Tuesday, July 19, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- சிபி ராஜ்

எல்லா துறையிலும் தங்கள் வாரிசுகளை புகுத்தி மிளிரவைக்க வேண்டும் என்பது அரசியல் மற்றும் சினிமா துறையில் வாடிக்கை அதற்கு விதிவிலக்கானவர் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் மட்டுமே. இதற்க்கு முன் எழுதிய பதிவுகளின் வரவேற்ப்பு காரணமாக இந்த தொடர் பதிவை விடாமல்  எழுதிக்கொண்டு இருக்கிறேன்.


"தகடு தகடு" என்ற ஒரு வார்த்தையை மட்டும்  சொல்லி, கையை பிசைந்து முலையை மட்டும் காட்டி வந்த  தமிழ் சினிமா வில்லன்களில் இருந்து மாறுபாட்டை காட்டியவர் "புரட்சி தமிழன்" சத்யராஜ். ஆரம்ப கால சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் "காக்கி சட்டை" படத்திற்கு இவரின் மீது எல்லோர் பார்வையும் பட ஆரம்பித்தது. "நூறாவது நாள்" படத்தின் மூலம் கொடூரமான வில்லனாக பரிமளித்தார்.  நூறாவது நாள், எனக்குள் ஒருவன், மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களின் மூலமும் சிறந்த வில்லனாக ஜொலித்தார்.


இயக்குனர் சந்தன பாரதியின் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் அறிமுகமானார்.   இவர் கதாநாயகனாக நடித்த "கடலோரக்கவிதைகள்" படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து இவரை நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.


இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டன. கவுண்ட மணியுடன் இவர் சேர்ந்து நடித்த படங்களில் இருவரின் லொள்ளுகளுக்கு அளவே இருக்காது. தமிழ் சினிமா உலகில் மினிமம் கியாரண்டி நாயகனாக வலம் வந்தார் சத்யராஜ்.  எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வருடத்திற்கு நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்து வந்தார். இன்னொரு பெருமையும் இவருக்கு உண்டு, தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த மொழிகளிலும் இவர் இதுவரை  தலை காட்டியதே இல்லை.


மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிதீவிர ரசிகர். ஒரு முறை எம்ஜீஆரை இவர் சந்தித்தபோது, உனக்கு என்ன வேண்டும் என கேள் என இவரை கேட்டாராம்  எம்ஜீஆர். இவருக்கு என்ன கேட்பது என தெரியாமல் நீங்கள் உடற்பயிற்சி சேயும் கருவிகள் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் என கேட்க. உடனே எம்ஜீஆர் தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாகட்டையை இவருக்கு பரிசாக கொடுத்தாராம். இதை சத்யராஜே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது சொன்ன ஞாபகம்.


காலத்துக்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொள்வதிலும் சத்யராஜ் முன்னோடியாகவே இருக்கிறார். ஒரு நிலைக்கு பிறகு அப்பா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்றும் இவர் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். இமேஜ் என்ற வட்டத்தில் இவர் எப்போதும் சிக்கிகொண்டதில்லை. அதற்க்கு உதாரணம் கதாநாயகனாக நடித்த பின்பு பாரதிராஜா படத்தில் ராஜாவுக்கு அப்பாவாக "வேதம் புதிது " படத்தில் நடித்து மாற்றத்தை உண்டாக்கியவர். தங்கர்பச்சானின் "ஒன்பது ருபாய் நோட்டு படம் இவர் நடிப்பில் ஒரு சிகரம். அது மட்டுமின்றி இவரின் கனவு படமான "பெரியார்" படத்தில் தன் சொந்த குரலில் பேசி நடித்து அதையும் நிறைவேற்றிக்கொண்டார் நம்ம புரட்சித்தமிழன்.


இன்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடமம் பெற்று இருக்கும் நம்ம சத்யராஜின் ஒரே மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியாமல் போனது வருத்தமே.


முதன் முதலாக 2002 -ம் வருடம் "ஸ்டுடென்ட் நம்பர் 1" படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் சொல்லிகொள்ளும்படி இல்லை என்றாலும், இவரை நிலை நிறுத்த சத்யராஜ் அவர்களுடன் இணைந்து "ஜோர்" "வெற்றிவேல் சக்திவேல்" கோவை பிரதர்ஸ்" போன்ற படங்களில் நடித்தார்.

பின்பு "பிரபு சாலமன்" அவர்களின் இயக்கத்தில் "லீ " என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யராஜே தன் மகனுக்காக தயாரித்தார். மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ஓரளவிற்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது.  ஆனாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று நிரந்தரமாக இவரால் ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
கடைசியாக தன் தந்தையின் பாணியை பின்பற்றி வில்லனாக நாணயம் படத்தில் நடித்தார். இன்றுவரை அதுவே அவரின் கடைசி படமாக உள்ளது. பொறுத்திருந்து  பார்ப்போம் இன்னும் வயசிருக்கு. நாற்பது வயதில் பெரிய நட்சத்திரமாக மின்னிகிற விக்ரம் போல இவருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதன் தொடர் பதிவுகளை படிக்க, கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தவும்.

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா 
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்

அன்புடன் 
அசோக் குமார் 

14 comments:

 1. நடிகர் சத்ய ராஜின் நடிப்பு ஒரு தனித்துவமான சிறந்த நடிப்புதான் .....

  ReplyDelete
 2. சத்தியராஜின் இடத்தை இவர் பிடிப்பார் என்று எதிர்பார்த்தேன்...


  ஆனால் ஆமாற்றம் தான்...
  சத்தியராஜ் இன்னும் கலக்குகிறார்...

  ReplyDelete
 3. சிபி க்கு சுட்டாலும் நடிப்பு வராது ...

  ReplyDelete
 4. சத்திய ராஜ் நடிப்பு ரகளை

  ReplyDelete
 5. // koodal bala said...

  நடிகர் சத்ய ராஜின் நடிப்பு ஒரு தனித்துவமான சிறந்த நடிப்புதான் .....//

  ஆமாம் பாலா !!

  ReplyDelete
 6. # கவிதை வீதி # சௌந்தர் said...

  சத்தியராஜின் இடத்தை இவர் பிடிப்பார் என்று எதிர்பார்த்தேன்...
  ஆனால் ஆமாற்றம் தான்...
  சத்தியராஜ் இன்னும் கலக்குகிறார்...

  எதிர்பார்ப்புகள் சில நேரம் போய்த்துவிடுகின்றன !!

  ReplyDelete
 7. Good one. I have been following this series of your blog site. Just a correction for

  //தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த மொழிகளிலும் இவர் இதுவரை தலை காட்டியதே இல்லை.//

  Recently he had acted in a Telugu movie called Sankham , father to the hero Gopichand.

  Before this he acted as a negative hero in a Telugu movie, it was later dubbed into Tamil.

  ReplyDelete
 8. !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  எல்லாம் நேரம் தான்..
  அதும் ஒரு காரணம்

  ReplyDelete
 9. // "என் ராஜபாட்டை"- ராஜா said...

  சிபி க்கு சுட்டாலும் நடிப்பு வராது ... //

  கொஞ்சம் உண்மைதான் நண்பா

  ReplyDelete
 10. // வினையூக்கி said...

  Good one. I have been following this series of your blog site. Just a correction for

  //தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த மொழிகளிலும் இவர் இதுவரை தலை காட்டியதே இல்லை.//

  Recently he had acted in a Telugu movie called Sankham , father to the hero Gopichand.

  Before this he acted as a negative hero in a Telugu movie, it was later dubbed into Tamil. //

  தவறான தகவலுக்கு மன்னிக்கவும் !!! திருத்திகொள்கிறேன் !! என்னை பின்தொடர்ந்தமைக்கு நன்றி !!

  ReplyDelete
 11. அசோக் குமார் அவர்களே, சத்ய ராஜ் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இப்போது உள்ள பிரபல நடிகர்களில் ”விஜய காந்த்” மற்றும் ”விஜய்” மட்டுமே தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்கவில்லை. ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படம் 2002 இல் வரவில்லை. 2003 ல் வெளிவந்தது....

  ReplyDelete
 12. கடும் விமர்சகர் வெங்குடு said...

  அசோக் குமார் அவர்களே, சத்ய ராஜ் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இப்போது உள்ள பிரபல நடிகர்களில் ”விஜய காந்த்” மற்றும் ”விஜய்” மட்டுமே தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்கவில்லை. ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படம் 2002 இல் வரவில்லை. 2003 ல் வெளிவந்தது....//

  நன்றி இனி கொஞ்சம் ஜாக்கிரதையா எழுதறேன் வேன்குடு அவர்களே !!

  ReplyDelete
 13. ஹா ஹா ஹ்ம்ம்ம் எழுதுங்கள் எழுதுங்கள் !!!! வாழ்த்துகள்

  ReplyDelete