கல்யாண பரிசின் வெற்றிக்கு பின் இவர் எடுத்த படம் தமிழில் இல்லை , தெலுங்கில் "பெல்லி கானுக" என்ற படத்தை இயக்கினார். பின் தமிழில் ஜெமினி அவர்களையே மீண்டும் கதாநாயகனாக வைத்து மீண்ட சொர்க்கம் என்ற படத்தையும் "விடிவெள்ளி என்ற படத்தையும் இயக்கி வெளியிட்டார். ௧௯௬௧-இல் ராஜ் கபூரை வைத்து "நாசறன" என்ற இந்தி படத்தை இயக்கி இந்தி பட உலகிலும் தடம் பதித்தார் ஸ்ரீதர்.
1961 -இல் மீண்டும் தமிழில் வெற்றி படமான "தேன் நிலவு" படத்தை இயக்கினார். இந்த படத்தை தானே சொந்தமாக "சித்ராலயா" என்ற நிறுவனத்தை தொடங்கி இந்த படத்தை தயாரித்து வெளியிட்டார். ஜெமினி, வைஜயந்தி மாலா மற்றும் நம்பியார் அவர்களைக்கொண்டு இந்த படத்தை இயக்கினார். இந்த படம் ஒரு "ரொமாண்டிக் காமெடி" வகையை சார்ந்தது. காதலர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு மீண்டும் முடிவில் சேருவதுதான் இந்த வகைப்படங்கள். பணக்காரரின் மகளான வைஜயந்தி மாலா மீது ஜெமினி அவர்களுக்கு கண்டதும் காதல். ஆனால் இவர்கள் காதலில் ஒரு சிக்கல். ஒரு சின்ன முடிச்சை மையமாக வைத்து எடுக்கபட்ட படம் இது.
இந்த படத்திற்கும் AM .ராஜா அவர்களே இசை அமைத்தார், பாடல்கள் முழுவதையும் "கவியரசர் கண்ணதாசன்" எழுதினார். மொத்தம் எட்டு பாடல்கள், "ஒ !ஒ ! எந்தன் பேபி" , "காலையும் நீயே", "பாட்டு பாடவா" என அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்ப்பை பெற்றன.
சில சுவாரசியமான சாதனைகளையும் இப்படம் பெற்றது. காஸ்மீரில் படம் பிடிக்கப்பட்ட முதல் தென்னிந்திய படம் என்ற பெருமை பெற்றது. அது மட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய சிதம்பரம் மைதானத்தில் இதன் முதல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. S. ஜானகி அவர்கள் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடி புகழ் பெற்ற பாடகியானார்.
ஸ்ரீதரின் அடுத்த படமான "நெஞ்சில் ஒரு ஆலயம்" என்ற படத்தின் சிறப்புகளை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் .
அன்புடன்
அசோக் குமார்
நல்ல தகவல் , நன்றி பகிர்விற்கு
ReplyDelete