Thursday, February 15, 2018
Wednesday, July 13, 2016
நான் ரசித்த கீச்சுகள் 13/07/2016
ஒ.உ.சிந்தனைகள் @bommaiya
நாயர் கடைங்கள்ல டீ சாப்பிடுற அத்தன பேரும் மிடில் கிளாஸ் தான் # அவர் என்னைக்கு நமக்கு ஃபுல் கிளாஸ் டீ போட்டுக் கொடுத்திருக்கார்...!
---------------------------------------------------------------------------------------------
sʍιʟɛʏ вօʏ™ @smileyB0Y
கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்.😊
சரியாகவில்லையென்றால்,
இது கடைசி இல்லை என்று நம்புங்கள்..😎
----------------------------------------------------------------------------------------------
ஜெய் VJ @i_am_v_jey
எல்லாருடைய தேடுதலும் அன்பாய் இருப்பதினால் தான்..எல்லாருடைய குற்றசாட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்பதாய் இருக்கிறது..
----------------------------------------------------------------------
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz
இந்த உலகத்துல
கடமைச் செய்யவே
காசு எதிர்பார்க்குது சமூகம்
கருணை காட்ட
காசு எதிர்பார்க்கதா
--------------------------------------------------------------------
காம்ரேட் பாலா @SelvarajanBala
நாடு கேட்பது தீவிரவாதம் என்றால்
நாடு கேட்பது பயங்கரவாதம் என்றால்
என்ன மயிருக்கு பிரிட்டிஷ்காரன்கிட்ட நாடு கேட்டீங்க?
------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் @aruntwitz
3G நெட் கார்டு போட்டு, வேலிடிட்டி டைம் முடியும் போதும், டேட்டா பேலன்ஸ் மிச்சம் வைத்திருப்பவர்களால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.
--------------------------------------------------------------------------------
காம்ரேட் பாலா @SelvarajanBala
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.
---------------------------------------------------------------------------
⭐PãlãñîKÎÑG ⭐VJ @palanikannan04
ஒருபுறம் மரம் வளர்ப்போம்னு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசாங்கம்,
மறுபுறத்தில் கான்டிராக்ட் விட்டு காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது..
----------------------------------------------------------------------
ர.விவேக் @vivekchandran07
எப்படியும் விமர்சனம் செய்யத்தான் போகிறீர்கள், ஆதலால் நான் நினைத்ததை அனைத்தும் கூச்சமின்றி செய்யப்போகிறேன்.
அன்புடன்
அசோக் குமார்
Labels:
அனுபவம்,
நான் ரசித்த கீச்சுகள்
Friday, March 18, 2016
கோட்டை ராணியும் என் சகுன அனுபவமும்
ஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் பாடம் கற்கலாம் என உணர்த்திய அனுபவத்தை தான் எழுதலாம் என்று இருக்கிறேன். என் பால்ய காலங்களில் நண்பர்களாலேயே அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவன் நான். நான் உறங்கும் நேரம் உணவருந்தும் நேரம் தவிர ஊரின் நடுவே இருக்கும் அரசமர்த்தடிதான் எங்கள் ஊரின் மொத்த இளசுகளுக்கும் வேடந்தாங்கல். கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பாளி அல்லன்.
அந்த வயது பால்யங்களுக்கு உண்டான குறும்பும் கேளிக்கைகளும் எனக்கும் உண்டு என்றாலும் அதில் நான் பங்கேற்பதில்லை. எட்ட இருந்து ரசிப்பதோடு சரி. என்னைப்பற்றி ஏதேனும் புகார் வந்தால் எங்கள் வீட்டின் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்து விடும் அந்த பயம் தான்.
இப்போது இருப்பது போல் கழிப்பிட வசதியால் பற்றி பெரிய அளவிற்கு விழிப்புணர்வு கொண்டதல்ல எங்கள் ஊர். காலையில் எழுந்தவுடன் எங்கள் ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவருடைய கொல்லையில் தான் எங்கள் ஊர் முழுவதும் சென்று எருவிடும். கதைக்கு செல்லும் முன் இந்த கதை நாயகியை பற்றி சொல்லியாகவேண்டும்.
வயது அப்போதே எழுபதை தொட்டு இருக்கும். குழி விழுந்த கன்னங்கள். சற்றே கூன் விழுந்த தேகம். என்னை என்னும் வஸ்துவையே பார்த்திராத நரைத்த தலை. மண்வாசனை காந்திமதி போல் பேச்சில் எப்போதும் ஒருவித அதிகாரம். இத்தனை விசயங்களுக்கும் சொந்தக்காரிதான் "கோட்டை ராணி". அவளுக்கு உண்மையான பெயர் எங்களுக்கு தெரியாது. ஏன் அவளுக்கு "கோட்டை ராணி" என்ற பெயர் வந்தது என்றும் எங்களுக்கு தெரியாது.
ஒல்லியான, சுருக்கங்கள் விழுந்த சுமாரான உயரம். யாரையும் எடுத்து எரிந்து பேசும் குணம். வம்பு சண்டைக்கும் போவாள் வந்த சண்டையையும் விடமாட்டாள்.ரோட்டில் போகும் நாய் கூட இவள் வீடு வந்தால் வேகமாய் கடந்து போய் விடும்.
