இரண்டு நாட்களாக நிம்மதியாக தூங்ககூட முடியாமல் இந்த பூமி அதிர்வு என்னை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. போன புதன் கிழமை இரண்டு முறையும் வெள்ளிகிழமை ஒருமுறையும் 4.2, 3.8 ரிக்டர் அளவீடுகளில் முறையே அதிர்ந்தது. பெர்கேலேயில் (Berkeley, Sanfransisco Bay area) மட்டும் இது தாக்கியது. இரவு தூங்க போகும் முன் அதிர்ந்து தொலைக்கிறது. பழைய சங்கதியை கேட்டால் கொஞ்சம் மனக்கலக்கம்தான் வருகிறது. 1989 -இல் நடந்த பெரிய பூமி அதிர்வில் ரிக்டர் குறியில் 6.9 அளவில் தாக்கி இருக்கிறது. 3000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் சுமார் 50 பேர் இறந்தும் பொய் இருக்கிறார்கள். என்ன வாழ்க்கைடா இது !!!
===========================================
ஜப்பானில் சுனாமிக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துவிட்டதை அடுத்து ஜப்பான் அரசும், ஜப்பான் சுற்றுலா வளர்சிக்கழகமும் இணைந்து புது திட்டம் ஒன்றை புனைந்துள்ளது. உலகமெங்கும் இருக்கும் 10000 நபர்களுக்கு இலவச விமான பயணசீட்டு ஜப்பானுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மினஞ்சல் மூலம் பெறப்பட்டு பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்படவிருக்கின்றன. நீங்க செய்யவேண்டியது ஒன்றுதான். இந்த பயணத்தைப்பற்றி கட்டுரையோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அல்லது உங்கள் பதிவுகள் மூலமோ புகைபடன்கையும் இந்த சுற்றுப்பயண அனுபவத்தை பகிர்ந்துகொண்டு பிரபலப்படுத்தவேண்டும், அதற்கான சுட்டி இங்கே !!!
=============================================
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்து எல்லோரும் பதவி ஏற்க தயாராகிவிட்டார்கள். எல்லா நிலைகளிலும் இப்போதும் அம்மாவின் ஆட்சிதான் இன்னும் 5 வருடத்திற்கு அம்மா வைத்ததுதான் சட்டம். வாழ்க ஜன நாயகம்.
===============================================
இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு நல்ல விஷயத்தை வெளிக்கொணர்ந்துள்ளது, அது காங்கிரஸ் கட்சிக்கு அடிப்படையிலே எந்த செல்வாக்கும் இல்லை என்பதுதான் அது. சத்யமூர்த்தி பவனில் அடிக்கடி ஸ்டண்ட் ஷோ நடத்தும் இவர்கள் என்று மக்களை சந்தித்தார்கள். யாராவது ஒருவர் முதுகின் மீது சவாரி செய்துகொண்டே பழக்கப்பட்டு போனவர்கள், இன்று தெரிந்திருக்கும் இவர்களின் உண்மை நிலை. அதிலும் உள்ளாட்சி தேர்தல் என்பது அந்த சுற்று வட்டாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கு வைத்திருந்தால் கூட வெற்றி பெற்று இருக்க முடியும், அதிலும் இவர்களுக்கு வைக்கவில்லை. இனியாவது உண்மை நிலைமயை புரிந்து கொண்டால் நல்லதுதான்.
================================================
இங்கே பிரீமொன்ட் (Fremont, California) என்னுமிடத்திற்கு போய் இருந்தேன். அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு பெரிய கோயிலையே நிர்வகித்து வருகிறார்கள். ஒரு குட்டி இந்தியாவையே அங்கே பார்க்க முடிந்தது. என்னதான் அமெரிக்காவில் குடியேறினாலும் இன்னும் சிலர் தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் மறக்காமல் இருப்பது எனக்கு கொஞ்சம் மனநிறைவை தந்தது.
==========================================
நாடோ (NATO) படைகள் லிபியாவில் இறங்கி அந்த நாட்டின் அதிபரை கொன்றுவிட்டு தன் போர் தாகத்தை தனித்துகொண்டன. இதன் பின்புலத்தை இப்போது அனைத்து ஊடகங்களும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. அரபு நாடுகள் அல்லாத ஆப்ரிக்கா நாடுகளை ஒன்றிணைத்து டாலரை சாராத புதிய கரன்சியை தங்கத்திலேயே வெளியிட முயைசித்து வந்தாராம் கடாபி. எண்ணெய் வேண்டும் நாடுகள் டாலரை கொண்டு வாங்காமல் இந்த புதிய தங்க கரன்சிகளை பயன்படுத்த திட்டம் தீட்டினாராம் கடாபி. கொடுங்கோலன் ஆட்சியை ஒழிக்கிறோம் பேர்வழி என அமெரிக்காவும் NATO நாடுகளும் சேர்ந்து மொத்த தங்கத்தையும் அள்ளி போயுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்தி டாலரை நிலை நிறுத்தி உள்ளது.
==========================================
நான் ரசித்த புகைப்படம்
============================================
1984 -இல் வெளிவந்த "உயிரே உனக்காக" படத்தில் இடம் பெற்ற "பன்னீரில் நனைந்த பூக்கள் " பாடல் நெடு நாட்களுக்கு முன் கேட்ட ஞாபகம். இளையராஜா இசையில் S.ஜானகி குரலில் கேட்கவே அற்புதம்.
=====================================
அன்புடன்
அசோக் குமார்
No comments:
Post a Comment