காதலிப்பது பெண்கள் வேலை - அதை
கண்டுபிடிப்பது ஆண்கள் வேலையாம்!!!
அதை கூட சரியாக செய்யவில்லை- நான்
பொறுத்து பார்த்தபின் நீயே சொன்னாய் ஒருநாள்!!!
பட்டம்பூச்சியின் சிறகுகளை கடன் வாங்கி பறந்ததை- போல்
அந்த நினைவுகள் நிற்கும் நூற்றாண்டுகள் தாண்டியும்!!!!
பல உன் வினாக்களுக்கு விடை தெரியாமல் விழித்தேன்- நான்
குறுநகை புரிந்து ஏற்றுகொண்டாய் நீ!!!
ஒன்று சேர்வோமா என்ற ஐயம் - உனக்கு
தேற்றுவதை தவிர வழி ஏதும் இல்லை எனக்கு!!!!
காலசக்கரம் சுழன்றது வேகமாய் - ஒருநாள்
என்னிடமிருந்து உன்னை பிரிக்கும் என்று தெரியாமலே மகிழ்ந்தேன்!
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
அழி பேரலையில் அடித்து செல்லப்படும் ஓடம் போல்-ஆனேன்
அழக்கூட முயற்சிக்கவில்லை, ஆண் மகன் அழக்கூடதாம்!!
போகட்டும் என் குழந்தைக்காவது உன் பெயரிட்டு- உன்னை
நினைக்கவேண்டும் வசந்தமாக நீ, என் வாழ்வில் வந்ததற்காக!!!!
அன்புடன்
அசோக் குமார்
(Thanks to google for the image)
கவிதை அருமையிருக்கு தோழரே...
ReplyDeleteஇனி தொடர்ந்து வருகிறேன்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!!
ReplyDelete