இப்படியாக இருந்த கோட்டை ராணியிடம் சுடு சொல் வாங்க போகிறோம் என தெரியாமலே விடிந்தது. வழக்கம் போல் என் நண்பனும் வந்தான். என்ன டா மணி ஆச்சு... போலாமா என்றான். நானும் அவனும் கெளம்பி போய்கொண்டு இருக்கையில்....................திடீர் என எங்கள் எதிரில் வந்து நின்றால் கோட்டை ராணி. காலையில் வாசல் சுத்தம் செய்ய மாட்டு சாணம் அள்ள செல்கில்றால் போல் பட்டது. அவளை பார்த்து விட்டு போனால் எந்த காரியமும் நடக்காது என ஊர் முழுக்க பேச்சு. என் நண்பனுக்கு அது ஞாபகம் வந்துவிட்டது போலும். என்ன நினைத்தானோ அவளை பார்த்த மாத்திரத்தில் என் கையை பிடித்து வந்த வழியே திரும்ப இழுத்தான்.
நாங்கள் அவளை பார்த்து உடனே திரும்புவதால் கோட்டை ராணியும் கண்டுவிட்டாள். நாங்கள் திரும்பிய திசையை பார்த்து " ஏண்டா என்னை பார்த்துவிட்டு போனால் உங்களுக்கு வருவதும் நின்னு போயிடுமோ? என்று கேட்டாளே ஒரு கேள்வி. எங்கள் இருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. நான் ஒன்றுமே பேசவில்லை. என் நண்பன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.
அன்றில் இருந்து யாரும் சகுனம் என்று சொன்னாலே கோட்டை ராணியின் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.
Monday, March 14, 2016
நான் ரசித்த கீச்சுகளின் தொகுப்பு
போதிசத்வன் @yasavi
காதல் ஜோடிய வெட்டினப்புறம் திமிரோட ட்ரிபுள்ஸ் போரானுங்க பாருங்க!!! கண்டிப்பா புடிச்சு ஃபைன் போட்டே ஆகணும்!! ராஸ்கல்ஸ்!! #சட்டம்
------------------------------------------------------------------------------------------------
மீனம்மா @meenammakayal
ஆற்றங்கரை, மாந்தோப்பு, கிணற்றடி, க்கு சற்றும் ஈடாகாது தற்காலத்தின் மால், சினிமா, பீச் ஊர்சுற்றிக் காதல் தனிமைகள்.
------------------------------------------------------------------------------------------------
Janu_B @JanuBhaskarG
யாருமில்லையேனு தோணும்போ கஸ்டமர்கேருக்கு போன் போட்டு பேசினா போதும். அவங்களோட பணிவான பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..
-----------------------------------------------------------------------------------------------------
ǟռռǟɮɛʟʟɛ...!! @jeniferak2
சொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டு நரகத்திற்கு வழி கேட்டானாம் :-|
----------------------------------------------------------------------------------------------------
The Neel @YoursNeel
பகுத்தறிவு என்பது ஆறறிவுல்ல மனித இனத்திற்கு மட்டுமே படைக்கப்பட்டது.அஃதல்லாதவர்கள் மனித இனங்களில் வாரா.
-----------------------------------------------------------------------------------------------------
தேன்மிட்டாய் IPS @Ohmslaw_
பேசிகிட்டே இருப்பது மட்டுமல்ல,புரிந்துக்கொண்டு பேசாமலிருப்பதும் அன்பு தான்.
----------------------------------------------------------------------------------------------------
இளந்தென்றல் @Elanthenral
ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டதும்
அச்சச்சோன்னு சொல்றவன்லாம் புத்தனுமில்லை
அத இமிட்டேட் பண்ணி கூவுறவன்லாம் கல் மனசுக்காரமில்ல
-------------------------------------------------------------------------------------------------------
மீனம்மா @meenammakayal
விரோதிகளிடம் வாழ்ந்து காட்டுவதில் எல்லாம் விருப்பம் இல்லை. என்னை விரும்புபவர்களின் மகிழ்வுக்காகவேணும் நன்றாக வாழ ஆசை.
------------------------------------------------------------------------------------------------------
பிரம்மன் @altappu
அம்மா வாய் வழியா புக்கை தூக்கி போட்டு வயித்துல இருக்கற குழந்தைக்கு ஏன் ஹோம் வொர்க் தர்றதில்லை?! பத்து மாசத்தை வேஸ்ட் பண்றானுகளே
-------------------------------------------------------------------------------------------------------
சட்டம்பி கடவுள் @stalinsk50
நான் தெரிந்தே செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்படும் போது அது எனக்கு தெரியாமல் நடந்த தவறாகிவிடுகிறது..
-----------------------------------------------------------------------------------------------------
✯சண்டியர்✯ @BoopatyMurugesh
எங்க CEO மகளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..இல்லைனா நான் வேலை பார்க்குற ஆர்வத்த பார்த்து எனக்கே கட்டிவச்சுருவாரு...
----------------------------------------------------------------------------------------------------
குழந்தை அருண் @aruntrichy0
நம்ம பிரச்சினைக்கு அடுத்தவர்கள் சொல்லும் அட்வைஸ், ஆலோசனையாக மட்டுமே இருக்கலாம், அதுவே தீர்வாகி விடாது.
----------------------------------------------------------------------------------------------------
வி.தமிழ் சுகி @Tamilsuhi
எது மகிழ்ச்சி என்ற
ஓர் நீண்ட தேடலில்
முன் நாளில் துன்பம் என
தூக்கி வீசப்பட்ட ஒன்று
முன் நிற்கிறது
-----------------------------------------------------------------------------------------------
Wednesday, October 14, 2015
நான் மீண்டு விட்டேன்.
