Saturday, June 11, 2011

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பாலு மகேந்திராவின் சீடர்கள்

பாலு மகேந்திரா, மூன்றாம் பிறை தந்த அற்புத படைப்பாளி, சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒரு மாபெரும் கலைஞன். ஒவ்வொரு படைப்பையும் ஒரு குழந்தை போல நினைத்து படைக்கும் உன்னத கலைஞன்.


பாலு மகேந்திரா, தன் சீடர்களை பயிற்றுவிக்கும் விதமே தனி. இவரிடம் உதவி இயக்குனராக சேரவேண்டும் எனில் முதலில் பாட்டி வடை சுட்ட கதையை உங்கள் பாணியில் அவருக்கு பிடித்தார் போல் திரைக்கதை அமைத்து உங்களை நிருபித்து காட்ட வேண்டுமாம்.

உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவின் சின்ன நுணுக்கங்களை எல்லாம் கற்றுவித்து அத்துறையில் தேர்ந்தவராக மாற்றுவது அவர் வேலை. தினமும் ஒரு சிறு கதையை உங்களிடம் கொடுத்து, அதை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றி எழதி வர செய்து பின் அதில் உள்ள சிறு குறைகளையும், சுட்டிக்காட்டி திருத்துவாராம்.


இப்படி சினிமாவை உயிர் மூச்சாக நேசிக்கும் ஒரு கலைஞனின் சீடர்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக மாறி வருவது, தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். எதார்த்தமான சினிமாவை நோக்கி தமிழ் சினிமா மெல்ல நகர்வதற்கு காரணம் பாலு மகேந்திரா அவர்களின் சீடர்கள்தான் என்பது அப்பட்டமான உண்மை.

"இயக்குனர் பாலா தொடங்கி, இன்று சீனு ராமசாமி" வரையில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை குவித்து இந்தியாவையே தமிழ் சினிமாவை திரும்பி  பார்க்க வைத்துள்ளனர்.


முதல் படமான "சேதுவிலேயே" தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிப்போனார் பாலா. இந்த படம் வெளிவரும் முன்பு வரை தமிழ் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படாத நடிகராகவே இருந்த விக்ரம, சேது படத்திற்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. நந்தா படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா என்றொரு நல்ல  "கதாநாயகன்" கிடைத்தார்.  இதன் பின் பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தார். நான் கடவுள் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சாதாரண கதாநாயகனாகத்தான் இருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிதும் கவனிக்கபடுகிற கதாநயாகனாக மாறிப்போனார்.

2009  வருடம் நான் கடவுள் படத்திற்காக, 12  வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அகத்தியன் வரிசையில் பாலா சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். ஒரு கதா பத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும், அதன் நடை உடை பாவனை அனைத்தையும் படம் எடுக்க கிளம்பும் முன் முழுவதும் தீர்மானித்து விடுவது பாலு மகேந்திராவின் வழக்கம். அதே முறையைத்தான் பாலாவும் பின்பற்றுகிறார். "மணிரத்தினம் முதல் ஷங்கர்" வரை அனைவருக்கும் பிடித்த இயக்குனர் வரிசையில் முதலில் இருப்பவர் பாலா மட்டுமே.

சினிமாவுக்கு எழுத்தாளர்களின் பங்கும் முக்கியம் என்று எடுத்துகொண்டதால் நான் கடவுள் படத்திற்கு "ஜெயமோகனையும்", தற்போது வெளிவர இருக்கும் "அவன் இவன்" படத்திற்கு S.ராமகிருஷ்ணனையும் வசனம் எழுத வைத்துள்ளார் பாலா.


"கற்றது தமிழ்" ராம் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த இன்னொரு இயக்குனர். முதல் படத்திலே தமிழ் சினிமாவின் அதிகம் பேசப்பட்ட இயக்குனர் . இதுதான் ராமின் முதல் படம் என்று அறியாதவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பொக்கிஷம் இயக்குனர் ராம். இப்போது தங்க மீன்கள் என்று, எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்  படத்தை இயக்கிக்கொண்டு உள்ளார்.

