Saturday, September 24, 2011

தேன் குரலுக்கு சொந்தக்காரி-பார்வதி

ஊருக்கு போய் இருக்கும்போது எதேச்சையாக விஜய் டிவியை தட்டிக்கொண்டு இருந்தபோது ஒரு சின்ன பொண்ணு பாடிய பாட்டு என்னை ஏதோ தொந்தரவு செய்தது போல் இருந்தது. அப்போது ஊரில் சொந்தங்களோடு இருந்ததால் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

போன வாரம் திடீரென அந்த பாட்டு மட்டும் எனக்கு ஞாபகம் வந்தது, சரி நமக்குன்னு இருக்கிற ஒரு அட்சயபாத்திரம் யூ டியுபில் சில காணொளிகளை தேடியபோது அந்த பாட்டு கிடைத்தது. நிஜமாகவே கொஞ்ச நேரம் என் மனதை விட்டு அதை ரசித்துக்கொண்டு இருந்தேன். ஆத்மார்த்தமாக பாடுவது எல்லோருக்கும் அமைவதில்லை என்று பாடகர் ஸ்ரீனி சொன்னார் இந்த பாடல் முடிந்தவுடன். அது எவ்வளவு உண்மை என்று இந்த பாடலை கேட்டால் புரியும். ராவணன் படத்தில் எல்லோரும் "உசிரே போகுது " பாட்டை கொண்டாடிக்கோடு இந்த நல்ல பாடலை மறந்துதான் போனோம். 


"கள்வரே கள்வரே" பாடலின் உண்மையான காணொளி இது . உண்மையில் இந்த பெண் பாடிய பிறகு நிறைய பேரின் விருப்ப பாடலாக இது இருக்கும் என நம்புகிறேன்.

இதனுடைய ஹிந்தி பதிப்பு பாடல்



இந்த தேன் குரலுக்கு சொந்தக்காரி பார்வதி, நிஜமாகவே அவர்களின் அம்மாவிடம் கேட்கவேண்டும் "பார்வதி குழந்தையா இருக்கும்போது பால் கொடுத்து வளர்த்திங்களா இல்லை சுத்த தேன் கொடுத்து வளர்த்திங்களா அப்படின்னு. பாடும்போது தங்களை கஷ்டபடுத்திக்கிட்டு பாடுறவங்க ஒரு ரகம் தான் பாடி மத்தவங்களை கஷ்டபடுத்தவரங்க  ரகம். ஆனா இந்த பொண்ணு தானும் கஷ்டபடாம பாடி நம்மளையும், சந்தோசபடுத்துது . இவ்வளவுக்கும் முறையாக சங்கீதம் கூட படித்ததில்லை, எல்லாம் கேள்வி ஞானம்தான். எல்லோருக்கும் ஒரு திறமை பிறக்கும்போதே இருக்கும் அதை கண்டறிவது கடினம்னு கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் இவர்கள் எல்லாம் பெரும் பாக்ய சாலிகள் போலும் இவர்களின் திறமை  என்னவென்று கண்டறிந்துகொண்டதுதான்.



அந்த "கள்வரே கள்வரே" பாடலை எனக்கு "ஸ்ரேயா கோஷால்" பாடியதை விட இந்த பர்வத்தின் குரலில் கேட்கவே ரொம்பவும் பிடிக்கிறது. இந்த மலையாளிகளின் குரலை எல்லாம் கேட்கும்போது கொஞ்சம் பொறாமை கூட வருகிறது. என்ன செய்வது அவர்கள் திறமைக்கு நான் ரொம்பவே மதிப்பளிக்கின்றேன்.   நல்ல எதிர்க்காலம் இருக்கிறது இந்த தேன் குரல் தேவதைக்கு.

அன்புடன் 

அசோக் குமார்

1 comment: