இந்த ஆண்டு கபடி உலகக்கோப்பையை இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வென்றெடுத்துள்ளது என்ற செய்தி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் முன், கோப்பையை வென்று எடுத்தபின் அவர்களின் நிலையை கேட்டபோது, ரொம்பவே பரிதாபமாக இருந்தது. கோப்பையை வென்று, தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியில் வந்தபோது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், ஏன் என விசாரித்தபோது, அதற்க்கான பணம் செலுத்தவில்லையாம் நிர்வாகிகள். சரி ஒரு வழியாக வெளியில் வந்தபோது, கோப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு போக ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவை பிடித்து போயுள்ளனர்.
ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே பேருந்து விபத்தில் சிக்கி உடைகள் அனைத்தும் பாழாகிப்போன நிலையில் ஒரே உடையை அணிந்து, ஆடி கோப்பையை வென்றுள்ளனர். மதிப்பு மிக்க இந்த ஆட்டக்காரர்களை, தலையில் வைத்து கொண்டாடி இருக்க வேண்டாம், குறைந்தபட்சம் தரையில் போட்டு மிதிக்காமலாவது இருக்கலாம்!!!
*************************************************
குஷ்பூவிற்கு வாயில் சனி என்று நினைக்கிறேன், எதையாவது பேசி வம்பை விலைக்கு வாங்குவது. இந்த முறை நமிதா குட்டை பாவாடை அணிவதை வரவேற்கிறேன், என்று பேசி வம்பை விலைகொடுத்து வங்கி இருக்கிறார். இந்த பேச்சை கேட்ட இந்து மக்கள் கட்சி, கோவணம் அணிந்து இவர் வீட்டிற்க்கு போனால் ஏற்றுக்கொள்வாரா என கேல்கி எழுப்பி இருக்கிறார்கள். அனால் இதில் சமந்தப்பட்ட நமீதாவே வாய் மூடி மௌனியாய் இருக்கும்போது குஷ்பு ஏன் இப்படி சம்மந்தம் இல்லாமல் ஆஜராகிறாரோ???
****************************************************
கனிமொழி, ராஜா சமந்தப்பட்ட 2G வழக்கில் அடி மேல் அடி விழுகிறது, இதுவரை வழக்கு விசாரிக்கு வரும் சாக்கிலாவது, வெளியில்் வந்து கொஞ்ச நேரம் இருக்க முடிந்தது, இப்போது அதற்க்கும் வெடி வைத்துவிட்டார்கள்,வழக்கு விசாரணை சிறையிலேயே நடக்கும் என்று அறிவித்துவிட்டார் நீதிபதி, என்னமோ நடக்குது.
******************************************
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒரு வழியாக முடிந்துவிட்டது. கொஞ்சம் சீக்கிரமாக தீர்ப்பை அறிவித்தால் நீதிபதிகளுக்கு புண்ணியமாய் போகும். இதற்க்கு எத்தனை ஆண்டு காலம் எடுத்துகொள்ளப்போகிரார்கள் என்று தெரியவில்லை. !!!
****************************************************
நான் ரசித்த புகைப்படம்
பேஸ் புக்கில் பார்த்து போது இந்த புகைப்படத்தை ரொம்பவே பிடித்து போனது.
*************************************************
ஆண்டுகளை கடந்தும் இளையராஜாவின் இசை நம்மை கட்டி போட்டு வைத்திருப்பதின் மர்மம் மட்டும் ஏனோ எனக்கு விளங்கவே இல்லை. அதிலும் இளையராஜாவின் குரலிலேயே அவர் "தர்ம பத்தினி" படத்திற்காக பாடிய " நான் தேடும்" பாடல் என்னுடைய விருப்பமான பாடல். பாடலின் முதலில் இளையராஜாவின் ஆலாபனை அற்புதம் !!
***********************************************
அன்புடன்
அசோக் குமார்
/மதிப்பு மிக்க இந்த ஆட்டக்காரர்களை, தலையில் வைத்து கொண்டாடி இருக்க வேண்டாம், குறைந்தபட்சம் தரையில் போட்டு மிதிக்காமலாவது இருக்கலாம்!!!
ReplyDelete//
கிரிகட்க்கு தரும் மரியாதையை இதுக்கும் குடுக்கலாம்
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்