Wednesday, May 25, 2011

ஜேப்படி வித்தைக்காரன்


ஒரு கண பொழுதில் மற்றவர் 
பர்சை தன் பாக்கெட்டுக்கு மாற்றும் 
கண் கட்டு வித்தைக்காரன் !!!


ஓடும் பேருந்திலே ஏறி 
ஓடும் பேருந்திலே இறங்கும் 
சாகசக்காரன் !!

பிளேடை மட்டுமே மூலதனமாக 
கொண்டு தொழில் செய்யும் 
வியாபார காந்தம் இவன் !!

குன்று இருக்குமிடமெல்லாம் 
குமரன் இருப்பான் கூட்டம் 
இருக்குமிடமெல்லாம் இவன் இருப்பான் !!

இவனுக்கும் மாதம் 
முதல் தேதி கொண்டாட்டம் 
கடைசி தேதி திண்டாட்டம் !!

விழுப்புண் வாங்கியதில் 
பழுவேட்டரைருக்கு சளைத்தவனல்ல
எல்லாம் பிடிபட்டபோது வாங்கியவை !!

திறந்த பர்சில் கிழிந்த பத்து ரூபாய் 
நோட்டையும் நகை அடகு வைத்த ரசீதையும்
பார்த்து கலங்கினான் என்றால் 
 அவனும் மனிதனே !!

அன்புடன் 
அசோக் குமார்

1 comment:

  1. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கையில் வந்து பார்த்து கம்ண்டிட்டு போகும் படி கேட்கிறேன்.. நன்றி

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_31.html

    ReplyDelete