Monday, July 4, 2011

ஹாலிவுட் சினிமாவில் தடம் பதிக்கும் அமெரிக்க வாழ் இந்தியன்

ஹாலிவுட் சினிமாவில் தற்போது இயக்குனராக முத்திரை பதித்துகொண்டிருக்கும் இந்தியர் மனோஜ் நைட் சியாமளன்,  பாண்டிச்சேரியில் பிறந்து அமெரிக்காவின் "பெனிசுலவானியா" மாநிலத்தில் "பிலடெல்பியா" நகரத்தில் வளர்ந்தவர். 

இவர் படங்களில், கிளைமாக்சில் வரும் திடீர் திருப்பம் படம் பார்ப்பவர்களை திகைக்க வைக்கும். அதற்காகவே இவர் படங்கள் ஹாலிவுட் சினிமாவில் பிரபலம். 

ஷ்யாமளனின் அப்பா அம்மா இருவரும் அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்கள். ஷ்யாமளன் சிறுவயதிலே அமெரிக்காவில் வளர்ந்தவர், இவர் தனது சினிமா ஆசைக்கு காரணம் "ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்" என்கிற ஹாலிவுட் இயக்குனர் என்கிறார். "பாவனா" என்ற இந்திய பெண்ணை 1992 ம் ஆண்டு திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தை இவர்.  அதுமட்டுமின்றி தனது பத்து வயதிலேயே குறும் படங்களை தன் கையடக்க காமெரா மூலமாக படம் பிடித்துள்ளார் ஷ்யாமளன். 

இவர் முதன் முதலில் இயக்கிய படம் 1992 -இல் வெளியிட்ட  "ப்ரயிங் வித் அங்கேர்" (Praying with  Anger), இந்த கதை இவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வது போல் சித்தரிக்கப்பட்ட கதை. 

இவரது "சிக்ஸ்த் சென்ஸ்" படம் உலகமெங்கும் இவரை பிரபலப்படுத்தியது. ஒரு சிறுவனின் உளவியல் மாற்றங்களை சரி செய்ய வந்த மருத்துவராக "ப்ருக்ஸ் வில்லிஸ்" நடித்திருந்தார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பார்த்த எல்லோரையும் இருக்கையின் நுனியில் உட்கார வைத்தது என்றால் அது மிகை இல்லை. 



 "சிக்ஸ்த் சென்ஸ்" படத்தின் முன்னோட்ட காணொளியை இங்கு இணைத்துள்ளேன் .


 சிக்ஸ்த் சென்ஸ் படத்தின் ஆர்பாட்டமில்லாத க்ளைமாக்ஸ் காட்சி 

இந்த படத்திற்கு பிறகு,  இவர் கதை எழுதி இயக்கிய படங்கள் 'அன்பிரேக்பல்" "தி வில் ஏஜ்" " தி லேடி இன் தி வாட்டர்" போன்ற படங்கள் .    இதில்   "தி வில் ஏஜ்" படம் மட்டும் சுமாராக ஓடிய படம். 

"ராபர்ட்  ம்சில்ஹின்னே"  என்ற எழுத்தாளரை இவர் காப்பி அடித்து திரைக்கதை அமைகிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவும் இவரை கவுரபடுத்தி பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது. இவர் தனக்கென ஒரு வலை தளத்தை  வைத்து  இருக்கிறார். இன்னும் பல சாதனைகள் புரிய இவரை வாழ்த்துவோமே !!!!

அன்புடன் 

அசோக் குமார்

3 comments: