்துக்கொண்டு இந்த படத்திற்கு மொத்த பாடல்களை எழுதி முடித்தாராம்.பாடல்களை கேட்ட ஸ்ரீதர் அவர்களுக்கு மிகவும் திருப்தி. கவிஞரை பார்த்து, புரட்சி கருத்துகள் வராமல் எழுதியமைக்கு நன்றி என்றாராம் ஸ்ரீதர். உடன் பட்டுகோட்டையார், நான் என் கம்யுனிச கருத்துகளையும் இதில் எழுதி இருக்கிறேன் "உன்னை கண்டு நான் வாட (சோக பாடல்) பாடலை பொய் இன்னொரு முறை கேளுங்கள் அந்த பாடல்  அன்றாடம் கூலி வேலை செய்யும் ஏழைக்கும்  பொருந்தி வரும் என்றாராம் அதுதான் பட்டுகோட்டை. நீங்களும்தான் கேளுங்களேன் !!

இன்னும் பல சுவாரசியமான பல தகவல்கள், ஸ்ரீதர் அவர்கலப்பற்ற்யும், அவர் படங்கள் பற்றியும் அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன் 
அசோக் குமார்


2 comments:

  1. ஸ்ரீதர் - உண்மையான திரைப்படைப்பாளிகளில் ஒருவர்..அருமையான பதிவு..வாழ்த்துக்கள்

    ReplyDelete