நான் இந்த தளத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். காலம் தான் எத்தனை பெரிய அரக்கன். இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தேறி விட்டன. தனிமையில் காலத்தை தள்ளிக்கொண்டு இருந்த நான் இன்று இரண்டு சொந்தங்களை அடைய பேறு பெற்று இருக்கிறேன். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை அறியாதவன் அல்ல நான். ஆகையால் இந்த மாற்றங்கள் எனக்கு சிறு சங்கடங்களை கொடுத்தாலும் நான் பேறு மகிழ்ச்சியையே இந்த நொடி வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன்.
வசந்தம் மீண்டும் தொடரும்
Saturday, March 31, 2012
நான் பேச்சிலராக இருப்பதில் என்னை விட வருத்தபடுபவர்கள்
தினமும் ஒரு மணி நேரமாவது பேசும் உற்ற நண்பன் காதலி கிடைத்ததில் இருந்து தலைமறைவு#ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்
**********************************************
தூண்டிலைப்போட்டு மீனுக்காக காத்திருப்பவனிடம் தான் கேட்கவேண்டும் பொறுமையின் மகத்துவம்#தத்துவம்
**********************************************
தமிழின் மகத்துவம் தமிழ் நாட்டில் வாழும் வரை புரியவே இல்லை # என்னவாக இருக்கும்
***********************************************
மழை பொத்துகிட்டு ஊத்துது. வானத்துள் ஓட்டை ஏதும் விழுந்திருக்குமோ #டவுட்டு
*************************************************
குழந்தையாய் இருக்கும்போது தீபாவளிக்கு பணம் போதாதென்று உண்ணாவிரதம் இருப்பதில் ஆரம்பிக்கிறது நம் போராட்டம் #வாழ்க்கை
***************************************************
என்னை விட என்னை சுற்றி இருப்பவர்களுக்குதான் ரொம்பவே வருத்தம் நான் பேச்சிலராக இருப்பதில்#முடியல
**************************************************

இந்தியாவில் இருந்தேன்-வேலை இல்லை என்றார்கள். அமெரிக்காவில் வேலை
செய்கிறேன் இந்தியாவில் நீ இல்லைஎன்றாங்க#பொண்ணை பெத்த புண்ணியவான்கள்
**************************************************** Saturday, March 3, 2012
படித்ததும் பிடித்ததும்-03/03/2012
ஈரானின் மீது போர் தொடுப்பதில் நீயா நானா என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் யோசித்துக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அமேரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மூக்குடைப்பட்டு, பொருளாதாரமே சரிவுற்று கிடக்கிறது. இந்த நிலையில் இன்னொரு போரை அமெரிக்கா அரசு திணித்தால் அமெரிக்க மக்களே தெருவில் இறங்கி கல் வீச தயாராகி விடுவார்கள். இந்த விஷயம் ஈரானுக்கும் நன்றாகவே தெரியும். இஸ்ரேல ஒரு போரை நடத்தும் அளவுக்கு வல்லமை கொண்ண்ட நாடா என்பது சந்தேகமே. ஈரானின் அணு விஞ்ஞானியை கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில் இருக்கிறது ஈரான். நேற்று கூட போர் வேண்டாம் என ஒபாமா இஸ்ரேல அதிபர் நெதன்யாவுடன் பேசியதாக செய்திகள் வெளி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தில் சமீப காலமாக விஜயை கலாய்ப்பதை நிறுத்திவிட்டார்கள் போலும். அதற்கு பதிலாக விஜய் டிவியில் "ஒரு கோடி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூர்யாவை மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விகளை எல்லாம் இரண்டு வயது குழந்தை கூட சொல்லிவிடும். இதில் சூர்யாவின் குற்றம் ஏதும் இல்லை என்றாலும் பணம் தருகிறார்கள் என்பதற்காக இப்படி நிகழ்ச்சிகளில் மாட்டிக்கோடு அசிங்கப்படுவானேன்!!!
*************************************************
இணையத்தில் சமீப காலமாக விஜயை கலாய்ப்பதை நிறுத்திவிட்டார்கள் போலும். அதற்கு பதிலாக விஜய் டிவியில் "ஒரு கோடி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூர்யாவை மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விகளை எல்லாம் இரண்டு வயது குழந்தை கூட சொல்லிவிடும். இதில் சூர்யாவின் குற்றம் ஏதும் இல்லை என்றாலும் பணம் தருகிறார்கள் என்பதற்காக இப்படி நிகழ்ச்சிகளில் மாட்டிக்கோடு அசிங்கப்படுவானேன்!!!
************************************************************
இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் போல. கிரிக்கெட் என்பது ஒரு மதம் போல பாவிக்கப்டுவது நம்ம ஊரில் மட்டுமே. ஒரு பிளேயர் சரியாக விளையாடவிட்டாலும் அவரை தூக்கி அடிக்க மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தயங்குவதில்லை, சமீபத்திய உதாரணம் ரிக்கி பாண்டிங் . மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு உலககோப்பை வங்கி தந்த ஆளுக்கு இந்த நிலைமை. நாம் இன்னும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்யாமலே இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு கால அளவு இருக்கிறது, இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரெப்ரெஷ் பொத்தானை அழுத்தவேண்டிய நேரமிது, விழித்துகொள்ளுமா இந்திய கிரிக்கெட் வாரியம்???
