Friday, September 16, 2011

தமிழ் சினிமா மறந்துவிட்ட இசைஅமைப்பாளர்கள்- V .குமார்

தமிழ் சினிமாவில் இசைக்கென்று எப்போதும் முக்கியம் உண்டு. ஒரே படத்தில் 30  பாடல்களும் உண்டு, பாடல்களே இல்லாத படமும் உண்டு. இதில் "திருச்சி லோகநாதன்" தொட்டு இன்றைய "யுவன் ஷங்கர் ராஜா" வரை எல்லோரும் நட்சத்திரங்களாக மின்னி வருகின்றனர். இதில் திறமை இருந்தோ இல்லாமலோ இந்த இசை துறைக்கு வந்து மின்னமலேயே மறந்த, மறைந்த இசை அமைப்பாளர்களை பற்றி கொஞ்சம் விரிவாக அலசலாம் என்று இருக்கிறேன்.

குட்டுபட்டாலும் மோதிர கையால் குட்டுபடவேண்டும் என்று ஒரு வாக்கு உண்டு. அது போல "இயக்குனர் சிகரம்" பாலச்சந்தர் அவர்களால் "நீர் குமிழி படத்தில் அறிமுகபடுத்தப்பட்டு மெலடி கிங் என  பட்டம் பெற்ற V .குமார் அவர்களை பற்றிதான் இந்த பதிவில் எழுத இருக்கிறேன்.

முதலில் மியூசிக் கண்டக்டராக தன் பணியை ஆரம்பித்த குமார் அவர்களுக்கு பாலச்சந்தர் அவர்கள்  முதல் வாய்ப்பை கொடுத்தார். ஹார்மோனியம், பியானோ வாசிப்பதில் வாசிப்பதில் கை தேர்ந்தவர் குமார் அவர்கள்.  முதல் படத்தில் இவருக்கு இசை உதவிகளை செய்தது சேகர் என்ற மனிதர். இவர் வேறு யாருமல்ல இசை புயல் A .R . ரஹ்மானின் தந்தை. முதல் படத்திலேயே "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்ற பாடலை கொடுத்து தானும் ஒரு திறமைசாலி என்பதை திரை உலகிற்கு காட்டினார்.  சீர்காழி அவர்களின் கந்தர்வ குரலில் இந்த தத்துவ பாடலை கேட்போர் மெய்சிலிர்ப்பர்.

 

 1960 களில்  வெளிவந்த எல்லா பாலச்சந்தர் படங்களான நீர் குமிழி, எதிர் நீச்சல், இரு கோடுகள், அரங்கேற்றம், மேஜர் சந்திரகாந்த், வெள்ளி விழா என எல்லா படங்களுக்கும் இசை அமைத்தவர் நம்   V .குமார். 


முதல் படத்தில் இசை அமைக்க வாய்ப்பு பெற்றபோது இதை தன்னால் சிறப்பாக செய்ய இயலுமா என அச்சப்பட்டு இந்த வாய்ப்பை இழக்க இருந்தவர்தான் நம் V .குமார், ஆனாலும் பாலச்சந்தர் அவர்களின் ஊக்கத்தினாலும் சேகர் அவர்களின் பக்கபலத்தாலும் அவர் இசை உலகில் அடி எடுத்து வைத்தார்.


"வெள்ளி விழா" படத்தில் இவர் செய்த ஒரு மாறுதல் தமிழ் சினிமாவிற்கு  மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது என்றால் மிகை இல்லை. சுசீலா அவர்கள் மென்மையான பாடல்களையும் LR . ஈஸ்வரி அவர்கள் கொஞ்சம் மேலான குரலுடனும் அதுவரை பாடி மக்களுக்கு பரிச்சயப்பட்டு இருந்தனர். V .குமார் இவர்களுக்கு பாடல்களை மாற்றி கொடுத்து LR . ஈஸ்வரி அவர்களால் மென்மையாகவும் பாட முடியும் என நிருபித்த பாடல்தான் "காதோடுதான் நான் பேசுவேன்" என்ற பாடல்.


இசை ஜாம்பவான்கள் MS . விஸ்வநாதன் மற்றும் KV .மகாதேவன் அவர்களின் அலையில் இவர் பெயரும் காணமலேயே போனது இவரின் துரதிர்ஷ்டம்தான். ஆனாலும் காலம் உள்ளவரை இவரது பாடல்களான "தாமரை கன்னங்கள், அடுத்தாத்து அம்புஜத்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், உன்னிடம் மயங்குகிறேன் உள்ளதால் நெருங்குகிறேன் போன்ற பாடல்கள் மூலம் குமார் அவர்கள் நினைவில் நம்  நிற்பார் என்பது திண்ணம்.

தகவல் தொகுப்பு :


அன்புடன் 
அசோக் குமார் 

3 comments:

  1. நல்ல அலசல் . மிகவும் ரசித்து வாசித்தப் பதிவு

    ReplyDelete
  2. நன்றி சங்கர் !! உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் !!!!

    ReplyDelete
  3. எனக்கும் வி.குமாரின் பாடல்கள் பிடிக்கும் அதுவும் வெள்ளிவிழா பாடல்கள்... சான்சே இலலை. ராஜநாகம் என்ற புகழ்பெறாத படத்தில் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்று ஒரு பாடல் போட்டிருப்பார் கேட்டுப் பாருங்கள். அற்புதம்!

    ReplyDelete