Saturday, March 26, 2011

பொம்பளைன்னா சும்மாவா

 பொதுவாகவே "ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு பெண்கள் கிரிக்கெட்டிற்கு இருப்பதில்லை". நமக்கு சுவாரசியம் எல்லாமே டெண்டுல்கரும் சேவாக்கும் செஞ்சுரி அடிச்சா போதும், மத்த எதை பத்தியும் கவலை இல்லை. அதிலும் குறிப்பா டெண்டுல்கர் அவுட் ஆனா உடனே மொத்த கூட்டமும் காணாம போய்டும்.

ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு இல்லைனாலும், நாங்களும் சளைத்தவர்கள் இல்லன்னு விளையாடுற ஒரு பெண் புலிதான் "மிதாலி ராஜ்".



மிதாலி பிறந்தது 1982 டிசம்பர் மாதம்,  ஜெய்பூர்  மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில். அப்பா- துரைராஜ், வானூர்தி துறையில் பதவி வகிக்கிறார்,   அம்மா-லீலாராஜ்.

இயற்கையாகவே வலது கை துடுப்பாட்டக்காரர் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர்.     முதல் டெஸ்ட் ஆட்டம் 2002-ம் வருடம் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார்.


டெஸ்ட் மேட்சில் முதன் முதலில் இரட்டை சதம் (214) அடித்த ஒரே பெண் மட்டைவீச்சாளர் மிதாலி மட்டுமே. இதுவரை இந்த சாதனையை யாரும் செய்யவில்லை. மொத்தம் எட்டு டெஸ்ட் ஆட்டங்களில் 572 ஓட்டங்கள் எடுத்துள்ளார், இதில் ஒரு சதமும் மூன்று அரை  சதமும் அடங்கும். இவருடைய சராசரி 52 ரன். பெண் டெண்டுலகர்னு சொன்னால் அது மிகை   இல்லை.


ஒருநாள் போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடி 3500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 3000 ரன்களை அடித்த முதல் பெண் ஆட்டகாரரும் இவர்தான். ஒருநாள் போட்டிகளில் இவர் சராசரி 49 ரன்கள். ஒருநாள் போட்டிகளில் இவருடைய அதிகபட்ச ரன் 114* .  ஒற்றை ஆளாக நின்று பல போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளார் மிதாலி.

"அழகிலும் இந்த தேவதை யாருக்கும் குறைவில்லை".



சுவாரசியமான இன்னொரு விஷயம் சின்னஞ்சிறு வயதிலே முறையாக பரதநாட்டியம் பயின்றவர்.


இவர் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பும் ஏற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். "இவர் திறமையை மெச்சி இந்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜுனா  விருதை வழங்கி கௌரவித்துள்ளது.  உலக கிரிக்கெட் கவுன்சில் தர வரிசையில் (ICC ranking) 2010-ம் வருடம் பிப்ரவரி மாதம் வரை முதலிடம் பிடித்தார் மிதாலி.

இவர் உலக கோப்பைக்கு செல்லும் முன் கொடுத்த உரையாடலின் காணொளி.

 

"இன்றைய நாளில் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் இவரை போற்றுவோம். பெண்கள் கிரிக்கெட்டையும் ரசிப்போம்".

அன்புடன்
அசோக் குமார்

1 comment:

  1. அதான் தலைப்பிலேயே சொல்லிட்டீங்க அருமை..

    ReplyDelete