Wednesday, July 13, 2011

என்று தணியும் இந்த குண்டு வெடிப்பு எனும் சாபம்.

மும்பையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 21  அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முதலில் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.  இந்தியாவில் அங்காங்கே குண்டுகள் வெடிப்பது ஏதோ அன்றாடம் பால், ரேசன் வாங்குவது போல் வாடிக்கை ஆகிவிட்டது. குண்டு வெடித்ததும் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை  கண்டனம் தெரிவிப்பதும், உள்துறை அமைச்சர் குண்டு வெடித்த இடங்களை பார்வை இட்டு இன்னும் ஒரு வாரத்தில் குண்டு வைத்தவர்களை கண்டு பிடிப்போம் என்பதும் பார்த்து பார்த்து சலித்து விட்டது. இதற்கு  நிரந்தர தீர்வே இல்லையா??


உளவுத்துறை!! உளவுத்துறை  என்ற ஒன்றை நாம் வைத்திருப்பது மற்ற நாடுகள் எல்லாம் வைத்திருப்பதால் நாமும் கௌரவத்திற்காக வைத்திருகிறோமா?? இதே உளவுத்துறை தமிழர்களுக்கு எதிராக சிங்களன் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு பொய் அவனுக்கு ராடார் கொடுத்து உளவு பார்த்து சொல்ல மட்டும் தான் பயன்படுத்தபடுகிறதா!! இதற்காக நமது வரிப்பணத்தின் பாதி பணம் இதற்கே செலவிடப்படுகிறது. உளவுத்துறை ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் தூங்கிக்கொண்டு இருப்பதே வழக்கமாகி விட்டது .


ஒரு வாரத்திற்கு முன்தான் நமது "சிந்தனை சிற்பி" "வாழும் அறிவு ஜீவி " ப. சிதம்பரம் இந்தியாவில் சில நாட்களாக குண்டுகளே வெடிக்காமல் இருக்கிறது என்று தன கரி நாக்கை வைத்து சொன்னாலும் சொன்னார். இதோ 21  அப்பாவி மக்களின் உயிரை வாரி கொடுத்து விட்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கிறோம்.

ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்போமா என்று வாழ்வதுதான் இந்தியனின் விதியோ?? அடுத்த குண்டு வெடிப்பு நடக்கும் வரை தான் இந்த நிகழ்வு நம் நினைவில் இருக்குமோ???

 அசோக் குமார்

3 comments:

  1. உள்துறை அமைச்சரை கடத்தினால் கூட உளவுத்துறை அதை கண்டு பிடிக்குமா என்பது சந்தேகமே ........பட்........இவரப்போயி யாராவது கடத்துவாங்களா...

    ReplyDelete
  2. தீவிரவாதமும் வளருது... அரசாங்கம் சாக்கு போக்கு சொல்றதும் அதிகரிக்குது.

    ReplyDelete
  3. என்னத்த சொல்லுறது.. இதெல்லாம் எப்ப மாறுமோ?

    ReplyDelete