தமிழை மட்டுமே பாடமாக எடுத்து படித்தவன்  நிலையை எதார்த்தமாக சொல்லி வியக்க வைத்த மனிதர். இதை விட எதார்த்தமாக ஒரு படம் எடுக்க முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகமே.  இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா தன் வாழ்வின் மறக்க முடியாத சிறந்த படம் என சொன்ன படம்.



புதுமுகமாக அறிமுகமான அஞ்சலி, சிறந்த புதுமுக நடிகைக்கான  பல விருதுகளை வாங்கி தந்த படம். சிறந்த கதை மற்றும் எழுத்துக்கான விருதையும் ராமுக்கு வாங்கி தந்த படம்.




பாலு மகேந்திரா ஒரு உரையாடலில் குறிப்பிடும் போது, இதுவரையில் நான் எந்த இயக்குனரிடமும் போய் நான் உங்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டதில்லை, ஆனால் ராமின் ஒரு படத்திற்காவது நான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார் என்றால் ராமின் திறமை புரியும்.

ஒரு மோட்டார் சைக்கிளை வைத்து திரைக்கதை அமைத்து அதையும் சுவாரசியமும், வேகமும் குறையாமல் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியுமா என்றால் முடியும். அப்படி ஒரு படத்தை இயக்கி மலைக்க வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

தனுஷ்க்கு தன் சினிமா வாழ்வில் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம்தான் "பொல்லாதவன்". நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் வாழ்கையில் மோட்டார் சைக்கிள் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் ஏற்படும் மாற்றங்களை எந்த அடைப்புக்குள்ளும் மாட்டி கொள்ளாமல் எதார்த்தமாக காட்டிய படம்.

அடிப்படையில் லயோலா கல்லூரியின் விஸ்காம் மாணவரான வெற்றிமாறன், இயக்குனர் பாலு மகேந்தராவுடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான  "பாலு மகேந்த்ராவின் கதை நேரம்" என்ற நிகழ்ச்சிக்காக 59  சிறுகதைகளை படித்து அதற்கு திரைக்கதை மாதிரியை அமைத்துக்கொடுத்தவர்தான் வெற்றிமாறன். பாலு மகேந்தராவுடன் அது ஒரு கனாக்காலம் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இரண்டாவது படமாக வெற்றிமாறன் இயக்கிய படம்தான் ஆடுகளம். சேவல் சண்டையும், அந்த தொழிலை கற்றுகொடுக்கும் ஆசானுக்கும், மாணவனுக்கும் இடையில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுத்த படம்தான் இது.


இந்த வருடம் , ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என முக்கியமான விருதுகளை பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாலாவுக்கு பிறகு சிறந்த இயக்குனர் விருதை வாங்கும் மூன்றாவது தமிழனாக வெற்றிமாறன் வலம் வருகிறார்.

"தென்மேற்கு பருவக்காற்று " தலைப்பே சற்று கவித்துவமாக வைத்து குறைந்த பொருட்செலவில், ஒரே தேனியில் ஒரே பகுதியில் வாழும் இரு வேறுப்பட்ட மக்களின் வாழ்க்கையை படச்சுருளுக்குள் அடக்கிய இயக்குனர் "சீனு ராமசாமி ".

முதல் படம் கூடல் நகரில் சோபிக்க தவறினாலும் அடுத்த படமான தென் மேற்கு பருவக்காற்று படத்தில், புளுதிக்காட்டையும் அதில் பிழைப்பு நடத்தும் ஒரு பெண்ணையும் பற்றி இவ்வளவு சிறப்பாக பதிவு செய்தது சிறப்பு வாய்ந்தது.
பேர் சொல்லும் அளவுக்கு பெரிய நடிகர்களும் இல்லாமல், புதிய இசை அமைப்பாளரை வைத்து சிறப்பாக எடுத்த படம். பாடல்களை வைரமுத்து, மண்ணின் மணத்தோடு எழுதியது படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.




இந்த வருடம் தேசிய விருது பட்டியலில் சிறந்த பிராந்திய மொழி படமாகவும், சரண்யா பொன்வண்ணன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். பாலு மகேந்த்ராவின் சீடரான இவரும் தேசிய விருதுகள் வாங்கியோர் பட்டியலில் இணைந்துள்ளார்.

இயக்குனர்கள் மட்டுமின்றி பாடலாசிரியர்களும் பாலு மகேந்த்ராவிடம் பாடம் பயின்று பெரிய அளவில் பரிமளித்து வருகின்றனர். அவர்களில் கவிஞர் அறிவுமதியும், நா. முத்துக்குமாரும் அடக்கம்.

பாலு மகேந்த்ராவின் சீடர்கள் ஒன்று அவர்கள் விருதுகளை வாங்கி குவிக்கின்றனர் அல்லது தாங்கள் உருவாக்கிய கதாபாத்திரம் மூலம் தங்கள் படத்தில் நடித்த நடிகர்களுக்கு விருதுகளை வாங்கி தருகின்றனர். பாலு மகேன்றாவின் சீடர்களால் தமிழ் சினிமா இன்னும் புதுப்புது சாதனைகளை படைக்கட்டும்!!!!

Friday, June 10, 2011

டாக்டர்களே ஏன் இப்படி ????


டாக்டர்: இந்த எக்ஸ்ரே உங்களோடது, நல்ல பாருங்க என்ன தெரியுது. 

நோயாளி: என் கிட்ட இருக்கிற காசை எல்லாம் புடுங்க போறிங்கனு நல்லா தெரியுது டாக்டர். 

டாக்டர்:??????????????
=====================================================

நர்ஸ்: டாக்டர்!! பத்தாம் நம்பர் பேஷன்ட் ரொம்ப சீரியஸா இருக்கார் 

டாக்டர்: ரெண்டு கடி ஜோக் சொல்லுங்க சிரிக்கிறாரா பார்ப்போம்

நர்ஸ்:?????????????
====================================================== 

டாக்டர் : உங்க சொத்து பத்திரமெல்லாம் எதுக்கு என்கிட்டே காட்டுறிங்க???

நோயாளி: இந்த சொத்து  மதிப்புக்குள்ள என் நோயை குணமாக்கிடுவிங்க தானே டாக்டர் !!!

டாக்டர் : ??????????????????????
=======================================================

நோயாளி: டாக்டர் ஒரு வாரமா வயத்து வலின்னு சொல்லி துடிச்சுக்கிட்டு இருக்கேன், நீங்க கடவுளுக்கு நன்றின்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்களே???

டாக்டர் : என் பொண்டாட்டி புதுசா ஒரு கலர் டிவி வேணும்னு கேட்டா, இப்போ நீங்க வந்து இருக்கீங்க அப்போ நான் கடவுளுக்குதானே நன்றி சொல்லணும் 

நோயாளி: ????????????
===============================================================
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல, கொஞ்ச நேரம் சிரிக்கவே!!!

அன்புடன் 
அசோக் குமார்

Thursday, June 9, 2011

கடல் கன்னி- பெர்கேஷ் பிரிஸ்பே (Astrid Berges Frisbey)-pirates of caribbean 4


சமீபத்தில் வெளிவந்து உலகெங்கும் ஓடிக்கொண்டு இருக்கும் "பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்" படத்தில் ஜானி டேப்பிற்கு பிறகு எல்லோரையும் திரும்பி பார்க்க வாய்த்த பெண் செரீனா என்ற கதாபாத்திரத்தில் கடல்கன்னியாக நடித்த "பெர்கேஷ் பிரிஸ்பே". படம் பார்க்கும்போதே இந்த பொண்ணு என்னை ரொம்பவே அட்டராக்ட் பண்ணிடுச்சி. சரி யாரு என்னனு பார்த்தேன் அதை உங்களோடும் பகிர்ந்துகறேன்.




