Thursday, July 21, 2011

படித்ததும் பிடித்ததும் -22 /07 /2011

திமுக அமைச்சர்கள் முதல் முன்னாள் சட்ட்ட மன்ற உறுப்பினர்கள் வரை தலைமறைவு என்ற செய்தி கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. தாங்கள் பதவியில்  இருந்த காலம் வரை மக்களை பற்றி  சிந்திக்காமல் தன் சட்டை பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏதோ குறுநில மன்னர்கள் போல் தங்கள் பங்கு நிலங்களையும் மிரட்டி அபகரித்து உள்ளனர். ஆனானப்பட்ட வீரபாண்டியரே தலைமறைவாகி இருக்கிறார் என்றால் மற்றவர்கள் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்.
=============================================
கல்வி விஷயத்தில் ஏன் இப்படி குழப்புகின்றனர் என்று புரியவில்லை. தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கல்வி விஷயத்தில் புகுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் புத்தகம் கிடைக்காமல் மாணவர்கள் மேசையை தேய்க்கும் நிலை இருப்பது அவலம். உயர்நீதி மன்றத்தால் கண்டிக்கபட்டும் மாறவில்லை என்றால் இந்த ஆட்சிக்கு இது அழகல்ல. பாடத்திட்டங்கள் சரி இல்லை எனில் அடுத்த வருடம் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். முதல்வரின் வறட்டு பிடிவாதத்திற்க்காக பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவது நல்லதல்ல. 
============================================
"குண்டலி யாகம்" நடத்துகிறேன் பேர்வழி என சொந்த காசில் சூனியம் வைத்துகொண்டுள்ளார் "கதவை திற காற்று வரட்டும் புகழ் நித்தி" . புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றில் மிதக்க வைக்கிறேன் என்று கூவி விட்டு தன் பக்தர்கள் அனைவரையும் குழந்தைகள் பள்ளிகூடங்களில் தவளை ரேசில் கலந்துகொண்டவர்கள் போல்் குதித்தது ரொம்ப நாட்களுக்கு பிறகு வடிவேல் நகைச்சுவை கணக்காக இருந்துச்சு. பாவம் இதுல ரஞ்சியை வேற குதிக்க சொன்ன அண்ணாத்த, பறக்க முடியாமல் கீழே விழுந்த ரஞ்சிக்கே சிரிப்பு தாங்க முடியல. இதுல முன் எச்சரிக்கையா ஹெல்மெட் வேற போட்டுக்கிட்டு சில பேரு. எப்பா முடியலட சாமி !!
==========================================
"தெய்வ திருமகள்" படம் பார்ப்பவர்களை அழ வைக்கிறது, குறிப்பாக விக்ரம் மற்றும் நிலாவாக நடித்திருக்கும் குட்டிப்பெண் சாரா நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்். என்னதான் I am sam  படத்தின் தழுவல் என்றாலும் கதையை நம்ம சுழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தில் இருக்கிறது இயக்குனர் விஜயின் வெற்றி. விக்ரம் இந்த படத்திற்கு நெறயவே மெனக்கெட்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் !!!!
==========================================
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை எட்டுவாரா என எல்லோரும் ஆவலோடு இருக்கிறார்கள். லோர்ட்ஸ் மைதானம் கிரிகெட்டின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. அங்கே இந்த சாதனை நிகழ்த்தப்படுமானால், இன்னும் சிறப்புதான். சாதனிகள் நிகழ்த்துவது சச்சினுக்கு ஒன்றும் புதிதல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். 
==========================================
கார்ட்டூன் கார்னர் 
தினமலர் நாளிதழில் வெளியான கார்டூன். 

========================================
தேன் கிண்ணம்
ஏணிப்படிகள் படத்திற்காக கே வீ  மகாதேவன் அவர்கள் இசையில் பாலசுப்ரமணியம்  பாடிய பாடல்.

அன்புடன்

அசோக் குமார்

8 comments:

  1. //
    திமுக அமைச்சர்கள் முதல் முன்னாள் சட்ட்ட மன்ற உறுப்பினர்கள் வரை தலைமறைவு என்ற செய்தி கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
    //
    எங்களுக்கு சந்தோசம்

    ReplyDelete
  2. இன்று என் வலையில்

    உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

    ReplyDelete
  3. எனக்கு தான் வடையா ?

    ReplyDelete
  4. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    எனக்கு தான் வடையா ?

    வடை உங்களுக்குத்தான்

    ReplyDelete
  5. வடிவேலுவின் ஓய்வை நிவர்த்தி செய்து வரும் நித்தி .....ஐயோ ...அய்யோ ...

    ReplyDelete
  6. koodal bala said...

    வடிவேலுவின் ஓய்வை நிவர்த்தி செய்து வரும் நித்தி .....ஐயோ ...அய்யோ ...//

    சரியா சொன்னிங்க பாலா

    ReplyDelete
  7. Nandru.... aaana samacheer intha aadnu muthal amulpaduthapadum nu court sonnathuku yethiraa..ADMK naanga thoruthu poitomnu ninaikkaaama. melmurayeedu panna koodathunu DMK sonnathu.. usupethi vidura mathiri irukku. Keela vilunthaalum meesai la manna ottatha DMK.

    Even ADMK govt did mistake in this educational systme, its true.

    ReplyDelete