பயணங்கள் எப்போதும் மனதுக்கு சுகம் அளிப்பவை. அதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க போவதும் இல்லை. புராண காலம் தொட்டு ராஜாக்கள் காலத்தில் கூட கடல் பயணம் செய்து பிற நாடுகள் மீது போர் தொடுத்து வென்றதாக சரித்திரங்கள் கூறுகின்றன. சோழ மன்னன் ராஜராஜ சோழன், சுமார் 1279-இல் படை எடுத்து வங்க தேசம், ஈழம், சுமத்ரா, கடாரம், மபல்லாம் முதலானவற்றை கடல் பயணம் செய்து கைப்பற்றியவை.
நீல நிற கோடு அவர்களின் வியாபார கடல் வழி பாதை
கொலம்பஸ் பயணத்தினால் தான் இந்த அமெரிக்கா தேசமே கண்டுபிடிக்க பட்டது வரலாறு. அன்று முதல் இன்று வரை பயணங்கள் மாறவில்லை என்றாலும் பயண அனுபவங்கள் மாறிவிட்டன.
பிரயாணத்தின் போது சந்திக்கும் புது மனிதர்கள், புதிய காட்சிகள் அனைத்துமே மனதுக்கு இதம் தருபவை. அதிலும் மனதிற்கினிய நண்பர்களுடன் பயணம் செய்வது வாழ்கையில் ஒரு வரம். நான் அமெரிக்கா வந்த புதிது இங்கே சூழ்நிலைகள் புதிது, மனிதர்கள், கலாச்சாரம், பழக்கவழக்கம் என எல்லாமே எனக்கு புதிது. எனக்கு யாரையும் இங்கே தெரியாது அந்த நேரத்தில் எனக்கு கடவுளாக கொடுத்த வாய்ப்புதான் இந்த பயணம்!!!!!
என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியர் என்னை இந்த டகோ ஏரிக்கு (Lake Taheo, Nevada st. USA) அழைத்து சென்றார். வழி எங்கும் பனி படர்ந்த மலைகள், சில்லென்ற காற்று பச்சை பசேலென உயர்ந்த மரங்கள் என இயற்கை வஞ்சனை இல்லாமல் கொட்டி கிடந்தது.
இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1650 அடி உயரமும், சுமார் 1600 அடி ஆழமும், 122,160,280 ஏக்கர் பரப்பளவும் கொண்ட நன்னீர் ஏரி. இதன் நிறம் எப்போதும் நீல நிறம் கொண்டது.
இந்த ஏரிக்கு மூன்று சிறப்புக்கள் உண்டு. இதன் நீல நிறத்துக்கு காரணம், இது வானத்து நிறத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதால் தான் என்கிறார்கள். இந்த ஏரி எப்போதும் எந்த குளிர் நிலையிலும் உறைவதில்லை எனவும் சொல்லபடுகிறது.
மேலும் 75அடி ஆழம் வரை கண்ணால் பார்க்க முடியும், ஏன் என்றால் அவ்வளவு சுத்தமான நீர். நம்ம ஊராக இருந்தால் சாக்கடையாக்கி இருப்பார்கள்.
இயற்கை வளங்களை எப்படி பேணி பாது காக்க வேண்டும் என இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேணும்.
விடுமுறை நாட்களை பெரும்பாலான அமெரிக்கர்கள் இங்கே கழிக்க விரும்புவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. குளிக்க, படகு சவாரி செய்ய மற்றும் நீர் விளையாட்டுகள் மிகவும் பிரபலம். இங்கே மீன் உணவு நன்றாக இருக்கும்.
உண்மையில் இது ஒரு சுகமான பயணம்!!!!!!
அன்புடன்
அசோக் குமார்
No comments:
Post a Comment