 அம்மணி பொறந்தது ஸ்பெயின் நாட்டின் பர்செலோனா நகரத்தில். இப்போ தங்கி இருக்கிறது பாரிஸ். இவர் ஸ்பெயின் மற்றும் பிரெஞ்சு படங்களில் தலைகாட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே டிவி ஷோஸ்ல நடிச்சிருக்கு. பொண்ணு இதுவரைக்கும் நடிச்ச படங்களே மொத்தம் நாலு. "தி சீ வால்ன்னு" ஒரு இங்க்லீஷ் படம் இன்னும் ரெண்டு பிரெஞ்சு படம்.



 இதுமட்டும் இல்ல பேஷன்   ஷோஸ்  கூட  கலந்துகிட்டு தூள் பண்ணுது. "பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்" டைரக்டர் கூட இந்த பொண்ணை தி சீ வால் படம் பார்த்துதான் இந்த கேரக்டருக்கு புடிச்சதா சொல்றாரு. 

"பெர்கேஷ் பிரிஸ்பே" பேசின காணொளி கிடைச்சது நீங்களே பாருங்க எவ்ளோ அப்பிரானிய பேசுது பொண்ணு.

 
பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்" படம் பார்த்த எல்லோருக்கும் இவங்களை புடிச்சிருக்கும்.
  
அன்புடன் 
அசோக் குமார்

Wednesday, June 8, 2011

முதல்வருக்கு அம்மாவுக்கு சில யோசனைகள்- நானே சிந்திச்சேன்

"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சா   ம்" இந்த பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம தமிழ் நாடு மக்களுக்கு பொருந்தும். கருணாநிதியும் அவங்க குடும்பமும் தமிழ் நாட்டையே கொள்ளை அடிக்கறாங்கன்னு ஆட்சிய புடுங்கி கொட நாட்டுல தூங்கிகிட்டு இருந்தவங்கள எழுப்பி, இவங்ககிட்ட கொடுத்தா, சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி நல்லா செயல்பட்டுகிட்டு இருந்த திட்டங்களை எல்லாம் ஒரே அறிக்கையில காலி பண்றாங்க அம்மா.
கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் என்பதற்காகவே சில திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. திட்டங்களில் குறைப்பாடு இருப்பின் குறைகளை நீக்கி செயல்படுத்தலாம் , அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது முறையல்ல. 
எதிர் கட்சிகளும் சில ஊடகங்களும் இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ருபாய் நாட்டுக்கு நட்டம் என சொல்ல தொடங்கி உள்ளன. 
அந்த சில கோடி ருபாய்களை எப்படி சேமிப்பது !!
சில நிறுத்தப்பட்ட திட்டங்களும் அதில் போடப்பட்ட பணத்தை மீட்கும் வழிகளும்..!! நானே  யோசிச்சது !!

1 . ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடம் தற்போதைக்கு பயன்படுத்த மாட்டாது.இழப்பு : 1000  கோடி

           என்ன செய்யலாம்: அந்த கட்டிடத்தை ஏதாவது சாப்டுவேர் கம்பனிக்கு வாடகைக்கு விடலாம் அல்லது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகவோ மாற்றி பணம் பெறலாம்.

2 . சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தம்: அச்சிடப்பட புத்தகங்கள் வீண்

            என்ன செய்யலாம்:அந்த புத்தகங்களை எடைக்கு போட்டு பேரீச்சம் பழங்களை வாங்கி மக்களுக்கு இலவசமாகவோ அல்லது ரேஷன் கடையில் காசுக்கோ விற்று சரி செய்யலாம்.

3 . கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தம். ஏழை எளிய மக்கள் பயன்பெற்ற திட்டம்  அடியோடு நிறுத்தப்படுகிறது.

