கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரு படத்தை நன்றாக ஓடவும் வைத்திருக்கின்றன அதே சமயம் கவிழவும் வைத்திருக்கின்றன. பெரும்பாலான தமிழ் படங்களில் கதாநாயகன் வில்லனை அடித்து போட்டுவிட்டு கதாநாயகியை கை பிடிப்பார், அப்படி இல்லாமல் சற்றே வித்தியாசமான, நான் ரசித்த பத்து கிளைமாக்ஸ் காட்சிகளை தொகுத்து இருக்கிறேன்.
அன்பே சிவம்
மற்றவர் கஷ்டபடுவதை பார்த்து கலங்குபவர் கூட கடவுளே என்று சொல்ல வந்த படம்!!! பறவைகள் எப்போதும் ஒரே இடத்தில தங்காது போன்ற வசனங்கள் சிறப்பு.
காதல் கோட்டை
கடைசி வரை இவர்கள் சேர்வார்களா மாட்டார்களா என சீட்டின் கடைசி நுனி வரை உட்கார செய்தது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அகத்தியனுக்கு மிக பெரிய வெற்றிப்படம். பார்க்காமலே காதல் என்ற புதிய பாதையை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்திய படம். இந்த படத்திற்கு பிறகுதான் பார்க்காத காதல், பார்த்த காதல், இன்டர்நெட் காதல், செல்போன் காதல் எல்லாமே வந்தது.
ரமணா
இப்படித்தான் கிளைமாக்ஸ் இருக்கும் என்று இருக்கும் தமிழ் சினிமாவில் சற்றே வித்தியாசமான கிளைமாக்ஸ். கடைசி காட்சியில் விஜயகாந்த் பேசும் வசனங்கள் நறுக்!!
காதலுக்கு மரியாதை
காதலுக்கு பெற்றோர் சம்மதம் ரொம்ப முக்கியம் என்று சொன்ன படம். இந்த கிளைமாக்ஸ் பார்த்தவர்கள் அழாமல் இருப்பது ரொம்ப கஷ்டம்.
சந்தோஷ் சுப்ரமணியம்
பசங்க வளர்ந்துவிட்டாலும் இன்னும் ஒன்றும் தெரியாத குழந்தைகளை போல் நடத்தும் பெற்றோர்கள் பார்க்கவேண்டிய காட்சி இது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
தன் காதலன் கூட தன்னை இராசி இல்லாதவள் இரு நினைத்து விட்டானே என்று அழும் தபு மனதில் ஒட்டிகொண்டார்.
சித்திரம் பேசுதடி
இந்த படத்துக்கு இப்படி ஒரு கிளைமாக்ஸ் இருக்கும் என்று யாரும் யூகித்து இருக்கமுடியாது. கிளைமாக்ஸ் ஒன்றுக்காகவே மிஸ்கினுக்கு சபாஷ் போடலாம் (காணொளி கிடைக்கவில்லை)
அந்த ஏழு நாட்கள்
என் காதலி உங்கள் மனைவி ஆகலாம் ஆனால் உங்கள் மனைவி என் காதலி ஆகமுடியாது என்று ஒரு டயலாக் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். பாக்யராஜ் படங்களில் இப்படி ஒரு டச் இருக்கும் அது இந்த படத்தில் உச்சம்.
கன்னத்தில் முத்தமிட்டால்
சில கிளைமாக்ஸ் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கும், அப்படிப்பட்ட ஒரு கிளைமாக்ஸ் தான் இது. நந்திதா தாஸ் நடிப்பில் அப்படியே மெய் மறந்து போகலாம். தன் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் உணர்சிகளை கொட்டி இருப்பார். மணிரத்தினம் படங்களில் இந்த படத்தில் பாத்திர தேர்வு சிறப்பு.
மூன்றாம் பிறை
காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்படி கூட இருக்கும் என்று உதாரணம் இந்த கிளைமாக்ஸ். பாலுமகேந்திரா போன்ற படைப்பாளி கிடைத்தது தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.
இவற்றைவிட சிறந்த கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கலாம், எதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை தொகுத்து இருக்கிறேன், ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்!!!
அன்புடன்
அசோக் குமார்
poove unakaga climax & Love today - kathale venam endu thooki eriyira climax also superb..
ReplyDelete