என் கண்ணே! வித்தையை
கற்று கொடுப்பவர் எல்லாம்
குரு என்றால் நீயும் என்
குருதான் முத்தமிடும் கலையை
கற்று கொடுத்ததால்!!!
=====================================================
பூங்கா மரத்தடியில்
இரண்டு மணி நேரமாய்
அமர்ந்திருக்கும் என்னை
முறைக்கும் வாட்ச்மேனுக்கு
என்ன தெரியும் நீ தரும்
ஒற்றை முத்ததிற்காக
நான் தவமிருப்பது!!!!
எப்படி சொல்வது!!
என் காய்ச்சலுக்கு காரணம்
கேட்கும் மருத்துவரிடம்
எப்படி சொல்வேன் நேற்று
இரவு நீ கொடுத்த
முத்தம் தான் என்று.
======================================================
காதலில் தோற்றவன்
எஞ்சி இருப்பவை உன்
நினைவுகளும் நீ கொடுத்த
முத்தங்களும் மட்டுமே
======================================================
ஏன் இப்படி
நீ வாய் துடைத்து
கசக்கி எரியும் நாப்கின்கள்
கூட என்னை எள்ளி
நகையாடுகின்றனவே!!!
=======================================================
தோற்க தயார்
வேறந்த சண்டையிலும்
தோற்க தயாரில்லை நான்
உன்னுடன் நடக்கும்
முத்த சண்டையை தவிர
========================================================
நான் ரசித்த காணொளி
இந்த காணோளியை சுவாரசியமாக ரசித்து பார்த்தேன். ஆண்களில் அறியாமையிலும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.
நான் ரசித்த காணொளி
இந்த காணோளியை சுவாரசியமாக ரசித்து பார்த்தேன். ஆண்களில் அறியாமையிலும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.
அன்புடன்
அசோக் குமார்
அசத்தல் கவிதைகள்.
ReplyDeletepls remove word verification.
ReplyDeleteதங்கள் அறிமுகப்படுதியதற்கு நன்றிகள் ஆயிரம் பிரகாஷ்!!!
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி கருன். மாற்றிவிடுகிறேன்