என்ன செய்யலாம்: அதற்காக கொடுத்த அடையாள அட்டைகளை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தும் அடையாள அட்டைகளாக பயன்படுத்த சொல்லலாம்.

 4 . மெட்ரோ ரயில் திட்டம் மறக்கப்பட்டு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

என்ன செய்யலாம்: உங்களுக்கு ஒட்டு போட்ட மொத்த மக்களையும் மெட்ரோ ரயில் பாதைக்காக தோண்டிய குழியில் போட்டு புதைத்து விட்டால் சுத்தம், ஒரு பய ஏன்னு கேட்க முடியாது.


 இது எதோ ஏன் சிறு அறிவுக்கு எட்டியது, இதை விட நல்ல யோசனைகள்  இருப்பின் பின்னுடத்தில் தெரியப்படுமாறு கேட்டுகொள்கிறேன்!!!
அன்புடன்
அசோக் குமார்   

Tuesday, June 7, 2011

படித்ததும் பிடித்தும்- 08 -06 -2011

 காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி அருகே, ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், தீயில் கருகி, 23 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
====================================================

எல்லா ஊடகங்களிலும் தயாநிதி மாறனின் தில்லு முல்லு பற்றியே பேச்சாக இருக்கிறது. இந்த முறை தயாநிதி மாறன் தப்பிப்பது சற்று கடினம் என்றே தோன்றுகிறது. டெல்லி வட்டாரங்களும், சோனியாவும் கூட தயாநிதி மாறனை கை விட்டதாகவே உணர்கிறேன். நாம் ஏதோ காலாநிதி மாறன் தன்  சுய அறிவையும் பொருளாதார உத்திகளையும் பயன்படுத்தி சன் குழுமத்தை வளர்த்ததாக தப்பு கணக்கு போட்டுவிட்டோம். இப்போதுதான் தெரிகிறது பலரையும் மிரட்டி பணிய வைத்து இவர்கள் வாழ்ந்த கதை. இன்னும் நம் பொம்மை பிரதமர் ஏதும் இது பற்றி கருத்து சொல்லவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். 

====================================================
பாபா ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதமும், அதை தடுக்க மத்திய அரசு நடத்தும் கூத்துகளும் சகிக்க முடியவில்லை. பாபா ராம்தேவ் நல்லவரோ கேட்டவரோ அது அவசியமில்லை, இவரை அடக்குவதற்கு பதிலாக அந்த சட்டத்தை கொண்டுவந்து நல்ல அரசு என்று நிருபிக்கலாமே. இதற்கு ஒரு படி மேலே போய் வருமான வரி துறையை அனுப்பி சோதனை செய்து மறைமுகமாக மிரட்டி பார்க்கிறது அரசு. இவ்வளவு நாள் தெரியவில்லையா அவர் மோசடி வழியில் சொத்து சேர்த்தார் என்று.  சர்வாதிகார நாடுகளில் தான்இது போன்ற கூத்துகள் நடக்கும் என்றால் இந்தியாவில் கூட இது மாதிரி நடப்பது வேதனை.
=========================================================
"தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா திருவாய் மலர்ந்துள்ளார். சட்ட சபை தேர்தலுக்கு முன்பு அழகிரி கூட இப்படித்தான் தேர்தலுக்கு பின்பு  அதிமுக என்ற கட்சியே காணமல் போய்விடும் என்று சொன்னார். இப்போ அவரே காணாம போய்ட்டார். அந்த நிலைமை உங்களுக்கும் வராம பார்த்துகிடுங்க.

