Saturday, November 19, 2011

குரல் தேவதைகள் - ஸ்ரேயா கோஷால்

தமிழ் சினிமாவில் இந்த தலைமுறை பெண் பாடகிகளைப்பற்றிய தொகுப்புதான் இந்த பதிவு. தன் குரலால் மட்டுமல்ல தன் அழகாலும் நம்மை எல்லாம் ஈர்த்த அந்த "குரல் தேவதைகளைப்பற்றிய சிறு செய்திகள். ஜானகி, சித்ரா, சொர்ணலதா போன்றோர் காலம் போக இப்போது இவர்கள்தான் தமிழ் சினிமாவில் முக்கிய பாடகிகள்.
ஸ்ரேயா கோஷால் :
மெலடி பாடல்கள் பாட, இன்றைய இசை அமைப்பாளர்களின் முதல் முன்னுரிமை ஸ்ரேயாவுக்கே. பிறந்தது பெங்காலில் என்றாலும் வளர்ந்தது ராஜஸ்தானில். தன் ஆறாவது வயதிலேயே பாடி அரங்கேற்றம் நடத்தினார். முதன் முதலில் "ஜீ டிவி" நடத்திய, நம்ம ஊரு " ராக மாலிகா" போல இன்றும் "ச ரீ க ம ப" என்ற நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று கொஞ்சம் பிரபலமடைந்தார்.

பாலிவூடின் சிறந்த இயக்குனர் "சஞ்சய் லீலா பன்சாலி" அவர்களின் பார்வை இவர் மேல் பட்டது, அடுத்து அவர் எடுத்த "தேவதாஸ்" படத்தில் இவருக்கு ஐந்து பாடல்கள் பாடும் வாய்ப்பை வழங்கினார், அதோடு மட்டுமில்லாமல் பார்வதியாக நடித்த "ஐஸ்வர்யாவுக்கும் இவர்தான் குரல் கொடுத்தார். இந்த படத்தின் "டோலாறே"  பாடலுக்காக "இந்திய அரசின் தேசிய விருதை பெற்றார்.


இவரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இசையமைப்பாளர் "கார்த்திக் ராஜா" அவர்களயே சேரும். "ஆல்பம் " என்ற தமிழ் படத்தின் "செல்லமே செல்லமே" என்ற பாடலை பாடி அறிமுகமானார்.



 ஹிந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, பெங்காலி, கன்னடா, மராத்தி, நேபாளி, குஜராத்தி, ஒரியா என பல மொழிகளில் இன்றும் பின்னணி பாடகியாக வளம் வந்துக்கொண்டு இருக்கிறார். இந்த மொழிகளின் முன்னணி இசை அமைப்பாளர்கள் அனைவர் இசையிலும் பாடிய பெருமையும் இவருக்கு இருக்கிறது. தமிழில் இவரை பிரபலப்படுத்தியது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் இவர் பாடிய "நினைத்து நினைத்து" என்ற பாட்டுதான்.



A.R.ரெஹ்மான் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட். "முன்பே வா", "மன்னிப்பாயா" "கள்வரே கள்வரே" என்று ஒரு பட்டியலும், இளையராஜா இசையில் "இளம்காத்து வீசுதே" "பூவைக்கேளு காத்தை கேளு" உன்னவிட ",  யுவன் ஷங்கர் ராஜா இசையில் "நினைத்தி நினைத்து", "சண்டாளி உன் " என பெரும் பட்டியலே உண்டு.

இதுவரை 4 தேசிய விருதுகளும், 9 பிலிம் பேர் விருதுகளும், 4 IIFA  விருதுகளும் இதுவரையில் பாடியதற்காக வாங்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்க சாதனை. ட்வீடரில் மட்டுமில்லாது இவருக்கென்று ஒரு  வலைதளமும்  பிரத்யேகமாக வைத்துள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைக்க இவரை பல இயக்குனர்கள் அணுகி வருகிறார்கள். ஆனாலும் இவர் ஏதும் ஈடுபாடு காட்டிக்கொள்ளவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் இவர் இசை உலகில் பெரும் சாதனைகள் செய்ய நம் வாழ்த்துக்கள் !!

அன்புடன் 
அசோக் குமார்

4 comments:

  1. அருமையான பதிவு நண்பரே........

    ReplyDelete
  2. // Phojithan said...

    அருமையான பதிவு நண்பரே........//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

    ReplyDelete
  3. ஸ்ரேயா கோஷால் பற்றிய அசத்தலான பதிவு பாஸ்

    ReplyDelete