Sunday, April 24, 2011

சிறைபடுத்ததான் வேண்டுமோ



உன் ஒவ்வொரு பிறந்த நாளையும் 
மறந்துதான் போனேன் நான்
மறுநாள் கோபித்த 
பின் சமாதானமாவாய் !!!

எனக்கும் நினைவில் வைத்து 
கொள்ளவே ஆசை என்ன செய்ய 
மறதி உருவில் வந்து 
உன்னிடம் சிக்கவைக்கிறது!!!

இந்த முறை முன்னமே 
நானறிந்து கேட்டேன் 
என்னவேண்டும் உன் 
பிறந்த நாளுக்கென்று!!!!

விதவிதமான பட்டாம்பூச்சிகளை 
ஜாடியில் அடைத்து கேட்டாய் 
அவற்றின் சுதந்திரத்தை விடுத்து 
சிறைபடுத்த மனமில்லை என்றேன் !!!

என்னைமட்டும் உன் இரு 
கைகளுக்குள் சிறைப்படுத்தலாமா 
என்றாய் செய்வதறியாது 
விக்கித்து நின்றேன் நான்!!!

அன்புடன்
அசோக் குமார்

1 comment:

  1. கருத்தாழம் மிக்க கவிதை நன்று
    சா இராமாநுசம்

    ReplyDelete