=======================================================
சீமானோடு நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாத சிலர், அவரை சுடிதார் மற்றும் புடவையை கொண்டு சுருட்டலாம் என்று வலை பின்னுகிறார்கள் போலும். மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது ஊடக செய்திகள். "தம்பி" படத்தில் நடிக்க வாய்த்த பூஜாதான் இப்போது அந்த புடவை ஆயுதம் என்கிறார்கள். கலிகாலம் போலும்!!!!
==================================================
நான் தினமும் பயணிக்கும் சாலையில் (Telegraph street , Berkeley , California), ஒரு காபி ஷாப் , பெயர் மட்டும் கொஞ்சம் வித்தியசமாக இருந்தது. சரி என்று காமெராவை எடுத்து படம் பிடித்து வைத்தேன் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . அந்த கடையின் பெயர் "மொக்க "

===================================================
நான் ரசித்த புகைப்படம் 
===================================================
நான் ரசித்த காணொளி
மன்மத லீலை படத்திற்காக, MSV இசை அமைத்த பாடல் அருமை.


==============================================
அன்புடன் 
அசோக் குமார்

Monday, June 6, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்-பகுதி 3

இந்த பதிவில் சந்திரபாபு பாடியும் தானே நடித்த பாடல்களை தொகுத்து இருக்கிறேன். திரை இசையில் மேற்கத்திய இசையை கொண்டு வந்த பெரும் பங்கு சந்திரபாபுவையே சாரும்.


 சொந்த குரலில் பாடி அதற்கு தகுந்தார் போல் நடிக்கும்  ஒரு சிலரில் சந்திரபாபு முதன்மையானவர். இவர் குரல் இவரின் சம கால பின்னணி பாடகர்களை காட்டிலும் வித்தியாசமானது. ஸ்டைலான இவரது பாடல்களில் தத்துவமும் அங்காங்கே உண்டு. இவர் பாடல்களை கொஞ்சம் கேட்போமே!!

படம் : "ஆண்டவன் கட்டளை"  
பாடல்: சிரிப்பு வருது ....
படம் : "கவலை இல்லாத மனிதன்" 


படம் : "பெண்"   
பாடல்: கல்யாணம் கல்யாணம் உல்லாசமாகவே


படம் : "காத்தவராயன்" 
பாடல்: தந்தானே

படம் : "காத்தவராயன்" 
பாடல்: ஜிகு ஜிகு ...


படம் : "அன்னை"
பாடல்: புத்தியுள்ள மனிதர்.....
 

பாடல்: கோவா மாம்பழமே...

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க...
படம் : "சபாஷ் மீனா" 
பாடல்: காதல் என்பது எதுவரை....

படம் : "சபாஷ் மீனா" 
பாடல்: ஆசை கிளியே


பாடல்; ஒண்ணுமே புரியலே ...

படம்: ரத்தகண்ணீர்
பாடல்: ஆளை ஆளை 


உன்னதமான கலைஞன், கடினமாக உழைத்து பெரிய நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர். 

அன்புடன் 
அசோக் குமார்

Sunday, June 5, 2011

அழுகாச்சி காவியம்-கொலைஞர்

சமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் செய்யாத ஒருவர்  சிறையில் அடைக்கப்பட்டால் உங்கள் மனம் எவ்வளவு வேதனை படுமோ அவ்வளவு என் மனம் வேதனை படுகிறது என, ஊர் ஊராக சென்று கூப்பாடு போட்டு கொண்டிருக்கிறார். "ஆளே இல்லாத கடைல யாருக்கு அய்யா டீ ஆத்துரிங்க". 

அறிஞர் அண்ணா தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் இழந்து, பல்லாயிர கணக்கான தொண்டர்களின் தியாகத்தாலும் காட்டி காத்த இந்த திமுக இயக்கம் இன்று, தன் மகளுக்காக கேட்பாரற்று கிடக்கிறது. ஊழல்களின் மொத்த உருவமாய் யாவர் குடும்பம் ஊடகங்களால் தூற்றபடுகிறது. என்னதான் இவர் கூப்பாடு போட்டாலும், யாரும் செவி மடுத்து கேட்கபோவதில்லை. 