******************************************************
அரவான் படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் பதிவுகளில் படித்து ரொம்பவே குழம்பி போயுள்ளேன், நல்ல இருக்கு என ஒரு சாரரும் மொக்கை என ஒரு சாரும் சொல்லி என்னை ரொம்பவே குழப்பி விட்டுள்ளனர். ஆனாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன், எந்த பெரிய எதிர்ப்பார்ப்பும் வைத்து கொள்ளாமல்!!!
****************************************************
நம்ம டி ஆரோட ரீமிக்ஸ் பாட்டு!!!
********************************************
டி ஆருக்கு அப்படி ஒரு முகம் இருந்தாலும் இந்த பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். உயிருள்ளவரை உஷா படத்திற்காக "வைகை கரை கற்றே நில்லு" அவரே இசையமைத்து எழுதிய பாடல். இதில் ஸ்பெஷல் என்னனா யேசுதாசின் குரல். காதல் சோகத்தை இதை விட எப்படி பாடி விட முடியும்.
****************************************************
அன்புடன்
அசோக் குமார்
Labels:
படித்ததும் பிடித்ததும்
Friday, February 17, 2012
இயக்குனர் ஸ்ரீதரும் மக்கள் திலகம் எம் ஜி ஆரும்
சிவாஜியை வைத்து சிவந்த மண் மற்றும் ஊட்டி வரை உறவு என்று இரண்டு படங்களை தந்த ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகம் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படம்தான் "உரிமைக்குரல்". இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீதர் அவர்களின் "சித்ராலயா" நிறுவனம் கடன் சுமையில் சிக்கி இருந்ததாம் . இதை அடைக்க எம் ஜி ஆரை வைத்து ஒரு படம் எடுத்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்று முடிவெடுத்து எம் ஜி ஆரை அணுகினார். மக்கள் திலகம் எம் ஜி ஆரும் உடனே ஒப்புகொண்டு "உரிமைக்குரல்" படத்தில் நடித்து கொடுத்தார்.
அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம் ஜி ஆர், நடித்த படங்களில் எல்லா அம்சமும் இருக்க வேண்டும். இன்றைய மசாலா படங்கள் போல , அம்மா செண்டிமெண்ட், மரத்தை சுற்றி ரெண்டு காதல் பாடல் , ஒரு கதாநாயக துதி பாடல், நல்லதாக ரெண்டு சண்டைகாட்சி என எல்லாமும் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை ஸ்ரீதர் நிறைய கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக எடுத்து வந்தார். இதையே ஒரு சவாலாக எடுத்துகொண்டு அவர் எழுதி இயக்கிய படம்தான் "உரிமைக்குரல்" .
படத்தின் கதை என்று பாரத்தால், அண்ணன் தம்பிக்குள் நடக்கும் பாசப்போராட்டம் அதை தொடர்ந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நம்பியாரை பழிவாங்குவது, இடையில் கொஞ்சம் லதாவோடு மோதல் பிறகு காதல் பின் சுபம். தன வழக்கமான முக்கோண காதல் கதையில் இருந்து வெளியே வந்து ஏறக்குறைய ஒரு மசாலா படத்தை கொடுத்தார் ஸ்ரீதர்.
மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு இது போன்ற பத்திரங்களில் நடிப்பது கை வந்த கலைதானே. அதிலும் இந்த படத்தில் அவர் உடைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான வேட்டிக்கு பதிலாக சுருள் வைத்த வெட்டி மற்றும் ஒற்றை குதிரை பூட்டிய ரேக்ளா வண்டி என அமர்க்களம்.
படத்திற்கு இசை MS. விஸ்வநாதன் அவர்கள் அமைத்திருந்தார். "ஆம்பளைங்களா" மற்றும் "விழியே கதை" பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், "மாட்டிகிட்டாரடி" , "பொண்ணா பொறந்த", "ஒரு தாய் வயிற்றில் பிறந்த" பாடல்களை கவிஞர் வாலியும்எழுதி இருந்தனர்.
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அன்புடன்
அசோக் குமார்
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அன்புடன்
அசோக் குமார்
Labels:
இயக்குனர் ஸ்ரீதர்,
சினிமா
Tuesday, February 7, 2012
படித்ததும் பிடித்ததும்- 07/02/12
சட்ட சபையில் உட்கார்ந்து கொண்டு எதை பார்க்க கூடாதோ எங்கே பார்க்க கூடாதோ அதை பார்த்து கொண்டு இருந்ததால் இன்று நாடே அந்த மனிதர்கள் (மனிதர்கள் தானா???) மீது காரி உமிழாத குறையாக திட்ட வேண்டும் போல் இருக்கிறது.
********************************************
இந்திய கிரிக்கெட் அணியின் சொதப்பலான ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன சஹாரா நிறுவனம் தான் வழங்கி வந்த ஸ்பான்சரை பிடுங்கி ஹாக்கி அணியிடம் கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டிய விஷயம். காலம் கடந்தாவது நல்லது நடந்தால் சரிதான். இனியாவது இந்தியாவின் தேசிய விளையாட்டு புத்துயிர் பெறட்டும்.
*********************************************
டைம் (TIME) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நூறு சிறந்த உலக படங்களின் வரிசையில் சத்யஜித் ரே இயக்கிய "The Apu Trilogy" என்ற படமும், தமிழில் மணிரத்னம் இயக்கி வெளிவந்த "நாயகன் படமும் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பு இங்கே .
