Monday, September 19, 2011

படித்ததும் பிடித்ததும் -20/09/2011

உண்ணாவிரத சீசன் -3

முதல் இரண்டு உண்ணாவிரத சீசன் முடிந்த நிலையில் தனது மூன்றாவது சீசனை ஆரம்பித்து நேற்றோடு முடித்தும் விட்டார் குஜராத் முதல்வர் மோடி. இப்போது எங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம் என்ற பேச்சுதான் அடிபடுகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட உண்ணாவிரதம்தான் இருக்கவேண்டும் போல. ஊழல் ஒழிகிறதோ இல்லையோ நல்ல பப்ளிசிட்டி கிடைக்கிறது. அந்த பாக்கியம் கூட கிடைக்கபெறவில்லை இங்கே கூடங்குளத்தில் 9  நாட்களாக அணு உலை அமைவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் நம் மக்களுக்கு.
==========================================
எங்கேயும் எப்போதும் 

எங்கேயும் எப்போதும் படம், நிறைய பேருக்கு பார்க்கும் ஆவலை துண்டிவிட்டு இருக்கிறது. நானும் இன்னும் படத்தை பார்க்கவில்லை. இங்கே பக்கத்தில் எங்கேயாவது இந்த படம் திரை இடப்பட்டு இருக்கிறதா என தேடிக்கொண்டு இருக்கிறேன். நம்ம ஊரில் இருந்து இருந்தால், இந்நேரம் பார்த்து இருக்காலாம். எல்லா பதிவுகளிலும் இந்த படத்தை பற்றி நல்ல மாதிரியாகவே விமர்சனம் எழுதி இருப்பதை வைத்துதான் எனக்கும் பார்க்கும் ஆவல்.


ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ இந்திய கிரிக்கெட் அணி 


இந்த இங்கிலாந்து தொடரில் நடந்த எல்லா வகையான போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து அவமானத்தால் தலை குனிந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு அணியினரின் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் நிறைய போட்டிகளை பங்கேர்ப்பதால் வரும் வினை இது. இனியாவது இது போன்று நெருக்கமான அட்டவனையை போட்டு வீரர்களை படுத்தி எடுக்காமல் இருப்பது நம் கிரிகெட் சங்கத்திற்கு நல்லது. நம் அணியின் ஏறக்குறைய எல்லோருமே காயம் அடைந்து இருக்கிறார்கள் போல, ஜாகிர் கான், கம்பீர், சேவாக், முனப் படேல், இஷாந்த் சர்மா மற்றும் சச்சின். என்னதான் நடக்கிறதோ.
==========================================
பிச்சைக்காரர்களா ஹாக்கி வீரர்கள்

சீனாவில் நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இருதிப்போட்ட்யில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு தலா 25000  கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களை போல் நடத்தி உள்ளது இந்திய விளையாட்டு வாரியம். அந்த பணத்தை ஏற்க மறுத்து மானம் காத்துக்கொண்டனர் வீரர்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இந்த விளையாட்டை விளையாடவே ஆட்கள் இருக்கமாட்டார்கள் போலும்.
=========================================
நான் ரசித்த புகைப்படங்கள்

இந்த படங்கள் நான் பணி செய்ய போகும் வழியில் வீட்டிற்க்கு முன் அழகுக்காக  பராமரிக்கப்பட்ட பூச்செடிகள்



 =======================================
 நான் ரசித்த காணொளி 
 இந்த காணொளியை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது, பார்த்தவுடன் மலைத்துத்தான் போனேன். இந்த பெண் பார்வதி , என்ன குரல் என்ன நேர்த்தியான பாட்டு. உன்னிமேனன் ஒரு வார்த்தை சொன்னார், "இந்த கள்வரே கள்வரே பாடு மிக பிரபலமாகாத ஒரு பாட்டு ஆனால் நீ பாடி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலபேர் இந்த பாட்டை ரசித்து கேட்பார்கள் என்று சொன்னார், அது அப்பட்டமான உண்மை !! கேளுங்களேன்.!!!!!


அன்புடன் 
அசோக் குமார்

1 comment:

  1. உண்ணாவிரதம் இப்போ ஊறுகாய் போலாகிவிட்டது

    ReplyDelete