ஈழ தமிழர்கள் கொத்து கொத்தாய் மடிந்து கொண்டிருக்க, உலக தமிழின தலைவன் என தன் அடிபொடிகளால் பீற்றிகொண்டிரிக்கும் இவரோ எந்த அமைச்சர் பதவியை வாங்கினால் கொள்ளை அடிக்கலாம் என்று பேரம் பேசி கொண்டு இருந்தார். 
தமிழ் மக்களா கனிமொழியை நீரா ராடியாவோடு பேசசொல்லி அடித்தார்கள். தமிழ் மக்களா கனிமொழியை 214  கோடி பணம் வாங்க சொல்லி வற்புறுத்தினார்கள். தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவா நீங்கள் தொலைதொடர்பு துறையை சண்டையிட்டு வாங்கினீர். எங்க கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க "நெருப்பை தின்னவன் கரி கரியாதான்.......... போவானாம் (கோடிட்ட இடத்தை நிரப்பிகோங்க).

பாரசக்தி படத்தில் தன் தங்கை கல்யாணிக்காக வசனம் எழுதிய கொலைஞர் இன்று தன் மகள் கனிமொழிக்காக  அதே வசனத்தை உல்டா பண்ணி அழுகாச்சி காவியமாக எழுதினால் எப்படி இருக்கும் என கற்பனை பண்ணி பார்த்தேன் எனக்கே சிப்பு...வந்துடிச்சி .. சிப்பு ...





நீதி மன்றம்  விசித்திரமான பல ஊழல் வழக்குகளை சந்தித்து இருக்கிறது!!!!
புதுமையான ஊழல் செய்த பல மனிதர்களை கண்டிருக்கிறது.!!!

அனால் இந்த ஊழல் வழக்கு ஒன்றும் விசித்திரமானதும் அல்ல ஊழலளுக்கு நான் ஒன்றும் புதுமையனவனும் அல்ல...

ஈழதமிழர்கள் செத்துமடிவதை கண்டுகொள்ளவில்லை நான்..
ராஜாவை மந்திரியாக்கி அலைகற்றை விற்பதில்  ஊழல் செய்தேன் 
மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்கின்னேன் 
குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறேன் இப்படி எல்லாம்...

நீங்கள் நினைப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன்  என்று  இல்லை நிச்சயமாக இல்லை.

ஈழதமிழர்கள் செத்துமடிவதை கண்டுகொள்ளவில்லை நான் ஈழத்தமிழர்களே கூடாது என்பதற்காகவா இல்லை அன்னை சோனியா மனம் புண் படுமே என்று. 

மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்கின்னேன், மக்கள் வேலை செய்ய கூடாது என்பதற்காகவா இல்லை அடுத்த தேர்தலிலும் இதை சொல்லி ஓட்டு கேட்கவேண்டும் என்பதற்காக .

உனக்கேன் இவ்வளவு அக்கறை ..பாதிக்கப்பட்டேன் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன் ஜெயலலிதா அம்மையாரால் ...

சுயநலம் என்பீர்கள் ஆம் இன்னொருமுறை என்னால் ஐயோ என்னை கொல்றாங்கோ என கத்தி கூப்பாடு போடமுடியாது...

என்னை குற்றவாளி என்கிறார்களே இந்த குற்றவாளியின் வாழ்க்கை   பாதையை  கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நான் திமுக தலைவராக செய்த தில்லுமுல்லுகள் தெரியும். ரயில் வராது என்று தெரிந்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியல் செய்தேன்.  நெடுஞ்செழியனை பின்னுக்கு திமுக தலைவரானேன்...

தீர்ப்பு எழுதுமுன் கேளுங்கள் என் கதையை தமிழ்நாட்டிலே திருவாருரிலே பிறந்தவன் நான்!!!
பிறந்தது ஓரிடம் திருட்டு ரயில் ஏறி  வந்தது ஒரு ஓரிடம் !!
சென்னை என் உயிரை வளர்த்தது என்னை திமுக தலைவராக்கியது ...