*******************************************
யு டியூபில் இந்த காணொளியை எதேச்சையாக காணும்படி நேர்ந்தது. "தேவர் மகன்" படத்தில் இடம் பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடல் உருவான கதை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
******************************************************
நேற்றுதான் நண்பன் படம் பார்த்தேன், ஏற்கனவே "3 idiots" படத்தை மூன்று நான்கு முறை பார்த்துவிட்டேன், இதில் புதிதாக ஷங்கர் என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கவே இந்த படத்தை பார்த்தேன். படத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது சத்யன் மட்டுமே. படத்தில் சத்யராஜ் கேரக்டரும் சத்யன் கேரக்டரும்முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் இருவருமே தங்கள் பத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அமீர் கான் போலவே முகபாவங்களை கொடுத்திருக்கிறார் விஜய் அட்டை காபி தான் என்றாலும் நல்லாவே இருந்தது.இந்திய கிரிக்கெட் அணியின் சொதப்பலான ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன சஹாரா நிறுவனம் தான் வழங்கி வந்த ஸ்பான்சரை பிடுங்கி ஹாக்கி அணியிடம் கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டிய விஷயம். காலம் கடந்தாவது நல்லது நடந்தால் சரிதான். இனியாவது இந்தியாவின் தேசிய விளையாட்டு புத்துயிர் பெறட்டும்.
*********************************************
டைம் (TIME) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நூறு சிறந்த உலக படங்களின் வரிசையில் சத்யஜித் ரே இயக்கிய "The Apu Trilogy" என்ற படமும், தமிழில் மணிரத்னம் இயக்கி வெளிவந்த "நாயகன் படமும் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பு இங்கே .
*******************************************
யு டியூபில் இந்த காணொளியை எதேச்சையாக காணும்படி நேர்ந்தது. "தேவர் மகன்" படத்தில் இடம் பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடல் உருவான கதை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
******************************************************
*************************************************
spider man படத்தின் புதிய படம் ஒன்றின் ட்ரைலர் வெளி வந்திருக்கிறது. படம் இந்த சம்மரில் வெளியிடப்படும் போல தெரிகிறது.
**********************************************
"இசைஞானி இளையராஜாவின்" இசை அறிவைப்பற்றி நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை.குறிப்பாக"ஹே ராம்" படத்தில் "இசையில் தொடங்குதம்மா" பாடல் என்னை எப்பவும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போது கேட்டாலும் ஏதோ புதிதாக கேட்பது போல் இருப்பதே இதன் சிறப்பு என்று நினைக்கிறேன். இந்த பாடலின் குரல் தேர்வும் அப்படியே, "அஜய் சக்ரபோர்த்தி" என்ற பெங்காலி பாடகர் தமிழை இவ்வளவு சிறப்பாக உச்சரித்திருக்கிறார்.
***********************************************
அன்புடன்
அசோக் குமார்
Labels:
படித்ததும் பிடித்ததும்
Monday, January 23, 2012
காலத்தால் அழியாத பாடல்கள்- நாகேஷ் 1
இந்த பதிவில் நாகேஷ் நடித்து இடம் பெற்ற பாடல்களை தொகுத்திருக்கிறேன்.
படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்: மலரென்ற முகம்
பாடியது: LR . ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி
=================================================
படம்: மேஜர் சந்திரகாந்த்
பாடல்: ஒரு நாள் யாரோ...
பாடியது:
P. சுசீலா
இசை: விஸ்வநாதன் &ராமமூர்த்தி
படம்: எதிர் நீச்சல்
பாடல்: சேதி கேட்டோ ...
பாடியது: LR . ஈஸ்வரி
இசை: V. குமார்
###################################################
படம்: எதிர் நீச்சல்
பாடல்: என்னம்மா பொன்னம்மா ...
இசை: V. குமார்
#######################################################
படம்:பூவா தலையா
பாடல்: பூவா தலையா ...
பாடியது:
சீர்காழி கோவிந்தராஜன் & T.M. சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன்
######################################################
அன்புடன்
அசோக் குமார்
Labels:
காலத்தால் அழியாத பாடல்கள்
Friday, December 30, 2011
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆங்கில புத்தாண்டு வந்தாலே, நம்ம ஆளுக பண்ணும் ரவுசு சொல்லி மாளாது. புகைப்பதை நிறுத்தும் யோசனைகளும் குடி இன்னபிற கேட்ட பழக்கத்திற்கு விடை சொல்ல போகிறேன் என்ற சூளுரைகளும் வரும். நான் கூட பள்ளி படிக்கும் காலங்களில், சரியாக 12.01 மணிக்கு அதாவது புத்தாண்டு ஆரம்பிக்கும்போது ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு பத்திவரை படித்து
பின்பு உறங்கி இருக்கிறேன். என்ன காரணம் என்றால் புத்தாண்டு அன்று படித்தால் அந்த வருடம் முழுக்க படித்துக்கொண்டே இருக்கலாம் என்ற மடத்தனம்தான்.
புத்தாண்டு சமயத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படித்துகொண்டு இருக்கும்போது, 12 ஆனவுடன் பெரும் கூச்சல் போட்டுக்கொண்டு விடுதியை விட்டு வெளியில் வந்து அந்த நேரம் வாகனத்தில் போவோர் வருவோரை எல்லாம் நிறுத்தி "Happy New Year" என்று கத்திக்கொண்டு இருந்த நாட்களும், இப்போது நினைக்கையில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.
