ஒரு மருத்துவமனை மற்றும் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வளவுதான் இதை மட்டும் வைத்துகொண்டு ஒரு திரைக்காவியத்தை உருவாக்க முடியுமா ??முடியும் என காட்டியவர்தான் ஸ்ரீதர் அவர்கள். "தேன் நிலவு" படத்தின் வெற்றிக்கு பின் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து கலக்கிய படம்தான் "நெஞ்சில் ஒரு ஆலயம். இந்த படத்தில் ஒரு சின்ன முக்கோண காதலை மயமாக கொண்டு இவரகளுக்குள் நடக்கும் சுவையான உரையாடலை சின்ன சின்ன காட்சிகள் மூலம் காட்சி படுத்தி அமர்க்களபடுத்தி இருப்பார் ஸ்ரீதர்.
மொத்தம் பதினெட்டு நாட்களில் மொத்த படத்தின் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார் ஸ்ரீதர். இந்த படத்தில் "முத்துராமன்" (நடிகர் கார்த்திக்கின் தந்தை) மற்றும் "தேவிகா" (நடிகை கனகாவின் அம்மா ) என்று இந்த படத்திற்கு பின்னால் தமிழ் திரை உலகில் பிரபலமாக வலம் வந்த இந்த இருவரையும் இந்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்.
இந்த படத்தின் கதை ஸ்ரீதர் அவர்களின் பட பார்மூலவான முக்கோண காதல் கதைதான் இந்த படத்திலும் படமாக்கி இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துராமனை அவரது மனைவியான தேவிகா, புற்று நோயில் சிறந்து மருத்துவம் பார்க்கும் கல்யாண் குமாரின் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார். பிறகுதான் தெரியவருகிறது, கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலித்து பிரிந்தவர்கள் என்று. முன்னாள் காதலியின் கணவரை காபற்றினாரா அல்லது முடிவுதான் என்ன என்பதை மிக சுவாரசியமான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்த படம் இது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலம், இசை அமைத்தவர் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்கள். இதில் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், இசைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பாராம் ஸ்ரீதர். அவரை இசை விசயத்தில் திருப்தி படுத்துவது சிரமம் என்று விஸ்வநாதன் அவர்கள் ஒரு சந்திப்பில் சொன்னது.
படத்தின் எல்லா பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் அவர்களே எழுதினர். "எங்கிருந்தாலும் வாழ்க" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்", " சொன்னது நீதானா", "முத்தான முத்தல்லவோ" , " என்ன நினைத்து என்னை" என மொத்தம் ஐந்து பாடல்கள்.
அந்த காலத்தில் ஒரு இயக்குனரை கல்லூரி பெண்கள் காதலித்தார்கள் என்றால் அது காதல் பட மன்னன் ஸ்ரீதர் அவர்களை மட்டுமே. இன்னும் சுவாரசியமான சில தகவல்களுடன் அடுத்த பதிவில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் சந்திக்கிறேன் .
நல்ல இடுகை,இயக்குநர் ஶ்ரீதர் தொடர்ந்தது மென்மையான காதல் கதைகளை படமாக்கி வெற்றிக்கண்ட முதல் தமிழ் இயக்குநர் எனலாம்.
ReplyDeleteநெஞ்சில் ஓர் ஆலயம் படம் மூலம் தான் நாகேஷ் முதன் முதலாக தனிக்காமடியனாக உருவெடுத்தார், அதற்கு முன்னர் எல்லாம் சின்ன வேடங்களே.
nalla thagaval.
ReplyDeleteவவ்வால் said...
ReplyDeleteநல்ல இடுகை,இயக்குநர் ஶ்ரீதர் தொடர்ந்தது மென்மையான காதல் கதைகளை படமாக்கி வெற்றிக்கண்ட முதல் தமிழ் இயக்குநர் எனலாம்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படம் மூலம் தான் நாகேஷ் முதன் முதலாக தனிக்காமடியனாக உருவெடுத்தார், அதற்கு முன்னர் எல்லாம் சின்ன வேடங்களே./
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!
என்னைக் கவர்ந்த அருமையான படம்.
ReplyDelete'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' - காலத்தை கடந்த ஒரு அருமையான பாடல். ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள்.
இந்தப் படத்தில் அனைவரும் ஒரே நாளில் உயரத்துக்கு போய் விட்டார்கள் - திரு முத்துராமன், திரு கல்யாண்குமார், திரு நாகேஷ், திருமதி தேவிகா, குழந்தையாக நடித்த திருமதி குட்டி பத்மினி.
மிகவும் எளிமையான படம்.
எந்த படமே கன்னடத்துக்கு சென்று திரும்ப தமிழுக்கு வந்தது. கெடுத்து விட்டார்கள்.
நல்ல பதிவுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
தமிழின் மிக சிறந்த படங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். இந்த படம் பற்றி தனி பதிவெழுத நானும் ரொம்ப நாளாக யோசித்து தள்ளி போகிறது
ReplyDelete//சதீஸ் கண்ணன் said...
ReplyDeletenalla thagaval.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!
Rathnavel said...
ReplyDeleteஎன்னைக் கவர்ந்த அருமையான படம்.
'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' - காலத்தை கடந்த ஒரு அருமையான பாடல். ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள்.
இந்தப் படத்தில் அனைவரும் ஒரே நாளில் உயரத்துக்கு போய் விட்டார்கள் - திரு முத்துராமன், திரு கல்யாண்குமார், திரு நாகேஷ், திருமதி தேவிகா, குழந்தையாக நடித்த திருமதி குட்டி பத்மினி.
மிகவும் எளிமையான படம்.
எந்த படமே கன்னடத்துக்கு சென்று திரும்ப தமிழுக்கு வந்தது. கெடுத்து விட்டார்கள்.
நல்ல பதிவுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//
உண்மைதான் அறிமுகமான முத்துராமனும் தேவிகாவும் உச்சத்துக்கு போனது உண்மைதான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!
// மோகன் குமார் said...
ReplyDeleteதமிழின் மிக சிறந்த படங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். இந்த படம் பற்றி தனி பதிவெழுத நானும் ரொம்ப நாளாக யோசித்து தள்ளி போகிறது//
நேரமின்மை காரணமாக என்னால் விரிவாக எழுத இயலவில்லை. நீங்கள் எழுத என் வாழ்த்துக்கள் நண்பரே !!!