தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் என்றாலே புதுமை என்றும் பொருள் கொள்ளலாம். பரீட்சார்த்தமான திரைப்படங்களை படித்ததில் அவருக்கு நிகர் அவரே. குடும்ப படமும் எடுப்பார், காமெடி படமும் எடுப்பார், முன்ஜென்ம கதையையும் எடுப்பார். "நெஞ்சில் ஒரு ஆலயம்" படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் "போலீஸ்காரன் மகள்" இந்த படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் தான் "நெஞ்சம் மறப்பதில்லை" புனர்ஜென்ம கதையை மயமாக்கி எடுத்த படம்.
ஸ்ரீதர் அவர்கள் எடுத்த படங்கள் சமகாலத்தில் ஒரு டிரென்ட் செட்டேராக இருந்ததார் என்றால் அது மிகை இல்லை. முக்கோண காதல் கதையை சுவைபட படமாக்கி வந்த ஸ்ரீதர், ஒரு புது முயற்சியை எடுத்தது இந்த படத்தில்தான். புனர் ஜென்மத்தில் காதலிக்கும் ஒரு ஜமீன்தாரின் மகனான கல்யாண் குமாருக்கும், ஏழையான தேவிகாவுக்கும்காதல், இது பிடிக்காத நம்பியார் தேவிகாவை கொன்று விட அந்த காதல் முற்று பெறாமல் போகிறது. இந்த பிறவியில் தன் நண்பனை பார்க்க அவன் ஊருக்கு வரும் கல்யாண்குமாருக்கு, பழைய புனர்ஜென்ம நினைவுகள் வர, அதே தேவிகா தன் நண்பனின் சகோதரியாக, இவர்களின் காதலை பிரித்த கல்யன்குமாரின் தந்தையான நம்பியார் இன்னும் உயிரோடு இருந்து இந்த விஷயம் அவருக்கும் தெரியவர முடிவு என்ன என்பதை திகில் படத்துக்கே உரிய திரைக்கதையுடன் படமாக்கி இருப்பார் ஸ்ரீதர்.
கல்யாண்குமாரின் தந்தையாக "நம்பியார்" நடித்திருப்பார், இவர் கண்ணிலேயே ஒரு கொடூரத்தனத்தை பார்க்கலாம். இரண்டாம் ஜென்மத்திலும் இவர்களின் நிலையை தெரிந்துகொண்ட நம்பியார், தேவிகாவை கொல்ல முயற்சிக்கும் அந்த காட்சி அவரின் நடிப்பிற்கு ஒரு சாட்சி. வயதான வேடத்திற்கு இவரின் ஒப்பனையும் பிரமாதமாக இருந்தது.
வழக்கமாகவே ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்கள் அமர்க்களப்படுத்தும், இந்த படத்தில் இரண்டே பாடல்கள்தாம், "நெஞ்சம் மறப்பதில்லை" மற்றும் அழகுக்கும் மலருக்கும் " என அருமையாக இசையமைத்திருந்தார் MS . விஸ்வநாதன் அவர்கள். இந்த நெஞ்சம் மறப்பதில்லை பாடல் மட்டும் இரண்டு மூன்று முறை மாறி மாறி வரும். இந்த படத்தில் பின்னணி இசையிலும் பரிமளித்திருப்பார் விஸ்வநாதன்.
ஸ்ரீதர் அவர்களின் திரை வரிசையில் முக்கியமானதோர் படமாக "நெஞ்சம் மறப்பதில்லை" அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய இன்னும் சுவையான செய்திகளோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன். ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய தொடர்பதிவினை படிக்க கிழே சொடுக்கவும்.
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்
அன்புடன்
அசோக் குமார்
No comments:
Post a Comment