மற்ற நாட்களில் குளிக்கிறோமோ இல்லையோ "புத்தாண்டு அன்று குளித்துவிட்டு பெரிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் போல கோயிலை சுற்றி வந்திருக்கிறேன். கைபேசி cகைக்கு வந்த நாட்களில் மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி தொல்லை செய்தது ஒரு காலம். ஏதோ சொல்ல வந்து சமந்தமே இல்லாமல் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
"அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

வாழ்த்து
Tuesday, December 27, 2011
காலத்தால் அழியாத பாடல்கள்-9
விஸ்வநாதன் ராமமூர்த்தி காலம் தமிழ் சினிமாவில் ஒரு பொற்காலம்
என்பது எல்லோரும் மறுக்காமல்ஏற்றுக்கொள்ளும் கருத்து. அப்படி அவரின் இசையில் வந்த பாடல்களின் தொகுப்புதான் இந்த பதிவு.
படம்: ஊட்டி வரை உறவு
என்பது எல்லோரும் மறுக்காமல்ஏற்றுக்கொள்ளும் கருத்து. அப்படி அவரின் இசையில் வந்த பாடல்களின் தொகுப்புதான் இந்த பதிவு.
படம்: ஊட்டி வரை உறவு
பாடல்: தேடினேன் வந்தது
இசை:
M.S. விஸ்வநாதன்
பாடியவர்கள்:
P. சுசீலா
*****************************************************************
படம்: தெய்வத்தாய்
பாடல்: மூன்று எழுத்தில்
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன்
படம்: கற்பகம்
பாடல்: பக்கத்து வீட்டு பருவ
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்:
P. சுசீலா
படம்: பணத்தோட்டம்
பாடல்: பேசுவது கிளியா
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
======================================================
படம்: ஆலய மணி
பாடல்: மானாட்டம் தங்க.....
இசை:
M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்:
P. சுசீலா
==========================================
அன்புடன்
அசோக் குமார்
அன்புடன்
அசோக் குமார்
Labels:
காலத்தால் அழியாத பாடல்கள்
Saturday, December 24, 2011
வெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்
ஸ்ரீதர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு புகுத்திய புதுமைகள் எண்ணிலடங்காது. அந்த வகையில் சுமைதாங்கி படத்திற்கு பிறகு ஸ்ரீதர் முற்றிலும் புதுமுகங்களை வைத்தே எடுத்த படம்தான் "வெண்ணிற ஆடை". இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத நான்கு நட்சத்திரங்களை தந்தார் ஸ்ரீதர்.
ஜெயலிலதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி என நான்கு பெரும் பின்னாளில் புகழடைந்தது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கும் ஒரு படை மேலே போய் நிர்மலா அவர்களும் மூர்த்தியும் பின்னாளில் வெண்ணிற ஆடையை அவர்களின் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டு "வெண்ணிற ஆடை" மூர்த்தி , மற்றும் "வெண்ணிற ஆடை" நிர்மலா என அறியப்பட்டனர். அதுவுமில்லாமல், அந்த வருடத்தில் ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக ஓடி பாராட்டையும் பெற்று தந்தது.
கதை என்னன்னு பார்த்தால், ஸ்ரீதரின் வழக்கமான முக்கோண காதல் கதை தான். மனநல மருத்துவரான ஸ்ரீகாந்த், மன நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை குணப்படுத்த வருகிறார். ஸ்ரீகாந்திற்கும்
வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கும் காதல். இந்த நிலையில் குணமடைந்த ஜெயலலிதாவிற்கு ஸ்ரீகாந்த் மேல் காதல். ஜெயலலிதாவின் தந்தை ஸ்ரீகாந்தை வற்புறுத்த முடிவு என்ன என்பது தான் "வெண்ணிற ஆடை" படத்தின் கதை.
முதல் படத்திலே ஜெயலலிதாவிற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகாந்தின் காதபாதிரம் ரொம்பவே எதார்த்தமாகவும், இரண்டு பெண்களின் காதலுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் எதார்த்த மனிதராக முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கி இருந்தார் ஸ்ரீகாந்த். வெண்ணிற ஆடை நிர்மலா இந்த படத்தில் நடிக்கும்போது ரொம்பவே இளைய வயது. ஆகா ஒரு இளமை பட்டாளத்தையே இந்த படத்தில் இறக்கி இருந்தார் ஸ்ரீதர்.
படத்தின் இசையை M.S. விஸ்வநாதன் கவனிக்க வழக்கம் போல் பிரமாத படுத்தி இருந்தார். "அம்மாமா காற்று வந்து", "ஒருவன் காதலன்', என்ன என்ன பார்வைகளோ " , "சித்திரமே சொல்லடி", மற்றும் "கண்ணன் என்னும் பேரை" என்று னைத்து பாடல்களை பிரமாதப்படுத்தி இருந்தார் விஸ்வநாதன்.
இன்னமும் ஸ்ரீதர் அவர்களின் பெருமைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

சினிமா,
நான் ரசித்த திரைப்படம்
Sunday, December 18, 2011
படித்ததும் பிடித்ததும்
தமிழக அரசியலில் பெரும் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது, இதுவரை நகமும் சதையுமாக இருந்துவந்த முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் பிரிந்திருக்கின்றனர், பிரிந்தனர் என்பதை விட சசிகலா துரத்தப்பட்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இதற்க்கு முன்பு கூட இதுபோல் ஒருமுறை நடந்து மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இதுவும் ரொம்ப நாள் நீடிக்காது என்று சொல்பவர்கள் உண்டு. ஒன்றுமட்டும் தெரிகிறது, இது நீடித்தால் தமிழ்நாட்டுக்கே நல்லது என்று. காலம் தாழ்த்திய நடவடிக்கை என்றாலும் பாராட்டுக்குரியது. இனியாவது ஆட்சி நிரவாகத்தில் எந்த அதிகார மையத்தின் தலையீடும் இல்லாமல் நல்லாட்சி நடந்தால் மகிழ்ச்சியே.
