அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அன்றைய அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர்கள் பலர், அதில் தங்கவேலு, பாலையா, நாகேஷ் போன்றோர் இதில் பிரபலமானவர்கள். அதிலும் நாகேஷ் இவர்களில் இருந்து தன் வித்யாசமான உடலியல் மொழியால் நடிப்பதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். நகைச்சுவை மட்டுமின்றி நடனம் ஆடுவதில் நாகேஷ் பெரும் திறமைசாலி என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை .
நாடகங்களில் சேர்ந்து பணியாற்றிய நட்புக்காக நாகேஷ் அவர்களை வைத்து 1964 -இல் "சர்வர் சுந்தரம்" என்ற மாபெரும் காவியத்தை படைத்தார் கே. பாலச்சந்தர். பின்பு அவரை கதாநாயகனாக்கி எதிர் நீச்சல், நீர் குமிழி , பாமா விஜயம் போன்ற காலத்தால் அழியாத பாடங்களை தந்து நாகேஷின் திறமையை வெளி கொணர்ந்த பெருமை பாலச்சந்தர் அவர்களையே சாரும்.
நாகேஷின் இயற் பெயர் "கிருஷ்ணா ராவ் குண்டு ராவ்", பிறந்தது 1933 -ம் வருடம் செப்டம்பர் மாதம் 27 ம் தேதி, ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். முதலில் ரயில்வே துறையில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். பிறகு நாடகத்தின்பால் பெரும் காதல் கொண்டு கலைத்துறைக்கு வந்தார். பிறகு நாடகத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த வேலையை உதறினார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நேர்த்தியாக செய்யும் பாங்கு நாகேஷ் அவர்களுக்கு உண்டு. திருவிளையாடல் "தருமி" கதாபாத்திரமும் தில்லானா மோகனம்பாள் படத்தில் "வைத்தி" கதாப்பாத்திரமும் இவரை தவிர வேறு ஒரு மற்று நடிகரை நினைத்து பார்க்க முடியவில்லை.
மகளிர் மட்டும் படத்தில் இவர் பிணமாக நடித்து, பிணமாக கூட நடிக்க முடியும் என மகளிர் மட்டும் படத்தில் நடித்து அசத்தி இருப்பார் நாகேஷ். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு நகைச்சுவை இவர் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் என்று உணர்த்தும். ஒருவர் சொல்லுவார் நாகேஷிடம், என்னோட நாய் லூசி செத்துபோச்சி என்பார், உடனே நாகேஷ் "நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா என்பார்" இப்படி ஒவ்வொன்றும் கேட்டு ரசிக்க கூடியவை.
இவரைப்பற்றி எழுதிக்கொண்டு போனால் இன்னும் இருபது பதிவு எழுதினாலும் போதாது. இவ்வளவு பெயரும் புகழும் இருந்தாலும் இவருடைய வாரிசாக களம் கண்ட இவர் மகன் ஆனந்தபாபு , சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவரால் சோபிக்க முடியவில்லை.
"பாடும் வானம்பாடி" படம் மூலம் திரைக்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதற்க்கு பிறகு "புரியாத புதிர்" மற்றும் "புது வசந்தம்" படத்தில் நடித்திருந்தாலும் ஒரு நல்ல நடிகராக இவரை திரை உலகிற்கு காட்டியது "சிகரம்" படம் மூலமே. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த "சேரன் பாண்டியன்" படம் இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது.
அடிப்படையில் நன்றாக நடனம் ஆடக்கூடியவர் ஆனந்த் பாபு. இதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் ஒரு வாய்ப்புகள் அமையவில்லை. பாலச்சந்தரின் "வானமே எல்லை படம் கூட இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பின் மது மீது கொண்ட காதலால் கலைத்துறையை மறந்தார்.
இயக்குனர் KS ரவிகுமார் இவர் மேல் கொண்ட நட்பால் இவருக்கு மீண்டும் "ஆதவன்"படம் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதன் பின் மறுபடியும் "மதுரை சம்பவம்" படத்திலும் தலை காட்டினார். தமிழ் சினிமாவின் மாபெரும் மறக்கமுடியாத திரை நட்சத்திரமாக மின்ன வேண்டியவர். இன்று மங்கி, பழுது பட்ட மனிதராக வாழ்கிறார்.
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள் பகுதியை தொடர் பதிவாக எழுதி வருகிறேன் இதன் முந்தைய பதிவுகளை படிக்க !!!
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- சிபி ராஜ்
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா

அன்புடன்
அசோக் குமார்
//"பாடும் வானம்பாடி" படம் மூலம் திரைக்கு கதாநாயகனாக அறிமுகமானார். //
ReplyDeleteடி இராஜேந்தரின் தங்கைக் கோர் கீதம் என்று நினைக்கிறேன்
நாகேஷ் பற்றியும் அவர் மகன் பற்றியும் ஓர் அருமையான அலசல். திருவிளையாடல் தருமி பாத்திரம் இன்றும் மனதில் நிற்கும் அருமையான நகச்சுவை நடிப்பு
ReplyDelete