" மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்.
யாருக்காக அழுதபோதும் தலைவன் ஆகலாம்"
கண்ணதாசனின் அனுபவ வரிகள்.
மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர, அவனே விமர்சனத்துக்கு அப்பற்பட்டவனாகவும் இருத்தல் நல்லது. " கிங் மேகர்" என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழ்நாட்டின் பெரும் சொத்து. எதிர் கட்சி தலைவர்களும் மதித்த ஒரே தலைவர் காமராஜர் என்றால் அது மிகை இல்லை. நம் நல்ல நேரம் இவரை போல உதாரணமாக காட்டவாவது நமக்கு நல்ல தலைவன் கிடைத்தான் என பெருமை கொள்ளலாம்.
சமீபத்தில் நெல்லை கண்ணன் அவர்கள் காமராஜரை பற்றி பேசிய காணோளியை you-Tube-இல் பார்த்தேன். நல்ல தலைவர்களை நாம் மதிப்பதில்லை என்பது நூறு சதம் உறுதி.
காமராஜர் பற்றி காங்கிரஸ் கட்சி காரர்களுக்கே இவ்வளவு விஷயம் தெரியுமான்னு தெரியல. ஆனால் காமராஜர் ஆட்சி அமைப்போம்னு நல்ல கூவறாங்க.....!!
"நல்ல தலைவர்கள் பலர் இருகிறார்கள், அவர்களை இனம் காணுவதில்தான் நமக்கு பிரச்சினை."
இவரும் தலைவர்???????????????????
என்ன கொடுமை சார் இது??
வேறு என்ன சொல்ல!!!!!
அன்புடன்
அசோக் குமார்
No comments:
Post a Comment