===========================================
மத்திய அரசு நினைத்தது ஓரளவு நடந்துவிடும் போல் தோன்றுகிறது. தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை திசை திருப்ப முல்லை பெரியாறு ஆணை பிரச்சினையை அவர்கள் வளர்த்துவிட மக்கள் முல்லைபெரியாரை குறிவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் பிரச்சினை எங்கே இரட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
========================================
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் புகைப்படங்களை பார்த்தேன், புகைப்படங்களே, படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டுகின்றன. நடிகர் முரளி மகன் அதர்வா-அமலபால் நடிக்கும் இப்படத்தின் மூலம் அதர்வா நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பிடிப்பார் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
=============================================
நான் ரசித்த புகைப்படம்முக புத்தகத்தில் கண்டெடுத்தது.
========================================
MS. விஸ்வநாதனும் இளையராஜாவும் இனைந்து இசையமைத்த இந்த "மெல்ல திறந்தது கதவு" படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வகையில் இந்த பாட்டு என் விருப்பத்திற்குரிய பாடல்.
======================================
அன்புடன்
அசோக் குமார்
Labels:
படித்ததும் பிடித்ததும்
Saturday, December 17, 2011
2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்
ஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை தொகுத்து இருக்கிறேன். நிறைய பாடல்கள் மனதிற்கு பிடித்திருந்தாலும் பத்து பாடல்களே என்பதால் அவைகளை இந்த லிஸ்டில் வர இயவில்லை. என்ன சொல்லபோற-வேங்கை, கண்ணாடி நீ -மங்காத்தா , ராசாத்தி போல- அவன் இவன், என்னமோ என்னமோ பண்ணுது-தேநீர் விடுதி, நான் சொன்னதும் மழை -மயக்கம் என்ன என நிறைய பாடல்களை இணைக்க முடியவில்லை. எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் !!!
படம் : அழகர்சாமியின் குதிரை.
பாட்டு : பூவைக்கேளு காத்தை கேளு
இளையராஜாவின் மெலடி பிடிக்காதவர்கள் இருப்பது அரிது அந்த வகையில் இந்த பாடல் அவரின் மெலடி லிஸ்டில் சேரும்.
படம் : ஆடுகளம்
பாடல்: யாத்தே யாத்தே
படம்: எங்கேயும் எப்போதும்
பாடல்கள்: சொட்ட சொட்ட /உன் பேரை தெரியாது
புது இசையமைப்பாளர் சத்யா, முதல் படமே நல்ல தொடக்கம், எனக்கு இந்த இரண்டு பாடல்களுமே பிடிக்கும். புதிய இசையமைப்பாளர் என்ற சுவடே தெரியாமல் அற்புதமாக கலக்கி இருந்தார்.
படம்:வாகை சூட வா
பாடல்: சாரக்காத்து வீசும் / போறானே போறானே
படம் : சதுரங்கம்
பாடல்: விழியும் விழியும்
படம் : தெய்வத்திருமகள்
பாடல் : ஆரிரோ ஆராரிரோ
GV. பிரகாஷிற்கு மேலும் ஒரு பிரமாதமான கதையம்சத்தோடு கூடிய பின்னணி இசைக்கு நிறைய வேலை கொடுத்த படம்.
படம்: 180
பாடல்: சந்திக்காத கண்களில்
இந்த படத்தின் இசையமைப்பாளர் "ஷரெத்" மலையாளத்தில் இசையமைத்து வருகிறார். தமிழ் படங்களில் இதுதான் இவரின் முதல் படம்.
படம்: வெப்பம்
பாடல்: மழை வரும் அறிகுறி
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் வெளிவந்த காதல் படத்தின்பாடல்களை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது. கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு அவருக்கு பேர் சொல்லும்படியான படம் இது. குறிப்பாக இந்த பாடல் பிரமாதம்!!!
படம்: கோ
பாடல்: என்னமோ ஏதோ
ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பாடல் இந்த வருடம் பல பேரின் விருப்பபாடலாக இருந்தது.
படம்: எங்கேயும் காதல்
பாடல்: திமு திமு தீம் தீம்
நா. முத்துகுமாரின் வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்த பாடல் கேட்கும்போது ரொம்பவே இனிமை. காதல் வராதவனுக்கு திடிரென காதல் வந்தால் எப்படி அவனுடைய மன ஓட்டங்கள் இருக்கும் என்பதை சொன்ன பாடல். சில கவிதை வரிகள் நச்சென்று இருக்கும்.
"ஜாமத்தில் விழிக்கிறேன்
என் ஜன்னல் துங்கும் நிலா
காச்சலில் கொதிக்கிறேன்
என் கண்ணுக்குளே விழா "
நிறைய பாடல்களை இந்த வரிசையில் சேர்க்கத்தான் அசை என்ன செய்வது பத்து பாடல்தான் என்று முதலிலே முடிவு செய்துவிட்டேன்.
அன்புடன்
அசோக் குமார்
Labels:
சிறந்த பத்து பாடல்கள்,
சினிமா
Tuesday, December 13, 2011
காதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்
படத்தின் தலைப்புக்கு கிழே "கதையை எதிர்ப்பார்க்காதிர்கள்" என்று எழுதி படத்தை விளம்பரப்படுத்தி ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட படம்தான் "காதலிக்க நேரமில்லை".பெரும் புகழை அவருக்கு இந்த படம் பெற்று தந்தது என்றால் அது மிகை இல்லை. கதை முழுவதும் சின்னமலையில் நடப்பது போல் எடுத்திருந்தார் ஸ்ரீதர். இது முழுக்க முழுக்க நகைச்சுவை ஒன்றையே மயப்படுத்தி எடுத்திருந்ததால், கதை என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அது போலவே முதன் முதலில் சப்டைட்டில் போட தமிழ் சினிமாவிற்கு கற்றுகொடுத்தவரும் ஸ்ரீதர் அவர்களாகத்தான் இருக்கும்.
கதையை சுருங்க சொன்னால், சின்ன
மலையில் பெரிய எஸ்டேட் வைத்திருக்கும் விஸ்வநாதனுக்கு இரண்டு மகள்கள். சென்னையில் படிப்பை முடித்து வீட்டுக்கு திரும்பிய அவர்களை ஒருநாள் வழியில் கேலி செய்கிறார் அசோக் (ரவிச்சந்திரன்). அவர் தான் அந்த எஸ்டேட் காரியதரிசி என்று மகள்களுக்கு தெரியவர, அதை முதலாளி தந்தையிடம் போட்டுகொடுக்க வேலை நீக்கம் செய்யப்படுகிறார் ரவிச்சந்திரன். ஆனால் வேறு வேலைக்கு போகாமல் இவர் வீட்டின் முன்பே கூடாரம் அமைத்து ஆட்களை கூட்டி பாடி போராட்டம் செய்கிறார்.
இதன் நடுவே விஸ்வநாதனின் இளைய மகளுக்கும் ரவிச்சந்த்ரனுக்கும் காதல் வர, பணமும் கௌரவமும் தடுக்க தன் உற்ற நண்பன் முத்துராமனை (வாசு) இவரின் பணக்கார தந்தையாக நடிக்குமாறு அழைக்க வந்த இடத்தில்தான் இவரும் விஸ்வநாதனின் மகளையே காதலிப்பதாக சொல்ல குழப்பம் ,பின் முத்துராமன் காதலிப்பது இமுத்த மகள் காஞ்சனாவையும், ரவிச்சந்திரன் காதலிப்பது இளையமகள் ராஜஸ்ரீயையும் (நிர்மலா) என்று தெளிவாக எப்படி இருவரும் காதலியை கரம் பிடித்தார்கள் என்பதை நகைச்சுவையோடு, இனிக்க இனிக்க எடுத்த படம்தான் இது.
ரவிச்சந்திரன் இந்த படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி அல்ல மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஒரு ஓட்டை காரை வைத்துகொண்டு கஞ்சனாவிடமும், ராஜஸ்ரீயிடமும் இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைப்பவை. வயதான வேடத்தில் ரவிச்சந்த்ரனின் அப்பாவாக நடிக்கும் முத்துராமன் பிரமாதபடுத்தி இருப்பார். "காதலிக்க நேரமில்லை பாடலில் இவரின் நடனம் அசத்தல் ரகம் சிரித்து மகிழலாம்.
படத்தின் நகைச்சுவை பகுதியை நாகேசும் சச்சுவும் எடுத்துகொள்கிறார்கள். படம் எடுக்க போகிறேன் என்று நாகேஷ் செய்யும் காமெடி அட்டகாசம். திகில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று இருட்டில் பாலையாவை உட்காரவைத்து படுத்தி எடுக்கும் காட்சி, சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீரை வரவைத்துவிடும். படகம்பனியின் பெயரை ஓஹோ ப்ரொடக்சன்ஸ் என வைத்திருப்பதற்குஇவர் சொல்லும் காரணம் அடடா..!!
பாலையாவின் நடிப்புக்கு எப்போதும் நான் ரசிகன், மகள்களிடம் குலைவதும், நாகேஷிடம் படம் எடுக்க பணம் தரமாட்டேன் என முரண்டு பிடிப்பதும், ரவிச்சந்த்ரனை வேலை இல்லை என விரட்டுவதும், அவர் தந்தை பெரும் பணக்காரர் என தெரிந்தவுடன் பம்முவதும், அமர்க்களம்.
ஸ்ரீதர் அவர்களின் படங்களில் இசைக்கென்று தனி முத்திரை இருக்கும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆஹா ரகம். "விஸ்வநாதன் வேலை வேணும்", "நாளாம் நாளாம் திருநாளாம்", "காதலிக்க நேரமில்லை", "அனுபவம் புதுமை அவளிடம் ", "உங்க பொன்னான கைகள்", "என்ன பார்வை உந்தன்" மற்றும் "மலரென்ற முகம் இன்று" என அனைத்து பாடல்களும் இன்றும் நம்மை மயங்க வைப்பவை.
இப்படி நிறைய இன்னும் இரண்டு பதிவுகள் கூட எழுதலாம் அவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கிறது இந்த படத்தில். தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படம் இது. !!!
ஸ்ரீதர் அவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க அதன் இணைப்புகள் கிழே!!
C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம்
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்
நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்
இன்னும் ஸ்ரீதர் அவர்களின் படங்கள் பற்றிய பல சுவாரசியமான விசயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் !!
அன்புடன்
அசோக் குமார்
Labels:
இயக்குனர் ஸ்ரீதர்,
சினிமா,
நான் ரசித்த திரைப்படம்
Subscribe to:
Posts (Atom)