மோசடி வழக்கில் சிக்கி நிற்கிறாளே இந்த ஜாலக்காரி "நீரா ராடியா" இவள் மோசடி வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன் ...
என் மகள் கனிமொழியை கண்டேன் திகார் சிறையிலே...

மகளின் பெயரோ கனிமொழி, மங்களமான பெயர்,   ஆனால் பேசவில்லை என்னிடம் அவள் ஒருமொழி... ஊழல் செய்த குடும்பம் சிக்கவைக்கப்பட்டது.
கண்ணிலே நீர் கனிமொழி அழுதாள்!!!

அவங்க அம்மா ராஜாத்தி அம்மளுக்காக நான் அழுதேன் .... செழித்து ஊழல் செய்த குடும்பம்  சீரழிந்துவிட்டது இன்று ...

கோர்ட்டிலே பெயில், திகாரிலே ஜெயில் கனிமொழி அலைந்தால் அவளுக்காக ராம் ஜெத்மளானியிடம் நான் அலைந்தேன் ..
இந்தியாவில் ஊழல் செய்த ஒரு தமிழனுக்கு  வாழ வழியில்லை......
ஊழல் வழக்கில் சிக்கிய என மகளுக்கு பிணை வழங்கவில்லை...
என மகள் நினைத்திருந்தால் அடித்த பணத்தில் மலேசியாவிலோ அல்லது சுவிட்சர்லாந்தின் ஒரு மூலையிலோ ஓடி மறைந்து இருக்கலாம்.. அப்படி செய்தாளா என மகள் கனிமொழி ......!!!!
அதைத்தான் இந்த நாடும் நாடு மக்களும் விரும்புகிறார்களா!!!
சுப்ரீம் கோர்ட் என மகளை விரட்டியது.. ஊழல் வழக்குகள் என மகளை விரட்டியது ....நீதிமன்றம் என மகளுக்கு பிணை வழங்காமல் விரட்டியது ...

ஓடினாள்  ...ஓடினாள் ... டெல்லி நகரில்  சோனியா காந்தி வீடு, மன்மோகன்  வீடு வரை ஓடினாள் அவர்கள் வெளிநாடு சுற்றுபயணம் போய்விட்டதால் திரும்பி திகார் சிறைக்கே வந்துவிட்டாள்...

அந்த ஓட்டத்தை தடுத்து இருக்கவேண்டும் என மகள் வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. இன்று இந்த சட்டத்தை நீட்டுவோர் ...செய்தார்களா ஊழல் செய்ய விட்டார்களா கனிமொழியை ....
கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வாங்கியது ஒரு குற்றம், ராஜாவோடு சேர்த்து கூட்டு கொள்ளை அடித்தது ஒரு குற்றம் ... 
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார் யார் .....

திருவாருரிலிருந்து திருட்டு ரயில் ஏறி வரும்போது என்னை பிடிக்காத செக்கரின் குற்றமா???
இல்லை..... என்னை ஒட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைத்த மக்களின் குற்றமா??? 
ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது யார் குற்றம் ... ஸ்பெக்ட்ரம் துறையை எங்களுக்கு ஒதுக்கிய மன்மோகன் குற்றமா இல்லை இந்த துறைதான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய என் குற்றமா!!!
இந்த குற்றங்கள் களையபோவது  வரை கருணாநிதிகளும் கனிமொழிகளும் குறையபோவதில்லை....

மக்கள் என்றும் உறங்கிக்கொண்டே இருப்பதில்லை கலைஞர் அவர்களே உங்கள் குடும்பத்திற்காக இவ்வளவு சிந்திக்கும், வருத்தப்படும் நீங்கள் ஓட்டு போட்ட மக்களுக்காக கொஞ்சம் சிந்தித்து இருந்தால்.. நீங்கள் ஒய்வு எடுக்கவேண்டிய அவசியம் இருந்து இருக்காது..!!!


உங்களுக்காக வருத்ததுடன்

அசோக் குமார்